எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சூரியக் குடும்பத்தி லிருந்து 4.37 ஒளியாண் டுகள் தொலைவில் உள்ள ஆல்ஃபா சென்டோரி என்ற விண்மீனை அறிவியலாளர்கள் குறி வைத் திருக்கிறார்கள். மென் பொருள் துறையின் மூலம் பெரும் செல்வந்தரான யூரி மில்னரும், பிரபல அறிவியலாளர் ஸ்டீவன் ஹாக்கிங்கும் சேர்ந்து இந்தக் கனவுத் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். பிரேக்த்ரூ ஸ்டார்ஷாட் என்று பெயரிடப் பட்டிருக்கும் இந்தத் திட்டம் ஒட்டுமொத்தமாக 5 பில்லியன் டாலரிலிருந்து 10 பில்லியன் டாலர் வரை செலவு பிடிக்கும். இந்தத் திட்டத்தின்படி ஆயிரம் விண்கலங்கள் ஏவப்பட விருக்கின்றன.

இந்த விண்கலங்கள் ஒவ்வொன்றும் ஸ்மார்ட் ஃபோன்கள் அளவுக்குத்தான் இருக்கும். ஒளியின் வேகத்தில் கிட்டத்தட்ட அய்ந்தில் ஒரு பங்கு வேகத்தில் செல்லும் இந்த நுண்கலங்கள் ஆல்ஃபா சென்டோரியைச் சென்றடைவதற்கு 20 ஆண் டுகள் ஆகும். திட்டமே தற்போதுதான் தொடங்கப்பட்டிருப் பதால் ஆராய்ச்சிகள், தொழில்நுட்பக் கட்டமைப்புகள் போன்றவற் றுக்குப் பிறகு இன்னும் 20 ஆண்டுகள் கழித்துத் தான் இந்த நுண்கலங்கள் ஏவப்படவிருக்கின்றன. ஆக, இன்னும் 40 ஆண்டுகள் கழித்துதான் இந்தக் கலங்கள் ஆல்ஃபா சென் டோரியைச் சென்றடையும். அதற்குப் பிறகு அங்கிருந்து அவை அனுப்பும் தகவல்கள் பூமிக்கு வந்து சேர்வதற்கு மேலும் 4.3 ஆண்டுகள். எனவே, ஆல்ஃபா சென்டோரி கூறும் வரவேற்பு வாசகத்தை கேட்க நாம் இன்னும் 45 ஆண்டுகள் ஆகும்.

என்றும் அழியாத சேமிப்பு சாதனம்

பிரிட்டனின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் கிட்டத்தட்ட என்றென்றும் நீடித்து நிற்கக் கூடிய தரவுச் சேமிப்புப் பொருளைக் கண்டறிந்திருக்கிறார்கள். மனித நாகரிகம் தோன்றியதிலிருந்து வரலாறு, தகவல் போன்றவற்றைச் சேமிக்க எத்தனையோ வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், எதுவும் நீடித்து நிற்பதில்லை. தற்போதைய தகவல் தொழில்நுட்ப உலகின் குறுந்தகடுகள், பென் டிரைவ், மேகக் கணினி எல்லாம் குறிப் பிட்ட வாழ்நாள் உடையவையே. நானோ-அமைப்புகள் பொதியப்பட்ட கண்ணாடிப் பொருள்தான் புதிதாகக் உரு வாக்கப்பட்டிருக்கும் தரவுச் சேமிப்புச் சாதனம். வழக்கமான, ஒரு குறுந்தகடு அளவில் 360 டெராபைட்டுகளை இதில் சேமிக்க முடியும். இந்தத் தரவு 1,380 கோடி ஆண்டுகள் வரை நீடிக்கும். பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த ஆயுளும் 1,380 கோடி ஆண்டுகள்தான். 190 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையிலும் இந்தத் தரவுச் சாதனம் தாக்குப்பிடிக்குமாம்.