எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காது தொற்று நோயை குணப்படுத்தும் புதிய ஆண்டிபயாடிக் ஜெல்

காது வலிக்கு ஆண்டிபயாடிக் சிகிச்சை ஒரு முழு தீர்வை வழங்கும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கண்டறிந்துள்ளது, அதாவது ஒற்றை டோஸ் பயோஎன்ஜினியர்ட் ஜெல் மூலம் குழந்தை பருவத்தில் ஏற்படும் காது தொற்று நோய்க்கு தீர்வு காண முடியும். நடுப்பகுதி காது தொற்று அல்லது வீக்கம், திரவம் கூடுதல் போன்ற காரணத்தால் ஏற்படும் காது தொற்று பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ்கள் ஆகியவற்றால் ஏற்படுகிறது.

இந்த நோயால் காது வலி மற்றும் காய்ச்சல் ஏற்படுவது பொதுவான அறிகுறியாகும். சில சந்தர்ப்பங்களில், இது காதில் இருந்து திரவம் அதிகம் சுரக்கும் அல்லது காது கேட்காமல் போகும் அளவுக்கு தீவிரமாக மாறும். சில காது தொற்று தானாகவே சரியாகிவிடும் என்றாலும், சிலவற்றிற்கு ஆண்டிபயாடிக் சிகிச்சை அவசியமாகிறது.

காது தொற்று நோய்க்கு ஓரல் ஆண்டிபயாடிக் சிகிச்சை அதிக அளவு எடுத்தால், வயிற்றுப்போக்கு, தடித்தல் மற்றும் வாய் வெண்புண் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஓரல் ஆண்டிபயாடிக் சிகிச்சையை விட இந்த ஆண்டிபயாடிக் ஜெல் சிகிச்சை குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

தேவைப்படும் நேரத்தில் ஒரு முறை மட்டுமே இந்த ஆண்டி பயாடிக் ஜெல்-அய் பயன்படுத்த வேண்டும் என்று குழந்தை மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஜெல் காது கால்வாய் வழியாக வேகமாக செல்லும்போது, விரைவில் கெட்டியாகி, பிறகு அந்த இடத்திலேயே தங்கி செவிப்பறை முழுவதும் ஆண்டிபயாடிக் பரவி கொஞ்சம் கொஞ்சமாக நடுப்பகுதி காதுக்கு செல்கிறது.

முன்னதாக, காது தொற்று நோயை சரி செய்வதற்கு செவிப் பறையில் துளைப்பது கடினமாக இருந்தது, ஆனால் இந்த பயோஎன்ஜினியர்ட் ஜெல், இரசாயன ஊடுருவல் திறன் உதவியுடன் காதில் துளைக்க முடியாத இடத்திலும் நுழைந்து சிகிச்சை அளிக்கிறது. இரசாயன ஊடுருவல் திறன் மூலம் சவ்வு வழியாக தானாகவே நுழைந்து, மூலக்கூறு துளைகள் திறக்கப்பட்டு செவிப்பறையின் வெளிப்புற அடுக்கிற்கு கசிந்து செல்கிறது.

ஜேர்னல் சயின்ஸ் ட்ரான்ஸ்லேஷனல் மெடிசின் ஆல்

வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, நடுப்பகுதி காது தொற்று நோய்க்கு சிறந்த, எளிதான மற்றும் சாத்தியமான பாதுகாப்பு சிகிச்சைக்கு வழிவகுத்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner