எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடை அலமாரியில் பல நாட்கள் வைக்கப் படும் உணவுகள், கெட்டுப் போய்விட்டதா என, எப்படி கண்டுபிடிப்பது?

இதற்கென, சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரிலுள்ள, இ.டி.எச்., பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரு அருமையான உணரியை கண்டுபிடித்துள்ளனர்.

விரல் நகத்தின் அளவே உள்ள இந்தக் உணரி, தலைமுடியின் தடிமனில் பாதி கூட இல்லை. மக்னீசியம், சிலிக்கன் டையாக்சைடு மற்றும் நைட்ரைடு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நுண்ணிய மின் இழைகள், இந்த உணரியில் உள்ளன.

இந்த இழைகள், மக்காச்சோளம் மற்றும் உருளைக் கிழங்கு மாவால் ஆன பாலிமர் களால் தயாரிக்கப்படுகின்றன.

இந்த உணரி, துத்தநாகக் கம்பி மூலம் வெளிப்புற மின்கலனுடன் இணைக்கப் படுகிறது. உணரியில் தகவல்களை அலசும் மைக்ரோபுராசசரும், புளூடூத் மூலம் தகவல்களை அனுப்பும் டிரான்ஸ்மீட்டரும் உண்டு. இதனால், உணரி அனுப்பும் தட்ப வெப்ப நிலை தகவல்களை, வெளியே, 30 முதல், 60 அடி வரை உள்ள கருவியால் பெற்றுக்கொள்ள முடியும்.

‘இன்டர்நெட் ஆப் திங்ஸ்’ எனப்படும், ‘கருவிகளின் இணையம்‘ போன்றவற்றுடன் உணவுப் பொருட்களை இணைக்கலாம்.

இதனால், மீன் பிடிக்கும் இடத்திலிருந்து கடைக்கு வரும் வரை, பெட்டிக்குள் உள்ள மீன்களின் தட்ப வெப்ப நிலையைக்கூட தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

இந்த உணரிகள், மனிதர்கள் உட்கொண் டாலும் தீங்கு விளைவிக்காதவை. மேலும், இவை சீக்கிரம் மட்கிப்போகும் தன்மையுள்ள பொருட்களால் தயாரிக்கப்படு வதால், சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்காதவை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner