எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரும் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப் பதை முன்கூட்டிய உணர முடிந்தால், பல்லாயிரம் உயிர்களை காப்பாற்ற முடியும்.

ஆனால், தற்போது உள்ள நிலநடுக்க கணிப்பு கருவிகளை பூமிக்கடியில் நிறுவுவதற்கு பெரும் செலவு பிடிக்கிறது.

ஆனால், அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், புதிதாக எந்த கருவியையும் நிறுவ அவசியமில்லை என்கின்றனர். ஏன்?

ஏற்கெனவே தொலைதொடர்பு மற்றும் இணைய வசதிகளுக்காக, பூமிக்கடியில் புதைக்கப்பட்டி ருக்கும் பைபர் ஆப்டிக் கேபிள் எனப்படும் ஒளி இழை வடங்களே இதற்குப் போதும் என்கின்றனர் ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழக வளாகத்திற்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள, 4.8 கி.மீ., நீள ஒளி இழை வட அமைப்பை வைத்தே அந்த விஞ்ஞானிகள் கடந்த ஒரு ஆண்டில், 800 பூகம்ப நிகழ்வுகளை அளந்திருக்கிறார்கள்.

இதில், 3,220 கி.மீ., தொலைவிலுள்ள மெக்சி கோவில் இந்தாண்டு செப்டம்பரில் நிகழந்த பூகம் பமும் அடக்கம்.

கண்ணாடி ஒளி இழைகளில் ஒளி மூலமே தகவல்கள் பரிமாறப்படுகின்றன. பூகம்பங்கள் நேரும்போது, இழைகளின் ஊடாகப் பயணிக்கும் ஒளியில் லேசான பிசிறுகள் ஏற்படும். இந்த பிசிறு களை வைத்தே பூகம்பம் எவ்வளவு தொலைவில், எவ்வளவு தீவிரமாக ஏற்படுகிறது என்பதை அளக்க முடியும் என்கின்றனர் ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள்.

இனி பூகம்ப கணிப்பு துல்லியமாகவும், முன் கூடியேயும் கிடைக்கும் என நம்பலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner