எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அமெரிக்க விஞ்ஞானிகளின் கூற்றுபடி, தனித்துவப்பட்ட ‘சுவாச சோதனை’ நடத்தப்படுவதன் மூலம் மக்களிடம் மலேரியா நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என தெரியவந்துள்ளது.

இதற்கான ஒரு ஒழுங்கற்ற முன்மாதிரி மூச்சு சோதனை முயற்சி ஏற்கெனவே ஆஃப்ரிக்காவில் நடத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளிடையே இச்சோதனையை முயற்சித்த போது சரியாக இருந்தாலும், வழக்கமான செய்முறையாக இதனை மாற்றுவதற்கு இந்தச் சோதனையை மேலும் மேம் படுத்த வேண்டியுள்ளது.

இந்த சோதனைக் கருவி மூலம் முகரப்படும் ஒரு வித மணமும், மலேரியாவை பரப்பும் பூச்சிகளை ஈர்க்கக் கூடிய இயற்கை மணமும் ஒரே மாதிரியாக இருக்கிறது.

பைன் மரங்கள் மற்றும் ஊசியிலை மரங்கள் வெளியிடக்கூடிய டெர்பைன்சபானது, கொசுக்கள் மற்றும் மகரந்த சேர்க்கை செய்யும் வேறு சில பூச்சிகளை வரவழைக்கும் என செய்ன்ட் லூயிசில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மலேரியா பாதிப்பு உள்ளவர்களின் சுவாசத்திலும் இதே மணம் இருக்க, அது கொசு உள்ளிட்ட மற்ற பூச்சிகளை ஈர்க்கும் பட்சத்தில் அவை மற்றவர்களை கடிக்கும் போது பலருக்கு மலேரியா பரவ வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சி யாளர்கள் நம்புகின்றனர்.

இந்த சோதனை மேலும் கட்சிதமாக இருந்தால், மலேரியா நோயை கண்டறிய இதுவே புதிய மலிவான மற்றும் எளிமையான வழியாக அமையும் என பேராசிரியர் ஆட்ரி ஓடம் ஜான் மற்றும் அவரது சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தனித்துவமான வாசனை

மலேரியா பாதிப்பை கண்டறிய இந்த முன்மாதிரி சுவாச சோதனையானது ஆறு மாறுபட்ட மணங்களை அல்லது எளிதில் ஆவியாகக்கூடிய கரிம சேர்மங்களை கண்டறியும்.

மலாவியில், மலேரியா பாதிப்பு இருக்கும் அல்லது இல் லாமல் இருக்கும் காய்ச்சல் உள்ள 35 குழந்தைகளின் சுவாச மாதிரிகளில் ஆராய்ச்சியாளர்கள் சோதனை மேற்கொண் டனர்.

அதில் 29 குழந்தைகளுக்கு துல்லியமான முடிவை இந்த சோதைனை தந்துள்ளதால், இதன் வெற்றி விகிதம் 83 விழுக்காடாக கருதப்படுகிறது.

வழக்கமாக நடத்தப்படும் சோதனையை ஒப்பிடும் போது இது மிகக் குறைவாக இருந்தாலும் இதன் நம்பகத்தன்மையை உயர்த்தி இதனை சிறந்த தயாரிப்பாக உருவாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

மலேரியாவை கண்டறிய எளிமையான, வேகமான இரத்த சோதனை முறை இருந்தாலும் அதற்கென சில வரம்புகள் உள்ளதாக வாசிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச் சியாளர்கள் கூறுகின்றனர்.

இரத்த பரிசோதனை செய்வதென்பது விலை உயர்ந்த தாகவும், கிராமப்புற பகுதிகளில் சவால் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது.

இரத்த மாதிரிகள் தேவைப்படாத அல்லது தொழில்நுட்ப நிபுணத்துவம் வாய்ந்த முறை சிறந்த நன்மை பயக்கக்கூடும்.

லண்டன் சுகாதார மற்றும் ட்ராபிக்கள் மருத்துவப் பள்ளி யைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் லோகன் கூறுவதாவது:

“அறிகுறியில்லாமல் இருக்கும் மலேரியா நோய் பாதிப்பை விரைவாக எப்படி கண்டறிந்து கட்டுப்படுத்துவதென்பது பெரிய சவாலாக உள்ளது, மற்றும் முழுமையாக மலேரியாவை ஒழிக்க நாம் இந்த இலக்கை நோக்கி நகர்வது அவசியமாகிறது. மலேரியா நோய் தொற்றுகளை கண்டறிய ஒரு புதிய கருவி உள்ளதென்பது உற்சாகமளிக்கிறது.”

இந்த சோதனை முறையை நம்பகத்தன்மை உள்ளதாக மாற்ற மேலும் சில வேலைகளை செய்வதற்கான தேவை உள்ளது.

அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ட்ராபிகள் மெடிசன் மற்றும் அய்ஜினின் இந்த ஆண்டு கூட்டத்தில் இது தொடர் பான கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

இடத்தை காட்டிக் கொடுக்கும் ஆண்ட்ராய்டு செல்பேசிகள்

ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் அருகிலுள்ள செல்பேசி கோபுரங்கள் சார்ந்த தகவல்களை திரட்டி அவற்றை கூகுள் நிறுவனத்திடம் பகிர்வதாக குவார்ட்ஸ் என்ற இணையதள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அந்தரங்க உரி மைக்காக வாதிடும் ஒருவர், இது பயன்பாட்டாளர்களை “காட்டிக்கொடுப்பதற்கு” சமம் என்று கருத்துத் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து குவார்ட்ஸூக்கு பதிலளித்துள்ள கூகுள் நிறுவனம், இதுபோன்று பெறப்பட்ட தரவுகள் சேமிக்கப்பட வில்லை என்றும் இந்த செயற்பாட்டை நிறுத்துவதற்காக ஆண்ட்ராய்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கூகுள் பிளே சர்வீசஸ் என்னும் செயலி ஆண்ட்ராய்டு திறன்பேசியின் பின்னணியில் இயங்கும்போது இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கூகுள் பிளே சர்வீஸ்சஸ் கூகுளின் பெரும் பாலான செயலிகள் இயங்குவதற்கு அவசியமானதாகும். மேலும், இது பெரும்பான்மையான ஆண்ட்ராய்டு திறன் பேசிகளில் முன்பதிந்து வெளியிடப்படுகிறது.

திறன்பேசிகள் செல்பேசி கோபுரங்களின் முகவரிகளை இனங்கண்டு அதிலுள்ள குறிப்பிட்ட இலக்கங்களின் மூலம் குறிப்பிட்ட செல்பேசி கோபுரங்கள் குறித்த தகவல்களை பிரித்து அதை கூகுளுக்கு அனுப்புவதை குவார்ட்ஸ் கண்ட றிந்துள்ளது. ஒருவர் இருக்கும் இடத்தை கண்டறிவதற்கு இந்த தரவுகளை பயன்படுத்தலாம்.

இருப்பிட சேவை அணைக்கப்பட்டிருக்கும் போது மற்றும் திறன்பேசியில் சிம் கார்டுகள் எடுக்கப்பட்டாலும் கூட மேற்கண்ட இந்த செயற்பாட்டை திறன்பேசிகள் நிகழ்த்து கின்றன. இச்செயற்பாட்டை நிறுத்துவதற்குரிய தேர்வு திறன் பேசிகளில் இல்லை. அவை தரவுகளை சேமிப்பதில்லை

“திறன்பேசிகளில் செய்திகளை அனுப்புவதன் வேகம் மற்றும் திறனை மேம்படுவதற்காக செல்பேசி கோபுரங்களின் சிக்னல்களை கூடுதலாக ஆராய்ந்தோம்“ என்றும் இதை கடந்த 11 மாதங்களாக செய்து வருவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“செல் குறியீட்டை எங்களின் வலைப்பின்னல் ஒத்திசைவு அமைப்போடு ஒருபோதும் இணைப்பதில்லை என்பதால் சேகரிக்கப்பட்ட தரவுகள் உடனடியாக அழிக்கப்பட்டுவிடும்“ என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பல நோய்களுக்கும் ஈக்கள்தான் காரணம்  - ஆய்வுத் தகவல்

நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் உண்டாக்குவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்கள், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த பாக்டீரியாக்கள், பெரும்பாலும், வயிற்று வலி, ரத்தத்தில் விசம் ஏறுதல், நிமோனியா (நுரையீரல் அழற்சி) ஆகிய மனிதர்களுக்கு தொடர்புடைய நோய்களை பரப்புகின்றன.

ஈக்களால், தனது கால்கள், இறக்கைகள் மற்றும் பாதங்கள் மூலமாக, நோய்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரப்ப முடியும். சொல்லப்போனால், அவை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், அவற்றால் உயிருடன் உள்ள பாக்டீரியாக்களைப் பரப்ப முடியும்.

“ஈக்களால் நோய்க்கிருமிகளை பரப்ப முடியும் என்பது மக்களுக்கு தெரிந்திருந்தாலும், எந்த அளவிற்கு அவை அபாயகரமானவை என்றும், எவ்வளவு தூரம் அதன் தொற்று இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியாது” என்று  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பென் ஸ்டேட் பல்கலைக்கழக பேராசிரியர் டொனால்ட் பிரையண்ட். வீட்டில் பரவலாக காணப்படும் ஈக்களின், உடலின் மேலும், உடலினுள்ளும் இருக்கும் நுண்ணுயிரிக்கள் குறித்து மரபணு ஆய்வுமுறை வழியாக ஆய்வு நடத்தப்பட்டது.

வீட்டில் பொதுவாக பார்க்கக்கூடிய ஈக்கள் 351 வகையான பாக்டீரியாக்களை பரப்புகின்றன.

சூடான காலங்களில் வரும், நீலநிற ஈக்கள் 316 வகை பாக்டீரியாக்களை பரப்புகின்றன. இந்த இருவகை கொசுக் களாலும், அதிகப்படியான பாக்டீரியாக்கள் பரப்பப்படுகின்றன.

பொதுசுகாதார அதிகாரிகளால், நோய்களை திடீரென பரப்பும் காரணிகளாக ஈக்கள் பார்க்கப்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வை `ஜர்னல் சைண்டிபிக் ரிப்போட்` என்ற சஞ்சிகையில் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக் கின்றனர்.

“பொதுசுகாதார அதிகாரிகளால் நம்பப்பட்ட வழியில், நோய்க்கிருமிகள் எவ்வாறு எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன என்பதன் கட்டமைப்பை இவை காண்பிக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.
மிகவும் வேகமான முறையில், நோய்க்கிருமிகளை பரப்புவதில் ஈக்களின் பங்கும் இருக்கலாம் என்பதையும் இவை நிரூபிக்கலாம்“ என்கிறார் பேராசிரியர் பிரயண்ட்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner