எழுத்துரு அளவு Larger Font Smaller Font


யாரும் எதிர்பாராத வகையில், முழுவதும் மின்சாரத்தில் இயங்கும், ராட்சத சரக்கு வாகனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார், அமெரிக்க தொழிலதிபர், எலான் மஸ்க். ‘டெஸ்லா செமி டிரக்‘ என, பெயரிடப்பட்டுள்ள அந்த மின் லாரி, ஒருமுறை மின்னேற்றம் செய்தால், 800 கி.மீ., தொலைவு செல்லுமாம்.

அதுவும், 36.28 டன் எடையுள்ள, சரக்குகளை ஏற்றிக் கொண்டு, நெடுஞ்சாலையில் மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும் என, சமீபத்தில், ஊடகங்களிடம் விளக்கினார், மஸ்க்.

காற்றை கிழித்துச் செல்லும் வகையில், துப்பாக்கித் தோட்டா முனை போல், செமி டிரக்கின் வடிவம் இருக்கிறது. பின்னால் இணைக்கப்பட்டிருக்கும் சரக்கு டிரெயிலருடன், ஓட்டுநரின் பகுதி கச்சிதமாக இணைவதால், காற்று தடை ஏற்படாது என்கிறார், மஸ்க். இந்த மின் லாரியின் மின்கலன்களை, 30 நிமிடத்தில், ‘ரீசார்ஜ்’ செய்யலாம். டீசல் லாரியின் டேங்க்கை நிரப்ப, 20 நிமிடம் பிடிக்கும். அதைவிட, 10 நிமிடம் தான் கூடுதலாக இருக்கும் என்கிறார், மஸ்க்.

ஓட்டுநரின் அறை, ஏதோ விமானியின் அறை போல, இரண்டு கட்டுப்பாட்டு திரைகளுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. டீசல் லாரிகளை விட, டெஸ்லா செமி டிரக்கை இயக்க, 20 சதவீதம் குறைவான செலவே பிடிக்கும் என, அவர் உறுதியாக தெரிவித்தார். 10 லட்சம் கி.மீ., வரை இந்த வண்டி, சாலை நடுவே பழுதாகி நிற்காது என, உத்தரவாதம் தருகிறது, டெஸ்லா. இதன் கண்ணாடிகள், அணு குண்டு அருகே வெடித்தாலும் உடையாது என, டெஸ்லா விளம்பரம் செய்கிறது.

எல்லாவற்றையும் விட முக்கியம், செமி டிரக், ‘ஆட்டோ பைலட்’ தொழில்நுட்பத்துடன் வருகிறது. அதாவது, நெடுஞ்சாலைக்கு வந்ததும், இந்த லாரியிலுள்ள மென்பொருளும், உணர்வான்களும், தானாகவே ஓட்டிச் செல்லும். ஓட்டுநர் அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம்!

அரிய நோயை தீர்க்க மரபணு சிகிச்சை!

உலகிலேயே, முதன் முறை யாக, ஒரு மனித நோயாளிக்கு, மரபணுவில் திருத்தம் செய்யும் தொழில்நுட்பத்தை, சமீபத்தில், விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர். ‘ஹண்டர் சிண்ட் ரோம்‘ என்ற அபூர்வ நோய் வாய்ப்பட்டிருக்கும், 44 வயது ஆணுக்கு, இந்த சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு உள்ளது. இந்நோய் தாக்கப்பட்டவருக்கு, உடலில் சில வகை சர்க்கரைகளை ஜீரணித்து, சக்தியாக மாற்றும் திறன் பழுத டைந்துவிடும். இதனால், உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உண்டு.

மரபணு கோளாறால் வரும் இந்நோய்க்கு, மரபணுவில் உள்ள பிழையை திருத்துவது தான் ஒரே சிகிச்சை. எனவே, அமெரிக்க மருத்துவர்கள், நோயாளியின் உடலுக்குள், ‘ஜிங்க் பிங்கர் நியூக்ளியஸ்’ என்ற உயிரி வேதிப் பொருளை செலுத்தி உள்ளனர்.

இது ரத்தத்தில் கலந்து, பயணித்து, கல்லீரலை அடைந்து, ஹண்டிங் சிண்ட்ரோம் குறைபாட்டை ஏற்படுத்தும் மரபணுக்களில் திருத்தங் களைச் செய்யும் என, மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இது சரியாக வேலை செய்தால், நோயாளியின் கல்லீரல் துண்டப் பட்டு, ஆல்புமின் என்ற புரதத்தை உற்பத்தி செய்யும். இது, நோயாளியின் உடலில், கார்போஹைட்ரேட்டுகளை சரியாக ஜீரணிக்க உதவும் என, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

பனிக் காற்றிலிருந்து குடிநீர்

தண்ணீர் என்றதும், பூமி மேலும், பூமிக்கு அடியிலும் தான் இருக்கும் என்று தான், இத்தனை காலம் மனிதர்கள் நினைத்தனர். ஆனால், காற்றிலிருந்தும் சுத்தமான குடிநீரை பெற முடியும் என்பதை, பல புதிய தொழில்நுட்பங்கள் நிரூபிக்கின்றன.

தைவானைச் சேர்ந்த, தேசிய சென் குங் பல்கலைக் கழகத்தின் மாணவர்கள், ‘அக்குவா ஏர்’ என்ற, ஓர் எளிய கருவியை வடிவமைத்து உள்ளனர். மூன்று மூங்கில் கால்களும், அதன் மேலே, ஒரு கூம்பு போன்ற விரிப்பும் கொண்ட இந்தக் கருவியை, பனி மிக்க மலைப் பகுதிகளில் வைத்துவிட்டால், இக்கருவி, பனிக் காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை, ஒரு சிறு மின் விசிறி மூலம் உறிஞ்சி சுழற்றி, நீராக்கி தருகிறது.  அந்நீரை, ஒரு குழாய் வழியே கீழே இருக்கும் வாளியில் சேமிக்கலாம்.ஹாண்டூராஸ் போன்ற மலைப் பாங்கான, நீர்க் குழாய் வசதியற்ற பகுதிகளுக்கு, இந்த எளிய கருவி பயனுள்ளதாக இருக்கும்.

கடலில் சுற்றுச்சூழலை சீர்குலைக்கும்
பிளாஸ்டிக் கழிவுகள்

அதிகளவில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவு களால் கடல் வாழ்வு சீர்படுத்த முடியாத அளவுக்கு சேதத்தை எதிர்கொண்டுள்ளதாக அய்க்கிய நாடுகள் சபையின் பெருங்கடல்களுக்கான பிரிவின் தலைவர் எச்சரித்துள்ளார்.

அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பிளாஸ்டிக் மாசுபாட்டை நிறுத்த விரைவாக செயல்பட வேண்டும் என்று லிசா ஸ்வென்சன் கூறியுள்ளார்.

“இது புவிக் கோளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி” என்றும் “பிளாஸ்டிக்கை வசதிக்காக கண்டுபிடித்த சில காலத்திற்குள்ளாகவே அதன் மூலம் கடலின் சுற்றுச் சூழலை நாம் அழித்து வருகிறோம்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

நைரோபியில் நடக்கவுள்ள அய்.நா சுற்றுச்சூழல் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் பிளாஸ்டிக் குப்பைக்கு எதிராக கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதால் பாதிக் கப்படும் ஆமைகளை பராமரிக்கும் கென்ய மருத்துவமனை பற்றிய செய்தியை கேட்டு அவர் வேதனை அடைந்தார்.

கடற்பரப்பில் மிதந்துகொண்டிருந்தபோது மீனவர் ஒருவரால் மீட்கப்பட்ட ‘கய்’ என்ற இளம் ஆமையை அவர் பார்வையிட்டார்.

ஆமைகள் அதிகமாக பிளாஸ்டிக் சாப்பிட்டி ருந்தால், அவைகளின் வயிறு வீக்கமடைந்து, மிதப்பதிலிருந்து கட்டுப்படுத்த முடியாது என்பதால் அந்த ஆமை பிளாஸ்டிக் கழிவுகளைதான் உட்கொண் டிருக்க வேண்டுமென்று உடனடியாக சந்தேகிக்கப் பட்டது.

ஆமையின் உடற்கூறுகளை தூய்மைப்படுத்து வதற்காக அதற்கு இரண்டு வாரகாலத்திற்கு மல மிளக்கிகள் கொடுக்கப்பட்டு, கய் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டபோது லிசா ஸ்வென்சன் ஒரு உணர்ச்சிகர தருணத்தை கண்டார்.

பிளாஸ்டிக்கால் ஏற்பட்டுள்ள “சவாலின் அளவு முற்றிலும் மகத்தானது” என்று கூறும் ஸ்வென்சன், கடல்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நீக்க வலியுறுத்தி நார்வே இயற்றியுள்ள ஒரு தீர்மானத்தை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளும் அந்த நீண்டகால இலக் குடன் உடன்பட்டால் அது அய்.நாவின் வெற்றியாக கருதப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்குள் கடல் மீதுள்ள கழிவுப் பொருட்களை கணிசமாகக் குறைப்பதற்கான தற்போதைய உறுதிப்பாட்டை விட இது மிகவும் அதிகளவு லட்சிய நோக்கமுள்ளதாக உள்ளது.

கழிவுகளைத் தடுக்க ஒரு கால அட்டவணை இல்லாதது பெரும் தோல்விக்கு வித்திடுவதாக சில சுற்றுச்சூழல் வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.

கிரீன்பீஸ் அமைப்பை சேர்ந்த டிஷா பிரவுன் அளித்த பேட்டியில் “வலுவான உடன் படிக்கைக்காக அவர்கள் செயல்படுவதை வரவேற் கிறோம்.

ஆனால் பில்லியன் கணக்கான டன் பிளாஸ்டிக் கழிவுகளை கடலுக்குள் நுழைவதை தடுக்க அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது.”

“உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளுக்கான பொறுப்பை உணர வேண்டும். நம்மை இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ள நமது நுகர்வு முறைகளை சரிபார்க்க வேண்டும்.”

சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய பிளாஸ்டிக் மாசுபாட்டை ஏற்படுத்தும் நாடான இந்தோனேசியா, 2025இல் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை 75 சதவிகிதம் குறைக்க உறுதிய ளித்துள்ளது.

ஆனால், இதைச் செய்ய சட்ட விதிகள் போது மானதாக இருக்கிறதா என்று சில பார்வையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.”

அதிகளவிலான மீன்பிடிப்பு மற்றும் இரசாயன மாசுபாடு, கழிவுநீர் மற்றும் வேளாண்மை; கடலோர பகுதிகளில் வளர்ச்சி; பருவநிலை மாற்றம்; கடல் அமிலம் மற்றும் அதிக சுரண்டலுக்குள்ளாகும் பவளப் பாறைகள் போன்ற பன்முனை தாக்குதல்களை கடல் எதிர்கொள்வதாக ஸ்வென்சன் தெரிவித் துள்ளார்.