எழுத்துரு அளவு Larger Font Smaller Font


முதல் முறையாக மனித கரு முட்டைகள் பரிசோதனை மய்யத்தில் உருவாக்கப்பட்டுள்ள தாக இங்கிலாந் திலுள்ள எடின்பர்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய வழிமுறையானது புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் கருவுறுதலை பாது காப்பதற்கான முறையாக இருக்குமென்று இந்த ஆராய்ச்சியை செய்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

இதுவரை அறிவியலுலகம் விடைகாண முடியாத கேள்வியாக இருக்கும், மனித கரு முட்டை வளர்ச்சி குறித்து அறிவதற்கும் இதன் மூலம் வாய்ப்பு கிட்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பை மிகப் பெரிய உற்சாக மளிக்கக்கூடிய முன்னேற்றமாக பாராட்டும் வல் லுநர்கள், இம்முறை மருத்துவரீதியாக பயன் பாட்டுக்கு வருவதற்கு முன்னர் இன்னும் பலகட்ட ஆராய்ச்சிகளை கடக்க வேண்டியுள்ள தாக கூறியுள்ளனர்.

பெண்கள் பிறக்கும்போதே அவர்களின் கருப்பையில் முதிர்ச்சியடையாத கருமுட்டை களுடன் பிறந்தாலும் அவர்கள் பூப்படைந்த பின்னரே அவை வளர்ச்சியுற ஆரம்பிக்கும்.

இந்த முயற்சியில் முற்றிலும் வெற்றியடை வதற்கு பல பத்தாண்டுகள் ஆகுமென்றாலும், இப்போது கருப்பைக்கு வெளியே கருமுட் டையை வளர்ச்சியுற செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இதை செய்வதற்கு ஆக்சிஜன் அளவுகள், ஹார்மோன்கள் மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் புரதங்களுடன் கருமுட்டைகளை வளர்ச்சியுறச் செய்யும் செயல்பாட்டை நிர்வகிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் சிறந்த ஆய்வக கட்டுமானம் தேவைப்படுகிறது.
இந்த ஆராய்ச்சிமுறை பயன்பாட்டளவில் சாத்தியமென்பதை விஞ்ஞானிகள் நிரூபித்து காட்டியிருந்தாலும், “மாலிகுலர் ஹியூமன் ரீபுருடக்சன்” என்ற சஞ்சிகையில் வெளியாகி யுள்ள கட்டுரையின் அணுகுமுறையை செம் மைப்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது.

வெறும் பத்து சதவீத முட்டைகளே வளர்ச்சி யுறுதல் என்ற நிலையை எட்டுவது என்பது மிகவும் திறனற்ற விடயமாக பார்க்கப்படுகிறது.

அந்த முட்டைகள் கருவுற்றிருக்கவில்லை என்பதால் அவை எவ்வளவு காலம் பயன் படுத்தத்தக்கதாக இருக்கும் என்பது நிச்சயமற்றது.

“மனிதர்களின் திசுக்களில் இதுபோன்ற நிலையை எட்டுவது சாத்தியமானது”  என்ற கொள்கைக்கான ஆதாரத்தை அடைந்தது மிகவும் உற்சாகமூட்டுவதாக இந்த ஆராய்ச்சி குழுவில் இடம்பெற்றிருந்த விஞ்ஞானிகளில் ஒருவரான எவ்லின் டெல்பர் தெரிவித்தார்.

“இதை மென்மேலும் மேம்படுத்துவதற்கு இன்னும் பல கட்ட ஆராய்ச்சிகள் தேவைப் படுகிறது என்றாலும், மனித கருமுட்டை வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்திக்கொள்வதில் இந்த ஆராய்ச்சி ஒரு மிகப் பெரிய மைல்கல்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

உருளைக்கிழங்கில் செய்யப்பட்ட பிரென்சு பிரை சாப்பிடுவதால் முடி உதிர்வு பிரச்சினை தீருமா?

மாறுபட்ட வாழ்க்கைச்சூழலில் இளைஞர் களுக்கும் நரைமுடி மற்றும் முடி உதிருதல் போன்றவை மிகபெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு மாற்றாக பல மருந்துகள், இயற்கை மூலிகை எண்ணெய்கள் என்று சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஜப்பானில் உள்ள யோக்கோகாமா பல்கலைக் கழகத்தில் ஆய்வகத்தில் வளர்க்கப்படும் ஆய்வக எலிகளுக்கு டை-மெத்தில்-பாலிசில்-ஆக்சேன் என்ற வேதிப்பொருளை பூசிய போது அதன் ரோமங்கள் உதிர்ந்த பாகங்களில் மீண்டும் ரோமங்கள் முளைப்பதைக் கண்டுபிடித்தனர்.

இந்த கண்டுபிடிப்பை ஜப்பானின் மருத்துவ இதழிலும் வெளிவந்தது.

இந்த வேதிப்பொருள் உருளைக்கிழங்கை பிரெஞ்சு பிரை, சிப்ஸ் மற்றும் இதர வறுத்து உண்ணும் பொருளாக மாற்றும் போது சேர்க்கப் படுகிறது.   இந்த மருத்துவ இதழ் வெளிவந்த பிறகு ஜப்பானில் முடி உதிரும் பிரச்சினை உள்ளவர்களும், நரைமுடிக்காரர்களும் அதிக அளவு உருளைக்கிழங்கில் செய்யப்பட்ட பிரென்சு பிரை, சிப்ஸ், டீப் பிரை ஸ்பைசி பொட்டட்டொஸ் போன்றவற்றை சாப்பிட ஆரம் பித்துவிட்டனர். சில நாட்களிலேயே இவ்வகை உணவு விற்பனை அதிகரித்துள்ளது.

இது குறித்து எலியை ஆய்வுக்கு உட்படுத்திய அறிவியல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள் ளனர். இதனை அடுத்து அவர்கள் வெளியிட் டுள்ள அறிக்கையில் ஆய்வகத்தில் பயன் படுத்தப்படும் வேதிப்பொருளான டை-மெத்தில்-பாலிசில்-ஆக்சேன் என்பது அடர்த்தி மிகுந்ததும் காரத்தன்மை உடையதுமாகும், உணவிற்கு பயன்படுத்தப்படும் டை-மெத்தில்-பாலிசில்-ஆக்சேன் உருளைக்கிழங்கில் காரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக மிகவும் குறைந்த அளவு அடர்த்தி குறைந்த வேதிப்பொருள் பயன் படுத்தப்படுகிறது,

முடி வளர்வதற்காக டை- மெத்தில்-பாலிசில்-ஆக்சேனை நேரடியாக பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும்,.

அதே நேரத்தில் உருளைக்கிழங்கு பொறித்த உணவு வகைகளை அதிக அளவு உண்பதால் முடி உதிர்வது, நரை முடி இன்மை போன்ற பிரச்சினைகள் தீராது. ஆகவே யாரும் இது போன்ற செய்திகள் மற்றும் விளம்பரங்களை நம்பவேண்டாம் என்று தாங்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.

விண்ணில் மிதக்கும் மின்சார கார்!

உலகின் மிகச் சக்தி வாய்ந்த, ‘பால்கன் ஹெவி’ ராக்கெட்டை கடந்த, 6ஆம் தேதி அன்று ஏவி, வெள்ளோட்டம் பார்த்திருக்கிறது, ‘ஸ்பேஸ் எக்ஸ்!’ அமெரிக்க தனியார் விண் வெளி அமைப்பான இதன் அதிபர் எலான் மஸ்க், ஒரு குறும்புச் சோதனையாக, அந்த ராக்கெட்டில், தன் டெஸ்லா நிறுவனம் தயாரித்த, ‘ரோட்ஸ்டர்’ என்ற செர்ரி பழ சிவப்பு நிற மின்சார காரை, ராக்கெட்டில் வைத்து அனுப் பினார். ஒரு புதிய ராக்கெட்டை வெள்ளோட்டம் பார்க்கும்போது, அதில் சிமென்ட் பலகைகள் அல்லது கனமான உலோகங்களை மட்டுமே வைத்து அனுப்புவர்.

ஆனால், மஸ்க் தன் ரோட்ஸ்டர் காரையும், அதில், ‘ஸ்டார் மேன்’ என்ற பொம்மை விண் வெளி வீரரையும் வைத்து அனுப்பி இருக்கிறார். அது இனி பூமி, செவ்வாய் கோள்களைப் போலவே, சூரியனை பல்லாயிரம் ஆண்டு களுக்கு வலம் வந்து கொண்டிருக்கும்! அது மட்டுமல்ல, ரோட்ஸ்டரைப் போலவை ஒரு கையடக்க மாதிரி பொம்மையை செய்து, அதிலும் ஒரு மினி ஸ்டார் மேன் பொம்மையை வைத்து, அனுப்பியிருக்கிறார் மஸ்க். காரின் பொருட்களை வைக்கும் இடத்தில், எழுத்தாளர் அய்சக் அசிமோவ் எழுதிய, ‘தி பவுண்டேஷன் டிரைலாஜி’ என்ற தலைப்பிலான அறிவியல் புனைகதைகளைப் பதிந்த குறுவட்டையும் வைத்து அனுப்பியுள்ளார் மஸ்க். இந்த காரில், ஒரு ஒளிப்படக் கருவி, பூமிக்கு தான் காணும் காட்சிகளை நேரலை செய்தபடியே இருக்கும். அதாவது, அதன் மின்கலன் தீரும் வரை.

எல்லாம் சரி, அமெரிக்க அரசு அமைப்பான நாசா, விண்வெளியில் மிதக்கும் இந்த கார் மீது கண் வைத்திருக்கப் போகிறது. ஏன்? விண் வெளியில் மிதக்கும், 7.55 லட்சம் விண் கற்கள், 3,500 வால் நட்சத்திரங்கள் உட்பட, பல விண் பொருட்களை பெயரிட்டு, வகைப்படுத்தி கண் காணித்து வருகிறது. ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிய ரோட்ஸ்டரின் தற்போதைய இருப்பிடத்தை கண்காணிக்காவிட்டால், பூமியில் பொழுது போக்கு வானியல் ஆர்வலர்கள் யாராவது அதை, புதிய விண் கல் என, தவறாகச் சொல்லக் கூடும். அதைத் தடுக்கத் தான் இந்த கண்காணிப்பு.

கடல் நீரை குடிநீராக்கும் வடிகட்டி!

கடல் நீரை குடிநீராக்க, பல தொழில் நுட்பங்கள் ஆய்வில் இருக்கின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை மின்சாரம், வெப்பம் போன்ற ஏதாவது சக்தி மூலம் இயங் குபவையாக இருப்பதால் செலவு பிடித்தவை.

அண்மையில், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், எந்தவித எரிசக்தியும் தேவைப்படாத, எளிய வடிகட்டியை உருவாக்கி உள்ளனர்.

உலோக -கரிமப் படிமங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வடிகட்டியில், ஒரு பக்கம் கடல் நீரை ஊற்றினால், மறு பக்கம் குடிநீர் வெளிவரும். அது மட்டுமல்ல, மின் வாகனம், சூரிய மின் தேக்கிகளில் அதிகம் பயன்படும் லித்தியத் தையும் கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்க, இந்த புதுமை வடிகட்டி உதவும் என்கின்றனர் ஆஸ்திரேலிய அமெரிக்க விஞ்ஞானிகள்.

உலோக-கரிமப் பொருட்கள், பல பக்கங் களைக் கொண்ட நேனோ படிகங்கள். இவற்றில், 1 கிராம் எடையளவுள்ள படிகங்களின் பக்கங் களைச் சேர்த்து விரித்துப் பார்க்க முடிந்தால், ஒரு கால்பந்து மைதானத்தின் பரப் பளவுக்கு இருக்கும்.

இந்தப் பரப்பளவின் வழியே கடல் நீர் செல்லும் போது, அதிலுள்ள சில உலோகங்கள், வேதிப் பொருட்களை மட்டும் பிரித்தெடுத்து நிறுத்த முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள், இந்த வகையில், லித்தியம் அயனிகளை இந்த புதிய வடிகட்டி நிறுத்தும் திறன் கொண்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner