எழுத்துரு அளவு Larger Font Smaller Fontஅஜர்பைஜான், ஏப். 13- அஜர்பைஜானின் அதிபராக இல்ஹம் அலியேவ் (56)  மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

அஜர்பைஜானில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அலியேவ் உள்பட எட்டுபேர் களத்தில் இருந்தனர். தேர்தலில் 74.30 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், 86 சதவீத வாக்குகளைப் பெற்று அலியேவ் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகளுக்கு அவர் இப்பதவியை வகிப்பார். அலியேவ் 4-ஆவது முறையாக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரானிக் கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்றும் இந்திய வம்சாவளி பெண்

சிட்னி, ஏப். 13- ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி வீணா சகஜ்வாலா. இவர் நியூசவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிகிறார்.

இவர் பயன்படாத ஸ்மார்ட்போன், லேப்டாப் (மடி கணினி) போன்றவற்றின் எலெக்ட்ரானிக் கழிவுகளை மதிப்பு மிக்க பொருட்களாக மாற்றும் மைக்ரோ தொழிற்சாலையை உருவாக்கியுள்ளார். இது உலகில் முதன் முறையாக உருவாக் கப்பட்டுள்ள மைக்ரோ தொழிற்சாலையாகும். எலெக்ட்ரானிக் கழிவு பொருட்களால் சுற்றுப்புற சூழல் மற்றும் நிலத்துக்கு கடும் பாதிப்புகளும், பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. எனவே அவற்றை பயனுள்ள பொருட்களாக, மாற்றும் முயற்சியில் வீணா ஈடுபட்டார்.

தனது தீவிர முயற்சிக்கு பிறகு அதில் வெற்றி பெற்றார். எலெக்ட்ரானிக் கழிவுகள் மூலம் மக்கள் அன்றாடம் பயன் படுத்தும் கண்ணாடி பொருட்கள், பிளாஸ்டிக், மரச்சாமான்கள் மற்றும் பல்வேறு உபயோக பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

வீணாகும் கம்ப்யூட்டர் சர்க்கியூட் போர்டுகள் 3டி பிரிண்டிங்குக்கு தேவையான கிரேடு செராமிக்ஸ் மற்றும் பிளாஸ்டிக் நார்களாகவும் மாற்றி உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த தகவலை வீணா சகஜ்வாலா தெரிவித்தார். மும்பையை சேர்ந்த இவர் 1986-ஆம் ஆண்டு கான் பூர் அய்.அய்.டி.யில் பி.டெக் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார்.