எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகர்கோவில், மே 14 மிகப் பெரிய செயற்கைக் கோளான ஜி சாட் 29, ஜி சாட் 7 மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைக் கோள்கள் மிக விரைவில் விண்ணில் செலுத்தப் படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இதுகுறித்து நாகர்கோவில், சரக்கல்விளையில் அவர்  அளித்த பேட்டி: நிகழாண்டு இஸ்ரோ அதிக அளவில் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக 5 டேட்டா ரேட் கொண்ட மிகப்பெரிய செயற்கைக் கோளான ஜி சாட் 29 விண்ணில் செலுத்தப்பட உள் ளது. அதனைத் தொடர்ந்து ஜி சாட் 7 விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

மேலும் பல செயற்கைக் கோள்கள் செலுத்த இருக்கிறோம். 10 க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது. நிச்சயம் நிகழாண்டு முடி வுக்குள் குறைந்தது 8 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டு உள்ளோம்.

அடுத்த ஆண்டு (2019) 13 செயற்கைக் கோள்களை தயார் செய்ய திட்டமிட்டு உள்ளோம். இஸ்ரோ சார்பில் செலுத்தப்படும் செயற்கைக் கோள்களின் பயன்கள் பாமர மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இஸ்ரோவின் விருப்பம். குறிப்பாக நாவிக் கருவிகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. அந்த பணிகள் முடிவடைந்ததும் தயாரிக்கப்பட்ட கருவிகள் மீன வர்களுக்கு வழங்கப்படும். அது அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

இதே போன்று விவசாயிகள் உள்பட அனைவருக்கும் பயன் படும் வகையில் புதிய கருவிகள் உருவாக்கப்படும். சந்திரயான் 2 செயற்கைக்கோள் உருவாக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. தொழில்நுட்ப சோதனை முடிந்த பின்னர் நிகழாண்டின் இறுதியில் விண்ணில் செலுத்தப் படும். சூரியனை ஆராய சன் மிஷன் செயற்கைக் கோள் மிக விரைவில் செலுத்தப்பட உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner