எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒரு நட்சத்திரத்தை சுற்றி வாயு மற்றும் தூசுகளால் உருவாகி வரும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் படமெடுத் துள்ளனர். இதுபோன்ற உரு வாக்க நிலையிலுள்ள கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக தேடி வரும் நிலையில், முதல் முறையாக இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிடிஎஸ் 70 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குள்ள நட்சத்திரத்திற்கு 10 மில்லியனுக்கும் குறைவான வயதே இருக்குமென்றும், மேலும் இதன் துணைக்கோளின் வயது 5 முதல் 6 மில்லியன் வயதுகள் இருக்கு மென்றும் தெரியவந்துள்ளது.

பிடிஎஸ் 70பி என்று பெயரிடப்பட்டுள்ள இது வியாழனைவிட பல மடங்கு பெரியதாக இருக்குமென்றும், மேலும் அது மேகமூட்டமாக வளிமண்டலத்தை கொண்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

யுரேனஸ் சூரியனை சுற்றிவரும் தூரத்தை போன்று இந்த கோளும் அதன் நட்சத்திரத்தை சுற்றிவருமென்று ஜெர்மனியிலுள்ள மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்டியூட் பார் அஸ்ட்ரானமியின் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. இது, குள்ள நட்சத்திரத்தை ஒவ்வொரு முறை சுற்றி வருவதற்கும் 118 ஆண்டுகளாகிறது. நமது சூரிய குடும்பத்திலுள்ள எல்லா கோள்களைவிட அதிகமாக, அதாவது இதன் மேற்பரப்பு வெப்பநிலை 1,000 செல்சியஸை தாண்டும் என்று கருதப்படுகிறது. கொரோனாகிராஃப் என்ற கருவியை பயன்படுத்தி மங்கலாக காணப் படும் இந்த கிரகத்தின் ஒளி தடுக்கப்பட்டதன் மூலமே இதன் இருப்பிடம் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோள்கள் எப்படி உருவாகின்றன?

ஒரு நட்சத்திரம் உருவாகும்போது எஞ்சியிருக்கும் பொருட்களே கிரகங்களாக உருவாகின்றன என்ற கோட்பாடு அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பெரும்பாலும் வாயு மற்றும் தூசுக்களை கொண்டிருக்கும் இது, உருவான புதிய நட்சத்திரத்தை பரந்த வட்டப்பாதையில் சுற்றி வரும்.

காலப்போக்கில், அந்த சிதைவுகளின் சிறுபகுதிகள் ஒன்றிணைந்து ஒட்டிக்கொள்ளும். அவை எந்தளவிற்கு அளவில் விரிவடைகிறதோ, அந்தளவிற்கு புவி ஈர்ப்பு விசையை கொண்டிருக்கும். மேலும், உருவாக்க நிலையிலுள்ள மற்ற கோள்களிடமிருந்து கூடுதல் சிதைவு களை கவரும். அவ்வாறு உருவாகும் அமைப்பு, தனது பாதையை தெளிவாக அமைத்துக்கொள்ளுமானால், புதிய கிரகமாக உரு வெடுக்கிறது.

நமது சூரியக் குடும்பத்தை அடிப்படையாக கொண்டே இதற்கான கோட்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கவுள்ளனர். பிடிஎஸ் 70பி போன்ற கோள்களை அதன் தொடக்ககாலம் முதலே கவனித்து வந்தால் இதுகுறித்த பல்வேறு செயல்பாடுகளை புரிந்துகொள்வதற்கு வானியலாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

முதியோரின் வாழ்க்கையை சுலபமாக்கும் ‘மின்’ ஆடை

தினமும் பத்தாயிரம் அடி தூரம் நடப்பதை உறுதிப் படுத்த ஸ்மார்ட் வாட்ச் அணிவதிலிருந்து வங்கிக்கணக்கு தகவல்களை தெரிந்து கொள்வது வரை, வேரபிள் டெக்னாலஜி எனப்படும் அணி சாதன தொழில்நுட்பம் நமக்கு வெகுவாக பயன்பட்டு வருகிறது. நமது உடலில் அணியக்கூடிய மின் சாதனங்கள் நமக்கு தனிப்பட்ட பலன்களை மட்டும் தருவதில்லை, பெரிய அளவிலான சமூக பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உதவுகிறது.

உதாரணமாக முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எடுத்துக்கொள்ளலாம். 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் சமூக மாற்றங்களில் ஒன்றாக  முதியோர் எண்ணிக்கை உயர்வை குறிப்பிடுகிறது அய்க்கிய நாடுகள் சபையின் ஓர் அறிக்கை.

60 அல்லது அதற்கு அதிக வயதுள்ளவர்கள் எண் ணிக்கை 2050ஆம் ஆண்டு வாக்கில் தற்போதுள்ளதை விட இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாகிவிடும் என்கிறது அவ்வறிக்கை.

இதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளில் இடம் விட்டு இடம் நகர்தலும் ஒன்று. அதாவது ஒருவருக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க இடப்பெயர்வும் கடினமான ஒன்றாகிவிடும். வீடு, பொது இடங்கள், அலுவலகம் என எல்லா இடங்களிலும் சவால்களை சந்திக்க நேரிடும்.

புது தொழில்நுட்பம்

இதற்கு புது வகையான அணி சாதன தொழில்நுட்பம் உதவிக்கு வர உள்ளது.  முதியோர்களுக்கு என்றே எடை குறைவான எளிதில் அணியக்கூடிய ஒரு சூப்பர் ‘சூட்’ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.அய் இன்டெர்நேஷனல் என்ற லாப நோக்கமற்ற  நிறுவனத்தின் உதவியுடன் இயங்கும் சீஸ்மிக் என்ற நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. அணிப வர்களின் உடலுடன் ஒட்டியவாறு உள்ள இந்த ஆடை அவர்களின் சக்தியையும் அதிகரிக்கிறது.

இந்த ஆடையில் உள்ள ‘மின்சார தசைகள்’ சின்னஞ்சிறு மோட்டார்களால் இயக்கப்படுகின்றன. மனித உடல் தசை எப்படி வேலைசெய்கிறதோ அதே போல் இந்த ‘மின்சார தசையும்‘ இயங்குகிறது.

உடலின் மூட்டுப்பகுதிகளில் உள்ள துணியுடன் ‘மின்சார தசைகள்’ ஒருங்கிணைந்துள்ளன. துணியிலுள்ள பிடிமான தளத்தால் இது சாத்தியமாகிறது. நமது உடலுக்குள் உள்ள எலும்பும் தசையும் எப்படி ஒட்டி  செயல்படு கின்றனவோ அதே போல இது செயல்படுகிறது.

உடலின் அசைவுகளை கண்காணிக்கும் கணினியும் அதற்கான சென்சாரும் ஆடையுடன் இணைக்கப் பட்டுள்ளது.

‘மின்சார தசைகள்’ எப்போது இயங்க வேண்டுமென அதனுடன் உள்ள மென்பொருள் உத்தரவிடும். இந்த செயல்பாட்டுக்கு தேவையான மோட்டார், மின்கலன், மின் சுற்று பலகைகள் போன்றவை அறுகோண வடிவில் உடலில் பொருத்த தோதான ஒரு சிறிய ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும்.

இயங்குவதற்கான சுதந்திரம்

நடக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களுக்கு கம்பும் வாக்கர்களும்தான் தற்போது உதவி வருவதாக கூறுகிறார் சீஸ்மிக்கின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ரிச் மஹோனி.

சக்கர நாற்காலிகள் கூட இது போன்றவர்களுக்கு உதவுகின்றன. ஆனால் நகரும் தன்மை சற்றே குறைவாக உள்ள  முதியவர்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப் பட்டுள்ளது  இந்த மின்சார ஆடை.

இந்த ஆடை அணிய கச்சிதமாக இருப்பதுடன் சிக்கலில்லாமல்  செயல்பட வேண்டுமென்பதற்காக  வடிவமைப்பாளர் யிவிஸ் பெகரின் உதவியை பெற்றது சீஸ்மிக்.

ஒரு ஆடை என்றால் அணிவதற்கு விருப்பமாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்கிறார் பெஹர். அணிய வசதியாக இருப்பதுடன் அழகான தோற்றமும் உள்ளதாக இருக்க வேண்டும் என்கிறார் பெஹர்.

மின்சாரத்தால் இயங்கக்கூடிய இந்த ஆடையை இந்தாண்டு இறுதியில் ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டனில் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது சீஸ்மிக். ‘எதிர்காலம் இங்கே ஆரம்பம்‘ என்ற பெயரிலான ஒரு கண்காட்சி லண்டனின் விக்டோரியாவிலும் ஆல்பர்ட் மியூசியத் திலும் நடைபெற்றது. இதில் இடம்பெற்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களில் இந்த மின்சார ஆடையும் ஒன்று.

வயதாக வயதாக தசைகளின் வலிமை குறைவது நம் அனைவரையும் பாதிக்கிறது. 60 வயதை எட்டினாலே வயது தொடர்பான தசைகளின் உந்துசக்தி இல்லாமல் போய்விடுகிறது. உதாரணமாக ஆண்டுக்கு 0.5 சதவிகித என்ற அளவில் குறையும் இத்திறன் 70 வயதில் 2 சதவிகித என்ற அளவை எட்டுகிறது என்றால் 80 வயதில் 4 சதவிகிதத்தை எட்டுகிறது.

தொழில்நுட்ப அணி சாதனங்களுக்கான   சந்தை முதியவர்களுக்குமட்டுமானது என்பதை தாண்டி பரவ லானதாக உள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்,  மஸ்குலர் டிஸ்ட்ரபி என்ற தசைநார் தேய்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மின்சார ஆடைகள் உரு வாக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. பணியிட பாதுகாப்பு, தொழிற்சாலை பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உதாரணமாக கட்டுமான தொழிலாளர்கள், கிடங்குகளில் பணி புரிபவர்கள் தேவைக்கேற்பவும் அணி சாதனங்கள் உருவாக்கவும் முயற்சி நடந்து வருகிறது.

ஒரு வடிவமைப்பாளர் என்ற முறையில் இந்த தொழில் நுட்பங்கள் மனிதனுக்கு மேம்பட்ட வாழ்க்கையை தர வேண்டும் என்பதுதான் இலக்கு என்கிறார் பெகர்.

அணி சாதன தொழில் நுட்பங்கள் தற்போது கைக்குழந்தை பருவத்தில் இருப்பதாக நம்புகிறார் பெகர். பத்தாண்டுகளுக்கு முன் கைக்கட்டை விரலில் அணியக் கூடிய மின்கலன் அற்ற அணி சாதனங்கள் இருந்தன என்னும் பெகர், இப்போது யு.வி. தொழில் நுட்பங்கள் வந்துவிட்டதாக கூறுகிறார்.

அடுத்த பத்தாண்டுகளில் தொழில்நுட்பங்கள் கண்ணுக்கு தெரியாமல் செயல்படும் வகையில் மாறிவிடும் என்கிறார் பெஹர்.

வியாழனை சுற்றும் 10 புதிய நிலவுகள்!

புளூட்டோ கோளுக்கு அப்பால் ஒன்பதாவது கோள் இருக்கிறதா? இந்த நோக்கத்துடன் ஆய்வில் ஈடுபட்டிருந்த, சர்வதேச விண்வெளி யூனியனைச் சேர்ந்த விஞ்ஞானி களுக்கு ஆச்சரியங்கள் காத்திருந்தன.

வியாழன் கோளை, 10 புதிய நிலவுகள் வலம் வருவதை பாரீசிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஏற்கெனவே வியாழன் கோளை, 69 துணைக் கோள்கள் வலம் வருகின்றன. அண்மையின் கண்டுபிடிப்பையும் சேர்த்து இப்போது, 79 துணைக் கோள்கள் இருப்பது உறுதி யாகியுள்ளது.

இந்த புதிய துணைக் கோள்களில் ஒன்றான, ‘வேலே டுடா’ என்ற கோள், வியாழன் சுற்றும் திசைக்கு எதிர் திசையில் சுற்றி வருவது வினோதமாக இருப்பதாக, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால், இந்த துணைக் கோள் பிற துணைக்கோள்களுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்ப தாகவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.