எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உருளை வடிவ சிறு குழாய் போன்ற வித்தியாசமான வடிவத்தில் இருக்கும் அலைபேசி, கண்ணிமைக்கும் நேரத்தில் 7.5 அங்குல திரையுள்ள டேப்லெட்டாக மாறி னால் எப்படி இருக்கும்? இதுவரைக்கும் கனவாக, எதிர்கால தொழில்நுட்ப வருகை யாக பார்க்கப்பட்ட இதுபோன்ற தொழில் நுட்ப கருவியை உருவாக்கியுள்ளனர் கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள குயின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

காலங்காலமாக மக்களின் தகவல் மூலமாக இருந்துவரும் செய்தித்தாளை படித்து முடித்துவிட்டு, சுருட்டி வைத்துக் கொண்டு நகர முடியும். ஆனால், ஏன் அதுபோன்ற தொழில்நுட்ப கருவியை உரு வாக்க கூடாது என்று எழுந்த கேள்வியின் பதிலாகத்தான், மடித்து, சுருட்டி வைத்துக் கொள்ளக் கூடிய மேஜிக்ஸ்க்ரோல் என்னும் இந்த கருவியை உருவாக்கியுள்ளதாக கூறுகிறார் இந்த ஆராய்ச்சியின் தலைமை விஞ்ஞானியான வெர்டேகால்.

7.5 அங்குல திரையும், 2 ரெசல்யூஷனும் கொண்ட இந்த உருளை வடிவ கருவியை மடித்து வைத்துக்கொண்டே அதன் இரு முனைகளிலுள்ள சக்கரம் போன்ற அமைப்பை திருகுவதன் மூலமும், திரையை தொடுவதன் மூலமும் வழக்கம்போல் போன் செய்யலாம், செயலிகளை பயன்படுத்தலாம்.

அதேசமயத்தில், பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு வேண்டும்போது, அந்த திரையை வெளியே இழுத்து, கையடக்க கணினி (டேப்லெட்) போன்று பயன்படுத்தி கொள்ளும் வகையில் இது உருவாக்கப் பட்டுள்ளது. இதன் செயற்பாட்டுக்கு தேவையான அனைத்து அமைப்புகளும் உருளையின் உட்புறத்தில் வைக்கப்பட்டுள்ள தாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சாம்சங், ஆப்பிள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் மடித்து, விரிக்கும் வகையிலான அலைபேசி உருவாக்கும் முயற்சி யில் பல்வேறு ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வரும் சூழ்நிலையில் அவர்களுக்கு முன்னதாகவே உருவாக்கப் பட்டுள்ள இந்த கருவி இதுசார்ந்த ஆராய்ச்சிகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் என்று கருதப்படுகிறது.

 


 

மூளையை பாதிக்கும் காற்று மாசு

சீனாவில், 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் திடுக்கிட வைக்கின்றன.

அதிக காற்று மாசு உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு, அவர்கள் சுவாசிக்கும் நச்சுக்களால் மூளைத் திறன் பாதிக்கப்படுவதாக, அந்த பன்னாட்டு ஆய்வாளர்கள் செய்த ஆய்வு தெரிவிக்கிறது.

பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற அந்த நீண்ட கால ஆய்வு, ஆண்டுக்கு ஒரு முறை என, நான்கு ஆண்டுகளுக்கு நடத்தப்பட்டது. ஆய்வில் பங்கேற்றோருக்கு, எளிய கணிதப் புதிர்கள் மற்றும் சொல் விளையாட்டுகள் தரப்பட்டன.

அவர்களில் யாரெல்லாம், நைட்ரஜன் டையாக்சைடு மற்றும் சல்பர் டையாக்சைடு போன்ற நச்சுக்களை அதிக காலம் சுவாசித்தனரோ, அவர்களுக்கு மூளைத் திறன் கவனிக்கத்தக்க அளவு பாதிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, ஆய்வில் பங்கேற்றோரில் அதிக வயது உள்ளோருக்கு சொல் ஆற்றல் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆய்வு சீனாவில் நடத்தப்பட்டது தான். என்றாலும், இன்று உலகின், 90 சதவீத மக்கள் வசிக்கும் பகுதிகளில், அய்.நா., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தரத்தை விட மிக குறைவாகவே காற்றின் தன்மை இருப்பதால், இந்த ஆய்வு, உலகின் பல நாடுகளுக்குப் பொருந்தும் என்கின்றனர் வல்லுநர்கள்.


இருண்ட குகைகளில், ‘ஆன்டிபயாடிக்’

நோய் கிருமிகள், ‘ஆன்டிபயாடிக்‘ மருந்துகளை எதிர்க்கத் துவங்கிவிட்டன. செய்வதறியாமல் மருத் துவர்கள் திகைக்கின்றனர்.

பல ஆன்டிபயாடிக்குகள், சேற்றிலுள்ள கிருமிகள் சுரக்கும் வேதிப் பொருட்களை வைத்தே உருவாக்கப் படுகின்றன.  எனவே, மனிதக் காலடி படாத, இருண்ட குகைகளுக்குள் வசிக்கும் நுண்ணுயிரிகளை வைத்து, புதிய வகை ஆன்டிபயாடிக் தயாரிக்க முடியுமா என, சில விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

கனடாவில், காடுகள் அடர்ந்த மலைச் சரிவுகளில் உள்ள குகைகளுக்குள் நிலவும் மாறுபட்ட தட்ப வெப்பநிலையை தாக்குபிடித்து வாழும் பாக்டீரியாக்கள் உள்ளன. அவை, கடும் சூழலிலும் உயிர் வாழக்கூடிய, ‘எக்ஸ்ட்ரீமோபைல்ஸ்’ வகையைச் சேர்ந்தவை.

அவற்றை, கனடாவின் தாம்சன் ரிவர்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, நவோவரத் சீப்தம் மற்றும் சில ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து, 2016இல், ‘டைவர்சிட்டி’ இதழில், 100 பாக்டீரியாக்களை பட்டியலிட்டுள்ளனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner