எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காற்று வீசும் திசை யை, வேகத்தை நன்கு புரிந்து கொண்டால், வானிலையை இன்னும் துல்லியமாக கணிக்கலாம். இதற்குத் தான், அய்ரோப்பிய விண்வெளி முகமை, இ.எஸ்.ஏ., அண்மையில், ‘இயோலஸ்’ செயற்கைக்கோளை ஏவியது.

இயோலசில் உள்ள, ‘அலாடின்’ என்ற நவீன லேசர் கருவி, பூமி மீது லேசர் துடிப்புகளை அனுப்பும்.

அது, பூமியின் மேல் பட்டு திரும்பும் பாதையில் குறுக்கே வரும் காற்று, அந்த லேசர் கதிரில் மாறுதலை உண்டாக்கும்.

அந்த மாற்றத்தை அளப்பதன் மூலம் காற்றின் திசை, வேகம், வகைகள் போன்றவற்றை விஞ்ஞானிகளால் துல்லியமாக கணிக்க முடியும்.

அடுத்த சில வாரங்களில் முழுமையாக செயல்படவிருக்கும் இயோலஸ், மூன்று ஆண்டு களுக்கு பூமியின் வளி மண்டலத்தைக் கண் காணிக்கும்.

மாலுமி இல்லாத படகு

உலகிலேயே முதல் முறையாக, மாலுமி இல்லாத படகு ஒன்று, தானாகவே வட அட்லாண்டிக் கடலைக் கடந்திருக்கிறது.

நார்வேயைச் சேர்ந்த, ‘ஆப்ஷோர் சென்சிங்’ இரண்டு ஆண்டுகளாக இந்த சாதனையை செய்ய முயன்று தோற்றது.

கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட மாலுமி இல்லாத படகு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சில ஆயிரம் கி.மீ., பயணித்த பிறகு, தடுமாறிக் கொண்டிருந்தது. ஒரு மீன்பிடி படகு, அந்த மாலுமி இல்லாத படகை மீட்டு வந்தது.

ஆனால், ஜூன், 7 அன்று நியூபவுண்ட்லாந்திலிருந்து புறப்பட்ட, ‘செய்ல் பயோய் மெட்’ என்ற மாலுமி இல்லாத படகு, 3,000 கி.மீ.,தொலைவில் உள்ள அயர்லாந்து கடற்கரையை, ஆகஸ்ட், 26 அன்று வந்தடைந்தது.

சூரிய மின் பலகையும், பாய் மரமும் பொருத்தப்பட்ட செய்ல் பயோய் படகில், மாலுமி இல்லாத தொழில்நுட்பக் கருவிகளுடன் கடும் காற்று, காட்டமான அலைகள் என, எல்லாவற்றையும் சமாளித்து கரை சேர்ந்துள்ளது.

ஓட்டுனர் இல்லாத கார்களைப் போலவே, கடலிலும் மாலுமி இல்லாத படகுகள், அடுத்த, 10 ஆண்டுகளுக்குள் வந்துவிடும் என, வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner