எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜப்பானில் ரோபோக்கள் ஆராய்ச்சி வேகமெடுத் திருக்கிறது. ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு. ஜனத்தொகையில், 50 வயதுக்கு மேற்பட் டோரின் எண்ணிக்கை பாதிக்கும் மேல். தவிர, வெளிநாட்டவரை அதிக அளவில் வேலைக்கு எடுக்க, ஜப்பானியர்களுக்கு தயக்கம்.

இதனாலேயே, ரோபோக்களை தயாரிப்பதில் ஜப்பான் மும்முரம் காட்டி வருகிறது. அங்குள்ள, ஏ.அய்.எஸ்.டி., என்ற தொழில்நுட்ப ஆராய்ச்சி மய்யம், கட்டடத் தொழில் செய்வதற்கான ஒரு ரோபோவை உருவாக்கி, சோதித்து வருகிறது. அண்மையில், அந்த ஆய்வு நிலையம்,

‘எச்.ஆர்.பி. 5 பி’ என்ற ஒரு ரோபோ தச்சு வேலை செய்யும் காணொளிப் படத்துணுக்கை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், மனித வடிவிலுள்ள அந்த ரோபோ, கிடத்தியிருக்கும் மரப் பலகையை இரு கைகளால் லாவகமாக எடுத்து, நிமிர்த்திப் பிடித்து, திரும்பி நடந்து போய், ஒரு அலமாரியின் மேல் கச்சிதமாக பொருத்தி, ஒரு கையால் திருகாணிக் கருவியை முடுக்கி, மேலே, நடுவே, அடிப்பகுதியில் திருகாணி களை பொருத்துகிறது.

எச்.ஆர்.பி. 5பி ரோபோவின் வேகம் குறைவு தான் என்றாலும் வேலையை பிசிறில்லாமல் செய்கிறது. இன்னும் சில ஆண்டுகளில், ஜப்பானில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு வரப்போகிறது என்பதால், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக, ஏ.அய்.எஸ்.டி., விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


வித்தியாசமான வடிகட்டி!

திரவத்தில் உள்ள மாசு துகள்களை பிரித்தெடுக்க வடிகட்டிகளை பயன்படுத்துவர். திரவத்தில் கலந்தி ருக்கும் மாசுத்துகள்களில் பெரிய அளவில் உள் ளவை வடிகட்டியின் துளைகளுக்குள் போக முடியாமல் மேலே தங்க, திரவம் எளிதாக துளை வழியே போய்விடும்.

இருந்தாலும், மேலே தங்கிய மாசுத்துகள்கள் துளைகளை அடைத்துக்கொள்ளும். இதை தவிர்க்க முடியாதா? இந்தக் கேள்வியுடன் விஞ்ஞானிகள் கடலில் வாழும், ‘மந்தா ரே’ என்ற அகண்ட வாய் கொண்ட மீனை கவனித்தனர். மந்தா ரே, மிகச் சிறிய உயிரிகளைத்தான் உண்டு வாழ்கிறது.

அதன் வாய் வழியே நீரை உறிஞ்சி அடக்கி, அதன் உடலின் அடிப்பகுதியில் உள்ள செவுள்களின் வழியே நீரை வெளியேற்றும்.

அப்போது, செவுள் பகுதியில் அதிநுட்பமான கொக்கி போன்ற அமைப்புகள், நீரிலுள்ள பெரிய உயிரிகளை வெளியேற்றிவிட, கொக்கியில் சிக்கிய நுண் உயிரிகளை உடலுக்குள் தள்ளுகின்றன.

இதே ஏற்பாட்டை செயற்கையாக செய்து, அதை வடிகட்டியாக பயன்படுத்த முடியுமா என, அமெரிக்காவிலுள்ள ஓரிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

உதாரணத்திற்கு, நகர்ப்புற சாக்கடை நீரை சுத்தி கரிக்க முடியுமா என, அவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

அதேபோல, கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பையை மட்டும் வடித்தெடுக்கவும், இத்தகைய தொழில்நுட்பம் பயன்படலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner