எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நோயறிதல் துறையில் பல புதுமைகள் வந்து, நோயாளிகளின் பாக்கெட்டை பதம் பார்க்கின்றன.

ஆனால், ஜப்பான் மற்றும் நெதர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள், வெறும் காகிதத்தை வைத்து, ஒரு வருக்கு கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதா, இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியும் என்கின்றனர்.

எப்படி? சிறு காகித வில்லை மீது, நோயாளியின் ஓரிரு சொட்டு ரத்தத்தை விடவேண்டும்.

இருபது நிமிடங்களுக்கு பின், அந்த வில்லையின் மேல் இருக்கும்

புள்ளிகள், நீல நிறமாக ஒளிர்ந்தால், கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது என்று பொருள். பச்சை நிறமாக மாறினால், அவருக்கு கிருமித் தொற்று இல்லை என்று கணக்கு.

காகித வில்லையில் உள்ள புள்ளிகளில், ஒளிரும் புரதம் அச்சிடப்பட்டிருக்கும். அது தான், ரத்தத்தில் உள்ள கிருமிகளுடன் வினை புரியும்போது, நீலம் அல்லது பச்சை நிறத்தில் ஒளிர்கிறது.

இந்த நோயறியும் காகித வில்லை பயன்பாட்டுக்கு வந்தால், வளரும் நாடுகளில் உள்ள எளிய மக்களுக்கு, மிகவும் உதவியாக இருக்கும்.


விண்வெளியில் மிதக்கும் உடற்பயிற்சி கூடம்

விண்வெளி வீரர்கள் எப்போதும் மிதந்து கொண்டே இருப்பார்கள் என்பதை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியாகவும், வேடிக்கையாகவும் உள் ளார்கள் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் அது முற்றிலும் தவறு. விண்வெளி வீரர்களுக்கு நீண்ட காலத்தில் பல்வேறுவிதமான உடல்நல கோளாறுகள் ஏற்படும்.

பூஜ்ய ஈர்ப்பு விசையில் மனிதர்கள் குறிப்பிட்ட காலத்தை செலவிடும்போது ஏற்படும் உடல்ரீதியான பிரச்சினைகள் குறித்து ஆராய்வது சர்வதேச விண் வெளி நிலையத்தின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு இதன் மூலம் கிடைக்கும் அனு பவங்கள் பயன்படுத்தப்படும்.

ஈர்ப்பு விசையற்ற சூழலில் வாழ்வதால் விண் வெளி வீரர்களின் எலும்புகள் உடையக்கூடிய தன்மையை அடைவதாகவும், தொடர்ந்து உடலை நகர்த்திக்கொண்டே இருக்கும்போது தசைகள் வலி மையற்று போவதாகவும் தெரியவந்துள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள உடல்ரீதியான பிரச்சி னைகளை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு விண்வெளி வீரரும் அங்கேயே அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் உடற்பயிற்சி கூடத்தில் ஒருநாளைக்கு குறைந்தது இரண்டு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner