எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகின் மிக வேகமான படப்பிடிப்புக் கருவியை, விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

கனடாவை சேர்ந்த அய். என்.ஆர்.எஸ்., பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கால்டெக் ஆகிவற்றின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி யுள்ள ‘டி-கப்’ என்ற இந்தக் கருவி, ஒரு வினாடிக்கு, 10 லட்சம் கோடி படங்களை எடுக்கும் திறன் கொண்டது.

சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 2017இல், வினாடிக்கு, 4.4 லட்சம் கோடி தடவை படம் எடுக்கும் கருவியை உருவாக்கியிருந்தனர்.

இப்போது கால்டெக்- அய்.என்.ஆர்.எஸ்., விஞ்ஞானிகளின் கருவி, அதைவிட இரு மடங்கு வேகத்தில் படமெடுக்கிறது. ‘லேசர்’ ஒளித் துடிப்புகள் கடந்து செல்வதையும், அவற்றின் கோணம், வடிவம், அடர்த்தி போன்றவற்றை தெளிவாக இந்த கேமரா படம் பிடித்து அசத்தி உள்ளது.

இயற்பியல் மற்றும் உயிரியல் துறையில் அணுக்கள், செல்கள் போன்ற நேனோ அளவுகளில் நிகழும் மாற்றங்களை படம்பிடிக்க, அதிவேக படப்பிடிப்புக் கருவிகள் தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அளவை மிஞ்சிய தூக்கமும் கெடுதல்

தூக்கத்தைப் பற்றி நடத்தப்பட்ட உலகின் மிகப் பெரிய ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள ஆச்சரியமான தகவல், அதிக நேரம் தூங்குபவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதுதான்.

சராசரியாக ஒருவர் இரவில், 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது ஆரோக்கியமானது. இதற்கு குறைவான நேரம் தூங்குவதால் உடல் மற்றும் மனநலக் குறைபாடுகள் ஏற்படுவதை உல கெங்கும் பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குவது என்ன கெடுதலை விளைவித்துவிட முடியும்? அதிக தூக்கத்தால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள், ஒருவரது முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை பாதிப்பதாக மருத்து வர்கள் கருதுகின்றனர். ‘ஸ்லீப்’ என்ற ஆய்விதழில் வெளி யிடப்பட்ட இந்த ஆய்வில், உலகெங்கும் உள்ள 10,000 பேருக்கும் மேற்பட்டவர்கள், இணை யத்தின் மூலம் பங்கேற்றனர். குறைவாகத் தூங்கு பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், அதிக நேரம் தூங்குப வர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் ஒத்திருப்பதையும், இந்த ஆய்வு மூலம் ஆராய்ச் சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner