எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பல கோடிகள் செலவில் ஏவப்படும் செயற்கைக் கோள்களுக்கு அதிகபட்ச பணிக்காலம், 15 ஆண்டுகள்தான். பூமியை வலம் வர, அல்லது பூமியில் ஒரு நாட்டின் மீதே நிலையாக நிறுத்த, செயற்கைக் கோள்களுக்கு எரிபொருள் தேவை.

அந்த எரிபொருள் தீர்ந்ததும், செயற்கைக் கோள் மெல்ல தன் பாதையிலிருந்து நழுவி, பூமியுடனான தகவல் தொடர்பை இழந்து, விண்வெளியில் உலோகக் குப்பையாக மிதந்துகொண்டிருக்கவேண்டியதுதான்.

இதற்கு தீர்வாக, மீண்டும் அந்த செயற்கைக் கோள்களுக்கு எரிபொருளை நிரப்பி, மேலும் பல ஆண்டுகளுக்கு ஆயுளை நீட்டிக்கலாம் என்கின்றன சில தனியார் விண்வெளி அமைப்புகள்.

சொல்வதோடு நிற்காமல், அவை தற்போது நாசா உள்ளிட்ட சில விண்வெளி அமைப்பு களிடம் ஒப்பந்தங்களையும் போட ஆரம்பித் துள்ளன.

இஸ்ரேலை சேர்ந்த எபெக்டிவ் ஸ்பேஸ் சொல்யூசன்ஸ், அமெரிக் காவைச் சேர்ந்த ஸ்பேஸ் லாஜிஸ்டிக்ஸ், எல்.எல்.சி., போன்றவை, 2019 முதல் துவங்கி, சில நாடுகளின் தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களுக்கு எரிபொருள்களை நிரப்பித் தரவிருப்பதாக ‘வயர்ட்’ இதழ் தெரிவித்துள்ளது.

ஒரு சலவை இயந்திரத்தின் அளவுள்ள ரோபோவை ராக்கெட்டில் வைத்து அனுப்பி, எரிபொருள் தீரும் நிலையில் உள்ள செயற்கைக் கோளைப் பிடித்து, எரிபொருளை நிரப்புவதுதான் இந்த அமைப்புகளின் திட்டம்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner