எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருத்தரித்தல் சோதனை மய்யங்களில் மேற்கொள்ளப்படும் உத்திகளை அடிப்படையாக கொண்டு குறைந்து வரும் மரங்களின் விதைகளை பாதுகாக்கும் முயற்சிகள் பிரிட்டனிலுள்ள ஆராய்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முன்னெப்போதுமில்லாத வகையில் உலக அளவில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதாவது, உலகிலுள்ள ஒவ்வொரு அய்ந்து மரங்களில் ஒன்று அழிவை எதிர்நோக்கியுள்ளது.

இது காடுகளில் அழிவிற்குள்ளாகி வரும் மரங்களை பாதுகாக்கும் கொள்கை நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று பிரிட்டனிலுள்ள கியூஸ் மில்லினியம் விதை வங்கியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் டிக்கி கூறுகிறார்.

பரிணாம வளர்ச்சி என்பது எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அப்போது இதுபோன்ற மரங்களை இழப்பதை காட்டி லும், செலவு குறைந்த இம்முறையின் மூலம் பாதுகாப்பதென்பது அவசியமாகிறது.

போர், இயற்கை பேரிடர் போன்ற பேரழிவை ஏற்படுத்தும் சூழ்நிலைகளிலிருந்து மரங்களை பாதுகாக்க இந்த முயற்சி எடுக் கப்பட்டுள்ளது. அதாவது, இந்த சோதனைக் குழாய்களில் வைக்கப்படும் செடி, மரங்களின் விதைகள் வெடிகுண்டு, வெள்ளம், கதிரியக்கம் போன்ற எவற் றாலும் பாதிக்கப்படாத வகையில் பாதுகாக்கப் படுகிறது.

வரும் 2020ஆம் ஆண்டிற்குள் அழி வின் விளிம்பிலுள்ள குறைந்தது 75 சதவீத மரங்களை இம்முறையின் மூலம் பாது காப்பதே ஆராய்ச்சியாளர்களின் இலக்காக உள்ளது. ஆனால், சமீபத்திய கணிப்பின்படி, அச்சுறுத்தலிலுள்ள பல்வேறு மரங்களை வழக்கமான விதை பதப்படுத்துதல் முறையை கொண்டு பாதுகாக்க முடியாது என்பது தெரியவந்தது. இது இலக்கை நோக்கிய பயணத்தில் பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில், இந்த புதிய உத்தியை கொண்டு அனைத்து விதமான தாவரங் களையும் பாதுகாக்க முடியுமென்று பிரிட்டனி லுள்ள மில்லினியம் விதை வங்கியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக விதை வங்கியில் உலர்ந்த விதைகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப் படும் முறையை அனைத்து விதமான தாவர இனங்களிலும் மேற்கொள்ள முடியாது என்று மில்லினியம் விதை வங்கியை சேர்ந்த டேனியல் கூறுகிறார்.

உதாரணமாக, வேறுபட்ட விதைய மைப்பை கொண்ட ஓக், செஸ்நட் போன்ற வற்றை பதப்படுத்தி பாதுகாப்பதற்காக உலர வைத்தால் அவை இறந்துவிடும்.

இதுபோன்ற பாதுகாப்பதற்கு மிகவும் சவாலாக உள்ள விதைகளை பாதுகாப்பதற்கு கிரையோபிரிசர்வேஷன் போன்ற வேறுபட்ட உத்திகளை பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள். இந்த முறையை பயன்படுத்தியே காஃபி, சாக்லேட், அவ கோடா, ஓக் போன்றவற்றின் விதைகளை பாதுகாத்து வருகிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner