எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உடற்பயிற்சி உடல் ஆரோக்கி யத்துக்கு மட்டுமல்லாமல்; இதய ஆரோக் கியத்துக்கும் இன்றியமையாதது.  இதயப் பாதுகாப்பு தொடர்பான உடற்பயிற்சி இதயம் நன்றாகச் செயல்பட உதவும். தசைகள் தொடர்பான உடற்பயிற்சி தசை களை உறுதிப்படுத்த உதவும்.

இதயப் பாதுகாப்பு

இதயப் பாதுகாப்பு தொடர்பான உடற்பயிற்சி மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் பாதுகாக்க உதவுகிறது. உடல் தசைகளைத் தொடர்ந்து அசைத்து, கால் தசைகளையும் கைத்தசைகளையும் இயங்கச் செய்தால் அது இதயத்தை நன் றாக வேலை செய்ய வைப்பதுடன் சுத்த மான காற்றைச் சுவாசிக்கவும் உதவும்.

நீந்துதல், சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவை இதயம் தொடர்பான உடற்பயிற்சிகளில் அடங்கும். இந்த உடற்பயிற்சிகளால் கொழுப்பின் அளவு குறைகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக் குள் வைத்து உடல் எடையைச் சீராக வைக்க உதவுகிறது. மேலும், அவை உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்து, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்துகிறது.

எது சிறந்த உடற்பயிற்சி?

உடற்பயிற்சியானது ஒருவருடைய வயது, அவரது உடலமைப்பு, உடல் நலம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒருவர் தன்னுடைய 20ஆவது வயதில் உடலின் நெகிழ்வுத் தன்மை அதிகம் இருப்பதால் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சுமார் 30 வயதை எட்டும்போது உடல் தசை இயக்கம் குறையும் என்பதால், மூச்சை உள்வாங்கி வெளியிடும் (மூச்சுப் பயிற்சி) உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்க வேண்டும். 40 வயதைத் தொடும்போது, இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதால், இந்தப் பருவத்தில் 30 அல்லது 45 நிமிடங்கள் குதித்துச் செய்யும் உடற் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

50 வயதைத் தாண்டும்போது தண் ணீர் குடிக்கும் (தாகம்) விருப்பம் குறைய ஆரம்பிக்கும். எனவே, ஒருவர் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், இலகுவான, முறையான உடற் பயிற்சி செய்வது அவசியம். 60 வயதுப் பருவத்தில் மூட்டுவலி வர வாய்ப்புள்ள தால் அதிக எடை தூக்குவது போன்ற கடுமையான வேலை செய்வதைத் தவிர்த்துச் சாதாரண நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். 70 வயதுக்கு மேல் உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

உடற்பயிற்சி வழிமுறைகள்

நடைப்பயிற்சியானது உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு விரைவாக வும் நாடித்துடிப்பின் அளவை உயர்த்து வதாகவும் வியர்வை ஏற்படும் வகை யிலும் இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது மெதுவாக ஆரம்பித்து, உடலை உடற்பயிற்சிக்குத் தயார் செய்து கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி செல்லும்போது மூச்சை அடக்கிக்கொண்டு செல்லக் கூடாது. உடற்பயிற்சி செய்யும்போது, நெஞ்சில் வலி, நெஞ்சடைப்பு, கழுத்து மற்றும் தொண்டைப் பகுதியில் இறுக்கம், மூச்சுவிடுவதில் சிரமம், வாந்தி வரும் உணர்வு, தலைச்சுற்றல், உடல் நடுக்கம், பார்வைக் குறைபாடு ஏற்படுதல் போன் றவை இருந்தால் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுக வேண்டும்.

தூங்குவதற்கான உடற்பயிற்சி

படுக்கையில் மல்லாந்து படுத்துக் கொண்டு சாதாரணமாக இயல்பு நிலை யில் 8 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். பிறகு வலது புறமாகத் திரும்பி 16 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். அதன்பின் இடது புறமாகத் திரும்பி 32 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். இந்தப் பயிற்சியை முடிப்பதற்கு முன்ன தாகவே பலருக்குத் தூக்கம் வந்துவிடும்.

உடற்பயிற்சிக்கு ஏற்ற நேரம்

உடற்பயிற்சி செய்வதற்கு காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையே ஏற்ற நேரமாகும். மாலை நேரத்தைவிடக் காலை நேரத்தில் சுற்றுப்புறம் தூய்மை யாகவும், ஓசோன் மண்டலம் ஆக்சிஜன் நிறைந்த காற்றைக் கொண்டதாகவும் இருக்கும். சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்யக் கூடாது. அதேநேரம், உடற் பயிற்சிக்கு முன் வயிற்றுக்கு எளிதான திரவ உணவு அருந்தலாம். பொழுது விடிதற்கு முன் (அதிகாலையில்) குளிர் இருக்கும் போது உடற்பயிற்சி செய்தால் நெஞ்சுவலி ஏற்படக்கூடும்.

 

மாதவிலக்கு சீராக - கருப்பைக் கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு. இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற் கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் 5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.

மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த மாதுளை பழத் தோலை (1) அரைத்து புளித்த மோரில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner