
சுக்கிரன் என்ற கோளை `வீனஸ்' என்றும் சொல்ல லாம். `பூமியின் இரட்டை' என்று கூட சொல்வார்கள்.
சூரியனுக்கு அருகில் உள்ள கோள்களில் இது வும் ஒன்று. அதா வது 108 மில்லியன் கிலோமீட்டர் தூரத் தில் உள்ளது. இது சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம், 224.7 நாட்கள். இதன் குறுக்களவு 12 ஆயிரத்து 100 கிலோமீட்டர்.
தன்னைத்தானே ஒருமுறை சுற்றுவதற்கு 243 நாட்கள் ஆகின்றன. பூமியின் எடையில் 81.5 சதவிகிதம் உள்ளது. பூமியின் அளவில் 80 சதவிகிதம் உள்ளது. இதற்கு துணைக்கோள் எதுவும் கிடையாது.
சுக்கிரன் அதிகாலையிலும், மாலை வேளையிலும் பூமிக்கு அருகில் வருகிறது. அதனால், அப்போது வானில் தெளிவாகத் தெரியும். வெறும் கண்ணால் பார்க்கலாம். எப்போதாவது மெர்க்குரி போல சூரியனுக்கு குறுக்கே கடக்கும். 1874, 1882ஆம் ஆண்டுகளில் இதுபோல் கடந்தது. அடுத்த முறை 2004-ம் ஆண்டின், ஜூன் மாதத்தில் கடந்தது. அடுத்த முறை இந்த ஆண்டில் ஜூன் மாதம் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுக்கிரனை டெலஸ்கோப்பின் மூலம் பார்க்கும்போது, இதை சுழல் மேகங்கள் மறைத்திருப்பதைக் காணலாம். மேகங்கள் சூரிய வெளிச்சத்தை முழுவதும் பிரதிபலிக்கின்றன. அதனால் தான், சுக்கிரன் பிரகாசமாக ஜொலிக்கிறது.
1960இல் ரேடார் மூலம் வீனஸ் தனக்குத் தானே சுற்றிக் கொள்ளும் வேகத்தைக் கணக்கிட்டனர். அதில் ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன. சூரியனைச் சுற்றி வரும் நாட்களை விட, வீனஸ் தனக்குத் தானே சுற்றிக் கொள்ள அதிக நாட்களை எடுத்துக் கொள்வது தெரிய வந்தது. அதேபோல் இது பூமிக்கு எதிர் திசையில், கிழக்கில் இருந்து மேற்காக சுற்றி வருகிறது.
வீனஸின் பின்பகுதியை ரேடார், விண்கலங்கள் ஆகியவற்றின் மூலம் அளவிட்டனர். அப்போது இதில் செவ்வாயைப் போல, மலைகளும், பள்ளத்தாக்குகளும் இருப்பது தெரிந்தன.
ரஷ்ய, அமெரிக்க விண்கலங்கள் மூலம் சென்று பார்த்தனர். அப்போது, அதன் சுற்றுப்புறம் முழுவதும் கார்பன்-டை-ஆக்சைடு அதிக அழுத்தத்தில் இருந்தது தெரிய வந்தது. இந்த அழுத்தம், பூமியின் காற்றழுத்தத்தில் 90 மடங்குக்குச் சமம். இந்த கார்பன்-டை-ஆக்சைடு போர்வை போல் வீனஸின் மேற்புறத்தில் படர்ந்து இருக்கிறது, அதனால், அதன் வெப்பநிலை 475 டிகிரி செல்சியஸாக உள்ளது.