
வான் வெளியில் உள்ள கிரகங்களை சூரிய வெளிச்சத்தின் காரணமாகவும், அவை சுற்றிவரும் போது மறைவதன் காரணமாகவும் அவற்றை ஒரே நேரத்தில் பார்க்க முடிவதில்லை. இருந்தும் அபூர்வமாக இந்த மாதத்தில் புதன், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய அய்ந்து கிரகங்களை ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என இந்தியாவின் நேரு வானிலை மய்யத்தின் இயக்குநர் அரவிந் பரன்ஜ்பே தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அற்புத நிகழ்வு பிப்ரவரி 22-24 வரை உள்ள தேதிகளில் மாலை ஏழு மணியிலிருந்து மறுநாள் காலை ஒரு மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம் பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் வெள்ளி கோளை வெறும் கண்ணாலேயே நாள்தோறும் இரவு ஒன்பது மணியிலிருந்து பதினொரு மணி வரையும், சனி, செவ்வாய் ஆகிய கோள்களை பார்வை உபகரணங்களை பயன்படுத்தாமல் சூரியன் தோன்றி மறையும் வரை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.