மகளிர்

பார்வையற்ற, உடல் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி மாணவியருக்கு இந்தச் சமூகம் எந்த அளவுக்கு அங்கீகாரம் அளிக் கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டி யதில்லை. சாதாரண மாணவியர் பலரும் பள்ளியைத் தாண்டி உயர்கல்விக்காகக் கல் லூரிக்குச் செல்லவே பல்வேறு தடைகளைக் கடக்க வேண்டியதாயிருக்கிறது.

இப்படியொரு சூழலில் மாற்றுத்திறனாளி மாணவியரின் நிலை மிகப் பெரிய கேள்விக் குறியாகத் தொக்கி நிற்கிறது. இந்தக் கேள்விக் குறியை ஆச்சரியக்குறியாக்கும் வகையில் திருநெல்வேலி பேட்டையிலுள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல மய்யம் மாற்றுத்திறனாளி மாணவியருக்குக் கல்வியில் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது.

தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று பெயர்பெற்ற பாளையங்கோட்டையில் செயல்படும் தன்னாட்சித் தகுதி பெற்ற பெருமைமிக்க கல்லூரிகளுக்குப் போட்டியாக ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி விளங்கு கிறது. இங்கு 3,500-க்கும் மேற்பட்ட மாணவியர் இளங்கலை,  முதுகலைப் பட்டப் படிப்புகளைப் படிக்கிறார்கள். இவர்களில் 47 பேர் மாற்றுத்திறனாளி மாணவியர்.

இவர்களில் 20 பேர் பார்வையற்றவர்கள், 23 பேர் உடல் குறைபாடு கொண்டவர்கள், 4 பேர் காது கேளாதோர். 47 பேரில் 42 பேர்  இளங்கலைப் பட்டப்படிப்பில் வரலாறு, தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் ஆகிய பாடப் பிரிவுகளில் பயில்கிறார்கள். அய்வர் முது கலைப் பட்டப்படிப்பு படிக்கிறார்கள்.

இந்த மாற்றுத்திறனாளி மாணவியர் கல்வி பயிலவும் தேவையான உபகரணங்களை அளிக்கவும் பொருளாதார ரீதியில் உதவி களைச் செய்யவும் 2013-2014ஆம் கல்வி யாண் டில் மாற்றுத்திறனாளிகள் நல மய்யம் உரு வாக்கப்பட்டது. இந்த மய்யத்தில் தனியார் உதவி யுடன் கணினிகள் வைக்கப்பட்டிருக் கின்றன.

பார்வையற்ற மாணவிகள் இணையம் வழியாகக் கல்வி கற்க இந்தக் கணினிகள் பயன்படுகின்றன. இது தவிர வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைப் பதிவு செய்து கற்கும் வகையில் குரல் பதிவு உப கரணங்கள் உள்ளிட்ட நவீன உபகரணங் களையும் தன்னார்வ நிறுவனங்கள், உதவும் நபர்கள் மூலம் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள பார்வையற்ற கல்லூரி மாணவ, மாணவிகளை அழைத்து வந்து நவீன இணையவழிக் கற்றல் குறித்த கருத்தரங்குகளையும் இம்மய்யம் அவ்வப் போது நடத்துகிறது. பார்வையற்ற மாணவி களுக்குத் தனியார் வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெற்றுத்தரும் பெரும் பணியையும் இது செய்துவருகிறது.

இவை தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி ஊக்குவிப்பது, அவர்களுக்கான அரசின் கல்வி உதவி தொகையைப் பெற்றுத்தருவது, ஆளுமை மேம்பாட்டுக்கு வழிகாட்டுவது என்று பல்வேறு சேவைகளையும் இம்மய்யம் செய்து வருகிறது. திருநெல்வேலி மட்டு மின்றி விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னி யாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவிகள் இம்மய்யத்துக்கு வந்து கல்வி பயிலவும், பயிற்சி பெற்றுச்செல்லவும் ஏற்பாடுகள் செய் யப்பட்டிருக்கின்றன.

இந்த மய்யத்திலுள்ள கணினிகளில் 3.50 லட்சம் புத்தகங்களைப் பதிவேற்றம் செய்து வைத்திருக்கிறார்கள். பார்வையற்ற மாண வியர் இந்தப் புத்தகங்களைப் படித்து பயன்பெறமுடியும்.  100 சதவீதம் பார்வையற்ற மாணவிகள் பிரெய்லி முறையில் கல்வி கற்க உதவுகிறார்கள்.

இந்த மய்யத்தின் பொறுப்பாளர்களாகக் கல்லூரி முதல்வர் சி.வி. மைதிலி, பேராசி ரியர்கள் நா. வேலம்மாள், டார்லிங் செல்வி, பீனா சோம்நாத், பாஸ்கர் ஆகியோர் செயல் படுகிறார்கள். சேவை மனப்பான்மையுடன் மாற்றுத்திறனாளி மாணவியருக்கு இவர்கள் உதவிவருகிறார்கள். தற்போது இக்கல்லூரியில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணி யில் சேர்ந்திருக்கும் சிவராமகிருஷ்ணன், பார் வையற்றவர். இவர் இங்குள்ள மாணவியருக்கு மிகப் பெரிய முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

திறம்படப் பாடம் நடத்தும் இவர் குறித்து மாற்றுத்திறனாளி மாணவியர் பெருமிதம் கொள்கிறார்கள். அவரைப்போன்று சிரமப் பட்டு படித்து வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டுள்ள தாகவும் மாணவியர் தெரிவித்தனர்.

கல்லூரி முதல்வர் மைதிலி கூறும்போது, “திருநெல்வேலி மட்டுமின்றிப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையற்ற மாணவியர் எங்கள் கல்லூரியிலுள்ள மாற்றுத் திறனாளிகள் நல மய்யத்துக்கு வந்து பயிற்சி பெறுகிறார்கள். இம்மய்யத்தின் சேவையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தங்களால் வாழமுடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறோம்.

இங்கு பயிலும் மாற்றுத்திறனாளி மாண வியர் சிலர் பல்கலைக்கழக ரேங்க் பெறும் அளவுக்குத் திறம்படக் கல்வி கற்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் கலைத்திற மைகளை வெளிக்கொணரும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். மாற்றுத் திறனாளி மாணவியருக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணமும் கிடையாது” என்று தெரிவித்தார்.

இந்த மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலம்மாள், “மாற்றுத்திறனாளி மாணவி யருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் 4 வரையிலான தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹெல்ப் தி பிளைன்ட் ஃபவுண்டேசன் அமைப்பு மூலம் பார்வையற்ற மாணவியருக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித் தொகையைப் பெற்றுத்தருகிறோம்” என்று தெரிவித்தார்.

தனக்கு ஒதுக்கப்பட்ட பணியுடன் மட்டும் நின்றுவிடாமல் அழிந்துவரும் நாட்டுப்புறக் கலை களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பெரும்பணியையும் சேர்த்தே செய்துவருகிறார் இசை ஆசிரியை ம. அமல புஷ்பம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிவரும் அமல புஷ்பத்தைத் தந்தை வழியாகவே  இசை வந்தடைந்தது. இவரது பூர்விகம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கம்மாப்பட்டி. தந்தை மரியசூசை, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தில் தச்சுத் தொழிலாளியாக வேலை செய்துவந்தார். அவர் அங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் பாடல் பாடுவார். வீட்டில் இருக்கும்போது, நாட்டுப் புறப் பாடல்களை  எளிமையான வரிகளுடன் பாடுவார். அதுவே அமல புஷ்பத்துக்கு முதல் உந்துதலாக அமைந்தது.

அம்பாசமுத்திரம் ஏவிஆர்எம்வி பள்ளியில் படித்தபோது பாட்டுப் போட்டி என்றதுமே முதல் ஆளாகப் பெயரைப் பதிந்து போட்டியிடுவதோடு, வெற்றியும் பெற்றிருக்கிறார். இவரது இசை ஆர்வத்தைக் கவனித்த தலைமை ஆசிரியை ருக்மணி சாந்தா, இசை ஆசிரியர் சோமசுந்தரத்திடம் முறைப்படி இசையைக் கற்கும்படி சொன்னார்.

ஆசிரியர் சோமசுந்தரத்துக்கு எங்கள் வீட்டின் ஏழ்மை நிலை தெரியும். அதனால வட்டாட்சியர், எல்அய்சி அதிகாரிகள் வீடுகளுக்குப் பாட்டு கற்றுத்தரப் போகும்போது என்னையும் அங்கே வரச் சொல்லி இசைப் பயிற்சியளிப்பார் என்று சொல்லித் தனது பள்ளிப் பருவ நினைவுகளில் மூழ்கினார் அமல புஷ்பம்.

தற்போது தான் பணியாற்றிவரும் பள்ளியில் மாணவிகளுக்கு கருநாடக இசையைக் கற்றுத்தருவ தோடு ஒயிலாட்டம், கரகாட்டம், காவடி, களியல், கோலாட்டம் எனப் பல்வேறு கலைகளையும் கற்றுத்தருகிறார்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த  விழாவில் கோவில்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பாடல்களுக்கு இவரது வழி காட்டலில் நடனமாடியது, அனைவரையும் கவர்ந் தது. ஆசிரியை அமல புஷ்பத்தை அழைத்து மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார். விழிப் புணர்வுப் பாடல்களையும் அமல புஷ்பமே எழுதி யிருக்கிறார். கருநாடக சங்கீதத்தைக் கற்றவரின் கவனம் நாட்டுப்புறப் பாடல்கள் பக்கம் திரும்பியது குறித்துக் கேட்டோம்.

நான் படித்து முடித்து கிராம சமுதாய முன் னேற்றப் பணித் திட்டத்தில் பணியாற்றினேன். அப்போது கிராமங்களில் பல்வேறு விழிப்புணர்வு பணிகளைச் செய்ததோடு அதன் ஒரு பகுதியாகக் கலைநிகழ்ச்சிகளையும் நடத்தினோம். எனக்குப் பன்முகத் தன்மை வேண்டும் என்பதற்காக, அப்போது இளையரசனேந்தல் பங்குத் தந்தையாக இருந்த ஞானப்பிரகாசம் எனக்கு நாட்டுப்புறப் பாடல்களை நயத்துடன் பாடப் பயிற்சி அளித்தார் என்று சொல்லும் அமல புஷ்பம், ஞானபிரகாசமும் தனக்கு இன்னொரு  குரு என்கிறார்.

அவரிடம் பயின்றதுதான் பாடல்கள் எழுதும் ஆர்வத்தைத் தூண்டியதாகக் குறிப்பிடுகிறார். 2009இல்  “ஆச இருக்குதய்யா” என்ற நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டையும் 2012இல் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டையும் வெளியிட்டார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் இவர் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியதால் சென் னையில் பல பெரிய மேடைகளில் பாட வாய்ப்புக் கிடைத்தது. அதன்மூலம் மன்னாரு திரைப்படத்தில் பாடினார். பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், வென்று வருவான் ஆகிய படங்களிலும் பாடினார்.

இசைதான் வாழ்க்கை என முடிவாகிவிட்டது. அதைப் பயனுள்ளதாக  மாற்றத்தான் விழிப்புணர்வுப் பாடல்களை நானே எழுதிப் பாடுகிறேன். இயற் கையோடு இணைந்த வாழ்க்கை, நெகிழி ஒழிப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, பெண்ணுரிமை எனப் பல்வேறு கருத்துகளில் விழிப்புணர்வுப் பாடல்களை எழுதிப் பாடியுள்ளேன். அதையே என் மாணவி களுக்கும் கற்றுத்தருகிறேன். இதில் முயற்சி மட்டும் தான் என்னுடையது. மாணவிகளின் ஆர்வம்தான் என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்கிறது என்கிறார் அமல புஷ்பம்.

அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியிலி ருந்து தரையை எட்டிப் பார்த்தாலே பலருக்கும் தலை கிறுகிறுத்துவிடும். பறக்கும் விமானத்திலிருந்தோ பெரிய மலைகளி லிருந்தோ குதிக்க வேண்டும் என்றால் எப்படி யிருக்கும்? முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போய்விடும். பார்ப்பவர்களுக்குப் பீதியூட்டும் இந்த சாகச விளையாட்டை அந்தப் பெண் அநாயசமாகச் செய்து, இந்தியாவின் சாகச மங்கையாக மாறினார். அவர், இந்தியாவின் முதல் ஸ்கை டைவிங் வீராங்கனையான ரேச்சல் தாமஸ். சிறுவயதில் பறவையைப் போல பறக்க முடியாதா என குழந்தைகள் ஏங்குவார்கள். ரேச்சலும் அப்படித்தான் ஏங்கினார். விமானங் களைப் பார்க்கும் போதெல்லாம் பறக்கும் ஆசை, அவருக்குள் பீறிட்டு எழும். சிறுவயதில் மனத்தில் ஆழமாகப் பதிந்த இந்த ஆசை அவர் வளர்ந்த பிறகு செயல்வடிவம் பெறத் தொடங்கியது.

ஆக்ராவில் இந்திய ஸ்கை டைவிங் கூட்டமைப்பு  நடுவானில் பறக்கவும், மலையிலிருந்து குதித்துப் பறக்கவும் பயிற்சி வழங்கிவந்தது. ராணுவத்தினருக்கு மட்டுமே வழங்கப்படும் பயிற்சி இது. ஆனால், சாதாரணக் குடிமகளாக இந்தப் பயிற்சியைப் பெறும் பாக்கியம் ரேச்சலுக்கும் கிடைத்தது. 1979ஆம் ஆண்டில் 24 வயதில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகுதான் அந்தப் பயிற்சியில் ரேச்சல் சேர்ந்தார். அப்படிக் கிடைத்த பொன்னான வாய்ப்பைப் பயன் படுத்தி அடிப்படை பயிற்சியை முடித்து ஸ்கை ஜம்பிங் செய்யக் கற்றுக்கொண்டார்.

ஸ்கை ஜம்பிங், டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளில் ஆண்கள் மட்டுமே ஈடு பட்ட காலம் அது. அந்தச் சாகசத்தில் களம்கண்ட முதல் இந்தியப் பெண் என்ற சிறப்போடு ஸ்கை டைவிங்கில் குதித்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு அவர் செய்த இந்தச் சாகசம், இந்தியா முழுவதும் அவருக்குப் புகழ் வெளிச்சத்தைத் தந்தது. இந்தியாவின் முதல் பெண் ஸ்கை டைவர் என்ற சிறப்பு பெற்றதால், அந்தச் சாகச விளையாட்டில் ஈடுபட அவருக்கு ஏ லைசென்ஸ் சான்றிதழை இந்திய ஸ்கை டைவிங் கூட்டமைப்பு வழங்கியது.

1983ஆம் ஆண்டில் பல நாடுகளுக்குச் சென்ற ரேச்சல், காட்சி ரீதியிலான டைவிங் செய்து அசத்தினார். தொடர்ந்து ஸ்கை டைவிங்கில் இவர் செய்துகாட்டிய சாகசங்கள் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை ஈர்த்தன. ஸ்கை டைவிங்கில் மேலும் நுணுக் கங்களை அறிந்துகொள்ள அரசாங்கமே அவரை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தது.

இந்தப் பயிற்சியின்போது கலிபோர்னி யாவில் 150 முறை டைவிங் செய்து தனது பயிற்சியை நிறைவு செய்தார். பயிற்சி யாளருடன் ஒருசேர சேர்ந்து நடுவானில் குதிக்கும் டேண்டம் ஜம்பிங் எனும் பயிற்சி யையும் முறைப்படி கற்றுத் தேர்ந்தார்.  நேரத்தைக் கணக்கிட்டுத் துல்லியமாகக் குதிக் கும் பயிற்சியிலும் நிபுணத்துவம் பெற்றார்.

கடல் கடந்த சாகசம்

தொடர்ந்து ஸ்கை டைவிங்கிலும் ஜம்பிங்கிலும் ஈடுபட்டுவந்தபோதும், சில ஆண்டுகள் கழித்துத்தான் சாகசப் போட்டி யாளராக ரேச்சல் களமிறங்கினார். அவரது திறமையை வெளிப்படுத்த 1987ஆம் ஆண்டு உலக பாராசூட்டிங் வாகையர் பட்டப் போட்டி தென் கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்றது. இந்தியா சார்பாகப் பங்கேற்ற முதல் நபர் என்ற பெருமையோடு இந்தப் போட்டியில் ரேச்சல் பங்கேற்றார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி இலக்கைப் பூர்த்தி செய்தார் ரேச்சல்.

1989ஆம் ஆண்டு தாய்லாந்து ஓபன் பாராசூட்டிங் வாகையர் பட்டப்போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற அதே காலகட்டத்தில் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க ரேச்சல் தவற வில்லை.

பெருமைமிகு அங்கீகாரம்

1991ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் நடந்த ஸ்கை டைவிங் போட்டியில் பங்கேற்று இலக்கை நிறைவு செய்தார். இந்திய விமான சாகசக் கூட்டமைப்பு நடத்திய இந்தப் போட்டி யில், பெண் போட்டியாளராகப் பங்கேற்ற, ஒரே வீராங்கனை ரேச்சல் மட்டுமே. இதே போல 1995ஆம் ஆண்டில் ஆக்ராவில் நடைபெற்ற தேசிய ஸ்கை டைவிங் வாகையர் பட்ட போட்டியில் பங்கேற்று இலக்கை நிறைவு செய்து சாதித்தார்.

1995ஆம் ஆண்டில் போபால் நகரில் தேசிய இளையோர் திருவிழா நடை பெற்றபோது நடந்த ஒரு நிகழ்வை ரேச்சல் பெருமையான விஷயமாகக் குறிப்பிடுவது வாடிக்கை. இந்த நிகழ்வில் அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவும் பங்கேற்றார். ரேச்சல் தரையை நோக்கி வரும் போது எந்தப் பகுதியில் அவர் தரையிறங் குவார் என்பதை அறிய ஆர்வமிகுதியால் சங்கர் தயாள் சர்மா எழுந்து நின்று பார்க்க ஆரம்பித்தார். வானில் பறந்தபோதே இதைக் கண்ட ரேச்சல், இதைத் தனக்குக் கிடைத்த பெருமைமிகு அங்கீகாரமாகக் குறிப்பிடுகிறார்.

18 நாடுகளில் 656 முறை ஸ்கை டைவிங் செய்து சாதித்திருக்கிறார் ரேச்சல். 16 முறை விமானத்திலிருந்து நடுவானில் குதித்து, சாகசத்தை அரங்கேற்றியிருக்கிறார். இவரது வீரதீர சாகசத்தைக் கண்டு தேசிய சாகச விளையாட்டு விருதை மத்திய அரசு வழங்கிக் கவுரவித்தது. 2005ஆம் ஆண்டில் இந்தி யாவின் நான்காவது பெரிய விருதான பத்மசிறீ விருதும் ரேச்சலுக்கு வழங்கப்பட்டது. தற்போது 63 வயதாகிவிட்ட நிலையிலும் ஸ்கை டைவிங் செய்கிறார். இதற்காக தினமும் 6 கி.மீ. தொலைவு நடப்பதையும் ஓடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஸ்கை டைவிங் பயிற்சியாளராகவும் ஆசிரி யராகவும் செயல்பட்டு இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டிவருகிறார்.

கடற்கரையில் விளையாடப்படும் பீச் வாலிபால், ஃபுட் பால் போன்றவற்றைக் கேள்விப்பட்டிருக் கிறோம். பீச் கபடி குறித்து அறிந்திருக்கிறோமா? அந்த விளையாட்டின் முக்கியத்துவத்தைத் தமிழக மக்களுக்குத் தன் மகத்தான வெற்றியின் மூலம்  உணர்த்தியிருக்கிறார் சோழபாண்டிபுரம் அந் தோணியம்மாள்!

கடலூர் புனித ஜோசப் கல்லூரியில் முதுநிலைச் சமூகப் பணி முதலாமாண்டு படிக்கிறார் அந் தோணியம்மாள்.  தமிழர்களின்  மரபார்ந்த விளை யாட்டுகளில் ஒன்றாகக்  கருதப்படும் கபடிமீது ஆர்வம்கொண்டவர் இவர். தேசிய மற்றும் ஆசியப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் அந் தோணி யம்மாள், புரோ கபடியில் இடம்பெறும் உத்வேகத் துடன்  கடலூர் சில்வர் கடற்கரையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அந்தோணியம்மாளின் சொந்த  ஊர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சோழ பாண்டிபுரம் என்ற குக்கிராமம். அப்பா சவரிமுத்து, பால் வியாபாரி. அம்மா ரீட்டாமேரி, கூலித் தொழிலாளி.  அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தபோது அந்தோணியம் மாளுக்குக் கபடி  அறிமுகமானது. விளையாட்டாகத் தொடங்கியது, பின்னர் அவரது விருப்ப விளை யாட்டானது.

பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது ஆற்று மணல், தெருவில் என இரண்டு இடத்தில் கபடி விளையாடிடுவோம். விளையாடும்போது கால் முட்டி பெயர்ந்துவிடும். கை, கால்களில் சிராய்ப்பு ஏற்படும். சில நேரம் மண்டைகூட உடையும். அடுத்த நாள் குளிக்கும்போது ஏற்படும் எரிச்சலை வைத்துத்தான் எங்கெல்லாம் அடிபட்டிருக்கும் என்று தெரியும்.

ஆனால், இப்படி அடிபடுகிறதென்று நாங்கள் கவலைப் பட்டதே இல்லை.  புழுதி படிய விளையாட ஆரம்பித்தால், சுற்றியிருக்கும் எல்லாமே மறந்து போகும். அரைக்கால் சட்டையும் அழுக்கு பனியனும் இருந்தாலே போதும் எங்களுக்கு. புல்தரையும் போர்க்களமாகும், வயல்வெளியும் மைதானமாகும் என்கிறார் புன்னகைத்தபடி.

சர்வதேச வெற்றி

அதுவரை மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் மட்டுமே பங்கெடுத்த அந் தோணியம்மாளுக்கு அவர் பிளஸ் 1 படித்தபோது சங்கராபுரத்தில் நடந்த, ஸ்டேட் சாம்பியன்ஷிப் போட்டி தேசிய அளவில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தது. அப்போ அங்கே வந்திருந்த மதுரை யாதவா கல்லூரி பயிற்சியாளர் தேவா, ஜனார்த்தனன் ஆகிய இரண்டு பேரும் என்னுடைய திறமைக்காக ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல நான் யாதவா கல்லூரியில் இளங்கலை படிக்க உதவினார்கள். அப்படியே பீச் கபடி எப்படி விளையாடு குறித்த  பயிற்சியும் கொடுத்தார்கள். கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி, பல்கலைக்கழகப் போட்டி எனப் பல போட்டிகளில் பங்கெடுத்தேன். அவர்கள் இரண்டு பேரும் எதிர்பார்த்த மாதிரி நான் நிறையப் போட்டிகளில் வெற்றிபெற்று கல்லூரிக்குப் பெருமைசேர்த்தேன். அப்போதுதான் எனக்குத் தேசிய அளவிலான குழுவில் இடம் கிடைத்தது. நான் தங்கம் வென்ற திற்கு பிறகுதான் பீச் கபடி பற்றி நிறைய பேருக்குத் தெரிய வந்தது. கபடியின் இன்னொரு வடிவம்தான் இந்த பீச் கபடி என்கிறார் அந்தோணியம்மாள்.

2016இல் வியட்நாமில் நடந்த ஆசிய பீச் கபடியில் இந்திய அணி கோப்பையைக் கைப் பற்றியது. அந்த அணியில் அந்தோணியம்மாளும் இடம்பெற்றிருந்தார். வெளிநாட்டில் விளையாடி அவர் பெற்ற முதல் தங்கமும் அதுதான். 2017இல் மொரிசியஸ் தீவில் நடந்த சர்வதேச அளவிலான முதல் பீச் கபடி போட்டியிலும் இவர் பங்கேற்றார்.

இதிலும் இந்திய அணி தங்கம் வென்றது. இதுவரை  100க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்திருக்கும் அந்தோணியம்மாளின் கனவு, சர்வதேச அளவிலான பெண்களுக்கான கபடிப் போட்டியில் தங்கம் வெல்வது.

அந்தோணியம்மாளின் நிலையை அறிந்த கடலூர் புனித ஜோசப் கல்லூரி நிர்வாகத்தினர், அவரைத் தத்தெடுத்து, அவருக்குத் தேவையான உதவியைச் செய்துவருகின்றனர்.

Banner
Banner