மகளிர்

பெண் ரயில் ஓட்டுநர்களைத் தவிர்த்து கண்ட்ரோல் ரூமில் ரயிலைக் கட்டுப்படுத் துவதும் பெண்கள் என்ற நிலையில் இயங்கிக்  கொண்டிருந்த சென்னை மெட்ரோ இந்த ஆகஸ்ட் முதல் பெண் களுக்கென மேலும் சில சிறப்புக்களை சேர்த்து இயங்கத் துவங்கியுள்ளது.

மீனம்பாக்கம் விமானநிலையம் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் தேனாம்பேட்டை  டி.எம்.எஸ். வரை என இரண்டு வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சில, பெண்கள்  கட்டுப் பாட்டுக்குள் வந்துள்ளன.

சென்னையில் மொத்தம் 26 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. அவற்றில் சென்னை கோயம்பேடு மட்டும் ஷெனாய் நகர் மெட்ரோ  ரயில் நிலையங்கள் முழுவதும் பெண்களின் கட்டுப் பாட்டுக்குள் இயங்கிக் கொண்டிருக் கின்றன.பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம்  என்பதை முன்னிறுத்தும் வகை யில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களை மேம்படுத்தும் விதமாக, பெண்களை  மட்டுமே முன்னிறுத்தி செயல் படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த  நடவடிக்கைகள். இனி இந்த இரண்டு ரயில் நிலையங்களிலும் ஆண் ஊழியர்கள் பணியில் ஈடுபட மாட்டார்கள்.

நிலையத்தில் அறிவிப்பு செய்வதில் துவங்கி, பயணச்சீட்டு வழங்குதல், பயணிகளை கையாளுதல், கண்காணிப்புப் பணி, பயணி களை  பரிசோதனை செய்வது, வாடிக்கையாளர் சேவை, ரயில் நிலை யத்தைப் பராமரிப்பது, துப்புரவுப் பணி என அனைத்து வேலைகளிலும்  முழுக்க பெண்களே உள்ளனர்.

ஷிப்ட் அடிப்படையில் ஒரு ரயில் நிலையத்தில் மெத்தம் 15 பெண்கள் பணியில் இருக்கிறார்கள். பணியில்  இருக்கும் பெண் களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, சிசிடிவி கண்காணிப்பு மூலமான பாதுகாப்பு மெட்ரோ ரயில் நிலையங்களில்  தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

வாகன நெரிசலில் சிக்கிச் சிதைந்த சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான வரவு சென்னை மெட்ரோ. முழுவதும் நவீனமயமான,  குளி ரூட்டப்பட்ட பெட்டிகளின் நெரிசலற்ற இருக் கைகளில், மன உளைச்சலின்றி, சென் னையின் மொத்த அழகையும் உள்வாங்கி,  தூரங்களை நிமிடங்களில் கடந்து பயணிப்பது தனி சுகமே.  குறைவான கட்டணம் வசூலித்தால் இன்னும் சுகமே. அதிலும் நாம் பயணிக்கும் இந்த மெட்ரோ ரயிலை பெண்கள் இயக்குகிறார்கள்  என்ற செய்தி கூடுதல் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், பெண்கள் மட்டுமே பயணிப்பதற் கென்றே தனி பெட்டியும் தற்போது இதில்  இணைக்கப்பட்டுள்ளது.

சாதனையோ, சாகசமோ எந்த எல்லை யையும் தொடும் துடிப்பில் இன்றைய இளம் பெண்கள் களம் காண்கிறார்கள்.

 

சென்னையைச் சேர்ந்த டெய்சி  விக்டர்  இதுவரை இருபது சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், முப்பத்தாறு தேசிய விளை யாட்டுப் போட்டிகள், அய்ம்பத்தொன்பது மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் “மூத்தவர்’ பிரிவில்  கலந்து கொண்டு சுமார் 414 பதக்கங்களை பெற்றிருக்கிறார்.  அதில்  முன்னூற்றி நாற்பத்தைந்து  தங்கப் பதக்கங்கள். டெய்சிக்கு வயது எண்பத்தேழு. தினமும்  சென்னை  ஜவஹர்லால் நேரு விளை யாட்டரங்கில் காலை  ஏழரை மணிக்கு  ஆஜராகிறார்.

விளையாட்டு மைதானத்தில் ஓடுவதுடன்  தட்டு ,  குண்டு  எறியவும்   பயிற்சி செய்கிறார். சமீபத்தில்  உலக அளவில்  நடந்த தட்டு, குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.  பதக்கங்களை அறுவடை செய்துவரும்  டெய்சி  தனது பயணம் குறித்து மனம் திறக்கிறார்:

“நான் பிறந்தது  திருநெல்வேலிக்குப் பக்கத்தில் இருக்கும் நாசரேத் என்னும் ஊரில். அப்பா போஸ்ட்மாஸ்டராக வேலை பார்த்தார். ஆனால் தமிழ்நாட்டில் அல்ல. ஆந்திராவின் பெல்லாரியில்.  அதனால் நான் பெல்லாரியில் வளர்ந்தேன். அப்பாதான் விளையாட்டுகளில் பங்கெடுக்கும்படி உற்சாகப்படுத்தினார். எட்டு வயதில் ஓடத்  தொடங்கி,   இப்போது  எண்பத்தேழு வயதிலும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

நான் தடகள  ஓட்டத்தில்  பல வெற்றிகளை பெற்றேன்.  அதன் அடிப்படையில் 1951-இல் சென்னை தொலைபேசி  அலுவலகத்தில் வேலை கிடைத்தது. ஓட்டத்தில் எனது வெற்றிகளை கணக்கில் எடுத்து, தினமும் இரண்டு மணி நேரம் பயிற்சிக்காக அலுவலகத்தில் அனுமதி தந்தார்கள். அலுவலகத்தின் சார்பில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை .. பதக்கங்களைக் குவித்தேன். 1956இல் திருமணம்.  ஆறு குழந்தைகள். கர்ப்ப காலத்திலும் ஓடி பயிற்சி பெறுவேன். பிரசவம் ஆன ஒரே மாதத்திலேயே ஓடுவதற்காக மைதானம் வந்துவிடுவேன்.  பயிற்சிக்கு   நான் நீண்ட விடுமுறை தந்ததே கிடையாது.

இந்தியாவின்  மின்னல் வேக  ஓட்டக்காரர்  மில்க்காசிங் 1980-இல்  சென்னை வந்தார்.  அப்போது  “மூத்தோருக்காக  விளையாட்டு சங்கத்தை  ஆரம்பித்தார். முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்க என்னையும் ஊக்குவித்தார். அதன் காரணமாக 1981-இல் மூத்தோருக்கான தட கள போட்டியில் கலந்து கொண்டேன்.  நியூசிலாந்து சென்று  போட்டியில் கலந்து கொண்டு ஏழாவது  இடத்தில்  வந்தேன்.  அது எனக்கு உற்சாகம் தந்தது. தொடர்ந்து விக்டர் வில்சன் என்பவரிடம்  நான் பயிற்சி பெற்றேன். சர்வதேச போட்டிகளில் அவர் எனக்கு பயிற்சியளித்தார். இன்றைக்கும் நான் அதிகாலையில்  எழுந்துவிடுவேன்.  ஏழுமணிக்கெல்லாம்  மைதானம் நோக்கிப் புறப்படுவேன். ஏழரை முதல் ஒன்பதரை மணி வரை பயிற்சி நடக்கும்.  உடன் காபியும், காலை உணவையும் கொண்டு போவேன். வரும் வழியில்  அவசியம் ஏற்பட்டால் வங்கி, அஞ்சல் அலுவலகம் சென்று  வேலைகளை முடித்து விட்டு பதினோரு  மணியளவில் வீடு திரும்புவேன்.  முன் பெல்லாம்  எனக்கு பிடித்த விளையாட்டுகள் ட்ரிப்பிள்  ஜம்ப்  மற்றும்  தூரம்  தாண்டுதல்.

மூன்றாண்டுகளுக்கு  முன் என் கணவர் காலமானார். அவர் இறந்ததும் தனிமை எனக்கு பெரிய பாரமாக இருந்தது.   பிறகு  எனது  கவனம்   துள்ளி குதிப்பது, தூரம் தாண்டுவதிலிருந்தும் விலகி, ஓட்டம், தட்டு, குண்டு எறிதலுக்குத் திரும்பியது.

இத்தனை ஆண்டு காலமாக நான் சுகவீனப்பட்டதே இல்லை.  எந்த வகையிலும் உடல் வலியை உணர்ந்ததில்லை ஆனால், தற்சமயம் மாடிப்படிகள் ஏறி இறங்குவதில்  சிரமத்தை உணருகிறேன்.  என்னைத் தெரிந்தவர்கள் “எதற்காக இந்த வயதில் தினமும்  ஓடி பயிற்சி எடுக்கிறீர்கள்.. கீழே விழுந்து அடி பட்டால்.. உங்களுக்கும் சிரமம். உங்களை கவனிப்பதில் உங்கள் பிள்ளைகளுக்கும் சிரமம்.  வீட்டில்  இருங்கள்.. பேரன் பேத்திகளுடன் பேசி நேரத்தைப் போக்க வேண்டி யதுதானே’’  என்று  சொல்லாமல் இல்லை.

“எனக்கு சக்தி  இருக்கிறது. நான் சம்பாதித்ததை  போட்டிகளில் பங்கெடுக்கப் போய் வர செலவு செய்கிறேன்’’ என்று சமாதானப் படுத்துவேன். நான் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது ஏதாவது மருத்துவ செலவு ஏற்பட்டால் அதனை  டாக்டர் புகழேந்தி  ஏற்றுக்கொள்கிறார். மில்க்கா சிங்குடன்  என்னையும்  1981-இல்  பாராட்டி  மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பெருமைப்படுத்தினார். டெய்சி  தற்சமயம் லூதியானா சென்றுள்ளார்.  “அங்கு நடக்கும் ட்ரிப்பிள் ஜம்ப் பிரிவில் பயிற்சி எடுத்து.. எனது சாதனையை முறியடிக்க வேண்டும்  என்பதற்காகச் செல்கிறேன்’  என்கிறார் டெய்சி.

கோட்டரப்பட்டி, அக். 25- பெரியார் மணியம்மை அறிவியல் மற் றும் தொழில்நுட்ப நிறுவனத் தின் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யத்தின் பெரியார் புரா திட்டத்தின் கீழ் பெரியார் மணியம்மை அறிவியல் மற் றும் தொழில்நுட்ப நிறுவனத் தின் சமூகப் பணித்துறை, பெரியார் மருத்துவ குழுமம், திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி ஹர்சமித்ரா புற்றுநோய் மருத்துவமனை இணைந்து பெரியார் புரா கிராமம் கோட்டரப்பட்டி சமுதாயக் கூடத்தில் 21.10.2018 ஞாயிறு காலை 9.00 மணி முதல் பிற் பகல் 2.00 மணிவரை இலவச பொதுமருத்துவம் மற்றும் புற்று நோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

வல்லம் பெரியார் மணி யம்மை மருத்துவமனை மருத்துவக் குழுவுடன் மருத்துவ முகாமிற்கு 40க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் மாணவிகள் மருத் துவ சேவை வழங்கினார்கள்.

இந்த ஆண்டு நடைபெற்ற பத் தாவது பெரிய மருத்துவ முகாம் ஆகும். இந்த மருத்துவமுகாம் அனைத்து பெரியார் புராகிரா மங்களிலும் தொடர்ந்து நடை பெறும். இந்த மருத்துவ முகாமில் பெண்கள் குழந்தைகள், பெரிய வர்கள் மற்றும் இளைஞர்கள் என 240 பேர் கொட்டும் மழை யிலும் வந்து மருத்துவ பரிசோ தனை செய்துகொண்டு பயன் பெற்றனர். இதில் மார்பக புற்றுநோய் கண்டறியும் மருத்துவ பரிசோதனையில் 50 பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்த மருத்துவ குழுவில் பெரியார் மருத்துவ குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர்.கவு தமன் மருத்துவர் எஸ்.பிறை நுதல் செல்வி-பொருளாளர் திரா விடர் கழகம், மருத்துவர் சி. தியாகராஜன் பெரியார் மருத்து வமனை திருவெறும்பூர், மருத் துவர் பி.மஞ்சுளவாணி பெரி யார் மருத்துவமனை திருச்சி, மருத்துவர் ரமியா ஹர்சமித்ரா மருத்துவமனை திருச்சி, முனைவர் ஆர்.செந்தாமரை முதல்வர் பெரியார் மருந்தியல் கல்லூரி திருச்சி மாணவ, மாணவிகள், பணியாளர்கள் மற்றும் ஹர்சமித்ரா புற்றுநோய் மருத்துவமனை மாணவிகள், பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பான மருத்துவசேவை வழங்கினார்கள்.

இந்த மருத்துவ முகாமை கோட்டரப்பட்டி பங்கு தந்தை அந்தோணிசாமி துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். பேராசி ரியர் முனைவர் அ.ஆனந்த்ஜெ ரார்டு ஜெபாஸ்டின் வரவேற்பு ரையாற்றினார். மருத்துவர் ஆர். கவுதமன் மருத்துவர் எஸ்.பிறை நுதல் செல்வி ஆகியோர் கூறும் போது இந்த மருத்துவ முகாமின் பயன்கள் பற்றியும் சிறப்பு பற்றியும் மிகவும் தெளிவாக எடுத்துக்கூறினார்கள்.

இறுதியாக பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்ய இயக்குநர் முனைவர் த.ஜானகி இந்த மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற பெரும் பங்காற்றிய பெரியார் மருத்துவ குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர்.கவுதமன் மருத்துவர் எஸ்.பிறைநுதல் செல்வி, மருத்துவர் பி.மஞ்சுளவாணி, மருத்துவர் சி.தியாகராஜன் மருத்துவர் ரமியா முனைவர் ஆர்.செந்தா மரை துறை தலைவர் சமூகப் பணி துறை முனைவர் அ.ஆனந்த் ஜெரார்டு ஜெபாஸ்டின், உதவி பேராசிரியர் சமூகப் பணித்துறை, எஸ்.பரமேஷ்வ ரன், சமூகப்பணித்துறை மாணவ, மாணவிகள், பெரியார் மருந்தி யல் கல்லூரி மாணவ, மாணவிகள், பணியாளர்கள், பங்கு தந்தை அந்தோணிசாமி, பெரி யார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவ னத்தின் மக்கள் தொடர்பு அலு வலர் ப.இளங்கோ மற்றும் பெரியார் புரா திட்ட ஒருங்கி ணைப்பாளர் க.முருகேசன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

ஹூப்ளியைச் சேர்ந்த கேன்டிடா லூயிஸ் (28) தன்னுடைய இருசக்கர வாகனத்தில்  தன்னந் தனியாக பெங்களுரிலிருந்து சிட்னி வரை செல்லும் பெண் கல்வி மற்றும் சுதரந்திரத்தை வலியுறுத்தி விழிப் புணர்வு பயணத்தை தொடங் கியுள்ளார். சுமார் 28 ஆயிரம் கி.மீ. தொலைவு 120 நாட்களில் 10 நாடுகள் வழியே சென்று இந்த பயணத்தை முடிக்க வேண்டுமென்பது அவரது விருப்பமாகும்.

விவரம் தெரிந்த நாள் தொடங்கி தன் தந்தை மற்றும் சிநேகிதிகளுடன் ஹூப்ளியிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கோவாவிற்கு பலமுறை பைக்கில் சென்று வந்த இவர், கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு நாடுகளில் பைக்கில் பயணம் செய்துள்ளார். ஒரே வித்தியாசம். அந்தந்த நாடுகளுக்கு விமானத் தில் சென்று இறங்கி, அங்கு இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து பயணம் செய்துள்ளார். இந்த முறை 10 நாடுகள் வழியே தன்னுடைய பைக்கிலேயே தனியாக பயணம் செய்ய தீர்மானித்திருக்கிறார். முதலில் பெங்களூருவிலிருந்து லண்டன் வரை செல்ல முடிவு செய்தார். “சேஞ்ச் யுவர் வேர்ல்ட்’ என்ற அமைப்பு நிதியுதவி அளிக்க முன்வரவே சிட்னி வரை செல்ல தீர்மானித்துள்ளார். காரணம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இருசக்கர வீரர் அலிஸ்டர் பார்லாண்ட் என்பவர் அலாஸ் காவிலிருந்து தென் அமெரிக்காவுக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல மேற்கொண்ட பயணத்தின் போது விபத்தில் பலியானார். மீண்டும் அவர் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பவில்லை. அவர் நினைவாக அமைக்கப்பட்ட அமைப்புதான் ‘சேஞ்ச் யுவர் வேர்ல்ட்’. அதனால் சிட்னி செல்ல தீர்மா னித்தாராம் கேன்டிடா.

பயணத்தின் முதற்கட்டமாக இந்தியாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து வட கிழக்காக செல்வது. இரண்டாவது கட்டத்தில் மணிப்பூரிலிருந்து மியான்மா, லாவோஸ், வியட்நாம், கம்போடியா, தாய் லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா செல்வது. இடையில் இரண்டு தீவுகளை கடப்பது. முதலாவது மலேசியாவிலிருந்து இந்தோனேசியா. மற்றது டை மோரிலிருந்து டார்வின். இறுதி கட்டமாக டார்வின்லிருந்து சிட்னி.

இந்தப் பயணத்தை ஏழுமாதங்களாக திட்டமிட்ட கேன்டிடா, ஆகஸ்ட் 25-ஆம் தேதி காலை 6 மணி யளவில் பெங்களூரு விதான் சவுதா முன்பிருந்து கிளம்பியுள் ளார். ஏறக்குறைய 120 நாட்கள் ஆகுமென்பதோடு இந்த ஆண்டு இறுதியில்தான் மீண்டும் இந்தியா திரும்ப முடியும் என்பதால், தான் பயணம் செல்லவுள்ள நாடுகளின் தூதரகங்களிலிருந்து முன்கூட்டியே அனுமதி கடிதம் பெற்றுள்ளார்.

பயணத்தின் நோக்கம்

இதன் மூலம் பல்வேறு நாடுகளில் உள்ள மக் களையும், கலாசாரத்தையும் அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக பெண்கள் சக்தி, கல்வி மற்றும் அவர்கள் சுதந்திரத்தை வலியுறுத்துவதே நோக்க மாகும். பெங்களூருவில் இருசக்கர வாகன கலாச் சாரத்தை மேம்படுத்த பல கிளப்கள் உள்ளன. இருப்பினும் 80-90 இருசக்கர வீராங்கனைகள் மட்டுமே உள்ளனர். உலகம் எல்லா துறையிலும் வேகமாக முன் னேறிக் கொண்டிருந்தாலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பெண்கள் பின் தங்கிய நிலையில் உள்ளனர். என்னுடைய இந்தப் பயணம் பெண் களுக்கு தைரியத்தையும், அவர்களது கனவு களை நனவாக்கவும் உதவலாம். என்னுடைய திட் டத்தை என் சமூக வலைதளத்தில் பதிவேற்றியபோது, நிறையபேர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர் என்றார்.

“கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்று சொல்வதுண்டு. அது கீதா கோபிநாத்திற்கு அற்புதமாகப் பொருந்துகிறது.  பன்னாட்டு நிதியத்தின் தலைமைப் பொரு ளாதார ஆலோசகராக இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம் பெற்றுள்ளார். ஆளுநர் ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகக் நியமிக்கப்படும் வரை பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பணி புரிந்து வந்தார். ரகுராம்ராஜனுக்குப் பிறகு, இந்த பதவியில் அமரும் இரண்டாவது இந்தியர் கீதா கோபிநாத். பன்னாட்டு நிதியத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பணி புரிந்துவரும் மவுரீஸ் ஆப்ஸ்பீல்டின் பதவிக் காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. புதிய பொறுப்பினை, கீதா ஜனவரி 2019இல் ஏற்கவுள்ளார்.

பினராயி விஜயன் கேரளா முதல்வராக 2016 -இல் பொறுப்பேற்றுக் கொண்டதும் கீதா கோபிநாத்தை கேரள மாநிலத்தின் நிதி ஆலோசகராக நியமித்தார். தாராளமயமாக்கல் பொருளாதார கொள்கைகளை ஆதரிக்கும், கீதா கோபிநாத்தை “கம்யூனிச அரசின் நிதியா லோசகராக எப்படி நியமிக்கலாம்‘ என்ற சர்ச்சையும் அரசுக்குள், கட்சிக்குள் , எழுந்தன. “இந்தப் பதவி கவுரவப் பதவி. கேரளத்தின் மகளான கீதாவின் பொருளாதார புலமைக்கு ஒரு அங்கீகாரம். இந்தப் பதவிக்கு சம்பளம் ஏதும் இல்லை. தவிர... கேரள அரசின் தினசரி நிதி நடவடிக் கைகளில் கீதாவின் ஆலோ சனை ஏதும் கேட்டுப் பெறும் அவசியம் இருக்காது’ என்று சமாதானங்கள் சொல்ல ப்பட்டதால் எதிர்ப்புகள் விலகிப் போயின. ஃபெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் பாஸ்டன்,  ஃபெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் நியூயார்க் வங்கிகளின் பொருளா தார ஆலோசனை குழுவிலும் கீதா உறுப்பினர்.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சர்வ தேச கல்வி மற்றும் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் கீதா, சர்வதேச தரத்தில் வெளிவரும் பொருளாதார இதழ் ஒன்றின் இணை ஆசிரியராகவும் இருப்பதுடன், சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட பொருளாதார ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவைதான் கீதாவை சர்வதேச அரங்கில் பொருளாதார வல்லுநராக கட்ட மைப்பு செய்துள்ளன.

வேளாண்மையில் ஈடுபட்டு, மைசூரில் “உழவர்களின் நண்பன்’ என்ற அமைப்பிற்குப் பொறுப்பாளராக இருக்கும் டி.வி. கோபிநாத் தனது இரண்டாவது மகளான கீதா குறித்து சொல்லுகையில்:

“கீதாவுக்கு கிடைத்திருக்கும் பெருமைகள் அனைத்தும் கீதாவின் கடின உழைப்பிற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரங்கள். எங்களுக்கு பூர்வீகம் கேரளம் என்றாலும், கீதா பிறந்தது கொல்கத்தாவில். ஒன்பதாண்டுக்குப் பிறகு கொல்கத்தாவிலிருந்து மைசூருக்கு குடி யேறினோம். பிறகு சில ஆண்டுகள் டில்லியில் வசித்தோம். கீதாவின் பள்ளிப்படிப்பு மைசூரு வில்தான் நடந்தது. அய்ஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதற்காக டில்லி சிறீராம் பெண்கள் கல்லூரியில் படிக்க வைத்தேன்.

புதுமுக வகுப்புவரை அறிவியல் பாடங்கள் படித்த கீதா, கல்லூரியில் பொருளா தாரம் படித்தார். பொருளாதாரத்தில் பிஏ ஹானர்ஸ் பட்டம் பெற்ற பிறகு. டில்லி ஸ்கூல் ஆஃப் எகானா மிக்சில் பொருளாதாரத் தில் முதுகலைப் பட்டம். பிறகு அமெரிக்காவில் பொருளா தாரத்தில் முனைவர் பட்டம். டில்லியில் உடன் படித்த இக்பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இக்பால் 1996இல் இந்தியாவில் அய்ஏஎஸ் தேர்வில் முதலா வதாக வந்தவர். தமிழ்நாடு கேடரைச் சேர்ந் தவர். சில ஆண்டுகளில் பதவியை விட்டு விலகி, அமெரிக்காவில் நிதியம் ஒன்றில் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். கீதா- இக்பால் இணைக்கு ரோஹில் என்ற மகன்.

பள்ளியில் ஓட்டத்தில் கீதாவுக்கு ஈடுபாடு இருந்தது. ஆனால், ஓட்டத்தில் சாதனை புரிவது தன்னால் முடியாத விஷயம் என்று சரியாகத் தீர்மானித்த கீதா படிப்பில்

முழு கவனத்தை குவித்தவர் என்கிறார் கோபிநாத்.

“இந்தியாவின் முதல் நிதி, நாணயம், பொருளாதார நெருக்கடி பெரிய அளவில் ஏற்பட்டது 1991-இல். அப்போது பொருளா தாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந் தேன். அந்தப் பிரச்சினைதான் என்னைப் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற ஊக்குவித்தது. தொடர்ந்து முனைவர் பட்டத் திற்காக வெளிநாடு போகவும் வைத்தது’’ என்கிறார் கீதா.

சர்வதேச அளவில் பிரபலமான கல்வி நிறுவனங்களில் பெண்கள் பேராசிரியர்களாகப் போதுமான அளவில் செயல்படுகிறார்களா என்ற கேள்விக்கு கீதாவின் பதில் என்ன தெரியுமா?

“சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. நான் பணி புரியும் ஹார்வர்ட் கல்வி நிறுவ னத்தில் கூட சுமார் நாற்பது கல்வித் துறைகள் இருக்கின்றன. அதில் மூன்று பெண்கள் மட்டும்தான் உயர் பதவியில் உள்ளனர். அந்த மூன்று பேரில் நானும் ஒருத்தி. குடும்ப சுமை பெண்களைப் பலவகை களில் தடுக்கிறது. அதனால்தான் பல முன்னணிப் பதவி களுக்குப் பெண்கள் வர முடிவதில்லை. குடும்பம் பெண்களுக்கு ஒரு சவால்தான். நல்வாய்ப்பாக, என்னைப் பலப்படுத்தவும், எனக்கு உதவி செய்யவும் கணவர் இருக்கிறார்.

“நோபல் விருதுபெற்ற அமர்த்யா சென் னுக்குப் பிறகு ஹார்வர்ட் பொருளாதாரத் துறையில் இரண்டாவதாகப் பணி புரியும் வாய்ப்பு உங்களுக்கு மட்டும்தானே கிடைத் திருக்கிறது’ என்று பலர் பாராட்டுகிறார்கள். அதில் ஒரு திருத்தம் உள்ளது. அந்த வாய்ப்பினைப் பெற்றிருக்கும் முதல் இந்தியப் பெண் நான்தான் என மகிழ்வுடன் கூறினார்.

சர்வதேச அரங்கில் 45 வயதுக்கு கீழ் மிகச்சிறந்த இருபத்தைந்து பொருளாதார நிபு ணர்களில் ஒருவராக 2014-இல் தேர்ந்தெடுக்கப் பட்ட கீதா, அந்த இருபத்திநான்கு பேரையும் முந்திக் கொண்டு  பன்னாட்டு நிதியத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக உயர்ந்திருக்கிறார் என்பதே ஒரு மிகப்பெரிய சாதனைதான்.

Banner
Banner