மகளிர்

குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தைகள் புகுந்துவிட்டால் அதைப் பிடிப்பதை ஒரு சாகச நிகழ்ச்சிபோல் காட்டுவார்கள். ஆனால், சிறுத்தை தாக்கி யாராவது காயமடைந்தால் சிறுத்தைகள் என்றாலே கொடூரமானவை என்ற ரீதியில் பேசுவார்கள். இது ஒரு பொய்யான கட்டமைப்பு என்கிறார் சூழலியல் ஆர்வலரும் காட்டுயிர்ப் பாதுகாப்பு அறக்கட்டளையின் செயல்பாட்டாள ருமான வித்யா ஆத்ரேயா.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுத் தைகள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார் இவர். கொடூரமான விலங்கு எனச் சித்தரிக்கப்பட்டுள்ள சிறுத்தைகள் இயல்பிலேயே மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை.

நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளைத் தவிர்த்து மற்ற விலங்குகள் எல்லாம் காட்டில்தான் வாழும் என்ற சிந்தனை மனிதர்களிடம் உள்ளது. அதனால்தான் சிறுத்தை போன்ற விலங்குகள் குடி யிருப்புப் பகுதிகளுக்கு வந்தால் அவற்றை உடனே பிடித்துக்கொண்டு காட்டில்விட யோசிக்கிறோம்.

ஆனால், காலம்காலமாகச் சிறுத்தை, புலி, சிங்கம் போன்ற விலங்குகள் தங்களுக்குப் போதிய உணவு கிடைக்காத நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது வழக்கம்.

தற்போது சிசிடிவி தொழில்நுட்பம் உள்ளதால் தான் அவை குடியிருப்புப் பகுதிக்குள் வருவது நமக்குத் தெரிகிறது என்று

வீர சாகசங்களை பெண்கள் செய்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வானிலிருந்து குதிப்பது.. அதுவும் ஒன்பது கஜ சேலை உடுத்திக் கொண்டு குதிப்பது சாதாரண விஷயமல்ல. இந்த சாதனையை செய்தி ருக்கும் முதல் இந்திய பெண்மணி ஷீத்தல் ரானே மகாஜன்.

பூனா நகரைச் சேர்ந்தவர். இவர் விமா னத்தில் பறந்து சென்று வானிலிருந்து குதிப்பதில் சாதனை படைத்திருப்பவர். முப்பத்தைந்து வயதாகும் ஷீத்தல் தனது சாதனை குறித்து பகிர்கிறார்:

“வானில் 13,000 அடி உயரத்திலிருந்து குதிக்க வேண்டும். அப்படி இரண்டு முறை வெற்றிகரமாக குதித்து தாய்லாந்தின் பட்டாயா மண்ணில் வந்து இறங்கினேன். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுமையான சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

புதுமையை சேர்ப்பதற்காக வழக்கமாக வானிலிருந்து குதிக்கும் வீரர்கள் வீராங் கனைகள் அணியும் சம்பிரதாய உடை களை அணியாமல், ஒன்பது கஜ புடவையை அணிந்து கொண்டு குதித்தேன். புடவையைக் கட்டிக் கொண்டு குதிப்பதில் பல அசவு கரியங்கள் உண்டு. முதல் பிரச்சினை. வானி லிருந்து குதிக்கும் போது காற்றின் சக்தியால் புடவை பறக்கும்.... அவிழவும் வாய்ப்புகள் உண்டு. அதனால் சில முன்னெச்சரிக்கையாக சேலை பறக்காமல் இருக்க கால் பக்கத்தில் பின்களை வைத்து நன்றாக இறுக்கிக் கொண்டேன். எனக்குப் பயிற்சி அளித்த தாய்லாந்தின் பயிற்சியாளர் முதலில் முடியாது என்று மறுத்தாலும்... “சேலை அணிந்து குதிப் பது பொழுதுபோக்கிற்காக அல்ல.. சாதனை நிகழ்த்துவதற்காக’ என்று எடுத்துச் சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன்.

பிறகு பாராசூட், தலைக் கவசம், மூக்கு கண்ணாடி, பாத மூடணி அணிந்து கொள்ள வேண்டும். முதல் முறை குதித்ததில் தரையில் இறங்கும் போது கொஞ்சம் தடுமாறிவிட்டேன். இரண்டாம் முறை எந்தக் குறையும் இல்லாமல் தரை இறங்கினேன். சேலை கட்டிக் கொண்டு வீட்டில், அலுவலகத்தில் வேலை செய்வ துடன், சேலை கட்டிக்கொண்டு வானிலிருந்து குதிக்கலாம். பாரம்பரிய இந்திய பெண்ணால் சேலையுடன் வானிலிருந்து குதிக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த சாதனை’’ என்கிறார் ஷீத்தல்.

வானிலிருந்து குதித்தலில் ஷீத்தல் பதினெட்டு தேசிய சாதனைகளையும் ஆறு சர்வதேச சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். உலகம் முழுவதுமாக இதுவரை 704 முறை வானிலிருந்து குதித்திருக்கிறார். அதன் காரண மாக சர்வதேச விருதுகள் ஷீத்தலை வந் தடைந்திருக்கின்றன.

ஷீத்தலுக்கு பத்மசிறீ விருதும் 2011 - இல் வழங்கப்பட்டுள்ளது. “நான் முதன் முதலாக வானிலிருந்து குதித்தது 2004 - இல். வட துருவத்திலிருந்து எந்த பயிற்சியும் பெறாமல் குதித்தேன். ரஷ்ய விமானம் என்னை வானில் கொண்டு போய் விட்டது. 2400 அடி உயரத்திலிருந்து குதித்தேன். ஆனால் அப்போது குளிர் மைனஸ் 37 டிகிரி. காற்று வேகத்தில் குளிர் உடலை ஊசியாய் குத்தி நடுங்க வைக் கும். இந்த கடுங்குளிர் சூழலில் வானிலிருந்து குதித்த உலகின் முதல் பெண் நான்தான்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின், சரியாகச் சொன்னால் 2006 டிசம்பர் 15 அண்டார்டி காவின் வான் பகுதியிலிருந்து குதித்தேன். அங்கேயும் கடுங்குளிர்தான். வட தென் துருவங்களில் வானிலிருந்து குதித்த ஒரே பெண் என்ற பெருமையும் எனது 23 வயதி லேயே கிடைத்தது. “எனக்கு 2008- இல் திருமணம் ஆனது. கணவர் வைபவ் ரானே. ஃபின்லாந்தில் பொறியாளராக பணி புரிகிறார். திருமணம் நடந்ததும் வானத்தில்தான். வானில் பறக்கும் பேருரு கொண்ட பலூனில் திருமணம் நடந்தது.

பலூன் தரையிலிருந்து சுமார் 750 அடி உயரத்தில் புனா நகரின் வானத்தில் பறந்து கொண்டிருந்தது.  வானத்தில் நடந்த இந்தி யாவின் முதல் திருமணம் எங்களுடையது தான். “வைபவ் எனக்கு கணவரானது ஓர் அபூர்வப் பொருத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கும் வானத்திலிருந்து குதிக்கும் ஆர்வம் உண்டு. இதுவரை அவர் 57 தடவைகள் வானிலிருந்து குதித்திருக்கிறார்.

“கணவன் மனைவியாக ஒரு சேர வானத்திலிருந்து குதித்தால் என்ன’ என்று யோசித் தோம். “நாம ஒன்றாக குதிக்கிறோம்..’ என்று முடிவும் எடுத்தோம். 2011 நவம்பர் 11 அன்று இருவரும் ஒன்றாக வானிலிருந்து குதித்தோம். வானிலிருந்து குதிக்கும் முதல் வாழ்விணை யர்கள் என்ற சிறப்பும் எங்களுக்கு கிடைத்தது. எனக்கு ஒரே ஒரு ஆசை. இமயமலையின் சிகரமான எவரெஸ்ட்டின் வான்பகுதியி லிருந்து குதிக்க வேண்டும். 2010 இல் இரண்டு முறை முயன்றும் அது வெற்றிகரமாக நிறை வேறவில்லை. “வானம்தான் எனக்கு எல்லை. வானத்திலிருந்து குதிப்பதுதான் எனது லட் சியம். ஆம்... கடந்த பத்து ஆண்டுகளில் ஏழு கண்டங்களின் வான் பகுதியிலிருந்து குதித் திருக்கிறேன். இந்த சாதனைக்காக இந்திய ஏரோ கிளப்பின் விருது எனக்கு வழங்கப் பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசும் எனக்கு உதவு கிறது.

அமெரிக்காவில் பயிற்சி பெற ஏற் பாடுகள் செய்து கொடுத்தது. எனக்கு விருதுகளாக இரண்டு மகன்கள். இரட்டை யர்கள். ஒன்பது வயதாகிறது. அடுத்து எங்கிருந்து குதிக்கலாம் என்று யோசித்து வருகிறேன்....” என்கிறார் ஷீத்தல் ரானே மகாஜன்.


தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பத்தை மூன்று வயது முதல் கற்று வருகிறார் ஆர்.சூர்யா. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த இவர் சிலம்பத்தில் பல்வேறு இமயங்களைத் தொட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக தேசிய அளவிலான போட்டிகளுக்கு நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தினரும் சிலம்பம் பயிற்சியில் தேர்ந்தவர்களே. கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வரும் இவர், 300-க்கும் மேற்பட்டோருக்கு இந்தக் கலையை பயிற்றுவித்து வருகிறார்.

காலையில் 6 மணிக்கு விடியும் இவரது பொழுதுகள் ரயிலில் கல்லூரிக்குப் பயணம், கல்லூரி முடிந்ததும் அதே கல்லூரியில் மாணவிகளுக்கு சிலம்பப் பயிற்சி கற்றுக்கொடுத்தல், மீண்டும் வீடு திரும்பி சிலம்பக்கூடத்தில் இரவு 9 மணி வரை சிலம்பம் கற்றுக் கொடுத்தல், இதற்கு நடுவில் பள்ளிகளில் சிலம்பம் வகுப்புகள் எடுத்தல்...இவை அனைத்தும் போதாதென்று சிலம்பத்தை மூலை முடுக்களில் எல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணி, சிலம்பக் கலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

சிலம்பக் கலையில் அவரது 20 ஆண்டு கால பயணம் குறித்து  அவர் கூறியதாவது: “நான் பிறப்பதற்கு முன்பே என் அப்பா ராஜேந் திரன் இறந்துவிட்டார். என்னையும் என் அக்கா சந்தியாவையும் அம்மா சுதாதேவிதான் கூலி வேலைக்குச் சென்று படிக்க வைத்தார்.

என் தந்தையின் மறைவுக்குப் பிறகு எங்கள் குடும்பத்துக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்து என்னையும் சிலம்பக் கலைக்குள் ஈடுபடுத்தியவர் என் தாய்மாமா வி.அரிதாஸ் தான். அவர் சுப்ரமணிய ஆசான் என்பவரிடம் சிலம்பம் கற்றுக் கொண்டிருந்தார்.

அப்போது என்னையும் மூன்று வயதிலேயே அதே ஆசானிடம் பயிற்சிக்காக சேர்த்துவிட்டார். அப்படிதான் சிலம்பம் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்.

இதனையடுத்து சுப்ரமணிய ஆசான் சிலம்பக்கூடம் என்ற பயிற்சி மய்யத்தை என் தாய்மாமா நிறுவினார். அவர் தலைமையில் சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறேன். 14 ஆண்டுகளாக சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறேன். சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை என அனைவருக்கும் சிலம்பம் பயிற்றுவிக்கிறேன்.

சென்னை ராணி மேணி கல்லூரியில் எம்.பில் வரலாறு படித்து வருகிறேன். அதில் “தற்காப்பு கலைகள் சிலம்பம்‘ என்ற தலைப்பில் ஆய்வுப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறேன். கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளில் இருப்பதைப் போன்று (பிளாக் பெல்ட்) சிலம்பத்தில் படிநிலைகள் கிடையாது.

ஒருவர் எத்தனை தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கிறார்களோ அதனைக் கொண்டே அவரது தகுதி தீர்மானிக்கப் படுகிறது.

எனவே, பிற தற்காப்புக் கலைகள் போன்று இதற்கும் படிநிலைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன். கல்லூரியில் மேற்கொண்டிருக்கும் ஆய்வுப்பணியை நிறைவு செய்து, அதனை ஒரு புத்தகமாக வெளியிட்டால் அதுவும் இந்த முயற்சிக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். 20 ஆண்டு காலத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன்.

2002ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் 30 - 34 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். அதே போட்டியில் 34 - 38 கிலோ எடைப்பிரிவில் என் சகோதரி சந்தியா தங்கப்பதக்கம் வென்றார்.

அதன்பின்பு தேசிய அளவில் 10 போட்டிகளில் பங்கேற்று, பத்துப் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். மாநில அளவில் 25 போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். சிலம்பக் கலையின் பிற அம்சங்களான கத்தி, வேல்கம்பு, மான்கொம்பு, சுருள்வாள், தீப்பந்தம், புலிவேஷம் உள் ளிட்டவற்றிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். அதை பயிற்றுவித்தும் வருகிறேன்.

5 ஆயிரம் ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த கலையை முன்னெடுத்துச் செல்ல யாரும் முன்வருவதில்லை. ஒரு கலையாக இதனை பார்த்து ரசிப்பதோடு அப்படியே விட்டு விடுகிறார்கள். இதனால் இந்தக் கலையைப் பயிற்சி செய்து வரும் பல வீரர்களுக்கு முறையான அங்கீகாரம் இல்லை.

இருப்பினும் சிலம்பக் கலையை வளர்ப்பதற்காக முகாம்கள் நடத்தியும், சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் சிலம்பம் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்தி வருகிறோம். சிலம்பம் என்ற வீர விளையாட்டை ஒலிம்பிக் போட்டி வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் இலக்கு!’’ என்றார் ஜெனி.

பெண்களும் நோபல் பரிசும்

நோபல் பரிசு இதுவரை 49 முறை பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெண்மணி மேடம் க்யூரி மட்டுமே. 1903-ஆம் ஆண்டு அறிவியல் சார்ந்தும், 1911-இல் ரசாயனம் சார்ந்தும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பெர்தா வோன் சட்னர்: ஆஸ்திரிய அரசு குடும் பத்தில் பிறந்தவர். போர்களை அறவே வெறுத்தவர். மாறாக சமாதானத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருந்தவர். நோபல் பரிசு வழங்கிய டாக்டர் நோபலிடம் சமாதானத்துக்கு பரிசு வழங்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்திக் கூறி வந்தார். 1905இல் இவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனைப் பெற்ற முதல் பெண்மணியும் இவர் தான். மேலும் மேடம் க்யூரி (1900)க்குப் பின் இரண்டாவதாக நோபல் பரிசு பெற்ற பெண்மணி இவர்! இவர் ஒரு நாவலாசிரியர். இவர் எழுதிய நாவல் மிகமிகப் பிரபலம். இதற்கு 37 தொகுதி கள் வெளியாகியுள்ளன. அந்தக் காலத்திலேயே 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

டோரிஸ் லெசிங்: 88 வயதில், 2007ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார் இங்கிலாந்தைச் சேர்ந்த டோரிஸ்லெசிங். மிக வயதான காலத்தில் நோபல் பரிசைப் பெற்றவரும் இவர்தான்.

வாங்காரி மாத்தாய்: 1940ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி கென்யாவின் நெய்ரி ஊரில் பிறந்தார். இவர் கென்யாவில் அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை தூண்டிவிட்ட வீராங்கனை! 1977-இல் “க்ரீன் பெல்ட் மூவ்மென்ட்’ என்ற இயக் கத்தைத் தொடங்கி அதன் மூலம் கென்யாவின் பல இடங்களில், பெண்களின் உதவியுடன் 2 கோடி மரங் களை நட்டு வளர்த்தார்.
இவருக்கு கென்ய அமைச் சரவையில் உதவி அமைச்சர் பதவி கிடைத்தது. சுற்றுச்சூழல் இயற்கைச் செல்வம் மற்றும் காட்டு வாழ்க்கை சார்ந்த துறை இது! அதே சமயம் கென்ய நாட்டுப்புறப் பெண்கள், குடும்பச் சூழலில் படும் அவதிகளைக் களையவும் கடும் முயற்சி எடுத்தார். பலன் இவருக்கு 2004-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண் இவர்தான். 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி இவர் காலமானார்.

செல்மா லாஜர்லாஃப்: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த செல்மா லாஜர்லாஃப் இலக்கியத்துக்காக 1909ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான்.

பெண்களுக்கான பயண ஏற்பாடு

இந்தியாவில் தனியாகச் சுற்றுலா செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே இப்போதுவும் நிலவுகிறது.
இந்நிலையில் டில்லியைச் சேர்ந்த ராஷ்மி சத்தா 2016இல் பெண்கள் தனியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு வோவாயேஜ் (Wovoyage) என்ற பயண ஏற்பாட்டு நிறுவனத்தைத் தொடங்கினார்.

பெண்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சம் பிடிப்பதோடு அவர்களுக்குச் சிறந்த அனுபவத்தையும் தருவதற்கு உத்தரவாதம் தருகிறது வோவாயேஜ்.

இந்தப் பணியைத் தொடங்கிய இரண்டு ஆண்டு களில் 207 பயணங்களை ராஷ்மி சத்தா ஒருங் கிணைத்துள்ளார். தனிப் பெண் சுற்றுலாப் பயணி களுக்குப் பெண் வழிகாட்டிகளையும் ராஷ்மி ஏற்பாடு செய்கிறார்.

பேருந்துப் பயணங்களுக்கும் உதவும் இவரது நிறுவனம், பெண் பயணிகளுக்கு முன் இருக்கையைக் குறைந்த கட்டணத்தில் எடுத்துத் தருகிறது.

வெளிநாட்டுப் பயணங்களிலும் பெண் பயணி களுக்கு உதவும் வுவாயேஜ், கடந்த எட்டு மாதங்களில் 45 லட்சத்தை வருவாயாக ஈட்டியுள்ளது. ராஷ்மி சத்தாவுக்கு டோக்கியோவிலும் ஒரு அலுவலகக் கிளை உள்ளது.

 

ஈரோடு மாவட்டம் நல்ல கவுண்டம்பாளையத்தில் வசிப்பவர் கே. பொன்மணிதேவி. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரி யரான இவர் தனக்குச் சொந்த மான ஒரு ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக் கட்டிடம் கட்டு வதற்காக அளித்துள்ளார். தற் போது 80 வயதாகும் பொன் மணி தேவி 1964இல் ஆசிரியையாகப் பணி யைத் தொடங்கினார்.

கோபிச்செட்டிப்பாளையம் தாலுகாவில் உள்ள மொடச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி யில் தலைமையாசிரியராக இருந்து 1996இல் ஓய்வு பெற்றார்.

2006ஆம் ஆண்டு தனக்குச் சொந்தமான 25 சென்ட் நிலத்தைப் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்தின் விடுதி ஒன்றைக் கட்டுவதற்காகக் கொடையாக அளித்தார்.

அதோடு அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றுவ தற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2 லட்சம் ரூபாயை அளித்தார். தற்போது அவர் அளித்திருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு நான்கு கோடி ரூபாய்.


89 வயது மருத்துவரின் சிறப்பான அறுவை சிகிச்சை

வயதாகிவிட்டாலே பலரால் நடுக்கமில்லாமல் நடக்கக் கூட முடியாது. ஆனால், ரஷ்யாவில் வசிக் கும் 89 வயதான அறுவை சிகிச்சை நிபுணர் ஆலா லுவுஷ்கினா  வாரத்துக்கு நான்கு அறுவை சிகிச்சை களை வெற்றிகரமாகச் செய்து வருகிறார்.    இவர் மாஸ்கோவில் உள்ள ரயாசன் நகர மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக 67 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார். குடலிறக்கம், குடல் நோய் பிரிவில் நிபுணத்துவம் பெற்றுள்ள அவர், இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளைச் செய்தி ருக்கிறார். ஆயிரக்கணக்கானோருக்கு அறுவை சிகிச்சை செய்தபோதும் இதுவரை இவரது அறுவை சிகிச்சை தோல்வியடையவில்லை என்பது மருத்துவச் சாதனையாகக் கருதப்படுகிறது. திருமணம் செய்துகொள்ளாத ஆலா, மாற்றுத்திறனாளியான தன் ஒன்றுவிட்ட மருமக னோடும் செல்லப் பிராணிகளான எட்டுப் பூனைகளுடனும் வசித்து வருகிறார். வரும் மே 5ஆம் தேதி ஆலாவுக்கு 90ஆவது பிறந்தநாள்! தற்போதுவரை பணி ஓய்வு குறித்து அவர் யோசிக்கவில்லையாம்.

என்னைப் பொறுத்தவரை மருத்து வராக இருப்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது வாழ்க்கை யோடு கலந்துவிட்ட ஒன்று. ஒருவேளை நான் வேலை செய்வதை நிறுத்திவிட்டால் வேறு யார் இந்த அறுவை சிகிச்சைகளைச் செய்வார்கள்? என்று கேட்கிறார்.


சவுதியில் பெண்களும் தொழில் தொடங்கலாம்

கணவர் அல்லது ஆண் உறவினரின் அனுமதியின்றி சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள் தொழில் தொடங்கு வதற்கு நெடுங்காலமாக இருந்த தடையை அந்நாட்டு அரசு சமீபத்தில் நீக்கியுள்ளது. சவுதி அரேபியாவில் தனியார் துறையி னரின் முதலீட்டை அதிகப்படுத் தவும் பெண்கள் வேலைவாய்ப் பை அதிகரிக்கவும் சவுதி அரே பிய அரசு எடுத்துவரும் நடவடிக் கைகளில் ஒன்றாக இது கருதப் படுகிறது. அத்துடன் விமான நிலையங்களிலும் எல்லைப் பாதுகாப்புச் சாவடிகளிலும் சவுதி அரசு முதன்முறையாக 140 பணியிடங்களுக்குப் பெண்களிட மிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. சவுதி அரேபியா வின் இளவரசர் முகமதுபின் சல்மானின் முயற்சியால்தான் பெண்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படு வதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அய்ம்பது ஆண்டுகளாக விளையாடிவரும் தமிழக ஆண்கள் கால்பந்தாட்ட அணி, தேசிய வாகையர் கோப்பையை இதுவரை வென்ற தில்லை. 23 ஆண்டுகளாகத் தேசிய வாகையர் பட்டப் போட்டியில் பங்கேற்றுவரும் மகளிர் கால்பந்தாட்ட அணி, இதற்கு முன்வரை

அரையிறுதிவரை மட்டுமே சென்று திரும்பியிருக்கிறது.

தொடரும் இந்தச் சோக வரலாறுக்கு இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய வாகையர் பட்டப் கோப்பை மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக் கிறார்கள் தமிழக மகளிர் கால்பந்து அணியினர். முதன்முறையாகக் கோப்பையைப் பெற்று தமிழகத்துக்குச் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள் இந்தக் கால்பந்து மங்கைகள்.

23ஆவது சீனியர் மகளிர் தேசிய கால்பந்து வாகையர் பட்டப் போட்டி ஒடிசாவில் உள்ள கட்டக் நகரில் ஜனவரி 28இல் தொடங்கி பிப்ரவரி 14 வரை நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக மகளிர் அணி தொடக்கம் முதலே அமர்க்களப்படுத்தியது. லீக் சுற்றில் சிக்கிம், உத்தரகாண்ட் அணிகளைப் பந்தாடி தங்கள் பிரிவில் முதலிடம் பிடித்தது. காலிறுதிப் போட்டியில், போட்டியை நடத்தும் ஒடிசாவை எதிர்கொண்டது.

பலமான அணிகளில் ஒன்றான ஒடிசாவைத் துவம்சம் செய்து 2-0 என்ற கோல் கணக்கில் விரட்டினார்கள் தமிழகப் பெண்கள். அரையிறுதியில் தமிழக அணி, பலம் மிக்க மேற்குவங்க அணியை எதிர்கொண்டது. இந்த அணியை அநாயசமாக எதிர்கொண்டவர்கள், 4-1 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்கத்தை ஊதித் தள்ளினார்கள்.

முக்கால் கிணறு தாண்டிய மகளிர் அணி, முழுக் கிணறையும் தாண்டுவார்களா என்ற கேள்வியே இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு பலரது மனங்களிலும் எதிரொலித்தது. காரணம், தமிழக மகளிர் அணி எதிர்கொண்டது அசுர பலம் மிக்க மணிப்பூர் அணியை. தேசியக் கால்பந்து வாகையர் பட்டப் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் இந்த அணி 18 முறை கோப்பையை வென்றிருக்கிறது.

இறுதிப் போட்டியைச் சந்தித்த அனுபவம் இல்லாத தமிழக அணியை மணிப்பூர் அணி எளிதாக மண்ணைக் கவ்வச் செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிப்போட்டி யில் நடந்த கதை வேறு.

முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. ஆனால், பிற்பாதியில் மணிப்பூர் வீராங்கனைகள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அணி இரண்டு கோல்கள் முன்னிலை பெற்றதால், நம் பெண்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மணிப்பூர் அணி 57ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து பரபரப்பூட்டியது.

ஆட்டம் முடியும் தறுவாயில் மணிப்பூர் வீராங்கனைகள் குழுவாக ஈடுபட்டு கோல் அடிக்கப் பகீரத முயற்சி எடுத்தனர். ஆனால், அந்த முயற்சி அனைத்தையும் தமிழக வீராங் கனைகள் தகர்த்தனர்.

இதனால் ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பெற்றுக் கால்பந்து ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது தமிழக மகளிர் அணி.

பயிற்சியால் கிடைத்த வெற்றி

இந்த வெற்றியின் மூலம் சீனியர் மகளிர் அணி தேசிய வாகையர்  கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியிருக்கிறது தமிழகம். இந்தத் தொடரில் தமிழக வீராங்கனைகள் 25 கோல்களை அடித்து அசத்தினார்கள். இதில் 10 கோல்களை அடித்து சாதனை படைத்தார் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்துமதி.

அவரே வாகையர் பட்டப் போட்டியின் ஆட்ட நாயகியாகத் தேர்வானார். பி.காம். படித் துள்ள இவர், சென்னை ராஜமங்கலம் காவல் நிலை யத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். தொடர் தொடங்குவதற்கு முன் 10 முதல் 15 நாட்கள் சென்னையில் கடுமையாகப் பயிற்சி செய்தோம்.

பயிற்சிக்காக ஆண்கள் விடுதி அணியினருடன் மோதி நாங்கள் தயாரானோம். எங்களுடைய கடுமையான பயிற்சியும் முந்தைய தொடர்களில் கிடைத்த அனுபவமும்தான் எங்களுக்குக் கைகொடுத்தன.

மணிப்பூர் அணியில் உள்ளவர்களுடன் பல சந்தர்ப்பங்களில் நாங்கள் இணைந்து விளையாடி யிருக்கிறோம். அதனால் அவர்களின் பலம், பலவீனம் இரண்டையும் அறிந்து அதற் கேற்ப எங்கள் திட்டமிடலை அமைத்துக் கொண்டோம். இதுதான் எங்களுக்கு வெற்றி யைத் தேடிக்கொடுத்தது என்கிறார் இந்துமதி.

மிகுந்த உடல் உழைப்புகொண்ட கால்பந் தாட்டத்தில் பங்கேற்கும் பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போவதால், பல இளம் பெண்களும் தற்போது கால்பந்து விளை யாட ஆர்வம் காட்டுவதில்லை என்ற வேதனை யையும் மகிழ்ச்சிக்கு இடையே இந்துமதி பகிர்ந்துகொண்டார்.

இந்தத் தொடரில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் கிராமப்புறங்களிலிருந்து வந்த வர்கள்; சாதாரணக் குடும்பப் பின்னணி உள்ளவர்கள். தங்களுடைய ஒருங்கிணைந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச அனுபவம்பெற்ற மணிப்பூர் அணியை மண்ணைக் கவ்வவைத்துத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

Banner
Banner