மகளிர்

சவால்கள் பெண்களுக்கு எப்போதும் எதிரியாக இருந்ததில்லை. நெருக்கடிகளே அவர்களை சிகரம் ஏற்றி அழகு பார்க்கின்றன.  அதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறார்கள் சகோதரிகள் பத்மாவதி, நந்தினி, அபிராமி ஆகியோர். சேலத்தை சேர்ந்த மூன்று  சகோதரிகள் பளு  தூக்குதலில் சாதனை ராணிகளாக வலம் வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பகுதி நேர வேலை. பகலில் பள்ளி, கல்லூரிகளில் படிப்பு, மாலையில் விளையாட்டுப் பயிற்சி என எப்போதும் சுறுசுறுப்பாகவே உள்ளனர்.

அடுத்தடுத்து வெற்றிகளை அள்ளுவது மட்டுமே இவர்களின் இலக்கு. உலக சாதனைக்கு குறி வைத்து உற்சாகமாக வலம்  வருகின்றனர் சாதனை சகோதரிகள். சேலம் தாதகாபட்டி பகுதியில் தாகூர் தெருவை சேர்ந்தவர் கண்ணன். அங்குள்ள அலுமினியப்  பட்டறையில் கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி அம்சாதேவி இல்லத்தரசி. இவர்களின் முதல் மகள் பத்மாவதி பாவை  பொறியியல் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கிறார்.

இரண்டாவது மகள் நந்தினி தனியார் சிறப்புப் பயிற்சி கல்லூரியில் பத்தாம் வகுப்பு படிப்பைத் தொடர்கிறார். மூன்றாவது மகள்  அபிராமி சேலம் மூங்கப்பாடி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். மூவரும் விளையாட்டுத்  துறைக்கு வந்தது எப்படி? சொல்கிறார் நந்தினி, அப்பாவுக்கு கூலி வேலை. மூன்று பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கே  பெரும் பாடுபட்டனர். அக்கா பத்மாவுக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை.அனைவரும் ஆசைகளை மட்டும் சுமந்து கொண்டிருந்த நேரத்தில் குடும்ப சூழ்நிலை கருதி எட்டாம் வகுப்புடன் படிப்பை விட்டு பக்கத்தில் இருந்த பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றேன். எங்கள் பகுதியில் மகாத்மா காந்தி உடற்பயிற்சி மய்யம் நடத்தி வரும் பொன்சடையன் எங்களுக்கு வழிகாட்டினார். விளையாட்டுத் துறையின் வழியாக படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை பெண்கள்  பெற முடியும் என எங்கள் வீட்டில் பேசினார்.

முதலில் நான் அவரது உடற்பயிற்சி நிலையத்தில் பளு தூக்கும் பயிற்சி பெற்றேன். மாவட்ட மற்றும் மாநிலப் போட்டிகளிலும்  கலந்து கொண்டது எனக்கு புதிய அனுபவத்தை தந்தது. 2016ஆம் ஆண்டு தேசிய பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம்  வென்றேன். எனது தங்கை அபிராமியும் என்னோடு பளு தூக்கும் பயிற்சியில் சேர்ந்தார். அவரும் தேசியப் போட்டியில் அவரது  பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.வீட்டின் வறுமைச் சூழலால் எங்களது படிப்பு மற்றும் விளையாட்டு செலவுகளுக்கான பணத்தை பகுதி நேர வேலைகள் செய்து சம்பாதிக்கிறோம். நானும், அபிராமியும்  காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை பால் விற்கும் வேலை பார்க்கிறோம். இதில் தினமும் 100 ரூபாய் கிடைக்கும். பின்பு அவள் பள்ளிக்குச் சென்று விடுவாள். நான் தனியார் பயிற்சி கல்லூரியில் படித்தபடியே பின் னலாடை நிறுவனங்களிலும் பகுதி நேர வேலையை தொடர்கிறேன்.

அக்கா பத்மா கல்லூரி முடிந்து வரும் மாலை நேரத்தில் லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் பகுதிநேர வேலை பார்க்கிறார்.  பத்மாவும் தற்பொழுது பளு தூக்கும் பயிற்சி பெறுகிறார். வீட்டில் பொருளாதார நிலைமை மோசமாக இருந்தாலும் நாங்கள் யாரும்  எங்கள் பெற்றோருக்கு பாரமாக இல்லை. பகுதி நேர சம்பாத்தியத்தில் கிடைக்கும் வருவாய் எங்களது கல்விச் செலவுகளுக்கு  போதுமானதாக உள்ளது.ஆனால் விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியில் செல்வது மற்றும் சீருடை போன்ற விஷயங்களுக்கு நாங்கள் ஊக்குவிப்பாளர்களை நம்பியே இருக்கிறோம். சாதாரணப் பெண்களாக இருந்த எங்களுக்கு விளையாட்டு வீராங்கனை என்ற தகுதியை பெற்றுத் தந்தது எங்கள் பயிற்சியாளர் பொன்சடையன்தான். அவரது மகாத்மா காந்தி பயிற்சி மய்யத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கிறார். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள சேலம் மாவட்ட வலு மற்றும் பளு தூக்கும் சங்கத்திடம் உதவிகளை பெற்றுத் தருகிறார்.

விளையாட்டு மாணவி என்பதற்காக அக்கா பத்மாவுக்கு பாவை கல்லூரியில் இலவசமாக எம்.சி.ஏ. படிக்கும் வாய்ப்பை பெற்றுத்  தந்தார். நானும் ஊக்குவிப்பாளர்கள் மூலம் பாதியில் விட்ட பள்ளிப் படிப்பை தனியார் சிறப்புப் பயிற்சி கல்லூரியில் தொடரவும் ஊக்கம்  அளித்தார். விளையாட்டு, படிப்பு, வேலை என மூன்று துறையிலும் சாதிக்க முடியும் என நம்பிக்கை விதையை எங்களுக்கும்  விதைத்ததும் அவரே. அந்த நம்பிக்கை விதை வெற்றி மரமாக வளரவும் அவரே காரணமாக உள்ளார்.போட்டிக் களத்தில் நிற்கும்போது எங்கள் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற வெறியையும் சேர்த்து இயக்குகிறோம். இந்த உணர்வே எங்களுக்கு தங்கம் அள்ளித் தருகிறது. ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே எங்களது கனவு. வெளியிடங்களில் போட்டிக்குச் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்கு இடையே நிதி திரட்டி செல்கிறோம். வறுமையோடு போராடியபடியே எங்கள் பயணம் தொடர்கிறது என்கிறார் நந்தினி.

பயிற்சியாளர் பொன்சடையன் கூறுகையில், மூன்று பெண் குழந்தைகள் படிக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். விளையாட்டுத்  துறையில் எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன. அவர்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. வறுமையைத்  தாண்டிய ஓர் ஒளியை அவர்களிடம் பார்த்தேன். எனது பயிற்சியும் அவர்களது முயற்சியும் இன்று தேசிய சாதனையாளர்களாக  அவர்களை உயர்த்தியுள்ளது. அவர்களது கல்விச் செலவுகளுக்காகத்தான் பகுதி நேர வேலைகளிலும் சேர்த்துவிட்டேன். பெண்கள்  தற்சார்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும். பெண்கள் தங்களுக்குள் உள்ள ஆற்றலை முழுமையாக பயன்படுத்தி எதையும் சாதிக்க  முடியும். சர்வதேச அளவில் இவர்கள் முத்திரை பதிப்பார்கள், என்கிறார் பொன்சடையன்.

ஒரு தோல்வி வரும் போது அதி லேயே மூழ்கிக் கிடக்காமல் அதிலிருந்து மீண்டு வருவதே வெற்றிதான். அதற்குப் பிறகு சாதிப்பது  என்பது பெரும் வெற்றி. ஒரு தொழிலில் பெரும் இழப்பை சந்தித்த பின் மீண்டும் முதலாளி ஆகி வெற்றிப் பெற்றிருக்கிறார்  திலகவதி. ஊக்கம் தரும் அவரது வார்த்தைகள் இதோ... நானும் என் கணவரும் சேர்ந்து அண்ணாசாலையில் உணவு விடுதி வைத்திருந்தோம்.  ஒரு கட்டத்தில் ஒரு மென் பொருள் நிறுவனங்களுக்காக பெரிய ஆர்டரை தொடர்ந்து கொடுத்துட்டு இருந்த வங்க திடீரென்று ஆர்டரை குறைச்சிட்டாங்க. மேலும் அதே பகுதியில் பல கடைகள் முளைத்த தால் எங்கள் வியாபாரம் படுத்துவிட்டது. நிறைய இழப்பு வேறு. அதற்குப்பிறகு சில நாட்கள் என்ன செய்வது என்று புரியாமல் திணறினோம் எனக் கூறும் திலகவதி தன் தோல்வியை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு வேறு தொழிலில் இப்போது ஈடுபட் டிருக்கிறார்.

வியாபாரத்தில் ஈடுபட விருப்பமின்றி என் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந் தார். வீட்டிலே இருந்த எனக்கு சும்மா  இருக்கப் பிடிக்கவில்லை. எப்படியாவது பாடுபட்டு மீண்டும் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று எனக்குத் தோன்றிக்கொண்டே  இருந்தது. எதாவது சிறிய அளவில் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்ய லாம் என்று நினைத்து குடும்பத்தில் பேசியபோது என்  கணவர், மாமியார் எல்லாரும் ஒப்புக் கொண்டார்கள். சென்னையில் ஆயத்த இடியாப்பம் எல் லாம் செய்கிறார்கள். ஆனால், நாம ஏன் நம் சொந்த ஊரில் செய்வது போல சேவை என்கிற உணவு வகையை செய்து விற்கக்கூடாது என்று. இடியாப்பம் என்பது குருமா அல்லது தேங்காய்ப்பால் தொட்டு சாப்பிடலாம். ஆனால், சேவையைப் பயன்படுத்தி இனிப்பு, உப்புமா, எலுமிச்சை சோறு என பல வகைகள் செய்யலாம். அதை ஏன் நாம் செய்யக் கூடாதுன்னு தோன்றியது. அதன் பிறகு அதை செய்ய ஆரம்பித்தேன்.

மீண்டு எழலாம் என்று நினைத்த திலகவதிக்கு மேலும் மேலும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்ததாகச் சொல்கிறார்.  இதிலேயும் மறுபடி மறுபடி அடி விழுந்துகிட்டே இருந்தது. முதன் முதலில் இந்த சேவையை செய்து பக்கத்தில் இருந்த  கடைகளுக்குக் கொடுக்க ஆரம்பித்தேன். வாங்க வந்தவர்களில் இதன் அருமை புரியாதவர்கள் இடி யாப்ப விலையோடு இதை  ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அதனால் பத்து பாக்கெட் கொடுத்தால் தினமும் ஆறு பாக்கெட்டாவது திரும்ப வந்துவிடும்.இவை வைத்து பாதுகாக்க முடியாத பொருள் என்பதால் தினமும் அவற்றைக் கீழே போட வேண்டி இருக் கும். அதனால் மறுபடி எங்களுக்கு நிறைய இழப்புகள்  மாவரைக்கும் இயந்திரம் எந்நேரமும் ஓடுவதால் உங்கள் வீட்டில் எந்நேரமும் ஒரே சத்தமாக இருக்கிறது என பக்கத்து  வீடுகளில் இருந்தவர்கள் குற்றம் சொல்ல ஆரம்பித்தனர். அதனால் வேறு வீடு மாற்ற வேண்டி இருந்தது. ஆரம்ப காலங்களில் 5  கிலோ அரிசி போட்டு தனியாளாய் அரைத்து வேகவைத்துப் பிழிந்து என எல்லா வேலைகளையும் நானே செய்வேன். அதை கொண்டு சேர்ப்பதில் என் கணவர் எனக்கு உதவி செய்வார்.

அப்போது நான் படும் துன்பத்தைப் பார்த்து வீட்டில் மாமியார், நாத்தனார் எல்லாம் இவ்வளவு சிரமப்பட்டு ஏன் செய்ய வேண்டும்  வேண்டாம் விட்டுவிடு என்றார்கள். இழப்பு ஏற்பட்ட போதும் நான் விடாமல் செய்து கொண்டிருந்தேன். அதி காலை 2.30 மணிக்கு  எழுந்து செய்ய ஆரம்பிப் பேன். ஆறு, ஏழு மணி நேரம் ஆகிவிடும். ரொம்ப களைப்பு இருக்கும். களைப்பை பார்க்காமல்  தொடர்ந்து செய்து கொண்டே இருந்தேன்.அதற்குப் பிறகு வீடுகளில் போய் பேசி, கொடுக்க ஆரம்பித் தேன். சுமையைத் தூக்கிக்கொண்டு அலைய வேண்டி இருக்கும். அதன் பிறகு அடுக்குமாடி குடி யிருப்புகளில் இருப்பவர்கள் வாங்க ஆரம்பித் தார்கள். அதற்குப்பிறகு சிறிய சிறிய உணவகங் களுக்குக் கொடுக்க ஆரம்பித்தேன். படிப்படியாக வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இப்போது 50 கிலோ அரிசிவரை போட்டு செய்கிறேன். அதற் கேற்ப இயந்திரங்கள் வாங்கி விட்டேன். இப்போது என்னிடம் நான்கு பையன்கள் வேலை செய்கின் றனர்.படித்துக்கொண்டே சிலர் பகுதி நேரமாக காலை நேரத்தில் மட்டும் 2 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை செய்துவிட்டு செல்கின்றனர். தற்போது சென்னையின் பல பகுதிகளுக்கு கொடுத்து  வருகிறேன். பல பெரிய உணவகங்களிலும் வாங்கு கின்றனர். இப்போது வேலை செய்வதெல்லாம் அந்தப் பிள்ளைகள் தான். நான் ஆர்டர் எடுப்பது, மேற்பார்வை பார்ப்பது இவற்றைக் கவனித்துக் கொள்கிறேன். புதியதாகவே நாங்கள் கொடுப்பதால் இப்போது நுகர்வோர் பெருகிவிட்டனர். இப்போது ஒரு மாதத்திற்கு 50,000 முதல் ஒரு லட்சம் வரை  வருமானம் வருகிறது. என் உழைப்பிற்கும் விடா முயற்சிக்கும் கிடைத்த பலனாக இதை நினைக் கிறேன் என்கிறார்.  

காஷ்மீர் சிறீநகரில் இருந்து 65 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் உள்ளது பந்திபூரா மாவட்டம். அதில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் குத்துச்சண்டை வீராங்கனையான 9 வயது தாஜாமுல். இவரின் தந்தை கட்டுமான நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை செய்கிறார்.

தாஜாமுல் 2014-இல் உள்ளூரில் உள்ள ஒரு தற்காப்புக் கலை பயிற்சி அகாடமியில் குத்துச்சண்டை பழகத் தொடங்கினார். 2015- இல் இந்திய தேசிய குத்துச்சண்டை வாகையர் பட்டப்போட்டியில், தாஜாமுல் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 13 வயது போட்டியாளரை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதனையடுத்து கடந்த 2016 -ஆம் ஆண்டு ஜம்முவில் நடந்த மாநில அளவிலான வாகையர் பட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.   இது குறித்து தாஜாமுல் கூறுகையில்:

“நான் ஒருநாள் விளையாட்டு அரங்கத்திற்கு அருகே நடந்து கொண்டிருந்தபோது சிறுவர், சிறுமிகள் குஸ்தி சண்டைப் பயிற்சி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். நானும் அங்கு சேர வேண்டும் என்று ஆசை எழ, தந்தையிடம் கூறினேன். அவரும் அனுமதித்தார்.

முதலில் என்னை எதிர்த்துப் போட்டியிடும் நபரைக் கண்டதும் சிறிது பயந்தேன். ஆனால் இந்தச் சண்டையில் வயதும் உடல் அமைப்பும் ஒரு விஷயமே இல்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்’’ என்கிறார் தாஜாமுல்.  சமீபத்தில், தாஜாமுல் உலக சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அய்ந்து நாட்களில் ஆறு வெற்றிகளைப் பெற்றார்.

சுமார் 90 நாடுகள் பங்கேற்ற அந்தப் போட்டியில், அவர் சீனா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்து பங்கேற்ற வீராங்கனைகளை எதிர்த்துச் சண்டையிட்டு வென்று சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த, உலக அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான (செஸ்)சதுரங்கப் போட்டி நடைபெற்றது. அதில் வாகையர் பட்டத்தைத் தட்டி வந்திருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ஹர்ஷினி. சென்னை, முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கூறுகையில்,

“திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிதான் எனது சொந்த ஊர், அங்கேதான் பிறந்து வளர்ந்தேன். சின்ன வயதிலிருந்தே செஸ் விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில்  எப்போதும் செஸ் விளையாடுவேன்.

அதைப்பார்த்து அப்பா என்னை செஸ் கிளாஸில் சேர்த்துவிட்டார்.  கொஞ்சம் கற்றுக் கொண்ட பிறகு ஒரு செஸ் போட்டி பற்றி கேள்விப்பட்டு அப்பா அங்கே என்னை கூட்டிட்டு போனார். அங்கே நான் வெற்றி பெற வில்லை. நான் தோல்வியைக் கண்டு துவண்டுவிடக்கூடாது என்பதற்காக அங்கு திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்த பால குணசேகரன் என்பவர் எனக்கு ஒரு பரிசு கொடுத்தார். அது என் மனதில் ஆர்வத்தை அதிகப் படுத்தியது. அதன்பிறகுதான் கோச்சிங்  கிளாஸுக்கு ஆர்வத்துடன் போக ஆரம்பித்தேன். அங்கே விளை யாட்டில் நிறைய நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்.

2010ஆம் ஆண்டு ஆசிய அளவில் நடந்த பள்ளி களுக்கான சதுரங்கப்போட்டி இலங்கையில் நடந்தது. அதில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வாங்கினேன். அதுவரை திருத்துறைப்பூண்டியில்தான் இருந்தோம். செஸ்ஸில் பேஸிக் கோச்சிங் முடித்த பிறகு மேற்கொண்டு  கோச்சிங்கை சென்னையில் கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அதுமட்டுமில்லாமல் பெரும்பாலும் போட்டிகளுக்காக சென்னைக்கு வந்து போக வேண்டி இருந்தது. அதனால் 2013-ஆம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தோம்.

அப்பா அரவிந்தன் பிசினஸ்மேன் என்பதால்  சென் னைக்கும், திருத்துறைப்பூண்டிக்கும் மாறி மாறி பயணம் செய்து கொண்டிருக்கிறார். சென்னையில் செஸ் குருக்கள் அகாடமியில் பயின்று வருகிறேன். ஆர்.பி. ரமேஷ் தான் எனது குரு. சென்னை வந்த பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருப்பேன். பல போட்டிகளில் வெற்றியும் பெற்றேன். பிறகு, 2016-ஆம் ஆண்டு மாநில அளவில் மகளிருக்கான போட்டி நடைபெற்றது. இதில் எல்லா வயது பெண்களும் கலந்து கொள்ளலாம். அதிலும் நான் முதலாவதாக வந்தேன்.

2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேசிய அளவில் பள்ளிகளுக்காக நடைபெற்ற போட்டியில் இந்திய அளவில் முதலாவதாக வந்தேன். அதனால் உலகளவில் நடைபெற இருந்த போட்டிக்குத் தேர்வானேன். அதற்காக இந்த வருடம் முழுவதும் தயார் செய்ய வேண்டி இருந்தது.  அதனால் பள்ளிக்கு அவ்வளவாக செல்ல முடியவில்லை. நான் இப்போது பத்தாம் வகுப்பு படிக்கிறேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் எப்போதும் எல்லா பள்ளிகளிலுமே பத்தாம் வகுப்பு பாடங்களில் தீவிரப் பயிற்சி இருக்கும். ஆனால் நான் இந்த உலகளாவியப் போட்டியில் ஜெயிப்பதற்காக எனக்குப் பயிற்சிக்குத் தேவையான விடுமுறையை எனது பள்ளி நிர்வாகம் அளித்து உதவியது. பாடத்தை நான் புரிந்து கொள்ள, எழுத என எல்லா விஷயத்திலும் எனது ஆசிரியர்களும், எனது வகுப்பு மாணவிகளும் எனக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். மேலும் பள்ளியிலுள்ள செஸ் கோச் வேல வன் அவர்களும் உதவியாக இருந்தார். அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

நான் எந்த போட்டிக்காக தயார் செய்து வந்தேனோ அந்தப் போட்டி 2016 டிசம்பர் மாத இறுதியில் ரஷ்யாவில் நடைபெற்றது.

அதில் துருக்கி, உஸ்பெகிஸ்தான் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்களுடன் விளையாடி வெற்றிபெற்று, இறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனையைத் தோற்கடித்து வாகையர் பட்டம் பெற்றேன். எனக்கு தங்கப் பதக் கத்துடன்  அவார்டும் கொடுத்தார்கள். ரொம்ப சந்தோஷ மாகவும் பெருமையாகவும் இருந்தது’’ என்றார்.


மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் கடலூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தங்கப் பதக்கம் வென்றனர்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் திருச்சி மாவட்டம், முசிறியில் அண்மையில் நடைபெற்றன.

இந்தப் போட்டியில் 19 வயதுக்குள்பட்டோருக்கான லான் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், கடலூர் மஞ்சக்குப்பம் சிறீவரதம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவிகள் ஏ.அபர்ணா, ஜே.ஜெயப்பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்கள் இந்தப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தனியே ஒரு நடைப் பயணம்!

பெண்களைப்  பொறுத்தமட்டில் மார் பகப் புற்றுநோய் அபா யம்  எப்பொழுது வரு மென்று  சொல்ல முடி யாது.

இந்த அபாயத்தைத் தவிர்க்க  விழிப்புணர்வு தேவை. மார்பகப் புற்று     நோய்  அபாயம்  குறித்த  விழிப்புணர்வு பெண் களிடையே ஏற்பட வேண்டும் என்பதற்காக  நீலிமா  என்ற பெண்மணி 350 கி.மீ. காலணி ஏதும் அணி யாமல் விஜய வாடாவிலிருந்து  விசாகப்பட்டணம் வரை பாத யாத்திரை செய்திருக்கிறார்.

விஜயவாடாவிலிருந்து  நீலிமா விசாகப்பட்டணம் போய்ச்  சேர எட்டு  நாள்கள் கால் நடைப்  பயணம்  செய்ய  வேண்டி வந்தது.  இந்த  நடைப் பயணம் மேற்கொள்ள நீலிமா  அய்ந்து மாதங்கள்  வெறும்  கால்களால்  ஓடி  பயிற்சி செய்திருக்கிறார்.  நடை பயணத்தின்  போது  நீலிமாவை  பயமுறுத்தியது சாலையில்  நெளிந்து சென்ற கணக்கிலடங்காத  பாம்புகளாம்.

புள்ளி விவரங்களின்படி  சென்னை, பெங்களூர், மும்பை  நகரங்களில் 35 முதல் 44 வயது பெண்களுக்கு  மார்பகப் புற்று நோய் வரும் அபாயம்  உள்ளதாம்.

Banner
Banner