எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பளு தூக்கினால்  பலம் பெறலாம்!

அதிக எடை கொண்ட பொருளை நகர்த்தவோ தூக்கவோ வேண்டும் என்றால் சிறியவனாக இருந்தா லும் ஓர் ஆண் பிள்ளையைத்தான் கூப்பிடுகிறோம். காரணம் பெண்களால் அதிக எடையைத் தூக்க முடியாது என்ற எண்ணம்தான். பெண்களைப் பலவீனமானவர்களாகச் சித்தரிக்கும் இதுபோன்ற கற்பிதங்களை உடைத்து வருகிறார்கள் இன்றைய பெண்கள்.
ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் முதன்முறையாக நாட்டுக்குப் பதக்கம் வென்று தந்தார் கர்ணம் மல்லேஸ்வரி. அவருக்குப் பிறகு பளு தூக்கும் பிரிவில் பெண் வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குப் பதிலாகக் குறைந்து கொண்டு தான் வருகிறது. இந்த இடைவெளியைக் குறைத்து, பெண் பளு தூக்கும் வீராங்கனைகளை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் பயிற்சியாளர் சாந்தி.

பள்ளியில் படிக்கும்போது தடகளப் போட்டிகளில் தான் கலந்துகொள்வேன். எனக்கு எந்த மாதிரி விளையாட்டை விளையாட முடியும் என்பதைக் கண்டறிந்து, வழிகாட்ட அப்போது யாரும் இல்லை. என் அப்பாதான் பளு தூக்கும் வீராங்கனையாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக இந்திய விமானப்படைப் பிரிவில் இருந்து ஓய்வு பெற்ற பயிற்சியாளர் ரவிச்சந்திரனை அறிமுகம் செய்து வைத்தார். என் பயிற்சியாளர் கொடுத்த ஊக்கமும் சரியான வழிகாட்டுதலும் என்னைக் குறுகிய காலத்திலேயே தேசிய அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் முதல் பரிசு பெற வைத்தன! என்கிறார் சாந்தி.

கல்லூரி நாட்களில் மாநில, தேசியப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களைப் பெற்றிருக்கிறார் சாந்தி. பளு தூக்கும் பிரிவில் தன்னைப் போலப் பல பெண்கள் வர வேண்டும் என்பதற்காக இளங்களை உடற்கல்வியியல், முதுகலை உடற்கல்வியியல் படித் தார். பிறகு பட்டியாலாவில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் அகாடமியில் சேர்ந்து பளு தூக்கும் பயிற்சியாளர் படிப்பை முடித்தார். சொந்த ஊரான கோவில்பட்டியில் தனியார் பள்ளியில் சில காலம் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தில் பளு தூக்கும் பயிற்சியாளர் பணியைக் கடந்த ஓர் ஆண்டாகச் செய்து வருகிறார். சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பெண்களே அதிக எண்ணிக்கையில் இவரிடம் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

பொதுவாகப் பெண்கள் அதிக எடையைத் தூக் கினால் அவர்களின் கர்ப்பப்பை இறங்கி விடும் என்ற கருத்து உள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை. நானே 50 கிலோ எடை வரை பளு தூக்கும் போட்டிகளில் தூக்கியிருக்கிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். எடை தூக்குவதால் உடலுக்கு அதிக ஆற்றல்தான் கிடைக்குமே தவிர, எந்தப் பிரச்சினையும் வராது என்று தன்னையே உதாரணமாக்கி விளக்குகிறார் சாந்தி.

பளு தூக்கும் விளையாட்டைப் பொறுத்தவரை உடலும் மனமும் ஒரே நிலையில் இருக்க வேண் டும். அப்போதுதான் ஒரு வீரரால் சாதிக்க முடியும். போட்டியின்போது ஏற்படும் சிறு தடுமாற்றமும் உடல் அளவில் பெரிய பிரச்சினையை உருவாக்கி விடக்கூடும். பளு தூக்கும் வீரர்கள் பலருக்கு நல்ல திறமை இருந்தும் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேவையான உபகரணங்கள் வாங்குவதில் சிரமம் உள்ளது. இதுபோன்ற உதவிகளைச் செய்ய நிறைய விளம்பரதாரர்கள் தேவைப்படுகிறார்கள். இத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் தன்னிடம் பயிற்சி பெறும் வீரர்களை ஆசிய அளவில் சாதிக்க வைக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார் சாந்தி.


பெண்களின் வேலை என்று
எதுவுமில்லை!

படிப்போ சுய சம்பாத்தியமோ இல்லாமல் கணவரையே முழுக்க முழுக்க நம்பி வாழும் பெண்கள், திடீரென்று கணவரை இழக்க நேரிட்டால் நிலைகுலைந்து போய் விடுகிறார்கள். அப்படிப்பட்ட பெண்களில் ஒருவரான ஜெயலட்சுமி, வாகனம் பழுது பார்க்கும் கடையில் வாகனங்களை கழுவும் வேலை செய்து வறுமையை விரட்டி, தன்னையும் தன் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. எட்டாம் வகுப்புவரை படித் திருக்கிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டும் ஓரளவுக்கு வாசிக்கத் தெரியும். வெளியுலகமே தெரியாமல் வளர்ந்த வரை, ராமகிருஷ்ணனுக்குத் திருமணம் செய்து வைத் திருக்கிறார்கள். ராமகிருஷ்ணன் பூ வியாபாரி.

"எங்களுக்கு நாலு குழந்தைங்க பொறந்துச்சு. 14 ஆண்டுகளுக்கு முன் என் கணவர் இறந்துவிட்டார். அடுத்தடுத்து இரண்டு மகன்களையும் பறிகொடுத்தேன். வாழ்க்கையில் மிகக் கொடுமையான காலகட்டம். மனம் நிறைய துக்கத்தோடு இருந்தாலும் வீட்டில் முடங்கிக் கிடக்க முடியாத சூழல். இரண்டு பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டுமே. கிடைக்கும் சின்னச் சின்ன வேலைகளைச் செய்துவந்தேன். என் சம்பாத்தியத்தால் மூன்று பேர் சாப்பிட முடியவில்லை" என்று சொல்லும் ஜெயலட்சுமி ஒரு மகனை வாகனம் பழுது பார்க்கும் கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.

"அவன் புத்திசாலி. வேகமாகத் தொழிலைக் கத்துக் கிட்டான். எங்க வீட்டிலேயே தனியாகக் கடை வைத்தான். ஓரளவு வறுமை நீங்கியது. என் மகளுக்கும் திருமணம் ஆனது. நான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் மகனின் வேலைகளைக் கவனிப்பேன். பட்ட காலிலேயே படும்னு சொல்லுவாங்க. என்னையும் அப்படித்தான் துக்கம் துரத்தி துரத்தி அடிக்குது. ஒரு வண்டிக்கு வாட்டர் சர்வீஸ் செய்துகிட்டு இருக்கும்போது என் மகன் ஷாக் அடிச்சி இறந்துட்டான். மீண்டும் வாழ்க்கையில் சூறாவளி. என்னைத் தேற்றவோ, காப் பாற்றவோ யாருமில்லை. நானே கொஞ்சம் கொஞ்சமாக என்னைத் தேற்றிக்கொண்டேன்" என்று சொல்லும் ஜெயலட்சுமி, தன் மகன் விட்டுச் சென்ற வேலையைத் தொடர முடிவெடுத்தார். மகன் செய்த வேலைகளைப் பார்த்திருந்த அனுபவத்தில் அவராகவே வாகனங்களைக் கழுவும் வேலையைச் செய்து பார்த்தார். சில நாட்களில் அந்த வேலை அவருக்குப் பழக்கமாகிவிட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளாக இருசக்கர வாகனங் களுக்கு வாட்டர் வாஷ் செய்து வருகிறார். அவர் வசிக்கும் பகுதியில் உள்ள இரு சக்கர வண்டிகள் பழுது பார்ப்பவர்கள் பலர் அவரது மகனுக்கு அறிமுக மானவர்கள். அதனால், வாகனங்களை கழுவும் வேலை செய்ய ஜெயலட்சுமியின் கடைக்கு வண்டிகளை அனுப்புகிறார்கள். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வாகனங்களை கழுவும் வேலை செய்து தருமாறு கேட் கிறார்கள். தற்போது ஒரு மெக்கானிக்கை வேலைக்கு வைத்து, இரு சக்கர வாகன பட்டறையை நிர்வகித்து வருகிறார் ஜெயலட்சுமி.

இந்தக் காலத்துல பெண்கள் படிக்கிறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. அவர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. வாழ்க்கையும் ஒரே மாதிரி போய்க்கொண்டிருப்பதில்லை. திடீரென்று ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளித்து, வாழ்க்கையைத் தொடர பெண்களும் சம்பாதிக்க வேண்டியது அவசியம். ஆண்கள் செய்யும் வேலை,பெண்கள் செய்யும் வேலை என்ற வித்தியாசம் இல்லாமல் ஏதாவது ஒரு கைத்தொழிலைக் கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண் டும். அதுதான் கணவன் இருந்தாலும் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும்; கணவன் மறைந்தாலும் வாழ்க் கைக்கு உறுதுணையாக இருக்கும் என்று தன் அனுபவத் தில் சொல்கிறார் ஜெயலட்சுமி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner