எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நோயாவது... நொடியாவது... 100 ஆண்டுகளைத் தாண்டும்
ஹன்ஸா இன பெண்கள்

காஷ்மீரைத் தாண்டி காரகோரம் மலைத் தொடர்களின் மடியில் இருப்பதுதான் ஹன்ஸா பள்ளத்தாக்கு. இங்கு வாழும் மக்களின் சராசரி வயது 120 என்பதையும், பெண்கள் 90 வயதிலும் குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் சொன்னால் நம்புவீர்களா?

இது எப்படி சாத்தியம்? இந்த விஷயம் வெளி உலகுக்கு எப்படி தெரிய வந்தது? என்று கேள்வி எழுப்பினால் ஒரு சின்ன சிறிது பின்னோக்கிப் பார்த்துவிடலாம். 1984ஆம் ஆண்டில் ஹன்ஸா இனத்தைச் சேர்ந்த அப்துல் என்பவர், லண்டன் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தார்.

பிறந்த வருடம் 1932 என்பதற்குப் பதிலாக 1832 என்று தவறாக அச்சாகியிருக்கிறது என்று அதிகாரிகள் அப்துலிடம் கேட்டார்கள். இல்லை... 1832 என்பது தான் சரி என்று அப்துல் சொன்னதும் கோபம் கொண்ட அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காரணம், அப்துல் நடுத்தர வயது மனிதராகவே தோன்றினார்.

அப்துலுக்கு வயதை உறுதிப்படுத்த மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு வயது 152-தான் என்பது உறுதியானதும் உறைந்துபோனார்கள்அதிகாரிகள். ஹன்ஸா இன மக்கள் பற்றிய ரகசியம் அதன் பிறகே உலகுக்குத் தெரிய வந்தது. பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது இன்னும் பல அதிசயங்கள் வெளி வந்தது.

இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், கோழி, பால், வெண்ணெய், முட்டை போன்றவற்றையே ஹன்ஸா இன மக்கள் சாப்பிடுகிறார்கள்.அதுவும் வாழ்வதற்குத் தேவையான அளவு மட்டுமே சாப்பிடுகிறார்கள்.ரசாயன உரங்கள் பற்றி இவர்களுக்கு என்னவென்றே தெரியாது. சுவாசிக்க தூய்மையான மலைக்காற்று, பகல்முழுவதும் உழைப்பு, ஜீரோ டிகிரி குளிராக இருந்தாலும் குளிர்ந்த ஆற்றுநீரிலேயே குளிப்பது போன்ற நல்லவாழ்க்கைமுறையே அந்த ரகசியம் என்பதை ஆய்வு புரிய வைத்தது.இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் இதெல்லாம் நமக்கும் சாத்தியம்தானே!

பறந்தாலும் விடமாட்டோம்

பல ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே, தன் வெள் ளை நிற இறக்கைகளை விரித்து, ஒரு பறவைபோல் சீரான வேகத்தில் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்து வியந்த நம் பெண்கள், இன்று அதை இயக்குபவர்களாய், அதைவிட சிலபடிகள் மேலே சென்று அந்த விமானங்களையே தயாரிப்பது மேலும் அதில் ஏற்படும் தொழில்நுட்பம் சார்ந்த கோளாறுகளை சரி செய்வது போன்ற துறைகளிலும் கால் பதித்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்திதானே?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் விமானங்கள் தயாரிக்கும் தனியார் நிறு வனம் டால் செயல்பட்டு வருகிறது. இது இந்தி யாவில் துவங்கப்பட்ட முதல் தனியார் ஏர்கிராப்ஃட் நிறுவனம். இங்கு பெரிய ரக பயணிகள் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், உளவு விமானங்கள் வந்து செல்ல வசதியாக விசாலமான, 7,200 அடி தூரம் ஓடுதளம் அமைத்து, விமான நிலையம் அமைக்கப் பட்டுள்ளது.

இதில் விமானம் தயாரிப்பு மற்றும் விமானப் பராமரிப்பு சார்ந்த பணிகளில் இயங்கி வரும் சில பெண்களை சந்தித்தேன். சுனிதா வில்லியம்ஸை பார்த்து எனக்கும் விண்வெளிக்குப் போகவேண் டும் என்ற ஆர்வம் வந்தது. எனவே அவரின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனிக்கத் தொடங்கினேன் என பேசத் துவங்கினார் அஸ்வினி. எனது ஊர் கரூர். பள்ளிப் படிப்பு முடிந்ததும். ஓசூர் அதிய மான் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் எனப்படும் விமானம் சார்ந்த பொறியியல் படிப்பில் இணைந்து பொறியியல் பட்டம் பெற்றேன்.அதைத் தொடர்ந்து டால் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து பயிற்சியில் இருக்கிறேன். ஏரோநாட்டிக்கல் இஞ்சினியர் வேறு, ஏரோ ஸ்பேஸ் இஞ்சினியர் என்பது வேறு. ஒரு கார் அல்லது இரு சக்கர வாகனத்துக்கு எந்த மாதிரியான பாகங்கள் தேவைப் படுமோ, அதை எப்படி தயாரிக்கிறார்களோ, அந்தப் பாகங்களை எப்படி வடிவமைக் கிறார்களோ, எப்படி இயக்குகிறார்களோ, அதே போன்ற கான்செப்ட்தான் ஏர்கி ராஃப்ட்டிலும் உள்ளது என விமானத்தைப் பற்றிய அதீத பிரமிப்பை மிகவும் இயல்பாய் உடைத்தார் அஸ்வினி.

மற்ற பொறியியல் பாடங்களைப் படிக்கும் மாணவர்கள், செயல்முறை கல்வி யில் நேரடியாக அந்த இயந்திரங் களோடு பணியாற்றிய அனுபவத்தை பெற்றுவிடு வார்கள். கணினி பொறியாளர் என்றால் கணினியில் வேலை செய்து செயல்முறை கல்வியை பயில்வார்கள். ஒரு கார் அல்லது இருசக்கர வாகனம் என்றால் பிரேக் எஞ்சின், பவர் எஞ்சின் என நேரடியாகப் பார்த்து அதன் பாகங்கள் அவற்றின் செயல்பாடு போன்றவற்றை நேரடியாக அந்த மாணவர்களால் உணர முடியும்.ஆனால் ஏர்கிராஃப்டு பாடத்திட்டத்தில் வேலைக்கு வந்த பிறகே பாகங்கள் பற்றியும் அதன் இயக்கம் பற்றியும் தெரிய வரும். ஏரோநாட்டிக்கல் துறையில் நுழைந் ததும் புதிது புதிதாக, இதுவரை நாம் கேட்காத வார்த்தைகள், கேட்காத விசயங் கள் இதெல்லாம் எங்களுக்கு முதலில் தடு மாற்றமாக இருந்தது. ஏர்கிராஃப்ட் தொழில் நுட்பம் சார்ந்த அந்த வார்த்தைகள் எல் லாம் படிக்க படிக்க, தேர்வுகளை எழுத எழுத பழகிவிடும் என்கிறார்.

எங்களால் செயல்முறையாக பாடங் களை கற்றுக்கொள்ள முடியாது. அதற்கான வசதிகள் எங்கள் துறைசார்ந்து குறை வாகவே உள்ளது. எல்லாமே தியரிதான். தொழில் நுட்பம் சார்ந்த விசயங்களையும் படித்திருக் கிறோம், வேலைக்கு வந்தபின், படித்தவற்றை இங்கு பயன்படுத்தி ஏர் கிராஃப்டை தயாரிக்கும்போதுதான் எங்களால் விமான தொழில்நுட்பத்தை உணர முடிகிறது என பாடத் திட்டம் சார்ந்த நடைமுறை சிக்கல்களையும் தெரிவித்தார்.

ஏரோநாட்டிக்கல் மெயின்டனன்ஸ் இஞ்சினியர்ஸ் தனியாக உள்ளனர். நாங்கள் டிசைனர்கள். ஏர்கிராஃப்ட் மற்றும் அதன் பாகங்களை டிசைன் பண்ணுவோம். ஆட் டோகேட். கேட்டையா, ப்ரோ இ போன்ற டிசைனிங் சாஃப்ட்வேர்கள் இதற்கென உள்ளன. இங்கு என்னைத் தவிர கோயம் புத்தூர் ஹிந்துஸ்தான் இஞ்சினியரிங் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் படித்த கவிதா புரொடக்ஸன் இஞ்சினியராகவும், மோகனப் பிரியா மெத்தட்ஸ் இஞ்சினிய ராகவும் உள்ளனர். இன்னும் சில பெண் களும் வெவ்வேறு துறைகளில் பணியில் உள்ளனர்.

நாங்கள் நுணுக்கமான அளவில், மைக்ரான் அளவு நுணுக்கமாக தரம் பார்த்து பாகங்களை தயார் செய்து தரு கிறோம். 100 சதவிகித தரம் வேண்டும். பறக்கும்போது எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது. அது போல பாகங்களை பார்த்துப் பார்த்து தர மானதாக செய்ய வேண்டும். அதை எந்த லெவல்ல கொடுக் கணும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். நாங்கள் கொடுப்பதைத்தான் தயார் செய்வார்கள்.  68  எனும் ஏர்கி ராஃப்டை நாங்களே தயார் செய்தோம்.இஸ்ரோ மற்றும் சந்திராயனுக்கு தேவை யான பாகங்கள், ராக்கெட்டின் பாகங்கள், ராக்கெட் பூஸ்டர்ஸ், ராணுவத்திற்கு பயன் படுத்தப்படும் விமானங்கள், குட்டி ரக விமானங்கள், யூ.ஏ.விஸ் என அழைக் கப்படும் அன்வான்டட் ஏரியா வெகிக் கிளான மிலிட் டரிக்குத் தேவையான சிறிய அளவுள்ள பாம் டிடக்சன், குட்டி ரிமோட் கண்ட்ரோல் விமானங்கள் மற்றும் மனிதர் களால் செல்ல முடியாத இடங்களுக்கு செல்லக் கூடிய ஆளில்லாத குட்டி விமா னங்களையும் தயார் செய்கிறோம்.

அரசின் திட்டங்களான சி.எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி ஸ்கின், ராக்கெட் பாகங்கள், அரசு நிறுவனமான எச்.ஏ.எல் செயல் திட்டங் களான ஏ.எல்.எச், எல்.சி.எச் ஹெலிகாப்டர் களுடைய பாகங்களை தயாரித்துத் தரு கிறோம். தயாரிப்பு தவிர பராமரிப்பிற்காகவும் சில விமானங்கள் எங்கள் நிறுவனத்திற்கு வருகின்றன. பராமரிப்பு மற்றும் பெயின்டிங் வேலைக் காக பிரதமருடைய விமானம் சமீபத்தில் இங்கு வந்து, பராமரிப்பு பணிகளை முடித்துச் சென்றது.பிரதமரின் விமானம் பழுது பார்க்கப்பட்டதை முன்னிட்டு, 10 முதல் 15 தினங்களுக்கு எங்கள் நிறுவ னத்தை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதுதவிர தனிநபர் உபயோகிக்கும் விமானங்களும் பராமரிப் பிற்காக இங்கு வருகின்றன. கார் மற்றும் இருசக்கர வாகனம் மாதிரி பராமரிப்பை தாமதமாகச் செய்ய முடியாது. குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டாயம் செய்ய வேண்டும். பெண்கள் முதலில் இத்துறைக்கு வர மிகவும் தயங்கினார்கள். ஏரோ நாட்டிக் கல் டிசைனில் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளன.

2 ஆண்டு அனுபவத்திற்குப் பின் பணி உயர்வு கிடைக்கும். 60 மற்றும் 70 மாண வர்கள் உள்ள ஒரு வகுப்பில் 5 பெண்கள் தான் இருப்பார்கள். இத்துறையில் பெண் கள் மிகக் குறைவாகவே உள்ளனர். 500 பேர் வேலை செய்யும் எங்கள் கம்பெனி யில் 6 மற்றும் 7 பெண்களே உள்ளோம். சமீபமாக 2 ஆண்டுகளாகத்தான் பெண் களை ஏரோ நாட்டிக்கல் துறையில் வேலைக்கு எடுக்கிறார்கள். 10 பேர் வேலைக்கு எடுத்தால் அதில் 2 பேர்தான் பெண்கள் இருப்பார்கள். இந்நிலை மாறவேண்டும். ஆண்கள் செய்யும் அத் தனை வேலைகளையும் நாங்களும் செய்கிறோம். பெண்களுக்கு இத் துறையில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண் டும். இதில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தவறாக நினைக்கிறார்கள். அப்படி எதுவும் இந்தத் துறையில் இல்லை. பெண்கள் தைரியமாக ஏரோநாட்டிக்கல் துறைக்கு வரலாம் என்கிறார் அழுத்தமாக.

சிந்து,ஏர் டிராஃபிக் கன்ட்ரோலர்

எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் பொறியியல் முடித்துவிட்டு ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் தொடர்பான  தேர்வு எழுதி இந்தப் பணியில் உள்ளேன். விமானத்தை இயக்கும் பைலட்டை, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குள் இருந்து, அவ ருடன் புஷ் டு டாக்கை பயன்படுத்தி தொடர்பு கொண்டு, வெளியில் நிலவும் தட்ப வெப்ப நிலை, காற்று வீசும் திசை, காற்றின் வேகம் மற்றும் அழுத்தம், விமான ஓடு பாதையின் நிலை போன்றவற்றை கவனித்து, பிரஸ் டாக் வழியே விமானத்தை இயக்கும் பைலட்டிற்கு தகவல் கொடுத்து இயக்க வேண்டும். இது ரிசீவ் அண்ட் டாக் ஃப்ரிக்வென்சி என அழைக்கப்படும். இந்தப் பணியில் இருந்து செயல்படும் எனக்கு ஏர் டிராஃபிக் கன்ட்ரோலர் எனப் பெயர். நான் இப்போது பயிற்சி எடுப்ப வராக பணியில் உள்ளேன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner