எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சுற்றுலாவுக்குச் செல்வதென்றால்கூடத் தனியாகச் செல்லப் பலரும் விரும்ப மாட்டார்கள்.  அறிமுகம் இல்லாத இடங் களுக்குச் செல்ல நேர்ந்தால் பாதுகாப்பு கருதியாவது ஒருவரைத் துணைக்கு அழைப் பார்கள்.

ஆனால், சென்னையைச் சேர்ந்த ராதிகா இவற்றிலிருந்து மாறுபடுகிறார். மக்களிடம் அன்பு, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றைப் பரப்பும் நோக்கத்தோடு இந்தியாவின் 29 மாநிலங்களுக்கும் அய்ந்து யூனியன் பிரதேசங்களுக்கும் தன் இருசக்கர வாகனத்தில் தனியாகப் பயணித்திருக்கிறார்! 26 வயதாகும் இவர், தைரியமும் தன்னம் பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நிரூபித் திருக்கிறார்.

ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் இருந்து, சில உடைகள், செல்போன், பைக், கையில் சில ஆயிரம் ரூபாய், நிறைய தன் னம்பிக்கை ஆகியவற்றுடன் கிளம்பினேன். தனியாகத்தான் பயணம் என்று முடிவெடுத்ததால் சிலவற்றை மட்டும் திட்டமிட்டுக் கொண்டேன். அதிக எடை கொண்ட பைக்கைப் பல ஆயிரம் கி.மீ. தூரம் ஓட்டிச் செல்ல வேண்டும் என்பதால் அதற்கேற்ப உடற் பயிற்சி செய்து என்னைத் தயார்படுத்திக் கொண்டேன் என்கிறார் ராதிகா.

தற்காப்புக்கு பாக்சிங் பயிற்சி, பைக்கில் கூடுதலாக ஆக்சிலேட்டர் வயர், கிளட்ச் வயர், பைக் மெக்கானிசம் குறித்த சிறு பயிற்சி போன்றவையும் இவரது பயணத்துக்கான முன் தயாரிப்புப் பட்டியலில் அடங்கும்.

ராதிகாவுடைய அப்பா ஜனார்த்தனன், அம்மா சரஸ்வதி இருவரும் மத்திய அரசுப் பணியில் இருக்கின்றனர். அவர்களுடைய நண்பர்கள் மூலமாக, தான் பயணம் மேற்கொள்ளும் இடங்களில் தங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டார்.

தினமும் காலை ஆறு மணிக்கு மேல் கிளம்பி மாலை ஆறு மணிக்குள் சுமார் 400 கி.மீ. வரை பயணம் செய்வேன்.  பயணத்தின்போது எந்த மாநிலத்திலும் எந்தப் பிரச்சினையையும் சந்திக்கவில்லை என்கிறார்.

பைக்கை அவ்வப்போது சர்வீஸ் செய்து பயன்படுத்தியதால் வாகனப் பழுது குறித்த சிக்கலும் இல்லை. பயணத்தின் போது பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை ஊக்கப்படுத்திப் பேசுவது, மக்களைச் சந்திப்பது போன்றவை மூலம் அவர்களிடம் அன்பு, அமைதி, மகிழ்ச்சியுடன் இருப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

மறக்க முடியாத சந்திப்புகள் காஷ்மீரில் உள்ள மிகவும் உயரமான காந்த்வாலே என்ற இடம்வரை சென்றிருக்கிறார். இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர், திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், லாலு பிரசாத், டில்லியில் போராடிவரும் அய்யாக் கண்ணு உள்ளிட்ட தமிழக விவசாயிகள் எனப் பல தரப்பினரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை மலர்ச்சியுடன் நினைவுகூர்கிறார்.

சிக்கிம் மாநிலத்தில் ஒழுங்கான சாலைகள், சாலை விதிகளை மீறாத மக்கள், இயற்கை அழகு என அங்கு மேற்கொண்ட பயணம் அற்புதமாக இருந்தது. இந்தி தெரிந்திருந்ததால் பெரிய அளவில் மொழிப் பிரச்சினை ஏற்படவில்லை. இருந்தாலும் மேற்கு வங்கம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் மொழிப் பிரச்சினை ஏற்பட்டபோதும் சைகை மூலமாக மக்களிடம் பேச முடிந்தது என்கிறார் ராதிகா.

இதுவரை 26,500 கி.மீ. தூரத்தைக் கடந்துவிட்டார்.  வழிநெடுக மக்களிடமும் மாணவர்களிடமும் பேசியதில் எதிர்காலம் குறித்த கனவுகள் ஏதுமின்றிப் பலரும் இருந்ததைக் காண முடிந்ததாகச் சொல்கிறார். எதிர்காலத் தூண்கள் என்பதால் மாணவர்களிடம் அவர்களது கனவுகள் குறித்து அதிகமாகப் பேசியதாகவும் குறிப்பிடுகிறார்.

வனத்தைக் காக்கும் பெண்கள்

ஜார்க்கண்டில் வன மாஃபி யாக்களிடமிருந்து குங்கிலிய வனத்தை 60 பெண்கள், வன சுரக்சா சமிதி அமைப்பின் மூலம் காத்துவருகின்றனர். இதன் தலைவியான ஜமுனா குன்ட், தங்கள் பகுதியில் உள்ள வனத் தைப் பாதுகாப்பதற்காக இருபது ஆண்டுகளாகப் பெண்களை இணைத்துப் போராடிவருகிறார். ஆரம்பத்தில் ஆண்களை எதிர்த்துப் போராடத் தயங்கிய பெண்களிடம், தங்கள் முதன்மை வாழ்வாதாரமான வனம் கொள்ளையர்களால் சாராயத்துக்காகக் கொள்ளையடிக்கப் படுவதை விளக்கியுள்ளார்.

இந்த அமைப்பினர் தினசரி மூன்று முறை ரோந்து செல்கின்றனர். வில், அம்பு, கம்பு, ஈட்டிகள்தாம் கொள்ளை யர்களை விரட்டுவதற்கான ஆயுதங்கள். நாய்களும் இவர் களுக்கு உதவுகின்றன. இவர்களின் முயற்சியால் அய்ம்பது ஹெக்டேர் வனப்பகுதி தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுவருகிறது. மாஃபியாக்களின் கல் எறிதல் உள்ளிட்ட தாக்குதல்களையும் ஜமுனாவின் படையினர் சந்தித்துப் போராடி வருகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர்களின் நிலை குறித்து  
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய
பெங்களூருவைச் சேர்ந்த தமிழ்பெண்

5 வயதில் இருந்து குழந்தைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவங்கியவர் பெங்களூரு வாழ் தமிழ் சிறுமி கனகா. தன்னுடைய நம்பிக்கை மற்றும் துணிச்சலான முடிவுகள் காரணமாக வாழ்க்கையில் உயர்ந்து வரும் கனகா உலகக் குழந்தைகள் நாளன்று (நவ.20) இந்திய நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கருநாடக மாநிலம் பெங்களூருவில் குடிசை வாழ் பகுதியை சேர்ந்தவர் கனகா (வயது 17). தமிழர்களாக அவர்கள் பெங்களூருவில் தங்கியி ருந்த வேலைபார்த்துவந்தனர். இந்த நிலையில் கனகாவின் தந்தை உடல்நலம் சீர்குலைந்து படுத்த படுக்கையாகிவிட்டார்.

கனகாவின் தாயாருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். அப்போது கனகாவிற்கு 7 வயது. இந்த நிலையில் தனது வீட்டையும் தந்தையைக் காப்பாற்றவேண்டும் என்ற நிலையில் உறவினர்களிடம் உதவி கேட்டபோது அவர்கள் தங்களின் வீட்டுவேலைகளைச் செய்யுமாறு கனகாவை நிர்பந்தம் செய்தனர்.

அப்போது வீட்டுவேலை செய்யச்சென்ற கனகா குழந்தைத்தொழிலாளியாக மாறினார். குப்பை பொறுக்குவது, காகித ஆலையில் வேலைபார்ப்பது, பிளாஸ்டிக் பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிவது போன்ற பல்வேறு பணிகளை இவர் செய்துவந்தார். எந்த ஒரு இடத்திலும் சிறுமி ஒருவர் பணிசெய்கிறாரே என்று யாரும் இரக்கம் காட்டவில்லை, அவருக்கு மேலும் மேலும் பணிச் சுமையைத்தான் தந்தார்கள்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண மண்டபம் ஒன்றில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த கனகாவை ஒரு தொண்டு நிறுவனம் மீட்டது,  அதன் பிறகு கனகாவின் வாழ்க்கை மாறியது, தற்போது பியுசி படித்துக்கொண்டு இருக்கும் அவர் ஆங்கிலத்தில் நல்ல புலமைபெற்றுள்ளார்.   இவரை யூனிசெப் அமைப்பு இந்தியப் பிரிவின் ஆலோசகர் என்ற பதவியைத் தந்து கவுரவித்துள்ளது.

ஆங்கிலம் மற்றும் தமிழ், கன்னடம், போன்ற மொழிகளில் திறமைபடைத்த கனகா யுனிசெப் அமைப்பின் சார்பில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றியுள்ளார்.

உலகக் குழந்தைகள் நாள் நவம்பர் 20 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதுமிருந்து 30 குழந்தைகள் நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய நபராக கனகாவிற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அவர் 20ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

இதுகுறித்து கனகா கூறுகையில், குழந்தை களின் உரிமைகளை பாதுகாக்க எவ்வளவோ சட்டங்கள் இருந்தாலும், அவை முறையாக அமலாக்கப் படவில்லை. மேலும் சட்டத்தின் பல ஓட்டைகளைப் பயன்படுத்தி குழந்தைத் தொழி லாளர்களை நியமிப்பவர்கள் தப்பிவிடுகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்க்கை எவ்வளவு வேதனையானது என்பதை நானே அனுப வித்திருக்கிறேன், இதனை நான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். என்னைப்போன்று ஆயிரக்கணக் கான குழந்தைகள் பல சுரண்டல்களை எதிர்கொள் கின்றனர். நகரங்களில் உள்ள குழந்தைகள், அவர் களை காப்பாற்றிக்கொள்ள சிலரை அணுகவாவது முடியும். ஆனால், என்னை போன்று குடிசை பகுதிகள், கிராமங்களில் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் உதவிக்கரம் வேண்டும் என கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner