எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஓராண்டில் சுமார் 10 மாதங்கள் கடுமையான குளிர்காற்று வீசும் தட்பவெப்ப நிலை காணப்படும். அதிகாலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் வீசும் குளிர் காற்றில் சாதாரணமாக வீட்டில் இருந்தாலே உடல் முழுவதும் நடுங்கும்.

இப்படிப்பட்ட பருவ சூழ்நிலையில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மகளை தினமும் ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானத்துக்கு காலை, மாலை இருவேளைகளிலும் அழைத்துச் சென்று பயிற்சி அளித்து வட்ட, மாவட்ட, மண்டல, மாநில, தென் னிந்திய மற்றும் தேசிய அளவில் தடகளப் போட்டிகளில் தடம் பதிக்க வைத்துள்ளார் ஒரு தொழிலாளி. அதுவும் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் விளாட்டுகளில். இவ்விரு விளை யாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார் ஜென்சி சூசன்.

ஓசூர் சாந்தி நகரில் விசித்து வருகிறார் அகஸ்டியன் ஜெபராஜ் (45). பூர்வீகம் திருநெல்வேலி. வேலை தேடி ஓசூர் வந்த இவர் முதல் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழில்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மனைவி ஜான்சி கெட்சி. இவர் தனியார் பள்ளி ஆசிரியையாக இருக்கிறார். இவர்களுக்கு ஜெனிடன் என்ற மகனும்(17), ஜென்சி சூசன்(15) என்ற மகளும் உள்ளனர். ஜென்சி தேசிய அளவில் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஓசூர் பரிமளம் மெட்ரிக் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் ஜென்சி சூசனின் உடல் வாகைப் பார்த்த உடற்பயிற்சி ஆசிரியர் அசோக், குண்டு எறிதல் விளையாட்டில் முறையாக பயிற்சி அளித்தால் ஜென்சி சாதனைப் படைப்பார் என்று கணித்தார். பள்ளியின் நிர்வாக இயக்குநர் ரத்தினசபாபதி, தாளாளர் சிறீதர் ஆகியோர் ஜென்சிக்கு முறையாக பயிற்சி அளிக்க அனுமதி அளித்தனர்.

இந்தப் பயிற்சியை மேற்கொள்ளத் தான் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 5 முதல் 7 மணி வரையில் தீவிரப் பயிற்சி எடுத்து வந்தார் ஜென்சி.

இது குறித்து ஜென்சி கூறுகையில், “கிருஷ் ணகிரி மாவட்ட அளவில் 2016 -2017-ஆம் ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தேன். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓசூர் சரக அளவில் நடைபெற்ற போட்டியிலும், மாவட்ட அளவில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற போட்டியிலும், மண்டல அளவில் தருமபுரியில் நடைபெற்ற போட்டியிலும் குண்டு மற்றும் வட்டு எறிதல் பிரிவில் முதலிடம் பெற்றேன். அதன் பின்பு மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வானேன்.

அக்டோபர் மாதம் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவில் குண்டு எறிதல் போட்டியில் 11.34 மீட்டர் தொலைவும், வட்டு எறிதலில் 37.44 மீட்டர் தொலைவும் வீசி முந்தைய சாதனை களை முறியடித்தேன்.

இதனைத் தொடர்ந்து கேரளாவில் நடைபெற்ற தென் னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகி 13.38 மீட்டர் குண்டு எறிந்து முதலிடம் பிடித்தேன். இதனால் தேசிய அளவில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது.

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் அண்மையில் நடைபெற்ற 63ஆவது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியிலும் இரண்டு விளையாட்டிலும் முதல் இடத்தைப் பிடித்தேன்.

எனது வெற்றிக்கு எனது தந்தையின் விடாமுயற்சியும், உடற்பயிற்சி ஆசிரியர் அசோக்குமார் அளித்த ஊக்கமும்தான் முக்கிய காரணம். இன்னும் பல சாதனைகளைப் படைத்து பள்ளிக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இதுவே என் ஆசை’’ என்கிறார் ஜென்சி.

போராட்டம் தண்ணீரிலும்!

ஆறுகளில் ஏரிகளில் குளங்களில் மீன்களைப் பிடித்து விற்கும் பெண்கள் இந்தியாவில் ஏராளமானோர் இருக் கிறார்கள். ஆர்ப்பரிக்கும் அலைகள் நிறைந்த ஆபத்துகள் நிறைந்திருக்கும் ஆழ் கடலுக்குள் படகில் சென்று மீன்களைப் பிடிக்கும் பெண்கள் யாராவது இருக்கிறார்களா?

இந்தியாவில் அப்படி  ஒருவர் இருக்கிறார். அவர்தான் கேரளத்தைச் சேர்ந்த ரேகா. நாற்பத்தைந்து வயதாகும் ரேகா ஏன் கடலில் பயணம் செய்து மீன்  பிடிக்கும் தொழிலுக்கு வந்தார்?

அவரே விளக்குகிறார்:  “நான் கேரளம் திருச்சூருக்கு அருகில் செத்துவா மீனவ கிராமத்தில் வசித்து வருகிறேன். சுருக்கமாகச் சொன்னால் நான்கு மகள்களை வளர்க்க தரையில் பிறந்த நான் கடலுக்குள் சென்று தினமும் போராடி வருகிறேன். அரபிக் கடல்தான் எனது தொழில் களம். பொதுவாக அரபிக் கடல் அமைதியாக இருக்கும். ஆனால் மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றும் மழையும் சில சமயம் புயலும் இருக்கும். மாற்றிவைக்கப்படும் என்ஜின் கொண்ட சிறிய படகில்தான் எனது வாழ்க்கை நகர்கிறது. என்ஜினும் சரி, படகும் சரி பழையதுதான்.

கணவர் கார்த்திகேயன் பாரம்பரிய மீனவர். பத்து ஆண்டு களுக்கு முன், கணவருடன் சேர்ந்து மீன்பிடித் தொழிலை செய்து வந்த இரண்டு பேர் வேலைக்கு வராமல் நின்று விட்டனர். அவர்களுக்குப் பதிலாக வேறு ஆள்களைத் தேடியும் கிடைக்கவில்லை. மீன்பிடித் தொழில் நின்று போனால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது? கணவர் திண்டாடினார். அவரது கலக்கத்தைப் புரிந்து கொண்டு “”நான் உங்களுடன் கடலுக்கு வந்து மீன் பிடிக்கக் கூடாதா’’ என்று கேட்டேன். கணவர் தொடக்கத்தில் திகைத்தார், தயங்கினார்.

“தொழில் தெரிந்த உங்களுடன் கடலுக்கு வந்தால் உங்களுக்கு உதவியாக இருப்பேன்... தொழிலையும் கற்றுக் கொள்வேன்... வாழ்க்கையும் சீராகும்... வருமானமும் அதி கரிக்கும்‘’ என்று கூறி சம்மதிக்க வைத்தேன். தரையில் தொடங்கிய போராட்டம், கடல் தண்ணீரிலும் தொடர்கிறது’’ என்கிறார் ரேகா.

கடலில் மீன் பிடிக்க வேண்டிய அனுமதியும் சான்றிதழும் எனக்கு அரசு வழங்கியுள்ளது. இந்தியாவில் வேறு எந்தப் பெண்ணுக்கும் இந்த அனுமதி, சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்காவலர்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்

மகளிருக்கென்று பிரத்யேக காவல் நிலையங்கள் அமைக்கப்பட்ட பின்பும் கூட தங்களுக்கு நிகழும் பிரச்சினைகளுக்கு காவல் நிலையங்களை அணுக பெண்களுக்கு தயக்கம் இருக்கிறது. இதுபோன்ற தயக்கங்களைக் களைந்து பெண்கள் தைரியமாகவும், நம்பிக்கையோடும் காவல் நிலையங்களை அணுக வேண்டும் என்பதற்காக ஆந்திர மாநிலத்தில் 4 பெண் காவலர்கள் (கான்ஸ்டபிள்) 1,250 கி.மீ. தூரம் விழிப்புணர்வு மிதிவண்டி பயணம் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டுள் ளனர். நிர்மலா, திருமலா, நாகரத்னா, பார்கவி என்ற நான்கு பெண்களும் இந்தப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

45 நாள்கள் நடைபெற்ற இந்தப் பயணத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 57 வட்டங்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த நான்கு பெண் காவலர்களும் ஆந்திர காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.

மிதிவண்டி பயணமானது நகர்ப்புறங்களிலும் கிராமப் புறங்களிலும் நடைபெற்றது. இந்த நான்கு பேரும் மிதிவண்டி பயணம் செல்லும் இடங்களில் ஆயிரக் கணக்கான பெண்களைச் சந்தித்து அவர்களிடம் பெண் களுக்கு எதிரான குற்றங்கள், வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை, வரதட்சிணைக் கொடுமை, பாலியல் வன்முறை, கடத்தல் சம்பவம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இவர்கள் சந்தித்தவர்களில் காவல்துறையைச் சேர்ந்த பெண்கள், வழக்குரைஞர்கள், பெண்கள் அமைப்புகள், ஆசிரியர்கள், மாணவர்கள், குடும்பத் தலைவிகள் என பலரும் அடங்குவர்.இந்த மிதிவண்டி பயணத்தை மேற் கொண்ட இளம் பெண்கள் நான்கு பேருமே பயணத்தின் போது அந்தப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், பெண்கள் விடுதிகள் உள்ளிட்டவற்றில் தங்கியிருந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது ஒருபுறமி ருந்தாலும், 1,250 கி.மீ. தூரத்தை மிதிவண்டி கடந்தது அத்தனை சுலபமான காரியமாக இருக்கவில்லை. பயணித்த சாலைகளில் ஆபத்தான வளைவுகள், செங்குத்தான சாலைகள், மலைப் பாதைகள் அடங்கிய பகுதிகளும் அடங்கும்.

இதுதொடர்பாக பயணம் மேற்கொண்ட பெண்கள் கூறுகையில், “இந்தப் பயணத்தின் நோக்கமே காவல் நிலையங்களை அணுகுவதற்கு பெண்கள் மனதில் இருக்கும் தயக்கத்தைப் போக்குவதுதான். இந்தப் பயணம் வெற்றிகரமாக அமையுமா என்று ஆரம்பத்தில் எங்களுக்கு சந்தேகமாகவே இருந்தது. ஆனால் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம். தீர்வும், வழி தெரியாததால் அற்பமான பிரச்சினைகளுக்குக் கூட பல பெண்கள் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றனர். இதுபோன்ற முடிவுகளில் இருந்து பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்‘’ என்கின்றனர்.

இந்தப் பயணத்தை மேற்கொண்டவரில் ஒருவரான திருமலா கூறுகையில், “வரலாற்று சிறப்புமிக்க மிதிவண்டி பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக எனது திருமணத்தைத் தள்ளி வைத்து, இதில் பங்கேற்றேன்’’ என்றார்.

மற்றொருவரான நாகரத்னா தனது அனுபவம் குறித்து கூறுகையில், “ஆறு மாதங்களுக்கு முன்புதான் காலில் அடிபட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இருப்பினும் இந்தப் பயணத்தில் தைரியமாக பங்கேற்றேன். மலைப் பகுதிகளில் மிதிவண்டியில் செல்லும்போது மட்டும் காலில் வலி ஏற்பட்டது. ஆனால் மொத்தத்தில் பயணம் வெற்றி கரமாக முடிந்ததில் மகிழ்ச்சி’’ என்றார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner