எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடசென்னை ஆண்களின் விளையாட்டு எனப் பேசப்பட்ட கேரம் விளையாட்டை உலக அளவில் பேசவைத்தார், அதே பகுதியிலிருந்து வந்த ஒரு பெண். மூன்று முறை கேரம் உலக வாகையராக வெற்றிக்கொடி கட்டிய இளவழகிதான் அவர்.

சென்னையைப் பூர்வீகமாகக்கொண்ட இள வழகி, பிறந்து வளர்ந்தது வியாசர்பாடியில்தான். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை இருதயராஜ் பிராட்வேயில் தள்ளுவண்டி ஓட்டி பிழைப்பு நடத்திய ஏழை கூலித் தொழிலாளி. வடசென்னைக்கே உரிய கேரம் விளையாட்டு மீதான ஆர்வம் அவருக்கும் இருந்தது. வடசென் னையில் எங்கே கேரம் போட்டி நடந்தாலும், அங்கே இருதயராஜ் ஆஜராகிவிடுவார். தந்தையிடமிருந்து தான் கேரம் விளையாட்டு மீது இளவழகிக்கும் ஆர்வம் பிறந்தது.

திருப்புமுனைப் பரிசு

ஆனால், கேரம் விளையாட்டு மீது இள வழகிக்குத் தணியாத தாகம். ஆறு வயது முதலே அக்கம் பக்கத்தில் கேரம் விளையாடத் தொடங்கி விட்டார். அந்தப் பகுதியில் இருந்த ஒரு கிளப்பில் தன் தந்தையின் நண்பர் உதவியுடன் கேரம் பயிற்சியை இளவழகி மேற்கொண்டுவந்தார். காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து பயிற்சிக்குச் சென்றுவிடுவார். கேரம் காய்களைக் குறிபார்த்து பாக்கெட் செய்யும் வித்தையைக் கற்றுக்கொண்ட இளவழகி, அந்த விளையாட்டின் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார்.

கேரம் விளையாட்டில் முன்னேறிவந்த இள வழகி, பத்து வயதிலேயே போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிவிட்டார். முதன்முதலாக மாநில அள விலான போட்டியில் பங்கேற்றபோது, இரண்டாவது இடத்தைத்தான் பெறமுடிந்தது. ஆனால், அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கேரம் போட்டிகளில் ஜொலிக்கத் தொடங்கினார். மாநில அளவிலான போட்டிகளைத் தாண்டி, தேசிய அளவிலும் முத்திரை பதிக்கத் தொடங்கினார்.

உலக வாகையர்

தேசிய அளவில் முன்னேற்றம்கண்ட இளவழகி, 13 வயதில் தேசிய வாகையராக உருவெடுத்தார். இதனால், மாலத்தீவில் நடந்த கேரம் ஆசிய வாகையர் போட்டியில் பங்கேற்க இளவழகிக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் போட்டியில் இள வழகியின் பக்கம் வெற்றிக்காற்று வீசியது. கேரம் ஆசிய வாகையர் என்ற பெருமையோடு தமிழகம் திரும்பினார். கேரம் விளையாட்டில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முன்னேறிவந்த இளவழகிக்கு, 2006 மிகப் பெரிய வெற்றி ஆண்டாக அமைந்தது.

தேசியப் போட்டிகளில் முன்னேறி தரவரிசைப் பட்டியலில் முன்னிலை வகித்துவந்ததால், 2006இல் டில்லியில் நடைபெற்ற ராஜீவ் காந்தி 2ஆவது கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இளவழகிக்குக் கிடைத்தது. இறுதிப் போட்டியில் மகாராட்டிரத்தைச் சேர்ந்த ஆயிஷா முகமதை வீழ்த்தி முதன்முறையாக உலக வாகையரானார் இளவழகி. தொடர்ந்து 2008இல் பிரான்சில் நடைபெற்ற 5ஆவது உலக கேரம் வாகையர் பட்டப் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் பட்டம் வென்று அசத்தினார். இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

இதுவரை தேசிய கேரம் விளையாட்டில் ஒட்டு மொத்தமாக 260 பதக்கங்களை இளவழகி வென்றி ருக்கிறார். இதில் 106 தங்கப் பதக்கங்கள் அடங்கும். இதேபோல் சர்வதேச அளவில் 125 பதக்கங்களை வென்றிருக்கிறார். தங்கப் பதக்கங்கள் மட்டும் 111.  இந்த அளவுக்கு கேரம் விளையாட்டில் சாதித்த இள வழகிக்குப் பெரிய அங்கீகாரம் ஏதும் கிடைக்க வில்லை. கேரம் விளையாட்டில் உலக வாகையர் பட்டம் வென்றபோது அவருக்கு ஒரு முறை தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் பரிசு அளித்தது. இந்தியாவில் கேரம் விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற ஒரே வீரர் என்ற பெருமை வடசென்னையைச் சேர்ந்த மரிய இருதயத்துக்கு உண்டு. ஆனால், பெண்கள் பிரிவில் இந்தியாவுக்குப் பெருமைசேர்த்த இளவழகிக்கு அந்த விருதுகூடக் கிடைக்காமல் போனது. நல்வாய்ப்பாக கேரம் விளையாட்டில் சாதித்ததற்காக ஓ.என்.ஜி.சி.யில் வேலை கிடைத்தது அவருக்கான ஓர் அங்கீகாரம்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner