Banner

இளைஞர்

இந்தியாவின் பாதுகாப்பை அதிகபட்சம் நிர்ணயிக்கும் இந்திய ராணுவம், இந்திய விமானப் படை, இந்திய கப்பல்படை, எல்லையோர ராணுவப் படை போன்றவற்றில் ஆண் விண்ணப்பதாரர்களை வரும் ஜனவரி 2014 முதல் பயிற்சியளிக்கும் டெக்னிகல் கிராஜூவேட் கோர்ஸ் (டி.ஜி.சி.,-118) பிரிவுக்கு ஆண் பாலினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

இந்திய ராணுவத்தின் சார்பாக டி.ஏ.வி.பி., அறிவித் துள்ள இந்தப் பதவியில் சிவில் பிரிவில் 15 இடங்களும், எலக்ட்ரிகல்/எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 15 இடங்களும், ஆட்டோமொபைல் ஒர்க்-ஷாப் டெக்னாலஜி, ஏரோனாடிகல்/ஏரோஸ்பேஸ்/ஏவியேஷன்/பாலிஸ்டிக்ஸ்/ஏவியானிக்ஸ், ஆர்க்கிடெக்சர்/பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் தலா 2 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் டெக்னாலஜி/இன்போடெக்/எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ்/ஆப்டோ-எலக்ட்ரானிக்ஸ்/பைபர் ஆப்டிக்ஸ்/மைக்ரோ எலக்ட் ரானிக்ஸ் அண்டு மைக்ரோவேவ் ஆகிய பிரிவுகளில் தலா 8 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலி கம்யூனிகேஷன்/ டெலிகம்யூனிகேஷன்ஸ்/ எலக்ட் ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்/சாட்டிலைட் கம்யூனி கேஷன் பிரிவில் 10 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமெண்டேஷன்/ இன்ஸ்ட்ரூமெண் டேஷன் பிரிவில் 3 இடங்களும்,புட் டெக்/பயோ-டெக்/பயோ-மெடிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜி னியரிங், இண்டஸ்ட்ரியல்/மேனுபேக்சரிங் இன்ஜினி யரிங்/இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் - புரொடக்ஸன் ஆகிய பிரிவுகளில் தலா 2 இடங்களும், மெட்டலர்ஜி பிரிவில் ஒரு இடமும், எம்.ஏ., எம்.எஸ்.சி., படிப்பை ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, புவியியல், பொலிடிகல் சயின்ஸ், உளவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், சீன மொழி, திபெத்திய மொழி, பர்மீய மொழி, புஷ்டோ, டாரி மற்றும் அரேபிய மொழியில் முடித்தவர்களுக்கு 20 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி தேவைப்படுகிறது. எம்.ஏ., எம்.எஸ்.சி., பிரிவு தவிர்த்து பிற பிரிவுகளுக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை முடித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

ஏ.இ.சி., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 23 வயது நிரம்பிய வராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதிகளுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் கட்டாயத் தேவையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும். விண்ணப்பிக்க இறுதி நாள் : 13.06.2013

இணையதள முகவரி:www.davp.nic.in

இந்தியாவின் பிரசித்தி பெற்ற தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் என்.அய்.டி., எனப்படும் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி முக்கிய இடத்தில் உள்ளது. இந்த கல்வி நிறுவனத்திற்கு நாடெங்கும் கிளைகள் உள்ளன. தமிழகத்தின் திருச்சியில் இதன் கிளை உள்ளது.

புகழ் பெற்ற இந்த கல்வி நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பயிற்சியாளர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்ப வர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பி.எஸ்.சி., பி.சி.ஏ., பி.காம்., பி.காம்., போன்ற ஏதாவது ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.சி.ஏ., எம்.காம்., போன்ற முது நிலைப் பட்டப்படிப்பை முடித்தவர்களும் இதே பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற போதும் கூடுதல் தகுதிக்காக எந்த கூடுதல் ஊதியமும் வழங்கப்பட மாட்டாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இதே போல் தற்போது பட்டப் படிப்பின் இறுதி ஆண்டு முடிப்பவர்களும் இதுவரை 60 சதவிகித மதிப்பெண் களுடன் தேர்ச்சி இருக்கும் பட்சத்தில் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவைச் சார்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் இதுவரை 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந் தால் போதுமானது.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருப்பதுடன் எம்.எஸ்., ஆபிஸ் பேக்கேஜிலும் அனு பவம் பெற்றவராக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தகவல் பரிமாறும் திறன் மற்றும் எம்.எஸ்., ஆபிஸில் திறன் அறிவதற்காக ஒரு எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

இதன் பின்னர் நேர்காணல் மூலம் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. என்.அய்.டி., திருச்சியின் டேடா என்ட்ரி ஆப்ரேட்டர் டிரெய்னி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பத்தை முழுமை யாக நிரப்பி கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இதன் சாப்ட் காபியை This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறிய வேண்டும்.

விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள் : 27.05.2013

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 30.05.2013

முகவரி:  Office of the Dean R & C, NIT, Trichy - 620 015

இணையதள முகவரி: www.niit.edu

டிபன்ஸ் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன் எனப்படும் டி.ஆர்.டி.ஓ., அடிப் படையில் ராணுவம் தொடர்புடைய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது 1958இல் டெக்னிகல் டெவலப்மெண்ட் எஸ்டாப்ளிஷ்மெண்ட், டெக்னிகல் டெவலப்மெண்ட் - புரொடக்சன், டிபன்ஸ் சயின்ஸ் ஆர்கனைசேஷன் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டது.

முதலில் சிறிய நிறுவனமா கவும், 10 ஆராய்ச்சி மய்யங்களையும் கொண்டதாக நிறுவப்பட்ட இந்த நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு தற்போது பல்வேறு துறை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வளவு புகழ் பெற்ற இந்த நிறுவனத்தில் மூன்று பிரிவுகளில் கீழ் 844 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

டி.ஆர்.டி.ஓ.,வில் சீனியர் டெக்னிகல் அஸிஸ் டெண்ட்- பி பிரிவில் 360 இடங்களும், டெக்னீ சியன்-ஏ பிரிவில் 223 இடங்களும், அஸிஸ் டெண்ட்(இந்தி), ஸ்டோர் அஸிஸ்டெண்ட் ஏ, அட்மின் அஸிஸ்டெண்ட், சிவிலியன் ஓட்டுநர் ஏ, செக்யூரிட்டி அஸிஸ்டெண்ட் ஏ, பயர் என்ஜின் ஓட்டுநர், பயர்மேன் பிரிவில் 261 காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

டிபன்ஸ் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷனின் மேற்கண்ட காலி இடங் களுக்கு முதல் பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி., படிப்பும், இரண்டாவது பிரிவுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அய்.டி.அய்., படிப்பும், மூன்றாவது பிரிவுக்கு பிரிவிற்கு ஏற்றபடியும் கல்வித் தகுதி தேவைப் படுகிறது.

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்ட வராகவும் இருக்க வேண்டும். 150 அப்ஜெக்டிவ் கேள்விகளைக் கொண்ட எழுத்துத் தேர்வு மூலமாக இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும்.

தமிழ் நாட்டில் சென்னையில் இந்த எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது. இந்தப் பதவிக்கு ஆன்-லைன் மூலமாகவே விண்ணப் பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் பதிவுத்தாளை பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான தேவைகளைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

முகவரி: DRDO Entry Test 2013, Post Box No.8626, Delhi - 110054

விண்ணப்பிக்க இறுதி நாள் : 27.05.2013

இணையதள முகவரி:http://drdo.gov.in/drdo/ceptam/ceptamnoticeboard.html

youtube   ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபல மான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube    தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது.

இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்பு வீர்களா? அது தான் உண்மை.  எப்படி என்று பார்ப்போம். Charlie bit my finger என்ற வீடியோவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இரண்டு சிறுவர்கள் இருக்கும் இந்த வீடியோ சேனல் பல கோடிகளை சம்பாதித்து உள்ளது. இதே போல நிறைய பேர் உள்ளார்கள்.  Digital Inspiration தளத்தின் நிர்வாகி அமித் அகர்வால் சேனல் இது  Labnol.. இவர் இந்தியாவின் மிகப் பெரிய Tech Blogger.

தனது தளம் மட்டும் இன்றி Youtube மூலமும் இவர் வருமானம் பெறுகிறார். தனி நபர்கள் மட்டும் இன்றி தொலைக்காட்சி நிறுவனங்கள், மற்ற நிறுவனங்கள் பலவும் Youtube மூலம் பணம் சம்பாதிக்கின்றன. விஜய் தொலைக்காட்சியின் சேனல்.

STARVIJAY  முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன். நடிக்க தெரிய வேண்டும். அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும்.

எப்படி சம்பாதிப்பது?

Step – 1

ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடியுங்கள். நாய்க்குட்டி, பூனை குட்டி, உங்கள் குழந்தை செய்யும் சேட்டை, உங்கள் மனைவி செய்யும் சமையலை எப்படி என்ற குறிப் போடு, மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எது வேண்டும் என்றாலும்.

Step – 2

இப்போது எடுத்த வீடியோவை உங்கள் கணினியில் Movie Maker போன்ற வீடியோ எடிட்டிங் மென்பொருளில் போட்டு மெருகேற்ற வேண்டும். ஒன்றும் பெரிய விசயமில்லை, தேவை இல்லாத இடங்களை நீக்க போகிறீர்கள். பின்னணியில் குரல் சேர்க்க வேண்டும் என்றால்  ரெகார்ட் செய்து அதையும் சேருங்கள். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், வீடியோவை பார்க்கும் படி எடிட் செய்யுங்கள்

Step – 3

இப்போது Youtube  தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து  Upload  என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடி யோவை  Upload  செய்யுங்கள்.

Step – 4

இப்போது உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். எளிதில் கவரும் வண்ணம் ஆங்கிலத்தில் தலைப்பு வையுங்கள், வீடியோவில் என்ன உள்ளது என Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதான வார்த்தைகளாக கொடுக்க வேண்டும். எப்படி Tags கொடுப்பது என்று Youtube கொஞ்சம் ரகசியங்கள் என்ற பதிவில் சொல்லி உள்ளேன். இப்போது “Public” என்று தெரிவு செய்து Save செய்து விடுங்கள்.

Step – 5

முதல் நான்கு ஸ்டெப்களை தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள்.

Step – 6

உங்கள் வீடியோக்களுக்கு நிறைய  ஏநைறள வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங் களுக்கு சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல “Invitation to earn revenue from your YouTube videos”  என்று  ஒரு மின்னஞ்சல் அனுப்பும். அதில் உள்ள லிங்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தர வேண்டும். அந்த - YouTube Partner Program: Interest Form:  இப்போது Youtube உங்கள் வீடியோக்களை சோதிக்கும், நிறைய வீடியோக்கள் இருக்க வேண்டும், நிறைய பேர் பார்க்க வேண்டும்.

இதை தான்  Youtube எதிர்பார்க்கும். எல்லாம் சரியாக இருப்பின் உங்களுக்கு  Partner என்ற அந்தஸ்து வழங்கப்படும். பலருக்கு இது நிராகரிக்கப்படலாம். மீண்டும் Apply செய்ய இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடியோ Upload செய்யாமல் இருக்காதீர்கள்.

தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள். இரண்டு மாதத்துக்கு பின் இன்னும் அதிக Video, Views,  உடன் மீண்டும் Apply செய்யுங்கள். இடையில் உங்களுக்கு Adsense கணக்கு இருந்தால் அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பையும்  Youtube வழங்கும். (என் லெவல் இது தான்). இதில் வீடியோ Upload செய்த உடன்   Monetize My Video என்பதை கொடுக்க வேண்டும்.

இப்போது உங்கள் வீடியோ குறிப்பிட்ட சில நாட்களுக்கு Review செய்யப்படும். வீடியோ உங்களுடையது என்று Youtube  உறுதி செய்த உடன், Monetized என்று ஆகி விடும்.

Partner, Adsense இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.  Adsense கணக்கு மூலம் வரும்,  Earning, Partner அய் விட குறை வாக இருக்கும்.  [Partner கணக்குக்கு Views க்கு 2.50$ என்று சொல்லப்படுகிறது இதில் Adsense கணக்கை சேர்க்க, நீங்கள் Youtube கணக்கில் நுழைந்த உடன், Youtube இதை கேட்கும். கேட்க வில்லை என்றால் காத்திருக்கவும்.

இரண்டில் எது உங்களுக்கு கிடைத்தாலும், உங்கள் வீடியோவுக்கு Youtube இரண்டு வகையான விளம்பரங்களை காட்டும்  Overlay in-video ads  - வீடியோவின் கீழே வரும் குட்டி விளம்பரம்   TrueView in-stream ads– வீடியோவுக்கு முன் வரும் சில நொடி விளம்பர வீடியோ நீங்கள் எவ்வளவு வீடியோ Upload செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ என்றால் அதற்கேற்ப தான் வருமானமும்.

எந்த மாதிரி வீடியோக்களை Upload  செய்யலாம் ?

சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர் சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தள வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோவைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள். போன்றவை. கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் இன்னும் அதிகமாக வருமானம் பெற முடியும். தமிழும் கூட பயன்படுத்தலாம். ஆனால் சினிமா வீடியோ, பாடல் எதையும் நீங்கள் இதில் பயன்படுத்த முடியாது. வீடியோவானது முழுக்க முழுக்க உங்களுடையதாக உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும்  Youtube தரும்  Audio swap வசதியை பயன்படுத்தாதீர்கள். அந்த ஆடியோக்களை பயன்படுத்தினால் அதில் வரும் விளம்பரம் மூலம் வரும் வருமானம் உங்களுக்கு வராது. உங்கள் முயற்சிகளை பொறுத்து தான் இது ஈமு கோழி போடும் முட்டையா அல்லது, பொன் முட்டை இடும் வாத்தா என்பது தெரிய வரும்.   You tube குறித்த மற்ற கேள்விகளை கீழே கேளுங்கள். பதில் சொல்கிறேன்.

நன்றி: பிரபுகிருஷ்ணா
(கற்போம்)

அரசுத்துறை சார்ந்த பணி இடங்களை இந்தியாவின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு செய்து வருவது நாம் அறிந்ததுதான். இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் இணைவதற்காக நேஷனல் டிபன்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகாடமி ஆகியவற்றின் மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது.

மொத்தம் 55 காலி இடங்களைக் கொண்ட இதற்கான தேர்வை நடத்த யு.பி.எஸ்.சி., அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  திருமணம் ஆகாத ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். இவர்கள் 02.07.1995க்கு பின்னரும் 01.01.1998க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும். நேஷனல் டிபன்ஸ் அகாடமிக்கு விண்ணப்பிப் பவர்கள் பிளஸ்2 அளவிலான படிப்பை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.

இதே அகாடமியின் நேவல் மற்றும் ஏர் போர்ஸ் பிரிவிற்கு விண்ணப்பிக்க பிளஸ்2 படிப்பை இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் முடித்திருக்க வேண்டும்.  என்.டி.ஏ., மற்றும் அய்.என்.ஏ., பிரிவிற்கான யு.பி.எஸ்.சி., தேர்விற்கு விண்ணப்பிக்க ரூ.100/-அய் ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையிலோ அல்லது நெட் பேங்கிங் முறையிலோ அல்லது டெபிட்/கிரெடிட் கார்டு வாயிலாகவோ செலுத்த வேண்டும்.

இதன் பின்னர் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் இதர வழிகளில் இந்தப் படிப்பிற்கான தேர்ச்சி முறை இருக்கும். எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை, தாராபுரம், மதுரை ஆகிய மய்யங்களில் எழுதலாம். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 03.06.2013

இணையதள முகவரி: www.upsc.gov.in/exams/notifications/2013/bda2/nda2_13_eng.pdf

அண்மைச் செயல்பாடுகள்