இளைஞர்

வானைத் தொடத் தயாராகும் நாசாவின் நட்சத்திரம்

பிளஸ் டூவில் முதல் இடம், இரண்டாவது இடம் எடுத்தவர்கள் பற்றி கடந்த ஆண்டுவரை எல்லா ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு பேசும். நல்லவாய்ப்பாக, இந்த ஆண்டு முதல் அதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும், ஒருவருடைய அறிவைச் சோதிக்கச் சிறந்த அளவுகோலாக தேர்வைத்தான் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

தேர்வுக்கும் திறமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என நிரூபித்திருக்கிறார் ஒரு மாணவர். 3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தில் கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்ட கலாம் சாட் என்ற குட்டியூண்டு செயற்கைக்கோளின் எடை வெறும் 64 கிராம். இந்த கையடக்கச் செயற்கைக்கோள் நாசாவின் எஸ்.ஆர். ராக்கெட்டில் ஜூன் மாதம் விண்வெளிக்கு பயணிக்க உள்ளது. இதை உருவாக்கிய மாணவர் முகமது ரிஃபாக் ஷாரூக் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பெண் சராசரி 62.5 சதவீதம்.

நாசா வருடந்தோறும் மாணவர்களுக்காக நடத்தும் சர்வதேசச் செயற்கைக்கோள் வடிவமைப்புக்கான போட்டி கப்ஸ் இன் ஸ்பேஸ். இதில் கலந்துகொண்ட 57 நாடுகளைச் சேர்ந்த எட்டாயிரம் போட்டி யாளர்களில் இறுதி செய்யப்பட்டவர்கள் 80 பேர். அவர்களில் தான் உருவாக்கிய சற்றே பெரிய தீப்பெட்டி அளவிலான செயற்கைக் கோளை ஏந்தியபடி நிமிர்ந்து நிற்கும் ஒரே இந்தியர் முகமது ரிஃபாக் ஷாரூக்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு நடத்திய அறிவியல் போட்டியில் முதன் முறையாகக் கலந்துகொண்டார். இப்போது அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.

இந்த இளம் விஞ்ஞானி அடுத்துப் படிக்கப்போவது என்ன தெரியுமா? எனக்குச் சிறு வயதிலிருந்தே பிடித்தப் பாடம் இயற்பியல். ஸ்பேஸ் கிட்ஸ் செயல் அதிகாரி சிறீமதி கேசனின் வழிகாட்டுதலால் இயற்பியல், மின்னணு பாடங்களில் மேலும் ஆர்வம் அதிகரித்தது. பத்தாம் வகுப்பில் 500-க்கு 432 மதிப்பெண் பெற்றேன். ஆனால் அப்போதே மருத்துவம், பொறியியலுக்கு பின்னால் ஓடக்கூடாது, என்னுடைய தனித்திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என உறுதியாக முடிவெடுத்தேன். என்னுடைய அம்மா, சித்தி, மாமா, பள்ளி ஆசிரியர்கள் என பலரும் அதை ஊக்குவித்தார்கள்.

எதிர்பாராதவிதமாக கடந்த ஆண்டு நவம்பரில்தான் பிளஸ் டூ படிப்பில் சேர முடிந்தது. அதனால் அரையாண்டுத் தேர்வு, ஒரு மாதிரித் தேர்வு மட்டுமே எழுதிவிட்டு நேரடியாகப் பொதுத் தேர்வை எழுதினேன். அதனால் கணிதத்தில் 200-க்கு 92, வேதியியலில்
200-க்கு 89, கணினி அறிவியலில் 200-க்கு 145 மதிப்பெண் மட்டுமே பெற்றேன். ஆனால் மதிப்பெண்கள் என்னுடைய இலக்கு இல்லையே! அதனால், எனக்குப் பிடித்த பி.எஸ்சி. இயற்பியல் படிக்கப்போகிறேன் என உற்சாகமாகப் பேசுகிறார் ரிஃபாக்.

விண்வெளியில்  விவசாயம் சாத்தியமா?

டெக்னாலஜி டெமான்ஸ்டிரேட்டர் வகையைச் சேர்ந்த இவருடைய செயற்கைக்கோள் செம்டோ தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. மிக நுண்ணிய அலகு நானோ என்றால், அதை விடவும் சிறியது செம்  ஆகும். அதனால்தான் வெறும் 64 கிராம் கொண்ட அதில் எட்டு சென்சார்கள், ஆன்போர்டு கணினி, மூன்று கிராம் எடையில் அத்திப் பழ விதைகள் உள்ளிட்ட பலவற்றைப் பொருத்தி உள்ளார்.

இந்தச் செயற்கைக்கோள் மூலமாக விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல தகவல்களை அறிய முடியும். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக ரிஃபாகின் குறிக்கோள், விண்வெளியில் விவசாயம் சாத்தியமா என்பதைக் கண்டுபிடிப்பதே. வெறும் 240 நிமிடங்கள் மட்டுமே இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் ஆய்வு செய்யும். அப்போது அதில் உள்ள அத்தி விதை அங்குள்ள கதிர்வீச்சை கிரகிக்கும். பிறகு அந்தச் செயற்கைக்கோள் கடலில் விழுந்துவிடும். அதை மீட்டு எடுத்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி விண்வெளியில் எப்படி வேளாண்மை செய்யலாம் எனக் கண்டறிவேன் என்கிறார்.

விண்ணப்பித்து விட்டீர்களா?

இந்திய தேர்தல் ஆணையத்தில் உதவி இயக்குநர் பணி

வேலை: உதவி இயக்குநர் பணி கல்வித் தகுதி: பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்.சி.ஏ படிப்புகள் அல்லது அதற்கு இணையான படிப்புகளை அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் படித்து இருக்க வேண்டும். சாப்ட்வேர் எஞ்சினியரிங், டி.பி.எம்.எஸ்., நெட்வர்கிங், நெட்வர்கிங் செக்யூரிட்டி பிரிவுகளில் சிறப்புத்தகுதி இருந்தால் கூடுதல் நன்மை.   கூடுதல் தகவல்களுக்கு : : http://eci.nic.in/


அச்சுத் தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்பு

இணைய ஊடகம் வந்த பின்னர் அச்சு ஊடகத் துக்கு எதிர்காலம் இல்லை என்று சொல்லப்பட்ட காலம் உண்டு. ஆனால் உலகம் முழுவதும் இணைய ஊடகம் பரவிய பின்னரும் அச்சு ஊடகம் பலம் வாய்ந்ததாகவே உள்ளது.

அமெரிக்காவில் நீல்சன் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வின் அடிப்படையில், ஒரு பிராந்தியத்தில் அச்சுப் பத்திரிக்கைச் செய்தியை 28 சதவீதம் பேர் படிக்கிறார்கள் எனில் அதே செய்தியை இணையம் வழியாக 10 சதவீதம் பேர் மட்டுமே படிக்கிறார்கள். இணையம் மற்றும் முகநூல் மூலம் ஒரு செய்தித் தளத்துக்கு வருபவர்கள் ஐந்து நிமிடங்களுக்கு மேல் அங்கே தங்கியிருப்பதில்லை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இணையம் வழியாகத் தரப்படும் விளம்பரங்கள் வாசகர்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, அச்சிதழ் விளம்பரங்களே வாசகர்களிடம் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. டைப்செட்டிங், பக்க வடிவமைப்பு, பேஸ்ட்டிங், ப்ளேட் மேக்கிங், இமேஜ் செட்டிங், பிரிண்டிங், பைண்டிங் என அச்சுத் தொழில் நுட்பத்தின் அனைத்துப் படிநிலைகளிலும் குறிப் பிட்ட தொழில்திறன்கள் தேவையாக உள்ளன.

அய்.டி.அய். என்றழைக்கப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் ப்ளேட் மேக்கிங், ஆப்செட் மெஷின் ஆபரேஷன், ஸ்கிரீன் பிரிண்டிங், கேமரா ஆபரேஷன், டிடிபி, புக் பைண்டிங் ஆகியவற்றில் சான்றிதழ் பயிற்சி தரப்படுகிறது. இதில் ஏட்டுப் படிப்பு மட்டுமின்றி நேரடி செய்முறைப் பயிற்சியும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை வேகமாக வளர்ந்துவரும் தொழில் துறைகளில் ஒன்று அச்சுத் தொழில். இந்தியாவின் அனைத்து மாநகரங்களிலும் நூற்றுக்கணக்கான தரமான அச்சுக்கூடங்கள் இன்னமும் சுறுசுறுப்பாக இயங்கிவருகின்றன.

அரசுத் துறைகளில் பெரும்பாலானவை அச்சு மற்றும் பதிப்புச் செயல்பாட்டுக்காகத் தனிப்பிரிவையே வைத்துள்ளன. இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகம், இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம், இந்திய தத்துவ ஆய்வுக் கழகம், இந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகம், சாகித்ய அகாடமி, என்.சி.இ.ஆர்.டி., பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கல்வித் துறை ஆகி யவை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பிரசுரங் களையும் நூல்களையும் வெளியிடுகின்றன.

அச்சுத் தொழில்நுட்பத் தைக் கல்வியாகப் பயின்றவர் களுக்கு விளம்பர நிறுவனங்கள், பத்திரிகை நிறுவனங்கள், அரசு அச்சகங்கள், அச்சு இயந்திரத் தொழிற்சாலைகள், பேக்கேஜிங் தொழிற்கூடங்கள், புத்தகங்கள் அச்சிடும் நிறுவனங்களில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகள் சார்ந்து அச்சுத் தேவைகள் அதிகரிக்கும் நிலையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அச்சு தொழில்நுட்பவியலாளர் களுக்கான வாய்ப்புகளும் தேவைகளும் அதிக மாகவே இருக்கும்.

அச்சுத் தொழில்நுட்பம் கைவரப்பெற்றவர் களுக்குப் பல துறைகளில் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வெளியீட்டு நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகளின் அச்சுக்கூடங்கள், ஆப்செட், ப்ளெக்சோகிராஃபி மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிற்கூடங்கள் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியலாம். நாளிதழ், பத்திரிகை ஆகியவற்றில் அச்சடிக்கப்படும் தகவல்களின் எழுத்துரு, நிறச் சேர்க்கை, பக்க அளவு உள்ளிட்ட பலவற்றைத் தீர்மானிக்கும் துறையான பிரீ-பிரஸ் சொல்யூஷனிலும் வேலை கிடைக்கும்.

எங்கே படிக்கலாம்?
இளங்கலை பிரிண்டிங் டெக்னாலஜி

# அண்ணா பல்கலைக்கழகம், காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கிண்டி, சென்னை

# அவிநாசிலிங்கம் பெண்கள் பல்கலைக்கழகம், கோவை
டிப்ளமோ இன் பிரிண்டிங் டெக்னாலஜி

# இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிரிண்டிங் டெக்னாலஜி, சென்னை

# இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிண்டிங் டெக்னாலஜி, சிவகாசி

# சலேஷியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிராஃபிக் ஆர்ட்ஸ், சென்னை

சமீபகாலமாகப் பொறியியல், மருத்துவப் படிப்புக்கு எதிரான குரல் வலுத்துள்ளது. காரணம் அங்குமிங்கும் கண்டபடி முளைத்திருக்கும் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள். ஆனால் மாணவர்களின் மதிப் பெண்ணுக்கும் திறமைக்கும் மதிப்பளித்துக் கல்வி அளிக்கும் அரசுக் கல்லூரிகள் எப்போதுமே மங்காத புகழோடுதான் இருக்கின்றன. உலகத் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்று அவற்றின் தரத் தையும் நிரூபித்து வருகின் றன. அதனால் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி கையேடு கவனம்பெறுகிறது. இதில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய பட்டம், பட்டயம், சான்றிதழ் படிப்புகள், தொழில் பயிற்சிகள், கல்வி உதவித் தொகை விவரங்கள், அரசு உதவிகள் என ஏராளமான தகவல்கள் அடங்கியுள்ளன. முதல் கட்டமாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொறியியல், மருத்துவம் படிப்புகள் தொடர்பான தகவல்களை இங்கு காண்போம்.

பொறியியல் பட்டப் படிப்புகள்

அகில இந்திய அளவில் பி.இ., பி.டெக்., படிக்க விரும்பும் மாணவர்களின் முதன்மை விருப்பம், அய்.அய்.டி., என்.அய்.டி. நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதாகவே உள்ளது. சென்னை, மும்பை, டெல்லி, குவாஹாட்டி, கான்பூர், கரக்பூர், ரூர்கி, வாரணாசி, தன்பாத் உள்ளிட்ட இடங்களில் அமைந்திருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனங்களில் 4 ஆண்டு பி.டெக் பயிற்றுவிக்கப்படுகிறது.

இதே போல மண்டலம் வாரியாக அமைந்திருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்னும் என்.அய்.டி. நிறுவனங்கள் வாயிலாகவும் சிறப்பான பி.டெக்., கல்வியைப் பெறலாம். இதன் தொடர்ச்சியாக எம்.டெக்., பயிலவும் இதே நிறுவனங்கள் வழி செய்யும். ஜெ.இ.இ. முதன்மை நுழைவுத் தேர்வு வாயிலாக என்.அய்.டி. நிறுவனங்களிலும், ஜெ.இ.இ. அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு வாயிலாக அய்.அய்.டி. நிறுவனங்களிலும் சேர்க்கை அனுமதி பரிசீலிக்கப்படுகிறது. பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் இந்த நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்கலாம்.

அய்.அய்.டி., என்.அய்.டி. நிறுவனங்கள் வரிசையில், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்டு சயின்ஸ் நிறுவனத்தில் (http://www.bits-pilani.ac.in/)  பி.இ., ஹானர்ஸ், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி நிறுவனத்தில் (https://www.iist.ac.in/)  பி.டெக்., ஆகிய பொறியியல் படிப்புகளில் சேரப் பிரத்யேக நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
நுழைவுத் தேர்வு இல்லை

தேசிய அளவிலான அய்.அய்.டி., என்.அய்.டி. நிறுவனங் களுக்கு அடுத்த படியாக பொறியியல் கல்வி பெற விரும்பும் மாணவர்களின் விருப்பம் தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் அல்லது அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பயில்வதாக அமைகிறது.

தற்போதுவரை இக்கல்லூரிகளுக் கான சேர்க்கை முறை நுழைவுத் தேர்வு இன்றி, மதிப்பெண் அடிப்படையிலான மாநிலக் கலந்தாய்வு முறையாகவே நடத்தப்பட்டுவருகிறது. இந்த வகையில் தமிழகத்தின் 537 சுயநிதி கல்லூரிகள் உட்பட, பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேரலாம். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை அடிப் படையாகக் கொண்டவர்கள் மட்டுமன்றி, வொகேஷனல் பாடப் பிரிவு மாணவர்களும் பொறியியல் உயர்கல்வி பெற முடியும்.

நேரடி பொறியியல் பட்டயப் படிப்புகள்

பிளஸ் 2 முடித்தவர்கள் 2 ஆண்டு பாலிடெக்னிக் பட்டயக் கல்வி பெற்று, அதன் அடிப்படையிலும் நேரடியாக 2-ம் ஆண்டு பொறியியல் கல்லூரியில் சேரலாம். பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை அடிப்படை யாகக் கொண்டு பயின்றவர்களும் வொகேஷனல் பாடப் பிரிவு மாணவர்களும் பாலிடெக்னிக்கில் விண்ணப்பிக்கலாம்.

அந்தந்தக் கல்லூரிகளில் மதிப்பெண் அடிப்படையிலான கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ் 2 அல்லது டிப்ளமோ முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., படிப்பு களுக்கு இணை யான  பொறியியல் கல்வித் தகுதியைப் பெறலாம். 6 ஆண்டுகள் தொலை தூரக் கல்வியாக இதனைப் பெற முடியும். வேலைபார்த்துக்கொண்டே படிப்பவர் களுக்கு இது சிறப்பான வாய்ப்பாகும்.

மருத்துவமும் அது சார்ந்த படிப்புகளும்

மருத்துவம் என்றதுமே அனைவரின் கவனத்தையும் பெறுவது எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்பாகும். பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியலுடன் கணிதம், உயிரியியல் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு பயின்றவர்கள், அய்ந்தரை ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரலாம்.

மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர நீட் நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கையானது தற்போது வரை, மருத்துவக் கல்வி இயக்கத்தால் நடத்தப்படும் மாநில அளவிலான கலந்தாய்வு மூலமாக மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 15 சதவீதம் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் 21 அரசு, 26 தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதே போன்று தமிழகத்தில் செயல்படும் ஒரு அரசுக் கல்லூரி உட்பட 25 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து 5 ஆண்டு பி.டி.எஸ். மருத்துவப் பட்டத்தைப் பெறலாம்.

பிற மருத்துவப் படிப்புகள்

ஆங்கில மருத்துவப் படிப்புக்கு இணையாக சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா, நேச்சுரோபதி ஆகிய மாற்று மருத்துவப் படிப்புகளும் வரவேற்பு பெற்று வரு கின்றன.

இந்த அய்ந்தரை ஆண்டுக்கால மருத்துவப் படிப்புகளில் சேர மத்திய அரசுக் கல்லூரிகள் நடத்தும் அகில இந்திய அள விலான பிரத்யேக நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும்.

மாநில அரசு கல்லூரிகளின் சேர்க்கை இந்திய மருத்துவ இயக்ககம் நடத்தும் மாநிலக் கலந்தாய்வின் வாயிலாக இறுதி செய்யப்படுகிறது.

கால்நடை மருத்துவப் படிப்புகள்

மருத்துவப் படிப்புகளில் அடுத்த வாய்ப்பாகக் கால்நடை மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். 5 ஆண்டு பி.வி.எஸ்.சி., பயில, தேசிய அளவில் அனைத் திந்தியப் ப்ரி-வெட்ரினரி டெஸ்ட் என்ற நுழைவுத் தேர்வு அடிப்படையிலும் மாநில அளவில் பொதுக் கலந்தாய்வு அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

செவிலியர் படிப்புகள்

மருத்துவப் படிப்புகளுக்கு அடிப்படையான பிளஸ் 2 பாடப் பிரிவுகளில் பயின்றவர்கள், செவிலியர் பட்டம், பட்டயம் பயிலவும் தகுதி பெறுகிறார்கள். 4 வருடப் பி.எஸ்சி., நர்சிங் பட்டப் படிப்புகளின் சேர்க்கையானது, மத்திய அரசு செவிலியர் கல்லூரிகளில் பிரத்யேகத் தேர்வுகள் வாயிலாகவும், தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்கத்தின் மாநிலக் கலந்தாய்வு வாயிலாகவும் நடைபெறுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கிப் பணி

வங்கிகளின் வங்கி என அழைக்கப் படுவது இந்திய ரிசர்வ் வங்கி. இது இந்தியாவில் உள்ள அனைத்து அரசு, தனியார் வங்கிகளையும் கட்டுப்படுத்தும் மைய வங்கியாக செயல்பட்டுவருகிறது. ரிசர்வ் வங்கிக்குத் தேவைப்படும் பணி யாளர்களும், அதிகாரிகளும் அவ் வங்கியின் தனி தேர்வு வாரியத்தின் மூலமாக போட்டித்தேர்வு வைத்து தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில், தற்போது, குருப் பி அதிகாரி பதவியில் 145 காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேவையான தகுதி

இப்பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டப் படிப்பு ஆகிய மூன்றிலும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற் றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் 50 சதவீத மதிப்பெண் போது மானது. வயது 21 முதல் 30-க் குள் இருக்க வேண்டும். எம்.ஃபில். பட்டதாரிகளாக இருப்பின் 32 வயது வரையும், பி.எச்டி. பட்டதாரிகளாக இருந்தால் 34 வயது வரையும் இருக்கலாம். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறை களின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்குக் கூடுதலாக 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை:  எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் குரூப்-பி அதிகாரி பணிக்கு தேர்வுசெய்யப்படுவர். முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் 2ஆவது கட்ட ஆன்லைன் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

இதில், மொத்தம் 3 தாள்கள். முதலாவது தாளில் பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு அப்ஜெக்டிவ் முறையில் விடையளிக்க வேண்டும். 2ஆவது தாள் ஆங்கில அறிவை சோதிக்கும் வண்ணம் அமைந்திருக்கும். இதற்கு ஆன்லைனில் விரிவாக விடையளிக்க வேண்டும். 3ஆவது தாளில் நிதி மற்றும் மேலாண்மை அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியல்-இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

இறுதியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். முதல் கட்ட ஆன்லைன் தேர்வு ஜுன் 17ஆம் தேதியும், 2ஆவது  கட்ட தேர்வு ஜூலை 6 அல்லது 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது.  மேலும் விவரங்களுக்கு:www.rbi.org.in

பேராசிரியருக்கு தமிழ்ச் செம்மல் விருது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் அரங்க பாரிக்கு தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தமிழ்ச்செம்மல் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

இவர் இலக்கியம், இலக்கணம், கவிதை, கட்டுரை என தமிழின் அனைத்துத் தளங்களிலும், குறிப்பாக பாரதிதாசன் படைப்புகள் குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்தவர். எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவர். பாவேந்தரின் பாவிருந்து, திருக்குறளில் திருப்புமுனை, மலைதந்த முத்து, கண்ணீர் கண்ணீர், காதல் நேரம் உள்ளிட்ட 11 நூல்களை எழுதியுள்ளார்.

இவரது இரண்டு நூல்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பாடநூலாக உள்ளன. 80 நூல்களின் தொகுப்பாசிரியர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 5-6-2015 அன்று ஒரே நாளில் ஒரே மேடையில் 351 தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டும், 12-9-2016 அன்று 430 கவிஞர்கள்-பாடலாசிரியர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பதிப்பித்து வெளியிட்டும் உலக சாதனை நிகழ்த்தியவர்.

இதுவரை, 20 தேசிய பன்னாட்டுக் கருத்தரங்குகளை நடத்தியதோடு, 90 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். விரிவுரையாளர், இணைப் பேராசிரியர், பேராசிரியர் என பல்வேறு பணிநிலைகளில் 18 ஆண்டுகள் கற்பித்தல் பணியிலும், ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

இவரது வழிகாட்டுதலில் 15 பேர் முனைவர் பட்டமும், 67 பேர் இளமுனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.

2016-ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் 125-ஆவது பிறந்தநாள் நிறைவை முன்னிட்டு 125 தமிழறிஞர்களிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று, ‘பாவேந்தர் 125’ என்ற ஆய்வுக் கோவையைப் பதிப்பித்து வெளியிட்டவர். மேலும், இதே ஆண்டில் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழாவையும், பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்றாண்டு விழாவையும் நடத்தி கருத்தரங்க ஆய்வுக்கோவைகளை வெளியிட்டவர்.

மலேசியா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். நல்லாசிரியர் விருது, கருத்தரங்கச் செம்மல் விருது, சிறந்த தமிழறிஞர் விருது எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும், குடியரசுத் தலைவரின் இளம் அறிஞர் விருதையும் ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


வாசிப்பின் சிறகுகள்

வெறும் காகிதங்களும், அச்சிடப்பட்ட எழுத்து களும் நிறைந்து மட்டுமல்ல புத்தகங்கள். ஒருவர் தான் என்னவாக விரும்புகிறாரோ அவ்வாறாகவே அவரை மாற்றும் வல்லமை படைத்தவை அவை.

உலக யுத்தங்களால் ஏற்பட்ட வலிகளையும், வேதனைகளையும் உணர்த்தும் சக்தி அவற்றுக்கு உண்டு. அதேபோல அழகிய நகரங்களையும் புத்த கத்தின் வரிகளின் மூலம் ஒருவரால் ரசிக்க முடியும். இத்தகைய புத்தகங்களின் மதிப்பை உயர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் தேதி உலகப் புத்தகம் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளின் முக்கியத்துவத்தையொட்டி இந்திய மாணவர் சங்கமும் (எஸ்.எஃப்.அய்) அய்.அய்.டி. மாணவர்களும் ஒன்றிணைத்து “சிறகுகள் விரிப் போம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தினர். நடிகை ரோகிணி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். உலகப் புத்தக தினத்தன்று சைதாப்பேட்டை சூர்யா நகரில் உள்ள ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதற்காகப் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடந்த ஒரு மாதமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்த கங்களைச் சேகரித்துள்ளனர்.

ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களுக்கு தேவைப்படும் பாடப் புத்தகம், அகராதி, சிறுகதை தொகுப்பும், தலைவர்கள் குறித்த வரலாற்றுப் புத்தகம், அறிவியல் புத்தகம் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு வழங்கப்பட்டது.

பாடப் புத்தகங்களைத் தாண்டி...

மாணவர்கள் அமைப்பு என்றால் போராட்டம் மட்டும் செய்வார்கள் என்ற நினைப்புதான் மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் எங்கள் சங்கம் சார்பில் பல ஆண்டுகளாகவே மாணவர்களுக்குப் புத்த கங்கள் கொடுப்பது, நடப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்க வாசகர் வட்டம் நடத்துவது என தொடர்ச்சியாக பல ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். பாடப் புத்தகங்களைத் தாண்டி மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அதற்காகக் கிட்டத்தட்ட ஆயிரம் புத்தகங்களை பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்றுள்ளோம்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ற மாதிரி புத்தகங்களைப் பிரித்து வழங்குகிறோம் என்றார் இந்திய மாணவர் சங்க தென் சென்னை மாவட்டச் செயலாளர் நிருபன்.

அய்.அய்.டி.க்கு அருகில் உள்ள சூர்யா நகரில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களில் சிலர் தங்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை வாங்க முடியாத பொருளாதாரச் சூழலில் உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தபோதுதான் மற்றவர்களிடம் இருந்து புத்தகங்களைப் பெற்று அவர்களுக்குக் கொடுக் கலாம் என முடிவெடுத்தோம்.

இந்த முயற்சியில் நானும் என் நண்பர்களும் மாணவர் சங்கத்துடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம். இந்தப் பகுதியில் ஒரு சிறிய நூலகமும் விரைவில் அமைக்கத் திட்டமிட்டுள் ளோம் என்கிறார் அய்.அய்.டி.யில் முனை வர் பட்ட மாணவரான உம்மன். பாடப் புத்தகங்களைத் தாண்டிப் பல விதமானப் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் இளைஞர்களின் உலகம் விரிவடையும். தங்களுடைய இலக்கைக் கண்டடைந்து அடுத்த கட்டத்துக்கு செல்லவும் பார்வையை விசாலப் படுத்தும்.  அத்தகைய வாசிப்பை வசப்படுத்த வேண் டும் என்ற நோக்கத்துடன் மாணவர்களுக்காக மாண வர்களே எடுத்த இந்த முயற்சி கல்வியாளர்கள் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.


விண்ணப்பித்து விட்டீர்களா?
அஞ்சல் துறையில் வேலை

நிறுவனம்: கர்நாடகா போஸ்டல் சர்க்கிள் கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு வேலை: கிராமின் டாக் சேவாக்ஸ், காலியிடங்கள்: 1048, கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு ஈடான படிப்பு வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8-.5-.2017 மேலும் விவரங்களுக்கு www.appost.in/gdsonline/reference.aspx

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் கிளார்க் வேலை

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிரப்பப்பட உள்ள லேயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:   காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.1900.

தகுதி: +2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதிகளுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 23.03.2017 தேதியின் படி 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய  அஞ்சல் முகவரி:  The Section Officer (R-II), 2nd floor, Zakir Husain Khand, NCERT, Sri Aurobindo Marg, New Delhi-110016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ncert.nic.in/announcements/oth_announcements/pdf_files/pwd_vacancy_12_4_17.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 1500 உதவி லைன்மேன் வேலை

பஞ்சாப் அரசு பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎஸ்பிசிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 1500 உதவி லைன்மேன்
பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  மெத்த காலியிடங்கள்: 1500

வயதுவரம்பு: 39க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.6400 - 20200 + தர ஊதியம் ரூ.3400

தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதியுடன் லைன்மேன் பணியில் 2 ஆண்டு அப்பரண்டீஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2017

மேலும் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், வயதுவரம்பு சலுகை பேன்ற முழுமையான விரிவான விளக்கங்கள் அறிய : https://cra289.pspcl.in/adv.pdf
என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பொறியியல் பட்டயப்படிப்புக்கு  அரசு நிறுவனத்தில் அதிகாரி வேலை

நிறுவனம்:     இண்டியா கவர்மென்ட் மின்ட்
(அய்தராபாத் கிளை)

வேலை:     சூப்பர்வைசர் மற்றும் ஜூனியர்
ஆஃபீஸ் அசிஸ்டென்ட் வேலை

காலியிடங்கள்: 60.

இதில் சூப்பர்வைசர் வேலையில் 9, ஜூனியர் ஆஃபிஸ் அசிஸ்டென்ட் வேலையில் 51 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எஞ்சினியரிங் டிப்ளமோ, டிகிரி வயது வரம்பு: 18-30

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.5.17

மேலதிக தகவல்களுக்கு:
http://www.spmcil.com/Interface/Home.aspx

பிளஸ்2 முடித்தவர்களுக்கு சி.ஆர்.பி.எஃப்-ல் வேலை!

நிறுவனம்: சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ்

வேலை: அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் பதவியிலான ஸ்டெனோகிராபர் வேலை

காலியிடங்கள்: 219. இதில் பொதுப்பிரிவினர் 75, ஓ.பி.சி 80, எஸ்.சி 42 மற்றும் எஸ்.டி 22 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: +2 வயது வரம்பு: 18-25

உடற்தகுதி: ஆண்களுக்கு 165 செ.மீ உயரமும், பெண்களுக்கு 155 செ.மீ உயரமும் தேவை. ஆண்களின் மார்பளவு 77 - 82 அங்குலம் இருக்கவேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.4.17

மேலும் தகவல்களுக்கு:www.crpf.gov.in

மெருகேற்றும் விளையாட்டு விடுதிகள்

பி.வி.சிந்துவின் பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியல் முன்னேற்றமும், தொடர் வெற்றியும் உற்சாகமூட்டுகின்றன. அவரைப் போன்றே விளையாட்டில் ஆர்வமுள்ள தம் வீட்டுப் பிள்ளைகளும் ஜொலிக்க வேண்டுமென்பது பல பெற்றோரின் கனவாக இத்தருணத்தில் எழுந்து மறையும். ஆர்வமுள்ள பள்ளி மாணவ மாணவியருக்குப் படிப்போடு கூடிய விளையாட்டுப் பயிற்சி, ஊட்ட உணவு, உபகர ணங்கள் எனச் சகல வசதிகளுடன் உதவ அரசாங்கம் காத்திருக்கிறது. ஆனால் போதிய விழிப்புணர்வு இன்மையால், தமிழகத்தில் பரவலாக இயங்கும் விளையாட்டு விடுதிகள் குறித்த தெளிவு இல்லை.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு எனப் பல்வேறு வசதிகள், பயிற்சிகள் அடங்கிய விளையாட்டு விடுதிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் 28 விளையாட்டு விடுதிகள், 2 சிறப்பு விளையாட்டு விடுதிகள், 5 முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் உள்ளன.

விளையாட்டில் ஆர்வமுள்ள, அடிப்படை உடல் திறனுள்ள மாணவ மாணவியருக்கு அவர்களின் கல்வி சூழலுக்குப் பங்கமின்றித் தரமான பயிற்சிகள் இங்கு அளிக்கப்படுகின்றன. விளையாட்டு நட்சத்திரங்களை உருவாக்க ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான கவனிப்பு, தேசியச் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு என அனைத்தும் அரசு செலவில் இங்கு அளிக்கப்படுகிறது. வசதி படைத்தவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் கிளப்புகளில் கிடைக்கும் வசதிகளுக்கு நிகரான வாய்ப்பும் பயிற்சியும் இங்கு அரசுப் பள்ளியில் படிக்கும் பொருளாதார வசதியற்ற, கிராமப்புற மாணவ மாணவியருக்கு வழங்கப்படுகிறது.

விளையாட்டு விடுதிகள்

தொடக்கத்தில் அந்தந்தப் பகுதியில் பிரபலமாக இருக்கும் விளையாட்டுகளில் ஒரு சிலவற்றை ஊக்கு விக்கும் பொருட்டு, மாவட்டத் தலைநகர்களில் இந்த விளையாட்டு விடுதிகள் தொடங்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளில் இவை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளன. விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத் துறையின் கீழ் செயல்படும் இவற்றில், பள்ளி மாணவ, மாணவியருக்கு எனத் தனித்தனி விளையாட்டு விடுதிகள் உண்டு.

மாணவிகளுக்கானவை ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை, நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன.

பிரத்தியேக வசதிகள், பயிற்சிகள்

தனித்துவ விளையாட்டுப் பயிற்சிகளோடு, ஒட்டு மொத்த உடல் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகளும் இங்குக் கிடைக்கும். உணவுக்காக மட்டுமே பள்ளி மாணவர் ஒருவருக்குத் தினசரி ரூ.250 ஒதுக்கப்படுகிறது. இந்த வசதிகள் அனைத்தையும் விளையாட்டு விடுதியில் தங்கியபடி அருகிலுள்ள பள்ளியில் சேர்ந்து பயின்றவாறு பெறலாம். காலை, மாலை ஓய்வு நேரத்திலும், விடுமுறை தினத்திலுமாகப் பள்ளிப் படிப்புக்கு இடையூறு இன்றி விளையாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் அதற்கெனச் சிறப்பு பயிற்சிகள், போக்குவரத்து, உணவு மற்றும் வழிகாட்டுதல்களையும் செலவின்றிப் பெறலாம்.

விளையாட்டு விடுதி மாணவர்களுக்குத் தினந்தோறும் 2.30 மணி நேரம் துறை சார்ந்த விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. விடுமுறை தினங்களிலும் இவை தொடரும். 4 மாதங்களுக்கு ஒருமுறை விளையாட்டுத் திறன்கள் ஆய்வு செய்யப்படும். வருடாந்திரம் நடை பெறும் உடற்திறன் தேர்வில் போதிய வளர்ச்சி இல்லை என்றால் அவருடைய வாய்ப்பு, திறமையுள்ள மற்றொரு மாணவருக்குச் சென்றுவிடும். வாய்ப்பைத் தவறவிடாத பயன்படுத்திக்கொள்ளும் மாணவ மாணவியருக்குப் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விரும்பிய உயர் கல்வியும் வேலைவாய்ப்பும் உறுதி என்கிறார் திருச்சி அரசு உதவி பெறும் பள்ளியொன்றில் உடற்கல்வி இயக்குநரான முனைவர் பி.சுவாமிநாதன்.

எப்படிச் சேர்வது?

பொதுத்தேர்வுக்கான 10 மற்றும் பிளஸ் 2 தவிர்த்து ஏனைய வகுப்புகளில் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளை இங்குச் சேர்க்கலாம். மாவட்ட மற்றும் மாநில அளவில் என இரண்டு கட்டங்களாகத் தேர்வு நடைபெறும். முதற்கட்ட உடல் தகுதித் தேர்வு மாவட்ட அளவில் நடைபெறும்.

# உயரமான மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

# தேர்வானவர்கள் மாநில அளவிலான தேர்வை எதிர்கொள்வார்கள்.

# இறுதியில் கலந்தாய்வின் வாயிலாக, விளையாட்டு விடுதி சேர்க்கை உறுதி செய்யப்படும்.

# சேர்க்கை விண்ணப்பத்தினை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் :: http://www.sdat.tn.gov.in/
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இத்தளத்தில் தமிழகத்தில் உள்ள விளையாட்டு விடுதிகள், அங்குப் பயிற்சியளிக்கப்படும் விளையாட்டுகள், தொடர்பு எண்கள் உட்படப் பல்வேறு அவசியத் தகவல்களையும் பெறலாம்.

நழுவ விடக் கூடாத வாய்ப்பு

அஞ்சல் வாயிலாகவோ அல்லது நேரிலோ மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் விண்ணப் பங்களைச் சமர்ப்பிக்கலாம். மாவட்ட அளவிலான தேர்வு மே 2 முதல் 4 வரையிலான நாட்களில் நடைபெறும். முடிவில் கலந்தாய்வுக்குத் தகுதி பெறுவோரின் பட்டியல் விளையாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவல கத்திலும் பார்வைக்கு வைக்கப்படும்.

பட்டதாரிகளுக்கு பரோடா வங்கியில் அதிகாரி பணி!

நிறுவனம்: பேங்க் ஆஃப் பரோடா வேலை:

ப்ரோபேஷனரி ஆஃபிசர்

காலியிடங்கள்: 400. இதில் பொதுப்பிரிவினர் 202, ஓ.பி.சி 108, எஸ்.சி 60 மற்றும் எஸ்.டி 30

காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிகிரி

வயது வரம்பு: 20-28

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.5.17

மேலதிக தகவல்கள்:

http://www.bankofbaroda.co.in/

இர்கான் நிறுவனத்தில்
காலிப் பணியிடங்கள்

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2017ஆம் ஆண்டிற்கான 112 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Additional General Manager (Civil) - 07

2.  Joint General Manager (Civil) - 10

3. Deputy General Manager (Civil) - 14

4. Manager (Civil) - 13

5. Deputy Manager (Civil) - 17

6. Assistant Manager (Civil) - 12

7. Assistant Engineer (Civil) - 09

8. Junior Engineer (Civil) - 21

9. Deputy Manager/SHE - 02

10. Junior Engineer/SHE - 04

11. Additional General Manager (Electrical) - 01

12. Joint General Manager (Electrical) - 01

13. Joint General Manager (Mechanical) - 01

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2017.

ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 22.04.2017.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ircon.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வங்கி வேலையை பெறுவதற்கு
வளர்க்க வேண்டிய திறமைகள்

அரசு வேலையை விரும்புபவர்களில், வங்கிப் பணியில் சேர்வதற்கே அனேகம் பேர் ஆர்வம் காட்டுவார்கள். ஆண்டுதோறும் பல ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப் படுவதால் வங்கித் தேர்வுகள், திறமை படைத்தவர்களுக்கான சிறந்த வரமாக விளங்குகின்றன. வங்கித் தேர்வுகள் கொஞ்சம் சவாலானதுதான். பொது அறிவு, நுண்ணறிவுத்திறன் கேள்வி களுடன், ஆங்கில அறிவு, பொருளாதாரம், வங்கித்துறை சார்ந்த கேள்விகளும் தேர்வு எழுதுபவர்களுக்கு சவாலை ஏற்படுத்து கின்றன. தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு கடினமாக உழைத்தால்தான் வங்கிப் பணிகளில் சேர்வது சாத்தியமாகும்.

அறிவிப்பு வரும் வரை காத்திருக்காமல் எப்போதும் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு திறமையை மெருகேற்றி வந்தால் எளிதில் வெற்றி பெறலாம். முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுக்கு தனித்தனியே தயாராக வேண்டியதில்லை.

போட்டியாளர்கள் எண்ணிக்கையை குறைத்து, திறமை யானவர்களை வடிகட்டத்தான் 2 தேர்வுகள் நடக்கிறது என்பதால் நன்றாகப் படித்தாலே 2 தேர்வுகளிலும்

வெற்றி பெறலாம்.

ரீசனிங் பயிற்சி: ரீசனிங் மற்றும் ஆப்டிடியூட் சார்ந்து 50 கேள்விகள் இடம் பெறும். உங்களின் பகுத்தறியும் திறனை புடம்போட்டு சோதிக்கும் தேர்வு என்பதால் ஆழ்ந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ரீசனிங் பகுதிகளுக்கு எளிதில் விடையளிக்க முடியும். உதாரணமாக ஒரு கேள்வியில் கொடுக்கப்பட்டிருக்கும் படம் அல்லது வடிவத்தின் அடுத்த நிலை எப்படியிருக்கும் என்றோ அல்லது பொருத்தமான அடுத்தபடம் எது என்றோ நாம் தேர்ந்தெடுக்க வேண்டி யிருக்கும். இதற்கு துரிதமாக விடைகாண புதிர்கள், மூளை விளையாட்டுகளில் பயிற்சி பெறுவது அவசியம்.

கணித பயிற்சி: ஆப்டிடியூட் வினாக்களில் கணிதப் புலமை உள்ளவர்கள் எளிதாக மதிப்பெண் பெற்றுவிடுவார்கள். 12-ம் வகுப்பு வரை கணிதம் படித்திருந்தால் இந்தப்பகுதி சுலபமாக இருக்கும். பெரும்பாலான கேள்விகள் அரித்மெடிக், ஜியாமட்ரி சார்ந்து கேட்கப்படும். கணித சூத்திரங்களை நினைவு வைத்து பயிற்சி செய்தால் எளிதாக விடைகாண முடியும். தீவிரமான பயிற்சியின் மூலம் இதை சாத்தியமாக்கலாம்.
ஆங்கிலப் பயிற்சி: ஆங்கில மொழி தொடர்பாக 30 கேள்விகள் கேட்கப்படுகின்றன. கொடுக்கப்பட்ட ஆங்கிலப் பத்தியிலிருந்து சரியான விடைகளைத் தேர்வு செய்வது, ஆங்கில வாக்கியங்களில் உள்ள தவறுகளை கண்டுபிடிப்பது, வாக்கியங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற வகை வினாக்கள் இப்பகுதியில் இடம் பெறும். அடிப்படை ஆங்கில இலக்கணம், வாக்கிய அமைப்பு, புரிந்து கொள்ளும் திறன் ஆகிய திறமைகளை வளர்ப்பது மதிப்பெண்களை அள்ள உதவி புரியும். வார்த்தை வளத்தை அதிகரித்துக் கொள்ள ஆங்கில செய்தித்தாள்கள், பத்திரிகைகளை தொடர்ந்து வாசித்து பயிற்சி பெற வேண்டும்.

நிதித்துறை அறிவு: வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த கேள்விகள் 40 எண்ணிக்கையில் இடம் பெறுகிறது. இந்தியப் பொருளாதாரம், இந்திய வங்கித்துறை, நிதி அமைப்பு, நிறுவன நடைமுறைகள், அரசு திட்டங்கள் பற்றி ஆழமான தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வது இந்த பகுதிக்கு விடையளிக்க உதவியாக இருக்கும். அன்றாட செய்தித்தாள்கள், நிதி மற்றும் வங்கிப் பணிகள் சார்ந்த பருவ இதழ்களை தவறாமல் படித்து வந்தால் இவை பற்றிய தகவல்களை தொகுத்து திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.

கணினி திறமை: கணினி அறிவு சார்ந்து 20 கேள்விகள் கேட்கப்படும்.

வங்கித்துறைக்கு கணினி அறிவு மற்றும் திறமை முக்கியமானதாகும். கணினி சார்ந்த அடிப்படை அறிவு அவசியம். தவிர அடிப்படை கணினித் தொழில்நுட்பம், மென்பொருள், வன்பொருள், இணையதளம், நவீன நுட்பங்கள் மற்றும் தகவல்தொழில்நுட்பம் பற்றிய பரந்த அறிவுத்திறனும் அதிக மதிப்பெண் பெற உதவியாக இருக்கும்.

நேர்காணல்: எழுத்து தேர்வுக்கு அடுத்தகட்டம் நேர்காணல். புரபெசனரி அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரி பணிகளுக்கு நேர்காணல் தேர்வு நடத்தப்படுகிறது. நேர்காணலில் இந்த கேள்விகளைத்தான் கேட்பார்கள் என்று குறிப்பிட முடியாது. ஆனாலும் பொருளாதாரம், வங்கித்துறை சார்ந்த அடிப்படைகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள், பரபரப்பு நிகழ்வுகள் பற்றிய கேள்விகள் இடம் பெறும் என்று யூகிக்கலாம். சொந்த விவரங்கள், வேலை பற்றிய அறிவு சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும். வங்கி வேலைக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை நிரூபிக்கும் தேர்வாகவே நேர்காணல் இருப்பதால் நன்கு பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.

திரட்டும் திறன்: தேர்வுகளுக்குத் தயாராகும்போது பலதுறை தகவல்களையும் திரட்டிப் படிப்பது அவசியம். பள்ளிப் பாடப் புத்தகங்கள், இயர் புக்குகள், பொது அறிவு தொகுப்பு புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். தினசரி பேப்பர்களை படித்து குறிப்பு எடுத்துக்கொள்வதும் அவசியம். அதில் இடம் பெறும் மாதிரி வினாப்பட்டியலையும் தொகுத்து வைத்துக் கொள்ளலாம்.

 

வேலூர் முதன்மை
மாவட்ட நீதிமன்றத்தில் பணியிடங்கள்

வேலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியிடங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை தற்காலிக மாக தகுதியானவர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 63

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.

பணி: கணினி இயக்குபவர் (தற்காலிகம்) - 05

பணி: தட்டச்சர் (முற்றிலும் தற்காலிகம்) - 13

பணி: இரவு காவலர் - 20

பணி: முழு நேர பணியாளர் (மசால்ஜி) - 25

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.04.2017

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், வேலூர் - 632 009

அனைத்து அறிக்கைகள் அழைப்புகள் தகவல் பரிமாற்றங்களும் ecourts.gov.in/vellore என்ற இணையதள வலைத்தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://ecourts.gov.in/sites/default/files/Recruitment%20Notification%202017.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Banner
Banner