இளைஞர்

தமிழக அரசின் வேலைவாய்ப்புப் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் (அய்.டி.அய்.) முதல்வர், உதவி இயக்குநர் பணியில் 9 காலியிடங்களும், தொழில்துறையில் உதவி இன்ஜினீயர் பதவியில் 32 காலியிடங்களும் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

தேவையான தகுதி: முதல்வர், உதவி இயக்குநர் பதவி: ஏதேனும் ஒரு பொறியியல் பாடப் பிரிவில் பொறியியல் பட்டம்.

பணி அனுபவம்: தொழிற்சாலை அல்லது பணிமனையில் 3 ஆண்டுகள்.

வயது வரம்பு: 24 முதல் 30 வரை. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி.) வயது வரம்பு கிடையாது.

உதவி இன்ஜினீயர் பதவி: சிவில் இன்ஜினீயரிங், ஆர்க்கிடெக்சர் பாடங்கள் நீங்கலாக இதர பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம்.

பணி அனுபவம்: தொழிற்சாலை அல்லது பணிமனையில் குறைந்தபட்சம் 6 மாதம்.

வயது வரம்பு: 18 முதல் 35 வயதுவரை. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது

தேர்வு முறை: மேற்கண்ட இரு பதவிகளுக்கும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்வுசெய்யப் படுவார்கள். எழுத்துத் தேர்வில் 2 தாள்கள் இருக்கும். முதல் தாள் பொறியியல் தொடர்பானது. 2ஆவது தாள் பொது அறிவு சம்பந்தப்பட்டது. தகுதியுள்ள பொறியியல் பட்டதாரிகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தைப் ஷ்ஷ்ஷ்.tஸீஜீsநீ.ரீஷீஸ்.வீஸீ பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு மையம், தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட இதர விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24 டிசம்பர் 2018

ஏழை கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் முயற்சியாக நீட் தேர்வு பயிற்சிக்கான செல்லிடப்பேசி செயலியையும் உருவாக்கியிருக்கிறார் ஒரு மாணவி. அவர் இனியாள் கண்ணன்.

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், டில்லி காவல் துறையின் போலீஸ் பயிற்சிப் பிரிவின் இணை ஆணையருமான கண்ணன் ஜெகதீசனின் மூத்த மகள்தான் இனியாள் கண்ணன்.  கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவையும், “நீட்’டையும் இணைக்கும் வகையில் “அனீடா’ என்ற பெயரில் ஒரு செயலியை இனியாள் உருவாக்கி இருக்கிறார். டில்லியில் சன்ஸ் கிருதி பள்ளியில் 12ஆம் வகுப்பில் கணினி அறிவியல் பாடப் பிரிவை எடுத்துப் படிக்கும் இம் மாணவி, இச்செயலியை உருவாக்கி இருப்பதைப் பற்றி நம்மிடம் கூறியதாவது:

“தந்தையின் பணியிட மாற்றல் காரணமாக கடந்த ஆண்டு ஜூலையில் புதுச்சேரியில் இருந்து டில்லி வந்தோம். அப்போது, மாணவி அனிதா நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி அதிர்ச்சி அளித்தது. மாணவி அனிதா பிளஸ் டூவில் 1,200 மதிப்பெண்களுக்கு 1,176 மதிப்பெண்கள் எடுத்த நிலையிலும் நீட் தேர்வில் தேர்ச்சியடை யாததால் மருத்துவப் படிப்பில் சேரமுடியவில்லை என்பது மிகவும் வேதனையை அளித்தது. அப்போதுதான், நீட் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்குப் பயன்படும் ஒரு செயலியை உருவாக்கும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

தற்போது செல்லிடப்பேசிகள் அனைவரிடமும் இருப்பதால், அந்த செயலி மூலம் மாணவர்கள் எளிதாக நீட் தேர்வை எதிர்கொள்ள, தங்களைத் தயார்படுத்திக் கொண்டு பயனடைய முடியும் என எண்ணினேன். இதையடுத்து, செயலியை உருவாக்குவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டேன். இதற்கு ஆறு மாதங்கள் ஆகின.

இந்த செயலியில் சில ஆண்டுகளுக்கான 180 கேள்வித்தாள்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கான விடைகளும் தரப்பட்டுள்ளன. இதை நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயிற்சி செய்தால் தேர்வு குறித்து எளிதாக அறிந்துகொள்ள முடியும். கேள்விக்கான விடையை அளித்து நாம் நம்மையே மதிப்பீடு செய்து கொள்ளலாம்.

அனாலிசிஸ் கிராஃப் மூலம் எந்த பாடத்தில் நாம் வலுவாக இருக்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இது முற்றிலும் கிராமப்புற மாண வர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட் டுள்ளது. எவ்வித கட்டணமும் இல்லாத இந்த செயலி, ஒரு மாதம் முன்புதான் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அதற்குள் 5 ஆயிரம் பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்றுவது மிக மிகச் சிரமமான வேலை. ஓடுகின்ற ஆற்றில் ஏதாவது ஓரிடத்தில் நீரில் “சுழி’ இருக்கும்.  அந்த இடத்தில் ஒருவர் சிக்கிக் கொண்டால் - அவர் எவ்வளவுதான் நீச்சல் தெரிந்தவராக இருந்தாலும் - நீரினுள் மூழ் கடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படுவார்.  கடலிலோ  சொல்லவே வேண்டியதில்லை.  அலைகள், கடலின் அடியில் இருக்கும் உயிரி னங்கள் என கடலில் மூழ்கியவரைக் காப் பாற்றுவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன.  எனவே மூழ்கியவரைக் காப்பாற்றுவதே  பெரும்பாடாகிவிடும்.  இம்மாதிரியான சிக்கல் களை எதிர்கொள்ளும்விதமாக நீரில் மூழ்கிய வரைக் காப்பாற்றும் ட்ரோன்     ஒன்றை  உருவாக்கியுள்ளார்கள் விசாகபட்டி னத்தைச் சேர்ந்த  சைஃப் ஆட்டோமேஷன்  நிறு வனத்தினர்.

இதை உருவாக்கிய  அலியாஸ்கர்  ஜெர் மனி நாட்டின்  சீஜென் பல்கலைக் கழகத்தில் மெக்கட்ரானிக்ஸ் பிரிவில் முது கலைப் பட்டப்படிப்பு முடித்தவர். இவர் தனது தந்தை யுடனும், சகோதரருடனும் இணைந்து  இந்த ட்ரோன் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வெற்றிகரமாக அதை உருவாக்கியிருக்கிறார்.

விசாகபட்டினம் கடல் பகுதியில் பலர் அடிக்கடி கடலில் மூழ்கிவிடுவதை அறிந்த அலியாஸ்கர்,   அதைத் தடுக்க தனது கல்வி யறிவு பயன்பட வேண்டும் என்று விரும் பினார்.    நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற ஒரு ட்ரோனை உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியுள்ளது. அதனால் 2017 ஆம் ஆண்டு ட்ரோனை உருவாக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்.

இந்த ட்ரோன் ரிமோட் மூலம் இயக்கப்பட வேண்டும் என்பதால்,  அது தொடர்பான அறிவுமிக்கவர்களைப் பணியில் அமர்த்தி,  ட்ரோனின் வடிவம், அதன் அளவு,  எடை உட்பட பலவிதமான சிக்கலான பிரச்சி னைகளுக்கு முதலில் தீர்வு கண்டிருக்கிறார் அவர்.

கடல் கொந்தளிப்பு, புயல், மழை போன்ற காலங்களில் எந்த  எலக்ட்ரானிக் சிக்னலும் கிடைக்காமல் போய்விடும் என்பதால், இந்த ட்ரோன் இண்டர்நெட்டைச் சார்ந்து செயல் படாமல் உருவாக்கப்பட்டுள்ளது.  ரேடியோ அதிர்வலையைக் கொண்டு செயல்படுமாறு இந்த ட்ரோனை தயாரித்திருக்கிறார்கள்.

 

கப்பலிலோ, படகிலோ சென்று கொண்டு இருக்கும்போது  ஒருவர் கடலில் தவறி விழுந்துவிட்டால் அவரை மீட்பதற்காக  கப்பலில், படகில் செல்பவர்கள் யாரும் கடலில் குதிக்க வேண்டியதில்லை.  இந்த ட்ரோனை கடலில் வீசி எறிந்து,  ரிமோட் மூலம் இயக்க வேண்டும்.

அவ்வாறு தூக்கியெறியப்பட்ட  ட்ரோன்  ஒரு நொடிக்கு 14 மீட்டர் வேகத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவரை நோக்கிச்  செல்லும்.  மனிதர்கள் இந்த வேகத்தில் நீந்திச் சென்று மூழ்கிக் கொண்டிருக்கும் மனிதரை மீட்க முடியாது.     விரைவாகச் செல்லும் ட்ரோனைப் பிடித்துக் கொண்டு மூழ்கிக் கொண்டிருக்கும் நபர் மீண்டு விடலாம்.

மூழ்கிக் கொண்டிருக்கும் ஒருவரை நீச்சல் தெரிந்த ஒருவர் மீட்கச் செல்லும்போது, மூழ்கிக் கொண்டிருப்பவர் உயிர் பயத்தில் மீட்க வந்தவரின் கைகளையோ, கால் களையோ பிடித்துக் கொண்டால்,  மீட்கச் சென்றவர் நீந்த முடியாமல் தானும் நீரில் மூழ்கிவிடும் அபாயம் ஏற்படுவதுண்டு.  ஆனால் இந்த ட்ரோனைக் கொண்டு மீட்கும் போது அந்தப் பிரச்சினை இல்லை.

இந்த ட்ரோனை அருகிலிருந்துதான் இயக்க முடியும் என்பதில்லை.   குறைந்தபட்சம் 3 கி.மீ.  தொலைவில் இருந்தும் அதிகபட்சம்10 கி.மீ. தொலைவில் இருந்தும் இயக்க முடியும்.    எனவே ட்ரோனை இயக்குபவர் ஆபத்தான பகுதிகளிலிருந்து தொலைவில் இருந்தே  இதை  இயக்க முடியும்.

பேட்டரியினால் இயங்கக் கூடிய இந்த ட்ரோனை  இரண்டு மணிநேரத்தில் சார்ஜ் செய்துவிடலாம்.

குறைந்தபட்சம் முக்கால் மணிநேரம் பேட்டரி டவுன் ஆகாமல் இந்த ட்ரோன்  இயங்கும்.  இதில் கேமரா,  உட்பட தேவையான பல கருவிகளையும் இணைத்துக் கொள் ளலாம்.

மூழ்கிக் கொண்டிருப்பவரை மீட்கும் போது ஏதேனும் பிரச்சினை என்றால் தானே முடிவெடுத்து மீட்கும் வகையில் இந்த ட்ரோன் உருவாக்கப்பட்டுள்ளது.

12 கிலோ எடையுள்ள இந்த ட்ரோனைத் தூக்கிச் செல்வது,  வேறு இடங்களுக்குக் கொண்டு  செல்வது, கையாள்வது மிக எளிது.

“நிறைய ஏரிகளும், அணைகளும், நீர்நிலைகளும் அதிகமாக உள்ள நம்நாட்டில் இந்த ட்ரோனின் தேவை அதிகமாகவே இருக் கிறது’’ என்கிறார்  இதன் தயாரிப்பாளர் அலி யாஸ்கர்.

கடல் சார்ந்த பல்வேறு தொழில் நுட்பங்களை அறிய ஓஷன் (பெருங்கடல்) பொறியியல் படிக்க வேண்டும்.  அது தொடர்புடைய வேலை வாய்ப்பு களைப் பெற அந்த படிப்பு  உதவியாக இருக்கும்.

கடல் சார் தொழில்நுட்பங்கள் படித்தாலே உடனடியாக வேலை வாய்ப்பும், நல்ல சம்பளமும் கிடைப் பது உறுதி.     கடல் சார்ந்த கட்டு மானங்கள், கப்பல் கட்டுமானங்கள், தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்கள் குறித்தும் அறிய ஓஷன் பொறியியல் படிக்கலாம்.  கடலில் பயன்படுத்தப் படும் வாகனங்களின் தொழில் நுட்பங்கள் அனைத்தும் ஓஷன் என்ஜினியரிங் படிப்பில் கற்றுத் தரப்படுகின்றது.

ஓசியன் பொறியியல் படிப்பு நடத்தும் கல்வி நிறுவனம் :http://www.doe.iitm.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பெரிதும் ‘பெல்’ என்ற பெயராலேயே அறியப்படுகிறது. இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ் தேவைகளுக்காக இந்த நிறுவனம் முதலில் நிறுவப்பட்டாலும் பின் நாட்களில் அதன் சேவைகள் விரிவு படுத்தப்பட்டு தற்போது இத்துறையில் பல்வேறு அம்சங்களுக் காகவும் சர்வ தேச அளவில் அறியப்படும் நிறுவனமாக மாறியுள்ளது. இந்த நிறுவனத்தின் சென்னை மய்யத்தில் காலியாக இருக்கும் 16 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 8, மெக்கானிக்கலில் 4, கம்ப்யூட்டர் சயின்ஸில் 2, எலக்ட்ரிகலில் 1, சிவிலில் 1ம் சேர்த்து மொத்தம் 16 இடங்கள் உள்ளன.

வயது : 1.11.1993க்குப் பின்னர் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப் பிக்க முடியும்.

கல்வித் தகுதி : தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நாள் : 2018 டிச., 12.

விபரங்களுக்கு : http://bel-india.in/Documentviews.aspx?fileName=CE-Web-ad-English-201118.pdf

Banner
Banner