இளைஞர்

மத்திய அரசில் 8300 பணியிடங்கள்:
விண்ணப்பிக்க 30ஆம் தேதி கடைசி

மத்திய அரசில் காலியாக இருக்கும் 8300 பல் செயல் உதவியாளர் பணியிடங்களுக்கு ஜன. 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பல் செயல் உதவியாளர் பணிக்கு 8300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18 முதல் 25 வயது நிரம்பிய 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது சலுகை அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.

இப்பணிக்கான எழுத்துத் தேர்வில் 2 தாள்கள் உண்டு. இப்பணிக்கு இணையதளம் மூலம் ஜன. 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த விபரங்களை : http://ssconline.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விண்ணப்பம் செய்தவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வில் வெற்றி பெற இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான அத்தாட்சி நகல், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, மார்பளவுள்ள 2  புகைப்படங்கள் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.


பழுது நீக்க பயிற்சி!

இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, நான்கு சக்கர வாகனங்களையும் அதிக அளவுக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

உலக நாடுகளிலேயே மிகப்பெரிய துறையாக இருப்பது இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பு துறையாகும்.   இத்தகைய சூழ்நிலையில் நாடு முழுவதும் வாகன பழுதுகளை நீக்கவும், சர்வீஸ் செய்து தரவும் போதுமான மெக்கானிக்குகள் இல்லை.  வாகனங்களின் விற்பனை செய்யும் நிறுவனங்களுடைய சர்வீஸ் மய்யத்திற்கு சென்றுதான் பழுதை நீக்க வேண்டியிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சி முடித்தவர்களுக்கு தற்போது அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன.    ஆட்டோமொபைல் பயிற்சி வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன.  இப்பயிற்சி பெற விரும்புபவர்கள் அந்த நிறுவனங்களை அணுகி தகவல் பெறலாம். பயிற்சி வழங்கும் சில நிறுவனங்கள்:

Automotive Research Association of India - https:araiindia.com,  SGS INDIA - http:www.sgsgroup.in, Toyota india - http:www.toyotabharat.com / toyota-in-india / ttep

தமிழ்நாடு காவல்துறையில் காவலர்கள் பணியிடங்கள்
விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு!

இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை-ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை-ஆண்), இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் (ஆண்) பதவிகளுக்கான 15,711 பணி யிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியக் குடியுரிமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொதுத் தேர்வு-2017 தேர்வு குறியீட்டு எண், 1 விளம்பர எண், 117
காவல்துறை:

1. இரண்டாம் நிலை (தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பொது ஆண்கள் - 4569, பெண்கள் - 46

2. இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை) பொது (ஆண்கள்) - 4627, பெண்கள் -3 3941
சிறைத்துறை:

இரண்டாம் நிலை சிறைக் காவலர் பொது ஆண்கள் - 976, பெண்கள் - 39+1
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை:
தீயணைப்போர் - 1512

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 24க்குள் இருக்க வேண்டும்.

உடற்தகுதி: உயரம் 170 செ.மீட்டர், மார்பளவு - சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ.மீட்டரும், மூச்சடக்கிய நிலையில் குறைந்தபட்சம் 5 செ.மீட்டர் மார்பு விரிவாக்கம் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.30. இதனை தெரிவு செய்யப்பட்டுள்ள 284 அஞ்சல் நிலையங்களில் செலுத்தி, விண்ணப்பத்தை பெற்றுக்கெள்ளலாம்.

தேர்வுக் கட்டணம்: ரூ.135. இதனை அஞ்சலகத்தில் செலுத்தி, அதற்கான இரசீதைப் பெற்று, விவரங்கள் நிரப்பிய  விண்ணப்பத்தில் உரிய இடத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.02.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.05.2017 அன்று காலை 9 மணிக்கு

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnusrb.tn.gov.in
என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்


“அரசு மாணவர் விடுதிகளில் சமையலர் பணியிடங்கள்”

கன்னியா குமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத் துறை விடுதிகளில் 9 ஆண் சமையலர்கள், 6 பெண் சமையலர்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவின் மூலமாக காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வைத்து பிப். 10ஆம் தேதி காலை 10 மணியளவில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க, 1.7.2016 அன்று 18 வயது முதல் 35 வயதுக்குள்ளும், தமிழில் எழுதப் படிக் கவும்,

சமையல் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கும், விண்ணப்பப்படிவங் களை  மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம் அல்லதுw‌w‌w.‌ka‌n‌y​a‌k‌u‌m​a‌r‌i.‌n‌ic.i‌n-ல்   பதிவிறக்கம் செய்யவும், இணையத்தை பார்க்கவும்.

ரயில்வேயில் மென்பொருள்
பொறியாளர் பணியிடங்கள்

மத்திய ரயில்வே வாரியத்தின் கீழ் செயல்படும் ரயில்வே தகவல் அமைப்பு மய்யத்தில்  ஜூனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் ஜூனியர் நெட்வொர்க் இன்ஜினியர் பிரிவில் காலியாக உள்ள 54 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளின்படி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு நிரப்பப்படுகிறது.

பிரிவுகள் : ஜூனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியர் - 40
ஜூனியர் நெட்வொர்க் இன்ஜினியர்  - 14

வயது : விண்ணப்பதாரர் தற்போது 22 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஜூனியர் சாப்ட்வேர் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்ப வர்கள் பி.எஸ்சி., கணினி அறிவியல் அல்லது பி.சி.ஏ., அல்லது சி.எஸ். பிரிவில் மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். தொலைதூர படிப்புகளின் மூலம் மேற்கண்ட படிப்பை முடித்தவர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப் பிக்கலாம்.

ஜூனியர் நெட்வொர்க் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப் பவர்கள் மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பை எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பிரிவுகளில் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : சென்னை உள்ளிட்ட பல்வேறு மய்யங்களில் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/-அய் பாரத ஸ்டேட் வங்கியில் சி.ஆர்.அய்.எஸ்., நிறுவனத்தின் அக்கவுண்ட் எண்ணில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள் : 14-02-2017
மேலும் விவரங்களுக்கு: https://cdn.digialm.com/EForms/html/form50900/Instruction.html,
இ-மெயிலில் விவரங்களைக் கோர:  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
ஹெல்ப் லைன் எண்: 18002669063

நிபுணர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வங்கித்துறை

பண மதிப்பு நீக்கம் என்கிற விவகாரம் பூதாகாரமாக உருவெடுத்த பிறகு வங்கியை நினைக்காத நாளில்லை. தினந்தோறும் வங்கியைத் தேடித் தேடிச் செல்வதாகி விட்டது. அதே போலச் சமீப காலமாக வங்கித் துறையில் அதிக எண்ணிக்கையில் பணி நியமனத்துக்கான  அறி விப்புகளும் அழைப்புகளும் வந்துகொண்டே இருப் பதைக் கவனித்திருப்பீர்கள்.

முன்பை விடவும் தற்போது வணிகத் துறை அதன் கிளைகளை அதிகமாக்கி வருகிறது. பொதுவாக வங்கி வேலை என்றதுமே எழுத்தர், காசாளர், மேலாளர் போன்ற சில பதவிகள் மட்டும்தான் நினைவுக்கு வரும். அதேபோல வங்கியின் செயல்பாடுகளைப் பணச் சேமிப்பு, கடன் பெறுவது இப்படிச் சில நடவடிக்கை களுடன் மட்டுமேதான் தொடர்புபடுத்திக்கொள்கிறோம். ஆனால், வங்கித் துறையில் ஏகப்பட்ட பணிகள் உள்ளன.

சந்தைப்படுத்துதல், பாதுகாப்பு, பொறியியல் தொழில் நுட்பம், சட்டம், ஆபத்து மேலாண்மை, நிதி, மனிதவள மேலாண்மை, பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம் இப்படி நிபுணத்துவம் சார்ந்த பல பணிகள் வங்கித் துறையில் இருக்கின்றன. அனைத்துப் பட்டதாரிகளும் புரொபேஷனரி அதிகாரி வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்தான். ஆனால், மேலே குறிப்பிட்ட பணிகளுக்குத் தனித்துறை வல்லுநர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். வங்கித் துறையின் சில தனித் துறைப் பணிகளின் தன்மையை இப்போது பார்ப்போம்.

மார்க்கெட்டிங் அதிகாரி

சந்தைப்படுத்துதலுக்கு இன்று அத்தனை துறைகளும் முக்கியத்துவம் தருகின்றன. பொதுத்துறை வங்கிகளும் இந்தப் போட்டியில் இணைந்துவிட்டன. வங்கியின் சிறப்புத் திட்டங்களை மக்களிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது என்பதை ஆராயும் பணி இது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வங்கியில் புதிய வசதிகளை ஏற்படுத்துவதற்கான கருத்துகளை மார்க்கெட்டிங் அதிகாரிகள் வழங்குவார்கள். வங்கி நிறுவனத்துக்கும் பொதுமக்களும் இடையில் வேலை பார்ப்பவர்கள் இவர்கள். எம்.பி.ஏ., எம்.எம்.எஸ்., அல்லது மேலாண் மையில் முதுகலைப் பட்டயம் பெற்றவர்கள் இதற்குத் தகுதியானவர்கள்.

சட்ட அதிகாரி

வங்கி தரப்பிலான வழக்குகளை முன்னெடுப்பவர் சட்ட அதிகாரி. குறிப்பாக வாராக் கடன்களைச் சட்ட ரீதியாக வசூலிக்கச் சட்ட ஆலோசனை வழங்கி வங்கி சார்பில் ஆஜராவது இவர்களே. இந்தப் பணியில் சேர இளங்கலை அல்லது முதுகலை சட்டம் படித்திருக்க வேண்டும். பணி அனுபவம் இந்த வேலைக்கு அத்தி யாவசியம்.

நிதி அதிகாரி

கடன் அதிகாரி என்றே நிதி அதிகாரிகள் அழைக்கப் படுகிறார்கள். கடன் கோருபவர்களின் விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்ப்பவர்கள், அவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்பதை நிர்ணயிப்பவர்கள் இவர்கள்தான். கடன் கணக்கைப் பராமரிப்பது, கடனை வசூலிப்பது உள்ளிட்ட முக்கியப் பணிகள் நிதி அதிகாரியின் பொறுப்பாகும். நிதி மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்குத் தகுதியானவர்கள். சி.ஏ., அய்.சி.டபிள்யூ.ஏ., சி.எஃப்.ஏ. படித்தவர்களையும் சில வங்கிகள் நிதி அதிகாரிகளாக நியமிக்கின்றன.

வேளாண்மை அதிகாரி

தொழில்நுட்ப அடிப்படையிலான நவீன வேளாண் மையை ஊக்குவிக்கப் பொதுத்துறை வங்கிகள் பல திட்டங்களை முன்வைக்கின்றன. விவசாயக் கடனுக்குத் தகுதிவாய்ந்த விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் பொறுப்பு வேளாண்மை அதிகாரியைத்தான் சேரும். கிராம வளர்ச்சி அதிகாரி என்றும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். இப்பணிக்குத் தகுதி பெறப் பல படிப்புகள் உள்ளன.

வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு, வேளாண்மை சந்தைப்படுத்துதல் மற்றும் கூட்டுறவு, கூட்டுறவு மற்றும் வங்கியியல், வேளாண்சார் மர வளர்ப்பு, உணவு அறிவியல், வேளாண்மை உயிரித்தொழில்நுட்பம், பால் பண்ணைத் தொழில்நுட்பம், வேளாண்மை வணிக மேலாண்மை, வேளாண்மைப் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் வேளாண்மை அதிகாரி ஆகலாம். இத்துறைகளில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள்கூட இப்பணியில் சேர முன்வருகின்றனர்.

மனிதவள அதிகாரி

ஊழியர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள துறைகளில் ஒன்று வங்கித் துறை. சேவைத் துறை என்பதால் மனிதவளத்துக்கு இத்துறையில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.

நிறுவனங்களுடனான தொடர்பு, பயிற்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள்,  பணிநியமனம், ஊழியர்களின் செயல் திறனை மதிப்பிடுதல், ஊக்கத்தொகை- இழப்பீடு உள்ளிட்ட பலவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு மனிதவள அதிகாரிகளுடையது. மனிதவள மேலாண்மை முதுகலைப் பட்டதாரிகளும் சமூகப் பணி (எம்.எஸ்.டபிள்யூ.) முதுகலைப் பட்டதாரிகளும் வங்கியில் மனிதவள அதிகாரி ஆகலாம்.

தகவல் தொழில்நுட்ப அதிகாரி

இந்தியாவில் உள்ள பல்வேறும் துறைகளில் அதி வேகமாகத் தொழில்நுட்பமயமாகிவருவது வங்கித் துறை ஆகும். வங்கியில் உள்ள வன்பொருள், மென்பொருளின் செயல்பாட்டைக் கண்காணித்து ஊழியர்கள் தொழில் நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்த உதவி செய்வது அய்டி அதிகாரி என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளே.

இதைத் தவிரவும் டேட்டா பேஸ் நிர்வாகம், நெட்வொர்க்கிங், தகவல் பாதுகாப்பு, மென்பொருள் வளர்ச்சி மற்றும் சோதனை போன்ற பல பொறுப்புகள் இவர்களைச் சேரும்.

கணினிப் பொறியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட் ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட படிப்பு களை நான்காண்டு பட்டப் படிப்பாகவோ முதுகலைப் பட்டமாகவோ படித்தவர்கள் வங்கியில் தகவல் தொழில்நுட்ப அதிகாரி ஆகலாம்.

இவை மட்டும் அல்ல இன்னும் பல நிபுணத்துவம் வாய்ந்த பிரிவுகள் வங்கித் துறையில் உள்ளன. புரொபேஷனரி அதிகாரியாகப் பணியில் சேருபவர்கள் ஜூனியர் மேலாண்மை நிலையில்தான் (படிநிலை 1) ஆரம்பத்தில் இருப்பார்கள்.

அதே தனித்துறை அதிகாரிகளோ உயர் பதவிகளையும் 2,3,4 ஆகிய படிநிலைகளையும் எளிதாக அடையலாம். வங்கித் துறையின்

அபரிமிதமான வளர்ச்சியினால் பலருக்கு இன்னும் பல புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன!

பேங்க் ஆப் பரோடா வங்கியில்
துப்புரவாளர் பணியிடங்கள்

பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 193 துப்புரவாளர் மற்றும் பியூன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு மற்றும் சென்னை மண்டலத்தில் மொத்த காலியிடங்கள்: 193

புதுச்சேரி மண்டலத்தில் மொத்தம் 103

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21.11.2016 தேதியின்படி 18 - 26க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினருக்கு ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கானகடைசி தேதி: 27.12.2016

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 2017 ஜனவரி, பிப்ரவரி

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://chennai.bobcareers.in/document/notification-tn-eng.pdf 
என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்வே பணி!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தேர் வாணையத்தில் காலியாக உள்ள 1884 குரூப் பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன. இந்தப் பணிக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 1884

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அய்.டி.அய். முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 09.01.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். சம்பள விவரம்: மாதம் ரூ.5,200 - 20,200 + இதர ஊதியம் ரூ.1,800

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: http://pwd.rrcnr.org. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2017ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:

15.02.2017- 28.02.2017. மேலும் விவரங்களுக்கு: http://pwd.rrcnr.org/PDF/PDF_Notification_1_2015.pdf

Banner
Banner