இளைஞர்

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 24 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு பொறியியல் துறையில், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்களிடம் இருந்து வரும் 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 24

பதவி:   Junior Engineer (JE) (Civil) - 15

பதவி:   Junior Engineer (JE) (Electrical)  - 09

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் போன்ற துறைகளில் 65 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்கள் 2 ஆண்டுகளும், டிகிரி முடித்தவர்கள் 1 ஆண்டும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற பிரிவினருக்கு ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPJECE07012019E2779FB41A5F4FABA1F30CDA9F0183AB.PDF  என்ற இணைப்பில் (LINK) சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2019

தொழில்நுட்ப ரீதியாகவும் எண்ணிக்கையிலும் அர்ப்பணிப்புணர்வு உள்ள வீரர்களுக்காகவும் நமது கப்பல் படை உலக அளவில் பேசப்படும் படை. இப்படையில் பெர்மனென்ட் கமிஷன் அடிப்படையில் எக்சிக்கியூடிவ் பிரிவில் உள்ள இன்ஜினியரிங் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிட விபரம்: நேவல் ஆர்ம மென்ட் இன்ஸ் பெக்சன் பிரிவில் 12, ஹைட்ரோ கிராபியில் 27, ஜெனரல் சர்வீசில் 28, எலக்ட்ரிகல் ஜெனரல் சர்வீசில் 32ம் சேர்த்து மொத்தம் 99 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.  விண்ணப்பதாரர்கள் 02.01.1995 முதல் 01.07.2000க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் இன்ஜினி யரிங் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: எஸ்.எஸ்.பி., நேர் காணல், மருத்துவப் பரிசோதனை, உடல் திறனறியும் தேர்வு என்ற முறைகளில் இருக்கும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2019 பிப்., 1.

விபரங்களுக்கு:www.davp.nic.in/WriteReadData/ADSeng_10701_41_1819b.pdf.

அய்.எஸ்.ஆர்.ஓ., எனப்படும் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேசன் விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவிலான முத்திரை பதிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் லிக்விட் புரொபல்சன் மய்யமானது திருநெல்வேலி அரு கிலுள்ள மகேந்திரகிரியில் உள்ளது. தலைமையகம் பெங்க ளூருவில் உள்ளது. இந்த நிறுவனத்தில் சயிண்டிஸ்ட்/இன்ஜி னியர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.

பிரிவுகள்: சிவிலில் 9, எலக்ட்ரிகலில் 5, ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏர் கண்டி ஷனிங்கில் 2, ஆர்க்கிடெக்சரில் 1, எலக்ட்ரிகலில் 1ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 100.

கடைசி நாள்: 2019 ஜன., 15.

விபரங்களுக்கு: www.isro.gov.in/sites/default/files/bilingual_advt_for_website.pdf

தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் அமைச்சக மற்றும் இதர அரசுப் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. தற்போது குரூப் - 1 பிரிவில் 139 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிட விபரம்: தமிழ்நாடு சிவில் சர்வீஸ் பிரிவிலான சப்-கலெக்டர் 27, சப்-சூபரின்டென்டன்ட் ஆப் போலீஸ் பிரிவில் 56, கமர்சியல் டாக்ஸ் பிரிவிலான அசிஸ்டென்ட் கமிஷனரில் 11, தமிழக கூட்டுறவு சேவையைச் சார்ந்த துணை ரிஜிஸ்ட்ரர் 13, பதிவுத் துறை சார்ந்த டெபுடி ரிஜிஸ்ட்ரர் 7, தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சி பிரிவைச் சார்ந்த துணை இயக்குநரில் 15, டெபுடி எம்ப்ளாய்மென்ட் ஆபிசரில் 8, பயர் அண்டு ரெஸ்க்யூ சர்வீஸ் பிரிவிலான மாவட்ட அதிகாரியில் 2 காலியிடங்கள் உள்ளன.

தேவை: விண்ணப்பிக்கும் பிரிவை பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. குறைந்த பட்சம் பட்டப் படிப்பும், பிரிவு சார்ந்த இதர சிறப்பு படிப்புகளும் தேவைப்படலாம். எனவே முழுமையான விபரங்களை இணைய தளத்தைப் பார்த்து அறியவும்.

தேர்ச்சி முறை: பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு, நேர் காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மய்யங்கள்: தமிழகத்தின் சென்னை, விழுப் புரம், திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் தேர்வு மய்யம் அமைக்கப் படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 150. கட்டணம். அய்ந்து ஆண்டு செல்லத்தக்க பதிவுக் கட்டணம் ரூ.150.

கடைசி நாள்: 2019 ஜன. 31.

விபரங்களுக்கு:www.tnpsc.gov.in/Notifications /2019_01_notyfn_Group_I_services.pdf.

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களுள் பெரம்பலூர் நீதிமன்றம் சிறப்பு வாய்ந்தது. இதில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிட விபரம்: கம்ப்யூட்டர் ஆபரேட்டரில் 6, எக்சாமினரில் 2, ரீடரில் 1, சீனியர் பெய்லியில் 1, டிரைவரில் 1, ஜூனியர் பெய்லியில் 3, ஜெராக்ஸ் மிசின் ஆபரேட்டரில் 3, ஆபிஸ் அசிஸ்டென்டில் 24, நைட் வாட்ச்மேனில் 7, மசால்சியில் 9ம், ஸ்காவஞ்சரில் 1ம், ஸ்வீபாரில் 3ம், சானிடரி ஒர்க்கரில் 1ம் சேர்த்து மொத்தம் 62 காலியிடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 18- 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : எக்சாமினர், ரீடர், சீனியர் பெய்லி, ஜூனியர் பெய்லி, ஜெராக்ஸ் மெசின் ஆபரேட்டர், போன்ற பதவிகளுக்கு குறைந்த பட்சம் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர் பதவிக்கு எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இதர பதவிகளுக்கு தமிழில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர் - 621 212.

கடைசி நாள் : 2019 ஜன., 21.

விபரங்களுக்கு:https://districts.ecourts.gov.in/sites/default/file/PerambalurDistrictJudiciaryRecruitmentcalledforason28-12-2018_0.pdf

Banner
Banner