இளைஞர்

ஆயில் அண்டு நேச்சுரல் கேஸ் கார்ப்பரேசன் லிமிடெட் எனப்படும் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பில் ஈடுபட்டு வரும் பொதுத் துறை நிறுவனம்.

சூரத் அருகிலுள்ள ஹசீரா போர்ட்டில் உள்ள இதன் மய்யத்தில் தற்போது காலியாக உள்ள 36 இடங்களை நிரப்பு வதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : அசிஸ்டென்ட் டெக்னீசியன் பிரிவிலான மெக்கானிக் கலில் 10, எலக்ட்ரிகலில் 2, ஜூனியர் அசிஸ்டென்ட் டெக்னீசியன் பிரிவிலான பிட்டிங்கில் 9, டீசலில் 5, எலக்ட்ரிகலில் 3, புரொடக்சனில் 4, கெமிஸ்ட்ரியில் 3ம் சேர்த்து மொத்தம் 36 இடங்கள் உள்ளன.

வயது: 2019 ஜன., 24 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தொடர்புடைய டிரேடு பிரிவில் சர்டிபிகேட் படிப்பை அங்கீ கரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூல மாக முடித்திருக்க வேண்டும். முழுமை யான விபரங்களை இணையதளத்தில் அறியவும்.

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.370.-

தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் வாயி லான எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும். இத்தேர்வு சூரத்தில் மட்டும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்னப்பங் களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2019 ஜன., 24.

விபரங்களுக்கு: www.ongcindia.com

மத்திய அரசின்கீழ் செயல்பட்டுவரும் நுண் ணறிவு தகவல் தொடர்பு அமைப்புகள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 207 பணியி டங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 207

பணி:  Care Taker - 136

பணி:   Peon - 25

சம்பளம்: மாதம் ரூ.15,400 வழங்கப்படும்.

பணி:  Cook - 27

சம்பளம்: மாதம் ரூ.16,962

பணி: Aya- 19

பணி:   Kitchen Helper - 01

பணி:  Attendant
- 09

சம்பளம்: மாதம் ரூ.14,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப் பட்ட பிரிவுகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.

நேர்முகத் தேர்வின்போது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவம், பத்தாம் வகுப்பு சான்றிதழ், பணி அனுபவம், பான் கார்டு, ஆதார் கார்டு, புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை www.icsil.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்துகெள்ள வேண்டும். இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து  தபாலில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை காணவும்.

 

 

 

 

 

 

 

 

 

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்றைய தேதியில் 20 ஆயிரம் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. இவற்றில் 40 லட்சம் பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனங்கள் ஏற்றுமதி மூலம் நமது நாட்டுக்கு ஈட்டித்தரும் வருமானம் சுமார் ரூபாய் 6 லட்சம் கோடி. 2025இல் இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 60 ஆயிரமாகவும் பொறியாளர்களின் எண்ணிக்கை 70 லட்சம் ஆகவும், ஏற்றுமதி வருமானம் ரூபாய் 24 லட்சம் கோடி ஆகவும் உயரும் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 21ஆம் நூற்றாண்டில் மிக வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பது மட்டுமல்லாமல்; தொழில்நுட்ப அறிவிலும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது.

வளர்ச்சியின் பாதையில் தேசம் இடம்பிடித்தாலும் மறுபுறம் புதுத் தொழில்நுட்பங்களால் படித்தவை வேகமாகக் காலாவதி ஆகின்றன. நாம் படித்து முடித்து வெளிவருவதற்குள் படித்தவை தேவையற்றுப் போய்விடுகின்றன. தகுதியான தொழில்நுட்ப அறிவு கொண்ட மனிதவளம் இல்லாமல் நிறுவனங்கள் தடுமாறுகின்றன.

பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தவையின் தேவை குறுகிய காலத்திலேயே நீர்த்துப் போய்விடுமென்றால், 16 வருடப் படிப்பின் அவசியம் கேள்விக்கு உள்ளாகிறது.

தேவைகளுக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களும் அதன் பாடத் திட்டங்களும் தம்மைத் தகவமைத்துக் கொள்ளாததால், கல்வியின் போதாமை பெரும் நிறுவனங்களையும் நாட்டையும் ஒருங்கே பின்னுக்கு இழுக்கிறது.

நாஸ்காம்மின் முயற்சி

கற்றலின் போதாமையை ஈடுகட்ட, பெரு நிறுவனங்கள் பயிற்சி வளாகத்தைத் தம்முள் நிறுவி, ஊழியர்களுக்கு வேண்டிய பயிற்சிகளை அளித்துத் தமது தேவையைப் பூர்த்தி செய்துகொள்கின்றன. பெரு நிறுவனங்களில் சேர முடியாத பட்டதாரிகள், தம் பங்குக்குத் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பெரும் பணம் கட்டி (கல்லூரிப் படிப்புக்குச் செலவழித்த தொகையைவிட அதிகமாக) பயின்று தமது திறமையை வளர்த்துக்கொள்ளும் நிலையே உள்ளது.

இந்தக் திறன்குறையை இட்டு நிரப்பும் நோக்கில், நாஸ்காம் மத்திய அரசுடன் இணைந்து ஃபியூச்சர் ஸ்கில்ஸ் நாஸ்காம்‘  எனும் இணையத்தளத்தை தொடங்கி உள்ளது.

ஃபியூச்சர் ஸ்கில்ஸ் நாஸ்காம்

இதை ஓர் இணைய கல்விச் சந்தை எனவும் சொல்லலாம். தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பாக நாஸ்காம் இருப்பதால், அதன் முக்கிய நோக்கம் அதன் உறுப்பினர்களான மென்பொருள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவுவதே. அதன் இணையதளமும் அவ்வாறுதான் வடி வமைக்கப்பட்டுள்ளது. உலகின் முக்கியக் கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் இந்த இணையத் தளத்தில் தம்மை இணைத்துள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது இன்றைய தொழில் அறிவு தேவைகளையும் நாளைய தேவைகளையும் அதில் தெரிவிக்கின்றன. அந்தத் தேவைகளுக்கு ஏற்ற கல்வியை அதில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் வடிவமைத்து வழங்குகின்றன. அந்தக் கல்வியை மாணவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்காக, நாஸ்காம்  எனும் இணையக் கல்வி வகுப்பைப் பயன்படுத்துகிறது.

வருங்காலத்தை

ஆளப்போகும் துறைகள்

செயற்கை நுண்ணறிவு, 3டி பிரிண்டிங், ரோபோடிக்ஸ், இணையப் பாதுகாப்பு, டேட்டா அனாலிடிக்ஸ், சமூகத் தொடர்பு, கிளவுட் கம்ப்யுட்டிங், உற்பத்திச் சங்கிலி போன்ற துறை களுக்கு வருங்காலத்தில் மிகுந்த மனிதவளம் தேவைப்படும்.

இந்தத் துறைகளுக்குத் தேவையான கல்வியறிவுக்கு ஏற்ற பாடத்திட்டங்கள் இதன் இணையதளத்தில் உள்ளன. தற்போது இந்த இணைய வகுப்புகள் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி யாற்றும் பொறியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. விரைவில் இவை மாணவர்களுக்கும் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இந்தியாவின் மக்கள்தொகையில் 65 சதவீதத்தினரின் வயது 35க்கும் கீழாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் தொழில் அறிவில் தேர்ந்த மனிதவளம் மிகுதியாக உள்ளது. நம் நாட்டின் மனித வளத்தின் உதவியின்றி உலகில் எந்த நாடும் இயங்க முடியாது என்பதே இன்றைய நிலை.

உலகின் அச்சாணியாகத் திகழும் நமது மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த பல முயற்சிகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.  ஃபியூச்சர் ஸ்கில்ஸ் நாஸ்காம்  அவற்றில் முக்கியமானது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்திய ரயில்வேயில் இளநிலைப் பொறியாளர், பணிமனை பண்டகக் காப்பாளர், வேதியியல் மற்றும்  உலோகவியல் உதவியாளர் ஆகிய பதவி களில் 14,033 காலிப்பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ரயில்வே  அமைச்சகம் வெளியிட் டுள்ளது.

தகுதி: இளநிலைப் பொறியாளர் (பொது) பதவியில் 13,034 காலியிடங்கள் உள்ளன. இதற்குச் சம்பந்தப்பட்ட  பொறியியல் பாடப் பிரிவில் பட்டப் படிப்பு அல்லது பாலிடெக்னிக் டிப்ளமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இளநிலைப் பொறியாளர் (தகவல்  தொழில்நுட்பம்) பதவியில் 49 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பதவிக்கு பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., பி.டெக். (இன்பர்மேஷன் டெக்னாலஜி,  கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிமனை பண்டகக் காப்பாளர் பதவியில் 456 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பதவிக்கு ஏதேனும் ஒரு பொறியியல் பாடத்தில் பட்டம் அல்லது  டிப்ளமா பெற்றிருக்க வேண்டும். வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் பதவியில் 494 காலியிடங்கள் இருக்கின்றன. இதற்கு, இயற்பியல்,  வேதியியல் பாடங்களில் பி.எஸ்சி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் அவசியம்.

தேர்வு முறை: மேற்குறிப்பிட்ட அனைத்துப் பதவிகளுக்கும் வயது வரம்பு 18 முதல் 33 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5  ஆண்டுகளும் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டு களும் மாற்றுத் திறனாளி களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு  தளர்த்தப்படும். தகுதியானோர் எழுத்துத் தேர்வு (ஆன்லைன்வழி), சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு  கிடையாது. எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் பதிவு ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி முடிவடையும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, ஆன்லைன் வழித் தேர்வு, அதற்கான பாடத்திட்டம், தேர்வுக் கட்டணம், தேர்வு மய்யம், சம்பளம் உள்ளிட்ட விவரங்களைச் சென்னை ரயில்வே தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.rrbchennai.gov.in)
விளக்கமாக அறிந்து கொள்ளலாம். பொறியியல் பாடத்தில்  பட்டம் மற்றும் டிப்ளமா பெற்றவர் களும், பி.எஸ்சி. பட்டதாரிகளும் இந்திய ரயில்வே துறையில் சேர இது அருமையான வாய்ப்பு.

பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பதவியில் 913 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. சட்டம், சொத்து மேலாண்மை ஆகிய பிரிவுகளில் இக்காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

சட்ட அதிகாரிப் பணி: பி.எல். பட்டம்

முதுநிலைப் பிரிவு: வங்கி அல்லது பொதுத் துறை நிறுவனத்தில் 5 ஆண்டு சட்ட அலுவலர் பணி அனுபவம்

வயது வரம்பு:  28 முதல் 35 வரை.

இளநிலைப் பிரிவு:  3 ஆண்டு பணி அனுபவம்.

வயது வரம்பு: 25 முதல் 32 வரை.

முதுநிலைச் சொத்து மேலாண்மைப் பிரிவு: எம்.பி.ஏ. (மார்க்கெட்டிங்) பட்டம்  அல்லது பட்டப் படிப்புடன் வங்கி அல்லது நிதியில் ஓராண்டு கால டிப்ளமா அல்லது சான்றிதழ் படிப்பு அவசியம். அதோடு வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் விற்பனை அல்லது காப்பீடு அல்லது சொத்து விநியோகப் பிரிவில் 4 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 முதல் 35 வரை.

இளநிலைச் சொத்து மேலாண்மைப் பிரிவு:  ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு போதும். 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம். வயது வரம்பு: 21 முதல் 30 வரை.

அனைத்துப் பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். முதுநிலைச் சிறப்பு அதிகாரிப் பணிக்கு ரூ.1 லட்சம், இளநிலைச் சிறப்பு அதிகாரிப் பணிக்கு ரூ.84 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். உரிய கல்வித் தகுதியும் வயது வரம்பும் உடையவர்கள் பரோடா வங்கியின் இணையதளத்தைப் (www.bankofbaroda.co.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங் களை  வங்கியின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 26 டிசம்பர் 2018.

Banner
Banner