இளைஞர்

மத்திய அரசின் பொதுக் காப்பீட்டு நிறுவனங் களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி  பதவியில் 245 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

தேவையான தகுதி: இந்தப் பதவிக்கு பட்ட தாரிகள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் எனில் 55 சதவீத மதிப்பெண் போதும்.

வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்படும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். எழுத்துத் தேர்வில் முதல்நிலை, 2ஆம் நிலை என இரு தேர்வுகள் உண்டு. இரண்டு தேர்வுகளுமே ஆன்லைன் வழியில்தான் நடத்தப்படும்.

முதல்நிலைத் தேர்வில், பொது ஆங்கிலம், ரீசனிங், அடிப்படைக் கணிதம் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். 100 மதிப்பெண். தேர்வு 1 மணி நேரம். இதில் தேர்ச்சி பெறுவோர் ஒரு காலியிடத்துக்கு 15 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் 2ஆவது நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். அதில் அப்ஜெக்டிவ் வகை, விரிவாக விடையளிக்கும் தேர்வு ஆகியவை இருக்கும்.a

அப்ஜெக்டிவ் வடிவிலான தேர்வில் ரீசனிங், பொது ஆங்கிலம், பொது அறிவு, அடிப்படைக் கணிதம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 200. தேர்வு 2 மணி நேரம். அதைத் தொடர்ந்து, விரிவாக விடையளிக்கும் தேர்வு நடைபெறும். இதில், கடிதம் எழுதுதல், கட்டுரை எழுதுதல் என இரு பகுதிகள் இருக்கும். தேர்வு அரைமணி நேரம். மதிப்பெண் 30. 2ஆவது நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதியாகத் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.

தகுதியுடைய பட்டதாரிகள் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் (www.newindia.co.in) விண்ணப்பிக்க வேண்டும்.

நேரடியாக நிர்வாக அதிகாரி (ஸ்கேல்-1) பணியில் சேருபவர்கள் உதவி நிர்வாக மேலாளர், உதவி மேலாளர், துணை மேலாளர், மேலாளர், கோட்ட மேலாளர், பொது மேலாளர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எனப் பதவி  உயர்வு பெறலாம்.

முக்கிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26 டிசம்பர்

முதல்நிலைத் தேர்வு: 30 ஜனவரி 2019

2ஆவது நிலைத் தேர்வு: 2 மார்ச் 2019

இயற்கை அழகானது மட்டுமல்ல; மிகவும் ஆபத்தானதும்கூட. மனித இன வரலாற்றில் விஞ்ஞானத்தில் சிறந்து விளங்கும் தலை முறை, நமது தலைமுறை. இருப்பினும், இயற் கையின் செயல்பாட்டை அறிவதும் அதனை முழுமையாகப் புரிவதும் சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது.

450 கோடி ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் பூமியின் செயல்பாட்டைச் சராசரி யாக 70 ஆண்டுகளே வாழும் மனிதன் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம் தானே? இயற்கையின் ஆபத்துகளை நம்மால் தடுக்க முடியாது. வேண்டுமானால், அதனால் நேரும் பாதிப்புகளைக் குறைக்கலாம். இணை யத்தில் இன்று இருக்கும் பல இணைய வகுப் புகள் அதை நமக்கு எளிதாகவும் இலவசமாக வும் கற்றுக் கொடுக்கின்றன.

பேரிடர்களின் தன்மை

பேரழிவை ஏற்படுத்தும் எல்லா இடர்களையும் பேரிடர் என்ற வரையறைக்குள் எளிதில் அடக்கலாம். அனல் காற்று, பஞ்சம், வெள்ளம், கனமழை, புயல், சுழற்காற்று, சூறாவளி, நில நடுக்கம், சுனாமி, காட்டுத்தீ, அதீதப் பனிப் பொழிவு, எரிமலை கொப்பளிப்பு எனப் பேரிடர்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். பாதுகாப்பான இடம் என்பதே இந்தப் பூமியில் இல்லை. இருப்பினும், நாம் வாழும் இடத்தின் தன்மையை அறிவதன் மூலம் நம்மை என்னென்ன பேரிடர்கள் தாக் கக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். சற்று முன்னெச்செரிக்கையாகவும் இருக்க லாம்.

பேரிடர்களை எப்படிச் சமாளிப்பது?

ஆபத்தின் தன்மை தெரியாமல் நாம் ஆற்றும் எதிர்வினை, ஆபத்தை மேலும் ஆபத்தானதாக மாற்றக்கூடும். உதாரணத் துக்கு மின் கசிவால் ஏற்படும் தீ விபத்தைத் தண்ணீர் ஊற்றி அணைக்க முயல்வது! இன்றைய காலகட்டத்தில் தகவல்கள்தாம் அறிவு. இன்றைய நவீன விஞ்ஞானம், தகவல் களை நமக்குத் தேவைக்கு அதிகமாகவே அளிக்கிறது. பேரிடர்களை எதிர்கொள்ள இந்தத் தகவல்கள் நமக்குப் பெரிதும் உதவுகின்றன. ஜப்பானின் புவி அமைப்பின் படி அங்கு நிலநடுக்கம் அடிக்கடி நேரும் என்று இன்று தெரிந்த காரணத்தால், இன்று அங்கே கட்டப்படும் வீடுகள் எல்லாம் மரத்தால் கட்டப்பட்டவையாகவே உள்ளன. விண்ணில் நிறுவப்பட்டிருக்கும் திறன் மிகுந்த விண் கலன்கள், நமக்கு நேரப் போகும் ஆபத்தை முன்கூட்டியே முடிந்தவரை துல்லியமாக உணர்த்துகின்றன.

எங்குப் படிக்கலாம்?

ரெட் கிராஸ், யுனெஸ்கோ போன்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங் களும் இந்திய அரசாங்கமும் பேரிடர் மேலாண்மையை இணையம் வழியாக இலவசமாகச் சொல்லிக் கொடுக்கின்றன. அதற்கான  & சுட்டிகளின் பட்டியல் கீழே:

1. https://bit.ly/2FzW9b3

2. https://bit.ly/1QkjnPC

3. https://bit.ly/2TyTvp3

4. https://bit.ly/2TDGPwR

இந்தப் படிப்புகள் பேரிடர்களைச் சமாளிக்கும் திறனுக்கு மட்டுமின்றி, கை நிறையச் சம்பளத்துடன் கூடிய வேலைக்கும் உத்தரவாதம் அளிக்கின்றன.

தமிழக அரசின் வேலைவாய்ப்புப் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் (அய்.டி.அய்.) முதல்வர், உதவி இயக்குநர் பணியில் 9 காலியிடங்களும், தொழில் துறையில் உதவி இன்ஜினீயர் பதவியில் 32 காலியிடங்களும் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

தேவையான தகுதி

முதல்வர், உதவி இயக்குநர் பதவி: ஏதேனும் ஒரு பொறியியல் பாடப் பிரிவில் பொறியியல் பட்டம்.

பணி அனுபவம்: தொழிற்சாலை அல்லது பணி மனையில் 3 ஆண்டுகள்.

வயது வரம்பு: 24 முதல் 30 வரை. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி.) வயது வரம்பு கிடையாது.

உதவி இன்ஜினீயர் பதவி: சிவில் இன்ஜினீயரிங், ஆர்க்கிடெக்சர் பாடங்கள் நீங்கலாக இதர பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம்.

பணி அனுபவம்: தொழிற்சாலை அல்லது பணிமனையில் குறைந்தபட்சம் 6 மாதம்.

வயது வரம்பு: 18 முதல் 35 வயதுவரை. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது

மேற்கண்ட இரு பதவிகளுக்கும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்வுசெய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் 2 தாள்கள் இருக்கும். முதல் தாள் பொறியியல் தொடர்பானது. 2ஆவது தாள் பொது அறிவு சம்பந்தப்பட்டது. தகுதியுள்ள பொறியியல் பட்டதாரிகள் டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தைப் (www.tnpsc.gov.in) பயன்படுத்தி விண் ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு மய்யம், தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட இதர விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24 டிசம்பர் 2018

எழுத்துத் தேர்வு நாள்: 2 மார்ச் 2019.

தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட வுள்ளன. இவற்றிற்கான அறிவிப்பு ஆவின் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: திருநெல்வேலி மற்றும் தர்மபுரி மொத்த காலியிடங்கள்: 17 ( திருநெல்வேலி, 08 தர்மபுரி 09)

பதவி: இளநிலை நிர்வாகி - 02 பதவி: ஆய்வக தொழில் நுட்பவியலாளர் - 02 பதவி: தனிச் செயலாளர் - 01 பதவி: நீட்டிப்பு அதிகாரி - 08 பதவி: மேலாளர் - 01 தகுதி: பணிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியா னவர்கள். முழுமையான தகவலை அதிகாரப் பூர்வ அறிவிப்பில் தெரிந்துகெள்ளவும்.

வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.1,19,500 விண்ணப்பிக்கும் முறை: http://www.aavinmilk.com என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: திருநெல்வேலி: The General Manager, The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd, Reddiarpatti Road, Perumalpuram Post, Tirunelveli - 627007

பிச்சாண்டார்கோவில், டிச. 12- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் துவக்க விழா சுகாதாரமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு என்னும் மய்யக்கருத்தை கொண்டு 04.12.2018 முதல் 10.12.2018 வரை பிச்சாண்டார் கோவில் கிராமத்தில் நடைபெற்றது.

இச்சிறப்பு முகாமின் துவக்க விழா 04.12.2018 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் த.சிறீவிஜய கிருபா வரவேற்புரையாற் றினார். முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தமது வாழ்த் துரையில்: பெரியார் மருந்தியல் கல்லூரியின் சார்பாக ஒரு வாரகாலம் நடைபெறும் விழிப்புணர்வு கருத்தரங்குகள், மருத்துவ முகாம்கள் மற்றும் நல்வாழ்வு பணிகள் குறித்து விளக்கி இதனை பொதுமக்கள் நல்லமுறையில் பயன் படுத்தி நலமோடு வாழ தமது வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து பிச்சாண்டார் கோவில் கிராமத் தலைவர் ச.செல்வம் மற்றும் மேனாள் வேளாண் இயக்குநர் அக்ரி வீ.சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பிச்சாண்டார் கோவில் முன்னாள் அஞ்சல் அலுவலர் எம். இராமசாமி முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற் றினார். அவர் தமது உரையில்: மனிதநேயத்தை முன்னிறுத்தி செயல்பட்ட பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்க ளின் பெயர் தாங்கிய கல்லூரியிலிருந்து மாணவர்கள் சமு தாய சேவைபுரிய வருகைபுரிந்திருப்பது தங்களுக்கு பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும், அத்தகைய சிறப்பிற்குரிய பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பிச்சாண்டார் கோவில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பினையும் அளிப்பார்கள் என்பதனை தெரிவித்துக் கொண்டார். மேலும் தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற பகுத்தறிவுக் களம்தான் இப்பிச்சாண்டார் கோவில் என்பதனையும் பெருமிதத்துடன் எடுத்துரைத்தார்.

திராவிடர் கழக திருச்சி மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு.இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர்  கோ. கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ச. பிச்சைமணி, மு. காமராஜ் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வதித்து சிறப்பித்தனர். பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பிச்சாண்டார் கோவில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இவ்விழாவிற்கு பேராசிரியர் ப.பாலசுப்ரமணியன் நன்றியுரையாற்ற விழா இனிதே நடந்தேறியது.

இரண்டாம் நாளான  5.12.2018 அன்று சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் குறித்த விழிப் புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மூன்றாம் நாளான 6.12.2018 அன்று டெங்கு பன்றிக்காய்ச்சல் மற்றும் நிமோ னியா நோய் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. 7.12.2018 அன்று காலை 10 மணியளவில் நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள் பொதுமக்களிடம் கல்வி மற்றும் பொருளாதாரம் குறித்த கணக்கெடுப்பை மேற்கொண்டனர். மேலும் சுற்றுப்புறத் தூய்மையை மேம்படுத்தும் வகையில்  பிச்சாண்டார் கோவில் கிராமத்தைச் சார்ந்த பொது இடங் கள், மருத்துவமனை, பள்ளி, விளையாட்டு மைதானம் மற்றும் சாலைகள் போன்றவற்றை தூய்மைப்படுத்தினர்.  அன்று மாலை 5 மணியளவில் சிறு, குறு தொழில் முனை வோர் சங்கத் தலைவர் கனக சபாபதி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் சுய தொழில் குறித்து சிறப்புரையாற்றினர்.

அய்ந்தாம் நாளான 8.12.2018 அன்று  காலை 9 மணியள வில் களப்பணியை மேற்கொண்டனர். மேலும் மாலை 6 மணியளவில் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அரிய மூலிகைகள் மற்றும் நலமுடன் வாழ்வதற்கான சத்தான உணவு முறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யோகா கலை ஆசிரியர் கவிஞர் சின்னையன் அவர்களால் யோகா பற்றிய செய்முறை விளக் கம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பட் டது.  ஆறாம் நாளான 9.12.2018 அன்று பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பாக பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் மருத்துவர் மரு. மஞ்சுளா வாணி தலைமையில் பொது மருத்துவ முகாமும், ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனையின் பணி மருத்துவர் ரூஹி பானு தலைமையில் பெண்களுக்கான மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையும் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் 42 பெண்கள் கலந்து கொண்டு மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையை மேற்கொண்டனர். மேலும் 85 பேர் பொது மருத்துவ முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.

அன்று மாலை  6 மணியளவில் தூய்மை இந்தியா திட்டத்தில் பொதுமக்களின் பங்கு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்  நடைபெற்றது.   நிறைவு நாளான 10.12.2018 அன்று காலை 10 மணியளவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது. இதில் பள்ளி யின் தலைமையாசிரியர்  கோதை, ஆசிரியர்கள் மற்றும் திராவிடர் கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பிச்சாண்டார் கோவில் கிராமத்தின் பல பகு திகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் நிறைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா விற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனை வர் இரா. செந்தாமரை வரவேற்புரையாற்றினார்.

அவர் தமது உரையில்: கல்வி ஒன்றால்தான் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றுரைத்த அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை நெறிப்படி செயல் பட்டுவரும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் பெறப்பட்ட நலவாழ்வு தகவல்களை மாணவர்களும் பொதுமக்களும் தங்களது நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றுவதுடன் மாணவர்கள் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்படும் வேதிப்பொருட் கள் கலந்த திண்பண்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும் சத்தான சரிவிகித உணவான கீரைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என் றும் உரையாற்றினார். மேலும் இளைஞர்கள் போதை பொருட்களை பயன் படுத்துவது மதுப்பழக்கத்திற்கு அடிமையாவது போன்ற வற்றை தவிர்த்தால் நலமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் ச.இருதயசாமி முகாம் அறிக்கை வாசித்தார்.

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் கோதை, அங்கன்வாடி ஆசிரியர்  புனித மலர், அரங்கநாயகி, பாலசந்தர், அருண்குமார், அனல்ராஜ் மற்றும் நந்தகுமார் ஆகியோர் தமது வாழ்த்துரையில் பல சமுதாயப் பணிகளை மேற் கொண்ட பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.   நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு நாள் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் பெரியார் புரா மற்றும் ஊரக வளர்ச்சி மய்யத்தின் இயக்குநர் முனைவர் த. ஜானகி சிறப் புரையாற்றினார். அவர்தம் உரையில் நாட்டுநலப்பணித்திட்ட விழாவாக, பகுத்தறிவு விழாவாக, சமுதாய விழாவாக, பொதுமக்கள் பயன்பெறும் விழாவாக பல பரிமாணங்களில் நடைபெறும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்புமுகாமின் நிறைவுநாள் விழாவில் கலந்துகொள்வதில் தாம் பெருமையடைவதாக உரையாற்றினார். சமத்துவம், சகோதரத்துவம், பகுத்தறிவு, சுயமரியாதை, மனிதநேயம் ஆகியவற்றை கற்பித்தவர்தான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.

அய்யா பிறந்த மண்ணில் வாழக்கூடிய பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சமுதாய உணர்வோடு பாடுபடவேண்டும் என்றும் அக் காலத்திலேயே வேளாண்தொழிலில் பல அறிவியல் நுணுக் கத்தோடு செயல்பட்டவர்கள் தமிழர்கள் என்பதனை தேரோட தென்னை, வண்டியோட வாழை என்ற பெரும்கருத்தின் மூலம் அறியலாம். அத்தகைய அறிவை பெற்ற நம்நாட்டு இளைஞர்கள் இங்கு பெற்ற கல்விதனை இந்நாட்டிற்கே பயன்படும் வகையில் செயல்படவேண்டும். அப்போதுதான் நம் இந்திய நாடு வளம் செழிக்கும் நாடாக உயரும் என்றும் உரையாற்றினார். மேலும் உடல்நலம் பேணுவதற்கும் நம் முன்னோர்கள் பல அரிய மூலிகைகளை நமக்கு அறிமுகப்படுத்தியிருக் கின்றனர். துளசி, மஞ்சள், வெண்பூண்டு, கற்றாழை, முடக் கற்றான், மணத்தக்காளி போன்ற பல அரிய மூலிகைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து அத்தகைய இயற்கை வளத்தை காக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று உரையாற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும் விளையாட்டுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கல் லூரியின் சார்பாக முதலுதவிப்பெட்டி மற்றும் புத்தகங்கள் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.

திருச்சி மண்டல செயலாளர் ப. ஆல்பர்ட், பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர்  முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய செயலாளர் ச. பிச்சைமணி, மு. காமராஜ், அக்ரி வீ. சுப்ரமணியன், எம். இராமசாமி, கலியபெருமாள், பள்ளியின் உதவி ஆசிரியர் திருமதி தன லெட்சுமி, பால கிருஷ்ணன் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன் னிலை வதித்து சிறப்பித்தனர். பகுத் தறிவாளர் கழக இளை ஞரணியினர் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடை பெற முழு ஒத்துழைப்பை வழங்கி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுக்கும் கல்லூரிக்கும் நினைவு பரிசினை வழங்கி சிறப்பித்தனர். பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இவ்விழாவிற்கு  நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் த. சிறீவிஜய கிருபா நன்றியுரையாற்றினார்.

Banner
Banner