இளைஞர்

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 137 ராணுவ பப்ளிக் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 8000

பதவி:    ost Graduate Teacher (PGT)

பதவி:    Trained Graduate Teacher (TGT)

பதவி:   Primary Teacher (PRT)

வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை, முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பத்தாரர் களும், தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  கிறிஷி அமைப்பால் நடத்தப்படும் ஸ்கிரீன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 17, 18 தேதிகளில் நடைபெறும்.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி: 03.12.2018

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.aps-csp.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.awesindia.com என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2018


தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் வேலை

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பந்தகால அடிப்படையிலான பணியிடங்களான மாவட்ட ஒருங் கிணைப்பாளர் (டெக்னிக்கல்), மாவட்ட திட்ட உதவி யாளர், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவியாளர் போன்ற பணியிடங்களுக் கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து அக்டேபர் 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மொத்த காலியிடங் கள்: 178

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பதவி:   District Coordinator    - 06

சம்பளம்: மாதம் ரூ. 30,000

தகுதி: கணினி அறிவியல் துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி:  District Project Assistants - 06

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: மேலாண்மை, சமூக அறிவியல், ஊட்டச்சத்துயியல் துறையில் பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி:  Block Coordinator (Technical) - 83

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி:  Block Project Assistants - 83

சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அனைத்து பணியிடங் களுக்கும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனு பவம், கணினியை கையாளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாவட்ட அளவிலான பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களும், வட்டார அளவிலான பணியிடங்களுக்கு அந்தந்த வட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.icds.tn.nic.  என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து,  இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், எண்: 6, பம்மல் நல்லதம்பி தெரு, எம்.ஜி.ஆர். சாலை, தரமணி, சென்னை - 600 113. என்ற முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://icds.tn.nic.in/Notification.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

 

தமிழக சிறைத்துறையில் காலியாக உள்ள 30 அசிஸ்டெண்ட் ஜெயிலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

பதவி:  அசிஸ்டெண்ட் ஜெயிலர்

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்,

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன் லைனில் செலுத்தலாம். விதவைகள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட் டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 09.11.2018

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண் ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய www.tnpsc.gov.in  என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள

அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2018


தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு

1178 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 1178 வனத்துறை அதிகாரி, வனத்துறை காவலர், வானக்காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப் பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1178

பதவி: வனத்துறை அதிகாரி - 300

சம்பளம்: மாதம் ரூ.35,900 - ரூ.1,13,500

பதவி: வனத்துறை காவலர் - 726

சம்பளம்: மாதம் ரூ.18,200 - ரூ.57,900

பதவி: வனக்காவலர் - 152 (ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்)

சம்பளம்: மாதம் ரூ.18,200 - ரூ.57,900

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், பொறியியல் துறையில் (வேளாண் பொறியியல் உட்பட அனைத்து பொறியியல் பாடங்களும்) சுற்றுச்சூழல் அறிவியல், வனவியல், புவியியல், தோட்டக்கலை, கடல் உயி ரியல், கணிதம் இயற்பியல், புள்ளியியல், கால்நடை அறிவியல், வன உயிர் உயிரியல், விலங்கியல் பேன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 15.10.2018

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.11.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.forests.tn.gov.in  என்ற வலைத்தளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

சிவில் என்ஜினியரிங் துறையில் ஜியோ டெக் னிக்கல் பொறியியல் சிறப்பு படிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கட்டுமானத்துறை சம்பந்தமான கல்வியை வழங்குவது சிவில் இன்ஜினியரிங் துறையாகும்.  சிவில் என்ஜினியரிங் துறையிலும் முக்கியமான கல்வியாக ஜியோ டெக்னிக்கல் இன்ஜினியரிங் துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கட்டுமானத் துறையில் கட்டடம் தாங்கும் வகையில் பூமிக்கு அடியில் பீம்கள் அமைத்து கான்கிரீட் போடுவது முக்கியமான பணியாகும்.  அவ்வாறு பூமிக்கு அடியில் செய்யக்கூடிய பணிகள் குறித்த கல்வியை “ஜியோ டெக்னிக்கல் இன்ஜி னியரிங்’ படிப்பு வழங்குகிறது.  அதோடு இராணுவம், சுரங்கம், பெட்ரோலியம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துறைகளில் ஜியோ டெக்னிக்கல் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு காத்திருக்கின்றது. பூமிக்கு அடியில் கிடைக்கும் மண், கல் போன்ற கனிமங்கள் குறித்த கல்வியையும் அது வழங்குகிறது.

உயர்ந்த கட்டடங்கள், நீண்ட தொலைவிலான பாலங்கள் உள்ளிட்ட மிக முக்கிய கட்டுமானங்களில் ஜியோ டெக்னிக்கல் என்ஜினியரிங் படித்தவர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு :லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ரீநீt.ணீநீ.வீஸீ/ என்ற வலைதளத்தைப் பாருங்கள்.

வலிகளும், இழப்புகளும் வீழ்ந்து துவண்டுவிடுவதற்கல்ல எழுந்து ஓடுவதற்கு என்பதை நிரூபித்திருக்கிறார், பிளேடு ரன்னராக உரு வெடுத்துள்ள நாகர்கோவில் இளைஞர்  விக்னேஷ்வர சுப்பையா.

நாகர்கோவில் அருகே தேரூர் தண்டநாயகன்கோணம் புதுக் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வர சுப்பையாவின் கதை வித்தி யாசமானது.  29 வயதே ஆகியிருந்த விக்னேஸ்வர சுப்பையாவுக்கு 2012-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி இரவில் ஏற்பட்ட ஒரு  விபத்து, அவரது வலது காலை உடைத்துப் போட்டுவிட்டது. இந்த விபத்து அவரை நிலைகுலையச் செய்தாலும், அதிலிருந்து மீண்டு ஒரு தன்னம்பிக்கை மிக்க சாதனையாளராக மாறிய அவர், அவர் போன்ற பலருக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

விக்னேஸ்வர சுப்பையாவிடம் பேசியபோது...

“நான்,  பிளஸ் 2 படித்து விட்டு  எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தேன். என்னிடம்  பத்துக்கும் மேற்பட்டோர்  வேலை செய்து கொண்டிருந்தனர்.

மது, புகைபிடித்தல் என எந்தக் கெட்டப்பழக்கங்களும் எனக்குக் கிடையாது. உடற்பயிற்சிக் கூடத்திற்கு  தினம்தோறும் சென்று உடலைப் பேணி வந்தேன்.   திருமணத்திற்காக பெண் பார்த்து நிச்சயம் செய்து பத்திரிகையும் அடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான் கருங்கல் என்ற இடத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த  என் மீது மீன்பாரம் ஏற்றிக் கொண்டு வந்த மினிலாரி மோதிவிட்டு  நிற்காமல் சென்றது.  இந்தச் சம்பவத்தில் எனது வலது கால் மூட்டிற்குக் கீழே முழுவதும் உடைந்து விட்டது. வாழ்வில் முக்கியமான கட்டத்தில் நடந்த இந்த விபத்து,  என் மனதையும் உடைத்துப் போட்டுவிட்டது.

அதே வேளையில்   உடைந்த காலை அறுவை சிகிச்சை செய்து பொருத்திக் கொள்ள நான் தயாராக இல்லை.   ஏனெனில் அப்படிப் பொருத்திக் கொண்டு வலியால் துடித்தும், ஆறாத புண்களுடனும் நடமாடுபவர்களை  நான் பார்த்திருக்கிறேன்.   எனவே எனது வலது கால் மூட்டிற்கு கீழே அகற்றப்பட்டது.

அதன் பிறகு கார்பன் ஃபைபர்   பாதம் கொண்ட செயற்கைக் காலை பொருத்திக் கொண்டு நடக்கத் தொடங்கினேன்.   நிச்சயிக்கப் பட்டிருந்த திருமணமும் இதனால்   நின்று போனது.

மீண்டும் உடற்பயிற்சிக்கூடத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். கடுமையாகப் பயிற்சி செய்தேன். விபத்து நடந்த எட்டே மாதத்தில்,  ஹைதராபாத்தில் ஏர்டெல்  நிறுவனம் சார்பில், நடைபெற்ற ஒரு மாரத்தான் போட்டியில் பங்கேற்கச் சென்றேன். செயற்கைக்காலுடன்  ஓடினேன். அந்த ஓட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்களுடன் மாற்றுத் திறனாளிகள் 15 பேர் பங்கேற்றனர்.

இதில் நான் உள்பட மாற்றுத் திறனாளிகள்  4 பேர் தாம் மொத்தம்  தூரமான 5 கி.மீ தூரத்தை ஓடி நிறைவு செய்தோம். இதில் என்னைப் பாராட்டிய “தக்சின் ரிகாபிலிடேசன்’ எனும்   நிறுவனம் ஓட்டத்திற் கென்றே வடிவமைக்கப்பட்ட  ரூ. 5 லட்சம் மதிப்பிலான   “ரன்னிங் பிளேடை’ எனக்குப் பரிசளித்தது. பிளேடைக் காலில் பொருத்திக் கொண்டு ஓடுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. நிறையத் தடவை இடறி விழுந்தேன். வலியாலும், ரத்தக்கசிவாலும் துடித்தேன். இருந்தாலும் நம்பிக்கை இழக்கவில்லை.   மாரத்தான், தடகளம் என ஓடிக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் இயல்பான கால்களைக் கொண்டவர்களுக்கு இணையாக  ஓட ஆரம்பித்தேன்.

அதன் பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளில் ஓடி பரிசுகளை வெல்வதில்  தயக்கம் ஏற்பட்டதால்,  இயல்பான கால்களையுடைவர்கள் பங்கேற்கும் போட்டிகளில் மட்டும் ஓட ஆரம்பித்தேன். அதனை இப்போதும் தொடர்கிறேன்.

என்னால் இப்போது 100 மீட்டர் தூரத்தை 13.5 விநாடியில் ஓடிக் கடக்க முடியும்.  தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல பிளேடு ரன்னர்  ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தான் எனது ரோல் மாடல்.

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக கொல்கத்தா முதல் டாக்கா வரை 360 கி.மீ. தொலைவு சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றி ருக்கிறேன். டிரக்கிங் எனப்படும் மலையேற்றப் பயிற்சிக்கும் செல்கிறேன்.

இதற்கிடையே நான்செய்துவந்த  எலக்ரிக்கல் பணியை தொடர முடியாது என்பதால் செல்லிடப் பேசி பழுது பார்க்கும் பயிற்சியை முடித்து நாகர்கோவிலில் செல்லிடப் பேசி பழுது பார்க்கும் கடையும் வைத்துக் கொண்டேன்.

கடந்த 2014 ஆம் ஆண்டு  எனக்குத்  திருமணம் ஆனது.  இப்போது எங்களுக்கு மீரா (3), அஸ்வின் ராம் (1) என இரு குழந்தைச் செல்வங்கள். வாழ்க்கை அழகாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.

ஒரு பிளேடு ரன்னராக வலம் வந்தாலும், காலை இழந்த பின்னரும் இயல்பாய் இயங்குவதன் மூலம் பிறருக்கு நம்பிக்கை அளிக்கும் மனிதராகவே என்னை அடையாளப்படுத்த விரும்புகிறேன். கால்களை இழந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கும் ஒரு நபராவது எனது   செயல்பாட்டைப் பார்த்து வெளியே வந்து வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சி தான்’’ என்றார்.

பள்ளிக்கு மைதானம் கிடையாது. விளையாடக் கற்றுக்கொடுக்க முழு நேரப் பயிற்சியாளர் கிடையாது. ஆனாலும், சாதித்துவருகின்றனர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள அரசம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்.

உயர்நிலைப் பள்ளியாக இருந்தாலும் 2011ஆம் ஆண்டுவரை உடற்கல்வி ஆசிரியர் என்று சொல்வதற்குக்கூட இங்கே யாரும் நியமிக்கப்படவில்லை. நீண்ட காலக் கோரிக்கைக்குப் பிறகு 2012ஆம் ஆண்டு பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக குருசாமி நியமிக்கப்பட்டார்.

இந்தப் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியரின் பயிற்சியால் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், வட்டு எறிதல், கபடி, நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் எனத் தடகளப் போட்டிகளில் இந்தப் பள்ளி மாணவர்கள் ஜொலிக்கத் தொடங்கினர். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த விளையாட்டுகளில் மாவட்ட, மண்டல அளவில் மாணவர்கள் பதக்கங்களைக் குவித்து வருவதே இதற்குச் சாட்சி.

சாதித்த மாணவிகள்

கடந்த ஆண்டு இப்பள்ளியில் படித்த மாணவி ஆர்.பிரியங்கா மாநில அளவிலான வட்டெறிதல் போட்டிக்கு மூன்று ஆண்டுகள் தகுதி பெற்றார். பிளஸ் 1 படிப்புக்காகத் தற்போது வேறு பள்ளிக்கு இடம்மாறியுள்ள பிரியங்கா, அங்கு மேற்கொண்டு முறையான பயிற்சி கிடைத்ததால் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார். மும்முறை தாண்டுதலில் ஏ.ரஞ்சனிபிரியா, நீளம் தாண்டுதலில் நந்தினி மாநில அளவிலான போட்டிகளுக்கு முன்னேறிப் பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். தற்போது 10ஆம் வகுப்பு பயிலும் மாணவி ர.சந்திரகௌரி அண்மையில் நடந்த மாவட்ட அளவிலான 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் வென்று மாவட்ட அளவில் தனிநபர் வாகையர் பட்டத்தைத் தட்டிவந்துள்ளார். இவருக்குத் தந்தை இல்லை. அவருடைய தாய் விவசாயம் செய்து சந்திரகவுரியைப் படிக்கவைத்து வருகிறார். விடுமுறை நாட்களில் ஆடு, மாடு மேய்க்கச் செல்லும்போதும் தனது பார்வையில் அவை மேய்ந்துகொண்டிருக்க, பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

ஏழ்மையை ஒரு தடையாக எண்ணாமல், தங்கள் விவசாய நிலத்திலேயே நீளம் தாண்டுதலுக்கான பாதையை ஏற்படுத்திப் பயிற்சி பெற்றுவருகிறார் சந்திரகவுரி.

ஜெர்சி எனப்படும் சீருடைகூட எங்கள் யாருக்கும் தனியாக இல்லை. போட்டிகளுக்குச் சென்று வந்த பிறகு, ஒருவர் பயன்படுத்திய சீருடையையே மற்றவர்கள் பயன்படுத்தி வருகிறோம். தரமான காலணிகள் வாங்கவும் காசு இல்லை. மைதானமும் இல்லாததால் தினமும் எங்களால் பயிற்சி பெற முடியவில்லை என்கின்றனர் இப்பள்ளி மாணவிகள்.

6 மணி நேரப் பயணம்

இந்தப் பள்ளியின் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியரான குருசாமி நினைத்திருந்தால், தனக்குக் கிடைக்கும் சொற்பச் சம்பளத்துக்குக் கடமைக்கு எதையாவது சொல்லிக்கொடுத்துவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் மாணவர்களின் திறமைகளை வளர்த்தெடுத்திருக்கிறார்.

பள்ளி இருக்கும் இடத்திலிருந்து 62 கி.மீ.க்கு அப்பால் உள்ள அன்னூரிலிருந்து தினமும் 6 மணி நேரம் செலவழித்துப் பள்ளிக்கு வருகிறார். அரை நாள் பயிற்சிதான். ஆனால், போக்குவரத்துக்காக அரை நாளைச் செலவழிக்கிறார் குருசாமி.

பள்ளி நாட்களில் விளையாடாமல், வகுப்புக்குள்ளேயே முடங்கிக் கிடந்தவர்களின் ஆர்வத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. சில நாட்களிலேயே எந்த மாணவர் எந்த விளையாட்டுக்குச் சரியாக இருப்பார் என்று தேர்வு செய்து அதற்கேற்றவாறு பயிற்சி அளித்தேன். மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். அதன் விளைவுதான் தடைகளைத் தாண்டி மாணவர்கள் பெற்ற தொடர் வெற்றிகள் என்கிறார் குருசாமி.

ஆனால், இதுபோன்ற பயிற்சியாளர்களையும் பயிற்சி பெற்றுப் பதக்கங்களைக் குவிக்கும் ஏழை மாணவர்களையும் ஊக்குவிக்க யாரும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இந்தப் பள்ளி மாணவர்களுக்கு உதவ விரும்புவோர் உதவித் தலைமை ஆசிரியர் வெங்கடாசலத்தை 9944641357 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


பொறியாளர் பணியிடங்கள்

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி) மத்திய அரசுத் துறையில் பொறியாளர்களுக்கான 581 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இன்ஜினீயரிங் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு குறித்த அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது.

வயது: 01.01.2019 அன்று, குறைந்தபட்ச வயது 21, அதிகபட்ச வயது 30. அரசு இடஒதுக்கீட்டு விதிமுறைகளின் படி வயது வரம்பில் சலுகை உண்டு. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பொறியியல் படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கட்டணம்: பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குக் கட்டண மில்லை. பிறருக்குக் கட்டணம் ரூ.200. உரிய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 22 அன்று மாலை 6 மணிக்குள் www.upsconline.nic.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Banner
Banner