இளைஞர்

தமிழக அரசின் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டிகளில் காலியாக இருக்கும் 30 ஜூனியர் இன்ஸ்பெக்டர் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: அதிகபட்சம் 48க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். காமர்ஸ் பிரிவில் பட்டப் படிப்போ அல்லது கோ-ஆப்பரேட்டிவ் பிரிவில் படிப்போ இருப்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பக் கட்டணம் : ரூ.150 கடைசி நாள் : 2018 நவ., 21.  விபரங்களுக்கு: www.tnpsc.gov.in/notifications/2018_28_notyfn_JICS.pdf

நேசனல் தெர்மல் பவர் கார்ப்பரேசன் லிமிடெட் என்பது எரிசக்தித் துறை சார்ந்த பொதுத் துறை நிறுவனமாகும். இது என்.டி.பி.சி., என்ற சுருக்கமான பெயரால் அனைவராலும் அறியப் படுகிறது. இந்த நிறுவனத்தில் டிப்ளமோ இன்ஜினியர் டிரெய்னி, அய்.டி.அய்., டிரெய்னி பிரிவில் காலியாக இருக்கும் 107 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிட விபரம்: டிப்ளமோ இன்ஜினியர் டிரெய்னி பிரிவிலான எலக்ட்ரிகலில் 15, மெக்கா னிக்கலில் 28, சி. அண்டு அய்.,யில் 10, சிவிலில் 2ம் காலியிடங்கள் உள்ளன. அய்.டி.அய்., டிரெய்னி பிரிவிலான பிட்டரில் 22, எலக்ட்ரீசியனில் 12, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் 8, லேப் அஸிஸ்டென்டில் 6, அசிஸ்டென்ட் மெட்டீரியல் ஸ்டோர் கீப்பரில் 4  காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: இன்ஜினியர் டிரெய்னி பிரிவு களுக்கு தொடர்புடைய பிரிவுகளில் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். அய்.டி.அய்., பிரிவுகளுக்கு தொடர்பு டைய பிரிவில் அய்.டி.அய்., படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

தேர்ச்சி முறை : ஆன்லைன் வாயிலான எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க: ஆன் லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 300

கடைசி நாள் : 2018 நவ., 24.

விபரங்களுக்கு: www.cbexams.com/ntpcreg2018/images/English.pdf

இந்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவதுதான் இன்டலிஜென்ஸ் பீரோ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு. நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கிய விபரங்களில் இந்த அமைப்பின் பணிகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. பெருமைக் குரிய இந்த அமைப்பில் செக்யூரிடி அசிஸ்டென்ட் (எக்சிக்யூடிவ்) பிரிவில் காலியாக இருக்கும் 1,054 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பகுதியிலான பிராந்திய மொழியறிவு தேவைப்படும். புலனாய்வு தொடர்புடைய பிரிவில் முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை உள்ளது. எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 கடைசி நாள் : 2018 நவ., 10.

விபரங்களுக்கு: https://mha.gov.in/sites/default/files/VacanciesSecurityAssistant_18102018.pdf

அரசுத்துறை சார்ந்த வங்கிகளில் பெங்களூ ருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் கனரா வங்கி . இதில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 800 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. போஸ்ட் கிராஜூவேட்  டிப்ளமோ இன் பேங்கிங் அண்டு பினான்ஸ் படிப்பின் மூலமாக இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளது. வயது: 2018 அக்., 1 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 20 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: அய்.பி.பி.எஸ்., நடத்தும் ஆன்லைன் வாயிலான எழுத்துத் தேர்வு மூலமாக இந்தஇடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப் பட்டு உள்ளது.

தேர்வு மய்யங்கள் : நாட்டின் பல்வேறு மய்யங் களில் நடத்தப்படும் இந்த ஆன்லைன் தேர்வினை தமிழகத்தின் கோவை, சென்னை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலுர், விருதுநகர் ஆகிய மய்யங்களில் எழுதலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 708.  கடைசி நாள் : 2018 நவ., 13. விபரங்களுக்கு: www.canarabank.com

தொழில்துறையில் செயற்கை மதிநுட்ப

அறிவியலின் பாய்ச்சல் நான்காம் தொழிற்புரட்சி எனப் படுகிறது. தற்போது உயர்கல்வி பயிலும் மாணவர்கள், படிப்பு முடிந்து வேலைவாய்ப்புச் சந்தையில் கால் வைக்கும்போது இந்தச் செயற்கை மதிநுட்பத்தின் வீச்சைத் திடமாக உணருவார்கள்.

செயற்கை மதிநுட்பம் போன்றே, அடுத்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்பு சந்தையின் மய்யமாக விளங்கவிருக்கும் பல்வேறு நுட்பங்கள் குறித்து அறிந்துகொள்வதும் அவற்றில் தமக்கானதை அடையாளம் கண்டு திறன்களை வளர்த்துக் கொள்வதும் உயர்கல்வி மாணவர்களுக்கு அவ சியம். அறிவியல், பொறியியல் துறை மாணவர்கள் மட்டுமின்றி பிற துறை மாணவர்களும் இந்தத் திறன்கள் பற்றி அறிந்திருப்பது சமயத்தில் கை கொடுக்கும்.

மேம்பட்ட மூளையின் செயல்

சிந்தனைத் திறன் அடிப்படையிலான மனிதர் களின் செயல்பாடுகளை அச்சு அசலாகப் பிரதிப லிக்கும் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் செயற்கை மதிநுட்பம். இந்தச் செயற்கை மதிநுட்பத் தின் நீட்சியாகவும் அதன் வெற்றிகரமான பயன் பாடுகளில் முதன்மையானதாகவும் வளர்ந்தி ருப்பதே இயந்திரக் கற்றல் (மிசின் லேர்னிங்) எனப்படும் இயந்திரக் கற்றல்.

வழக்கமாகக் கணினியில் பதிவுசெய்யப்படும் தரவுகளின் அடிப்படையிலே அதன் செயல்பாடும், நமது அய்யங்களுக்கான பதில்களும் அமைந்தி ருக்கும். ஆனால், உள்ளீடு செய்யப்படாத தகவல் தொடர்பான ஒரு கேள்விக்கு, தனது அதுவரையிலான அனுபவங்களில் இருந்து புதிதாகப் பதிலளிக்குமாறு செயல்படுத்துவதே இயந்திரக் கற்றலின் அடிப்படை. இந்த வகையில் மேம்பட்ட அல்காரிதம், அதிகப்படி தரவுகள் உதவியுடன் மனித மூளை ஆற்றும் திறன்களை ஓர் இயந்திரத்திடம் பெற முடியும்.

சைபர் செக்யூரிட்டி, டேட்டா அனலிடிக்ஸ், சுயமாகச் செயல்படும் தனித்துவ இயந்திரங்கள், உபகரணங்களைத் தயாரிப்பது போன்றவைக்கு மிசின் லேர்னிங் பயின்றவர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். இவை தவிர்த்து மருத்துவம், வாகன உற்பத்தி போன்ற துறைகளில் இவர்களின் தேவை அதிகரித்துள்ளது.

நம் நாட்டில் மிசின் லேர்னிங் பயின்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, புதிதாக அந்தத் துறையில் காலடி வைப்பவர்களுக்கான நற்செய்தி!. இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கான பெங்களூரு வில் மட்டும் மிசின் லேர்னிங் புரோகிராமிங் பயின்றவர்கள் 4 ஆயிரம் பேர் தேவை எனக் கடந்தாண்டு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

எங்குப் பயிலலாம்?

மிசின் லேர்னிங்கை முழுநேர முதுநிலைப் படிப்பாகப் பெறப் பல முன்னணிக் கல்வி நிலை யங்கள் உதவுகின்றன. அய்.அய்.டி. கல்வி நிறுவ னங்கள், திருவனந்தபுரம் அய்.அய்.எஸ்.டி. போன் றவை மிசின் லேர்னிங்கை எம்.டெக். படிப்பாக வழங்குகின்றன. பெரு நகரங்களில் செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் சில வாரப் பயிற்சியாக வழங்குகின்றன. இவற்றைப் பயில அடிப்படையான பட்டப் படிப்பு அவசியம்.

இணையத்தில் துறை முன்னோடிகள் பலர் இலவசமாகவே கற்றுத் தருகின்றனர். மிஷின் லேர்னிங் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளவும் ஆரம்பப் பாடங்களைப் பயிலவும் பல தளங்கள் உதவுகின்றன.

இணைய வழிகாட்டல்

# மிசின் லேர்னிங் ஓர் அறிமுகம்:https://bit.ly/2NVSG9H, https://bit.ly/2Dha2K9.

# செயற்கை மதிநுட்பத் துறை ஆய்வாளர்கள் வழிகாட்டலுக்கு://bit.ly/2yMBPfW

# மிசின் லேர்னிங் குறித்த மேம்பட்ட படிப்புக்கு:https://bit.ly/2yptYWn

# பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் யூ டியூப் வாயிலாக வழங்கும் பயிற்சிகளைப் பெற: https://bit.ly/2DdPFNO, https://bit.ly/2ppcyUH.

Banner
Banner