இளைஞர்

பொறியாளர்களுக்கு என்.எல்.சி.யில் பணியிடங்கள்

பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 100 கிராஜூவேட் எக்சிகியூடிவ் பயிற்சி டிரெயினி பணியிடங்கள் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப் பிக்கும் விண்ணப்பதாரர் 1.12.2016 தேதியன்று 30 வயதுக் குள் இருக்க வேண்டும். இப்பணியில் சேருவோருக்கு ரூ.16,400 முதல் 40,500 வரை ஊதியம் வழங்கப்படும்

பணி விவரங்கள்

துறை: மெக்கானிக்கல், காலியிடம்: 50 கல்வித்தகுதி: பி.இ. / பி.டெக்.- மெக்கானிக்கல்.

துறை: எலக்ட்ரிக்கல், காலியிடம்: 15 கல்வித்தகுதி: பி.இ. / பி.டெக்.- எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்.

துறை: எலக்ட்ரானிக்ஸ், காலியிடம்:5 கல்வித்தகுதி: பி.இ. / பி,டெக். - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்.

துறை: சிவில், காலியிடம்: 10 கல்வித்தகுதி: பி.இ. / பி,டெக். -சிவில் / சிவில் மற்றும் ஸ்டிரக்சுரல் இன்ஜி னியரிங்.

துறை: கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ரு மென்டேஷன், காலியிடம்: 5 கல்வித்தகுதி: பி.இ. / பி.டெக். - இன்ஸ்ட்ருமென்டேஷன் / எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் / இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினியரிங்.

துறை: மைனிங், காலியிடம்: 10, கல்வித்தகுதி: பி.இ. / பி.டெக்.- மைனிங் இன்ஜினியரிங்.

துறை: கம்ப்யூட்டர், காலியிடம்:5 கல்வித்தகுதி: பி.இ. / பி.டெக். - கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் / கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் / இன்பர்மேஷன் டெக் னாலஜி.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: இந்த ஆண்டு நடைபெறவுள்ள கேட்-2017 தேர்வில் பெறும் மதிப்பெண், நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்தி ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பட்டியல் பிரிவினர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணத்தில் விலக்களிக்கப் படுகிறது. விண்ணப்பத்தில் கேட் பதிவு எண்ணைக் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 6.1.2017 முதல் 31.01.2017 வரை.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: www.nlcindia.com

தொடர்பு கொள்ள: 04142 -255135. இந்த உதவி எண்ணைக் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைநாட்களில் அழைக்கலாம்.


மேட்டூர் அணை தொழிற்பயிற்சி நிலையத்தில்
உதவியாளர் பணியிடங்கள்


மேட்டூர் அணை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டத்தின் கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் உதவி யாளர் பணிக்கு தகுதியான ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பொதுப் பிரிவு அடிப்படையில் ஆள்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஏதாவது பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினிப் பயிற்சி (குறைந்தது 6 மாதம் பெற்றிருக்க வேண்டும்).

நிறைவு செய்த விண்ணப்பங்களை ஜனவரி 13- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மாதையன்குட்டை அஞ்சல், மேட்டூர் அணை-636452. தொலைபேசி எண் 04298-244065.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலைய
பயிற்றுநர் பணியிடங்கள்

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட இரு தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள பயிற்று நர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீஷியன், மெக்கானிக்(“ரெஃப்ரிஜிரேஷன்’, “ஏர் கன்டிஷனிங்’) ஆகிய இரு பிரிவுகளில் தலா இரு காலிப் பணியிடங்கள் உள்ளன.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அடிப்படைக் கல்வியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப் பிரிவினர் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 37 வயதுக்குள்ளும், தாழ்த்தப்பட்டோர் 40 -வயதுக் குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இவர்களுக்கு தொகுப் பூதிய அடிப்படையில் மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் “துணை இயக்குநர் -முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வடசென்னை - 600021’ என்ற முகவரிக்கு வரும் 27 -ஆம் தேதிக்குள் (ஜன.27)விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து 044-2520 9268 என்ற எண்ணில் கூடுதல் தகவல்களை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓய்வுபெற்ற காவலர்களுக்கு
கணினி இயக்குநர் பணியிடங்கள்

காவலர் கேன்டீனில் கணினி இயக்குநர் பணிக்கு, ஓய்வுபெற்ற காவலர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் காவல் துறை சார்பில் செயல்பட்டு வரும் கேன்டீனில், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தெரிந்த கணினி இயக்குநர் பணியிடத்துக்கு ஓய்வுபெற்ற காவல் துறையைச் சேர்ந்த ஒருவர்,

தாற்காலிகமாக மாதம் ரூ. 7 ஆயிரத்து 500 ஊதியத்தில் பணிய மர்த்தப்பட உள்ளார்.

எனவே, இப் பணியிடத்துக்கு தகுதியுள்ள ஓய்வுபெற்ற காவல் துறையினர் தங்களது சுயவிவரக் குறிப்புடன் விருப்ப  மனுவை, வரும் ஜன.7-ஆம் தேதிக்குள் மாவட்டக் காவல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

Banner
Banner