இளைஞர்

 

விந்தையானது, புதிரானது, அளவிட முடியாதது, அடக்க முடியாதது, புரிந்துகொள்ள முடியாதது என மனிதனின் மனம் பற்றி விவரித்துக்கொண்டே செல் லலாம். அந்த மனதைப் பற்றியும் அதன் சிந்தனை வீச்சைப் பற்றியும் அதன் எண்ண ஓட்டங்கள் பற்றி யும் தெரிந்துகொள்ள முயல்வதுதான் உளவியல்.

 

எம்.பி.பி.எஸ். படித்த பிறகு படிக்கக்கூடிய மனநல மருத்துவமானது  Psychiatry எனப்படுகிறது. மறுபுறம் பிளஸ் டூ முடித்து உளவியல் படிப்பைக் கலை அறிவியல் பாடமாகவும் படித்துப் பட்டம் பெறலாம்.

B.Sc Psychology, B.A. Psychology  ஆகிய உளவியல் படிப்புகளைக் கல்லூரிகளில் மட்டுமின்றி இணையம் வழியாகவும் படிக்கலாம். அதுவும் இலவசமாகக் கற்றுக்கொடுக்க பல இணைய வகுப்புகள் உள்ளன. அத்தகைய வகுப்புகளில் ஒன்று, https://www.edx.org/learn/psychology

விருப்பதுக்கு ஏற்ப

உளவியல் என்பது ஆழமான கடலைப் போன்றது. அந்தக் கடலின் அடிமட்டம்வரை செல்வதற்கான வகுப்புகளும் வழிமுறைகளும் உள்ளன. உளவியலின் பல கூறுகளை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் நேரடியாக இங்கே கற்றுக்கொடுக்கின்றன. இதன் வகுப்புகள் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி சிக்கலற்ற மொழி நடையில் சுவாரசியமாக இருக்கும்படி வடிவமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரின் தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப வகுப்புகள் இருப்பதுதாம் முக்கியச் சிறப்பு.

உளவியல் பிரிவுகள்

கிளினிக்கல், டெவலப் மெண்டல், சோஷியல் என உளவியலை மூன்று வகைக்குள் அடக்கிவிட முடியும். மனநல பாதிப்புகள் பற்றியும் அவற்றின் சிகிச்சை முறைகள் பற்றியும் கிளினிக்கல் சைக்காலஜியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

கிளினிக்கல் சைக்காலஜி படிப்பவர்களால், நோயாளிகள் என்ன வகை மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். பாதிப்புக்கு உள்ளானவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் அவர்களால் தெரிந்துகொள்ள முடியும்.

டெவலப்மெண்டல் சைக்காலஜியில் சமூக இயல்பு, மனித உணர்வுகள், சிந்தனையின் தொடர் கண்ணிகள், எண்ணத் தெளிவின் அளவு ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. குழந்தை வளர்ப்பில் இந்தப் பிரிவின் பங்கு முக்கியமானது.

சமூகத்துக்கும் தனி மனிதனுக்கும் உள்ள உறவு பற்றியும் மனிதன் எப்படித் தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் சிந்திக்கிறான் என்பது குறித்தும் சரி - தவறு ஆகிய கற்பிதங்கள் எப்படி உருவாக்கப் படுகின்றன என்பதைப் பற்றியும் சோஷியல் சைக்காலஜியில் கற்பிக்கப்படுகிறது. மனிதனின் சிந்தனை முறை, சமூகத்தில் மனிதன் இயங்கும் முறை உள்ளிட்டவை இதில் அலசி ஆராயப் படுகின்றன.

வகுப்புகளின் வடிவமைப்பு

உளவியல் குறித்த எளிதான அறிமுகத்துடன் வகுப்புகள் தொடங்குகின்றன. அதன்பின் உளவியலின் பிரிவுகள் விளக்கப்படுகின்றன. பின் அந்தப் பிரிவுகளின் உட்கூறுகள் தனித்தனியாக விவரிக்கப்படுகின்றன. பின் அந்த உட்கூறுகளின் பயன்பாடுகள் தனித்தனியே உணர்த்தப்படுகின்றன.

ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் சிறு தேர்வு ஒன்று நடத்தப்படுகிறது. இறுதியில் ஒட்டுமொத்தமாக ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. அந்தத் தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் உங்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. சில பல்கலைக்கழகங்கள் டிப்ளமோ பட்டத்தையும் இளநிலைப் பட்டத்தையும் உயர்நிலைப் பட்டத் தையும்  மூலம் அளிக்கின்றன.

வேலை வாய்ப்புகள்

கூட்டுக் குடும்ப அமைப்பில் மனநல மருத்துவம் என்பது மக்களுக்குத் தேவையற்றதாகக் கருதப் பட்டது. இன்று சாய்வதற்கும் ஆறுதல் பெறுவதற்கும் தேவையான தோள்களை மனநல ஆலோசகரிடமோ மனநல மருத்துவரிடமோ இளைய தலைமுறையினர் தேடுகின்றனர்.

தலை வலிக்கும் காய்ச்சலுக்கும் மருத்துவரை அணுகுவது போன்று சிறு சிறு பிரச்சினைகளுக்கும் மனநல மருத்துவரையோ உளவியலாளரையோ அணுகும் போக்கு அதிகரித்துள்ளது.

பல பிரச்சினைகளுக்கான தீர்வு, சார்பற்றுக் கேட்கும் திறன் கொண்ட காதுகள்தாம். பிரச் சினைகளுக்கு இன்று பஞ்சம் இல்லை என்பதால், சார்பற்றுக் கேட்கும் தன்மையுள்ள காதுகளை உருவாக்கும் உளவியல் படிப்புக்கும் அது தொடர் பான வேலைவாய்ப்புக்கும் பஞ்சம் இல்லை.

தமிழக அரசு அதிகாரிப் பணியிடங்கள்

தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிக் கையைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது.

இந்தத் தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் சார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர், நக ராட்சி ஆணையர் உள்ளிட்ட பல பதவி களைப் பெறுவதற்கான வாய்ப்பு பட்டதாரி களுக்கு உண்டு. மொத்தம் 1,199 காலிப் பணி யிடங்கள் நிரப்பட உள்ளன. உரிய தகுதி யுடைய விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 9 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்: நிரந்தரப் பதிவுக் கட்டணம்: ரூ. 150

முதல்நிலைத் தேர்வுக் கட்டணம்: ரூ. 100

முதன்மைத் தேர்வுக் கட்டணம்: ரூ. 150

எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற கைம்பெண்கள் ஆகியோர் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கட்டணத்தை ஆன்லைன் வழியே கட்ட வேண்டும்.

வயது: பதவிகளுக்குத் தக்க வயதுத் தகுதி மாறுபடுகிறது. குறைந்தபட்ச வயது 18, அதிக பட்ச வயது 40 வரையும் உள்ளது. எஸ்.சி., எஸ்.சி., (அருந்ததியர்) எஸ்.டி., எம்.பி.சி., சீர் மரபினர், பி.சி., பி.சி. (முஸ்லிம்), ஆதரவற்ற கைம்பெண்கள் ஆகிய பிரிவினருக்கு உச்ச பட்ச வயது வரம்பு எதுவுமில்லை.

மாற்றுத் திறனாளிகளுக்கு உச்சபட்ச வயது வரம்பில் பத்து ஆண்டுகள் சலுகை வழங்கப்படுகிறது.

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் ஒன்றில் இளநிலைப் பட்டம் பெற் றிருக்க வேண்டும். பதவிகளைப் பொறுத்து பட்டம் பெற்றிருக்க வேண்டிய பாடம் வேறுபடுகிறது. கல்வி குறித்த முழு விவரமறிய அறிவிக்கையைப் பாருங்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகிய வற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

உரிய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/www.tnpscexams.net/www.tnpscexams.in ஆகிய இணையதளங்களின் வழியே ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இறுதி நாள்: 09.09.2018. முதல்நிலைத் தேர்வு நாள்: 11.11.2018

கூடுதல் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/

எல்.அய்.சி. வீட்டுவசதி நிதி நிறுவன காலிப் பணியிடங்கள்

எல்.அய்.சி.-யின் சார்பு நிறுவனமான எல்.அய்.சி. வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் உதவியாளர், அசோசி யேட், உதவி மேலாளர் ஆகிய பதவிகளில் 300  காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

தேவையான தகுதி

உதவியாளர் பதவிக்கு 55 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பும், அசோசியேட்  பதவிக்கு 60 சதவீத மதிப்பெண்ணுடன் சி.ஏ. இன்டர் தேர்ச்சியும், உதவி மேலாளர் பதவிக்கு 60 சதவீத மதிப்பெண்ணுடன் கூடிய பட்டப் படிப்பு மற்றும்  முழுநேர எம்.பி.ஏ. படிப்பும் கல்வித் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதோடு அனைத்து பதவி களுக்கும் அடிப்படை கணினி அறிவும் அவசியம். வயது  வரம்பு 28.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.  ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், ரீசனிங், பொது அறிவு, அடிப்படை கணிதத் திறன் ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும்.

மதிப்பெண் 200. தேர்வு நேரம் 2 மணி. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இறுதியாக எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண், நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

ஊதிய விவரம்

உதவியாளர் பணிக்கு ஆரம்ப நிலையில் தோராயமாக ரூ.23 ஆயிரமும் அசோசியேட் பதவிக்கு ரூ.34 ஆயிரமும் உதவி மேலாளருக்கு ரூ.53 ஆயிரமும் கிடைக்கும். சம்பளத்துடன் மதிய உணவுப்படி, வருங்கால வைப்புநிதி, மருத்துவக் காப்பீடு, பணிக்கொடை, குழு காப்பீட்டுத்திட்டம், வீட்டுவசதி கடனுதவி, ஊக்கத்தொகை எனப் பல்வேறு சலுகைகளும் உண்டு.

உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் உடைய பட்டதாரிகள் எல்.அய்.சி. வீட்டுவசதி நிதி நிறுவனத்தின் இணைய தளத்தைப்  (ஷ்ஷ்ஷ்.றீவீநீலீஷீusவீஸீரீ.நீஷீனீ) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

ஆசிரியப் பணி என்பதை அறப் பணி என் பார்கள். அதிலும் சிறப்புக் குழந்தைகளுக்கு ஆசிரியராகும்போது, அந்த ஆசிரியப் பணி முழுமையடைகிறது. சிறப்புக் குழந்தைகள் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் தற்போது அதிகரித்து வரும் சூழலில் அவர்களுக்கான ஆசிரியராகும் தகுதியை வளர்த்துக்கொள்வோருக்குச் சிறப்பான ஊதியமும் மன நிறைவும் கொண்ட பணிவாய்ப்பும் காத்திருக்கின்றன.

காத்திருக்கும் வாய்ப்புகள்

மனம், உடல் பாதிப்பு அடிப்படையில் சிறப்புக் குழந்தைகள் மருத்துவ ரீதியாக அடையாளம் காணப்படுகிறார்கள். பெற்றோரால் கூடப் போதிய அரவணைப்பை வழங்க இயலாத இந்தக் குழந் தைகளைப் பராமரித்து, அவர்களின் தடுமாற்றங் களை உள்வாங்கி, திறன்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பு சிறப்பு ஆசிரியரைச் சாரும்.

இதனாலேயே வெளிநாடுகளில் பொதுவான ஆசிரியர்களைக் காட்டிலும் சிறப்பு ஆசிரியர் களுக்கு ஊதியம் அதிகம். நம் நாட்டில் இந்த விழிப் புணர்வையும் சிறப்பு ஆசிரியர்களின் முக்கியத்துவத் தையும் நகரப் பகுதிகளில் உணரத் தொடங்கி உள்ளனர். இந்த வகையில் அதிகரித்து வரும் சிறப்புப் பள்ளிகள், அரசு சார்பிலான அதிகரிக்கும் பணி வாய்ப்புகள் ஆகியவற்றை உத்தேசித்து அவை தொடர்பான கல்வித் தகுதிகளை வளர்த்துக் கொள்வது விரைவில் பயனளிக்கும்.

தற்போதைக்குத் தன்னார்வ அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசுத் துறைகள், பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாசிரியர்களுக்கான பணியிடங்கள், தனியார் சிறப்புப் பள்ளிகள், பராமரிப்பு மய்யங்கள், சிறப்புப் பயிற்சியாளர்கள், எனப் பரந்த பணி வாய்ப்புகள் சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்பாசிரியர்களுக்குக் காத்திருக்கின்றன.

டிப்ளமோ படிப்புகள்

பிளஸ் டூ முடித்ததும் ஆசிரியப் பணிக்கான D.T.Ed பட்டயப் படிப்பை மேற்கொள்வது போலவே, சிறப்புக் குழந்தைகளுக்கான D.S.E. (Diploma in Special Education)
எனப்படும் சிறப்புக் கல்விக்கான பட்டயப் படிப்பையும் பெறலாம். சிறப்புக் குழந்தைகளின் பல்வேறு பாதிப்புகளைப் பொறுத்து இந்தப் பட்டயப் படிப்புகளின் உட்பிரிவு களில் சேரலாம்.

உதாரணத்துக்கு, மனவளர்ச்சி குன்றியவர்கள், செரிபரல் பால்ஸி, ஆட்டிசம், கற்றல் குறைபாடு, ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள், செவித்திறன் குறைபாடு, பார்வைக் குறைபாடு எனத் தொடங்கி அவை நீளுகின்றன.

இரண்டாண்டுப் படிப்பில் முதலாமாண்டு அனைவருக்கும் பொதுவாகவும் இரண்டாமாண்டில் குறிப்பிட்ட பாடப் பிரிவைச் சார்ந்தும் பாடத்திட்டம் அமைந்திருக்கும். இந்தியப் புனர்வாழ்வு கவுன்சி லின் (Rehabilitation Council of India- http://www.rehabcouncil.nic.in/) அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இவற்றைப் படிக்கலாம். இவற்றில் பல்வேறு படிப்புகளைத் தொலைநிலைக் கல்வியாகவும் பெறலாம். ஆசிரியர் பணிக்குத் தங்களைத் தயார் செய்பவர்கள், வழக்கமான படிப்பு களுடன் கூடுதலாக இந்தப் பட்டயப் படிப்பையும் மேற்கொண்டு தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ளலாம்.

பி.எட். படித்தல் சிறப்பு

பட்டயப் படிப்பைப் போன்றே பட்டப் படிப் பாகவும் சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர் தகுதியைப் பெறலாம்.  ,   என பி.எஸ்சி. பட்டமாகவும் இவற்றைப் பெறலாம். சிறப்பாசிரியர்களுக்கான பி.எட். பட்டத்தைப் பெறுவதில் ஆசிரியப் பணிக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்குக் கூடுதல் பயன் உண்டு. எந்தத் துறையில் பட்டப் படிப்பு முடித்த வர்களும் தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் வாயி லாகச் சிறப்பாசிரியருக்கான பி.எட். படிப்பில் சேரலாம். பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அரசுப் பள்ளி ஆசிரியர் ஆகலாம்.

அரசுப் பணி தாமதமானால் தனியார் பள்ளி அல்லது சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளிகளில் ஆசிரியர் ஆகலாம்.

மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த சிறப்பாசிரியர் பணியிடங்களுக்குத் தொகுப்பூதியம் மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது. மற்றபடி சிறப்புப் பள்ளிகளில் தலா 2 ஆசிரியர் பணியிடங் களும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அரசுப் பணியிட மாகப் பள்ளிக்கு ஓர் ஆசிரியர் பணியிடமும் வாய்ப்புகளாக உள்ளன.

இந்தச் சிறப்பாசிரியர் பி.எட். சேர்க்கையில் மாற்றுத் திறன் அடைவைப் பொறுத்து முன்னுரி மைகள் உண்டு.  விண்ணப்பதாரர் மாற்றுத் திறனாளி யாக இருந்தாலோ அவருடைய பெற்றோர் மாற்றுத் திறனாளி என்றாலோ 10 மதிப்பெண்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனப் பணியிடங்கள்

டி.ஆர்.டி.ஓ. என்று அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் 494 முதுநிலைத் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்  நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

இதற்கு பி.எஸ்சி. (விவசாயம், இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உளவியல், ஜியாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ்) பட்டதாரிகளும், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் கெமிக் கல், எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் உள்ளிட்ட பாடங்களில் டிப்ளமா முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5ஆண்டுகளும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 5  ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியா னோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு தேர்வுகளை உள்ளடக்கியது. இரு தேர்வுகளுமே ஆன்லைன் வழியில்தான் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் அடிப்படை கணிதம், ரீசனிங், பொது அறிவு, அடிப்படை ஆங்கிலம், பொது அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து 150 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 150. தேர்வு நேரம் 120 நிமிடம்.

முதல்நிலைத் தேர்வு தமிழகத்தில்  சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப் படுவார்கள். ஒரு காலியிடத்துக்கு 10 பேர் என்ற விகிதாச்சாரத்தில் இந்த எண்ணிக்கை அமைந்திருக்கும்.

மெயின் தேர்வில், சம்பந்தப்பட்ட  பாடப்பிரிவில் இருந்து 100 கேள்விகள் கேட்பார்கள். மொத்த மதிப்பெண் 100. தேர்வு நேரம் 90 நிமிடம். எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர்  அறிவிக்கப்படும். முதுநிலைத் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு ஆரம்ப நிலையில், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும். பதவி உயர்வுக்கான  வாய்ப்புகள் அதிகம்.

தகுதியுடைய பி.எஸ்சி. பட்டதாரிகள், பொறியியல் டிப்ளமா முடித்தவர்கள் டி.ஆர்.டி.ஓ. இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.பீக்ஷீபீஷீ.ரீஷீஸ்.வீஸீ) விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29 ஆகஸ்ட் 2018

பி.எஸ்சி., டிப்ளமா முடித்தவர்களுக்கான வாய்ப்பு இது.

பொறியியல் பட்டதாரிகளும், எம்.எஸ்சி. பட்டதாரிகளும் விண்ணப்பிக்க இயலாது.

அரிதான நரம்பு பாதிப்பு நோயாளிகளுக்கு ஆதரவுக் கருவி வடிவமைப்பு

சிவநாடார் அறக்கட்டளையின் முதல் முன்முயற்சியாக அரிதான நரம்பியல்நோயால் பாதித்து தசைகளின் இயக்கம் தடைபட்ட நோயாளிகளுக்கு (ஏ.எல்.எஸ்.,) குறைந்த விலையில், குறைந்த எடையிலான ஆதரவு கருவியை இதனை கல்வி நிறுவனத்தின் உயிரி மருத்துவ பொறியியல்துறை உதவி பேராசிரியர் எம்.தனலட்சுமி  தனது மாண வர்கள் எஸ்.விஸ்வநாதன்,  ஜி.பிரவீன்குமார் ஆகியோருடன் இணைந்து உருவாக்கியுள் ளார்.

ஏஎல்எஸ் எனப்படும் அரிதானநரம்பு பாதிப்புநோயானது, முளையில் உள்ள சிறு நரம்புகளின் இயக்கத்திலும், முதுகுத்தண்டு வடத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால், தலையானது நிமிர்ந்த நிலையில் இல்லாமல் தொங்கிய நிலைக்குச் செல்கிறது.

இதனைப் போக்க இப்போதுகருவிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தக் கருவிகளின் மூலம் கழுத் தினை திருப் புதல் போன்ற செயல் பாட்டுகளை மேற் கொள்ள முடியும்.  ஆனால், இந்தக் கருவி களால் புழுக் கம், தோலில் எரிச்சல், அதிகம் சூடாவது, கழுத்தில் வலி போன்ற பல்வேறு பிரச்சினை கள் ஏற்படுகின்றன.

ஆனால், எஸ்எஸ் என் கல்விகுழுமம் வடிவமைத்துள்ள கருவியானது குறைந்த விலையுடன்,  எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் இருப்பதுடன் இப்போது சந்தையில் உள்ள கருவிகளால் ஏற்படும் பல்வேறு பிரச் சினைகளில் இருந்து விடுதலை அளிக்கிறது.

மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி குறித்து, எஸ்எஸ்என் கல்வி நிறுவனத்தின் தலைவர் கலாவிஜயகுமார் கூறி யதாவது:- கல்லூரியில் மாண வர்கள் சேர்ந்த உடனே யே ஆராய்ச்சி தொடர்பான அவர் களது  அறிவை ஊக்குவிக்கும் வகை யில் வாய்ப்புகளை வழங்குகிறது.

சமூகத்துக்கு மிகவும் பயன் அளிக்கக் கூடிய வகையிலான தயாரிப்பு களை எங்களது மாணவ - மாணவிகள் தயாரித்து வருவது மனதுக்கு மிகுந்த நெகிழ்வையும், மகிழ்ச்சி யையும் தருகிறது. ஒருலட்சம் இந்தியர்களுக்கு இடையே 5 பேர் ஏஎல்எஸ்., எனப்படும் அரியவகை நரம்பு பாதிப்பு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்காக, எஸ்எஸ்என் கல்வி நிறுவனம் கண்டறிந்துள்ள இந்தப் புதியகருவியானது விலையிலும், பயன்பாட்டிலும் ஏற்ற வகையில் இருப்பதுடன் நோயாளிகளின் வாழ்க்கையில் மிகுந்த பயனைத் தரும் என நம்புகிறோம் என்றார்.

இந்தியாவின் அஞ்சல் தொடர்புத் துறையின் மய்ய அச்சாக விளங்கும் இந்திய அஞ்சல் துறை இந்தியா போஸ்ட் என்று அனைவராலும் அறியப்படுகிறது. சமீப காலங்களில் அஞ்சல் சேவையுடன் சேர்த்து இன்ன பிற சேவைகளையும் சேர்த்து ஒரே இடத்தில் வழங்கும் புதிய அவதாரத்தையும் இத்துறை எடுத்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் போஸ்ட் ஆபிஸ் பேமென்ட்ஸ் பேங்க். இதில் காலியாக உள்ள இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: போஸ்ட் ஆபிஸ் பேமென்ட்ஸ் பேங்கில் மொத்தம் 47 காலியிடங்கள் உள்ளன. இவை டாக்சேசன், பினான்சியல் பிளானிங் அண்டு பட்ஜெட்டிங், அட்மினிஸ்ட்ரேஷன், எச்.ஆர்., ரிஸ்க் பேஸ்டு ஆடிட், கன்கரன்ட் ஆடிட், வென்டார் பெர்பார்மன்ஸ் மேனேஜ்மென்ட், ரிகன்சிலியேசன், யூசர் எக்ஸ்பீரியன்ஸ், புராடக்ட் ரிசர்ச், அனலிடிக்ஸ், ரீடெய்ல் புராடக்ட்ஸ், கம்ப்ளயன்ஸ் சப்போர்ட், ஆப்பரேசனல் ரிஸ்க், டிஜிட்டல் டெக்னாலஜி, ஆகிய பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன.

வயது: விண்ணப்பிப்பவர்கள் 23 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சிறப்புப் பணி தேர்வுகளை உள்ளடக்கிய பதவிகள் என்பதால் விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 750.

கடைசி நாள்: 2018 ஆக., 15.

விபரங்களுக்கு:: https://ippbonline.com/web/ippb/current-openings

கதை சொல்லி மாணவர்கள்

அடிப்படைவசதி, கல்வி, பொருளாதார நிலை இப்படி எல்லாவற்றிலும் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு நம்மால் முடிந்த திறன்களைச் சொல்லிக் கொடுப்போம் என்னும் நோக்கத்தோடு, பயணம் அறக்கட்டளையை பாஸ்கர், விநோத் உள்ளிட்ட சில நண்பர்கள் கடந்த 2012இல் தொடங்கினர்.

இந்தச் சமூகத்திலிருந்து நமக்குக் கிடைத்த நல்ல விஷயங்களை விளிம்புநிலை குடும்பங்களில் இருந்து வரும் கிராமப்புற மாணவர்களுக்குத் தருவதற்காக எங் களின் பயணத்தைத் தொடங்கினோம். கடந்த அய்ந்து ஆண்டுகளாக திருநீர்மலையை அடுத்துள்ள வழுதலம்பேடு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குக் கல்வி, விளையாட்டு, தனித் திறன் பயிற்சிகளை வழங்கிவருகிறோம் என்கிறார் பயணம் அமைப்பின் நிறுவனர் பாஸ்கர்.

கதைசொல்லி மாணவர்கள்

பள்ளிப் பாடங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துவைப்பது, ஓவியம், நடனம், இசை போன்ற கலைகளில் அவர்களின் திறனை வளர்ப்பது, சுற்றுப்புறத் தூய்மையின் அவசியத்தைப் புரியவைப்பது, கணினிப் பயிற்சி, கதைகளைக் கேட்பதோடு மாணவர் களையே கதைசொல்லிகளாக மாற்றுவது போன்ற பல்வேறு பணிகளைச் செய்கிறது இந்த அமைப்பு.

அதுமட்டுமின்றி, மாணவர்களின் பல்வேறு கலைத் திறனை வெளிப்படுத்தும் போட்டிகளை நடத்திப் பரிசளிப்பது, ஆங்கிலம் பேசுவதற்கு ஏற்படும் தயக்கத்தைப் போக்குவது, மாணவர்கள் விரும்பும் பல்வேறு விதமான விளையாட்டுகளில் அந்தந்த விளையாட்டு நிபுணர்களைக் கொண்டே பயிற்சி அளிப்பது, பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளை அடிக்கடி நடத்துவதன்மூலம் அவர்களுக்கு இடையே பாலமாக இருப்பது என இவர்களுடைய பணி நீள்கிறது.

இதுதவிர, ஆதரவற்ற இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்குத் தேவைப்படும் சமையல் பொருட்களையும் வாங்கித் தருகின்றனர். ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் தாய், தந்தை இருவரில் ஒருவரை மட்டுமே கொண்டிருக்கும் 30 குழந்தைகளின் கல்விக் கட்டணங்களை இவர்கள் செலுத்திப் படிக்கவைக்கின்றனர். எங்களின் உதவியோடு படித்துப் பட்டம் வாங்கித் தற்போது பணியில் இருப்பவர் களும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் பாஸ்கர்.

இணைந்த கைகள்

நான்கு அய்ந்து நபர்களால் தொடங்கப்பட்ட பயணம், சீரிய செயல்பாட்டின் மூலமாக அடுத்தடுத்துக் கல்லூரி மாணவர்களை ஈர்த்து, அவர்களையும் இந்தப் பணியில் கைகோக்க வைத்திருக்கிறது. தற்போது 40-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சேவைப் பயணத்தில் தன்னார் வலர்களாக இணைந்திருக்கின்றனர்.

மாற்றுத் திறனாளி மாணவர்களின் விருப்பமான விளையாட்டுகளில் அவர்களுக்குப் பயிற்சி அளித்து போட்டிகளில் பங்கேற்கச் செய்கிறார்கள். இதன்மூலம் அவர்களின் போராட்டக் குணமும் தன்னம்பிக்கையும் எவருக்கும் சளைத்தது இல்லை என்பதை உலகத்துக்கு உணர்த்துகிறார்கள். மரம் நடும் பணியிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இவர்களால் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இப்படியாக கடந்த அய்ந்து ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இவர்களால் நடப்பட்டிருக்கின்றன.

தொடர்புக்கு: 9941169610

விமான நிலைய ஆணையத்தில் பணியிடங்கள்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India)மேலாளர், நிர்வாகி (Junior Executive) 
ஆகிய பதவிகளில் 900-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேவையான தகுதி

கல்வித் தகுதியானது பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.இ., பி.டெக்.. எம்.பி.ஏ. எனப் பிரிவுகளுக்குத் தகுந்தாற்போல் மாறுபடும். சில பதவிகளுக்குப் பணி அனுபவம் அவசியம். சில பணிகளுக்குப் பணி அனுபவம் தேவையில்லை.

வயது வரம்பு மேலாளர் பதவிக்கு 32 ஆகவும், நிர்வாகி பதவிக்கு 27 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தகுதியுடையவர் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடல்தகுதித் திறன் அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர். மேலாளர் பதவிக்கு ரூ.1.25 லட்சமும், நிர்வாகி பதவிக்கு ரூ.90 ஆயிரமும் கிடைக்கும், உரிய கல்வித் தகுதி, வயது வரம்புத் தகுதி, பணி அனுபவம் உடைய பட்டதாரிகள் இந்திய விமானநிலை ஆணைய இணையதளத்தைப் (www.aai.aero) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

ரயில்வேயில் காலிப் பணியிடங்கள்

இந்தியாவின் தரைவழிப் போக்குவரத்தில் மிக முக்கியமான பங்கினை ரயில்வேதுறை வகிக் கிறது.

நாடு தழுவிய அளவிலான வழித்தடங்கள், நவீனமய யுக்திகள், அதிகபட்ச பயணிகளை கையா ளுதல் என்று பல்வேறு வகைகளில் இந்திய ரயில்வே உலக அளவில் புகழ் பெறுகிறது.

பெருமைக்குரிய இந்திய ரயில்வேயின் தென்னக ரயில்வே பிராந்தியத்தில், 257 சபாய்வாலா காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: 2019 ஜன., 1 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 19 - 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அரசு அங்கீ காரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பினை முடித்தவராக இருக்க வேண்டும்.  எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆனலைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500.  கடைசி நாள்: 2018 ஆக., 27.

விபரங்களுக்கு: : http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Engagement_Safaiwala_Categories_ContractualBasis.pdf

 

 

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்ளிட்ட துணை ராணுவப் படைப் பிரிவுகளில் காலியாக உள்ள 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங் களை இந்த ஆண்டு இறுதிக்குள் நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துணை ராணுவப் படைப் பிரிவான மத்திய ரிசர்வ் காவல் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 21 ஆயிரத்து, 569 வீரர்கள் பணியிடம், எல்லைப் பாதுகாப்பு படை, இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்பட, 54 ஆயிரத்து, 963 பணியிடங்களை எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் நிரப்பப்படவுள்ள மேற்கண்ட பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 முதல் 23 வயதுடையவர்கள் விண் ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு விதிமுறைகளின் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.   விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு,  உடல்தகுதி தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப் படுவர்.  எழுத்துத் தேர்வு ஆன்லைன் லழியில் நடத்தப்படும்.

இதில், பொது நுண்ணறிவுத் திறன், ரீசனிங், பொது அறிவு, அடிப்படை கணிதம், பொது ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய 4 பகுதிகளில் இருந்து  தலா 25 கேள்விகள் வீதம் மொத்தம் 100 வினாக்கள் இடம்பெறும். இதற்கு மதிப்பெண் 100. தேர்வு நேரம் 90 நிமிடங்கள். ஒரு காலியிடத்துக்கு 10 பேர். எழுத்துத் தேர்வு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்கள், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும்.

தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், ஒரு காலியிடத்துக்கு 10 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் உடற்திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதைத் தொடர்ந்து, உடல்தகுதித் தேர்வு நடைபெறும்.

தகுதியுள்ளவர்கள் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தை (www.ssc.nic.in) பயன்படுத்தி ஆகஸ்டு மாதம் 20ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

சேவை தரும் வேலை

சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனிதர்கள் அனைவருக்கும் உண்டு. அந்த எண்ணத்தின் உந்துதல் மாணவப் பருவத்தில் சற்று தீவிரமாக இருக்கும். பணத்தின் தேவை காரணமாக, சேவை மீதான ஈடுபாடு படிப்புடன் சேர்ந்தே முடிந்துவிடுகிறது. ஆனால், இன்று காலம் மாறிவிட்டது.

சமூகப் பணி இப்போது ஒரு தொழில்துறையாக மாறிவிட்டது. இன்று தனது சேவையைச் சேவையாற்று பவர்களுக்கும் அது அளிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், கைநிறையச் சம்பளம் அளிக்கும் பல வேலைவாய்ப்பு களைச் சமூகசேவை இன்று அளிக்கிறது.

ஏன் படிக்க வேண்டும்?

சமூகசேவைக்கு உதவும் முனைப்பும் நல்லதை நினைக்கும் மனமும் மட்டும் போதாது. உதாரணத்துக்கு, சாலை நடுவில் கிடக்கும் கல்லைத் தூக்கி ஓரமாகப் போடுவதும் ஒரு சமூகசேவைதான். ஒருமுறை மட்டும் நிகழும் நிகழ்வாக அது இருந்தால், அதை இயல்பாக எந்த மெனக்கெடலுமின்றிச் செய்துவிட்டு சென்றுவிடலாம். ஆனால், நாடு முழுவதும் இருக்கும் அனைத்துச் சாலை களிலும் இருக்கும் கற்களை அகற்றுவதாக இருந்தால், அதற்கு முறையான பயிற்சியும் திட்டமிடலும் தேவை.

கல்லைத் தூக்கி ஓரமாகப் போடுவதற்கு எதற்குப் பயிற்சியும் திட்டமிடலும் என்று சிலர் ஏளனமாக நினைக்கலாம். ஆனால், அவை எந்த அளவு இன்றிய மையாதவை என்பதைக் கீழே பார்ப்போம். இங்கு நாம் விவாதிக்க இருப்பது வெறும் கல்லாக இருக்கலாம். ஆனால் அதே அளவுகோலை எதனுடனும் பொருத்திப் பார்த்து சமூகசேவைத் துறையின் வீச்சை விளங்கிக் கொள்ள முடியும்.

முதலில் நாடு முழுவதும் இருக்கும் சாலைகளில் எவற்றில் எல்லாம் கற்கள் நடுவில் கிடக்கின்றன என்பதை அறியவேண்டும். பின்பு அந்தக் கற்களை அகற்றுவதற்கு நம்மைப் போன்று சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை நாம் இனம் காண வேண்டும். பின் அவர்களுக்கு, அந்தக் கல்லை எப்படி அகற்ற வேண்டும் எனப் பயிற்சி அளிக்க வேண்டும். அதாவது அகற்றிய கல்லை வீட்டின் முன்னோரக் கடையின் முன்னே போடாமல், யாருக்கும் தொந்தரவு அற்ற முறையில் எங்கே போட வேண்டும் எப்படிப் போட வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சுமூகமாகப் பேசுதல்

கற்களைச் சிலர் வேண்டும் என்றே, தங்கள் பயன் பாட்டுக்காகச் சாலையில் வைத்திருக்கலாம். அந்தக் கற்களை அகற்றும்போது அவர்கள் பிரச்சினையும் பண்ணலாம். அவர்களிடம், அந்தக் கல் வேண்டு மானால் உங்களுக்குச்சொந்தமானதாக இருக்கலாம், ஆனால், அது இருக்கும் சாலை அனைவருக்கும் சொந்தமானது என்பதை அவர்களுக்குப் புரியும் மொழியில் சினம் ஊட்டாமல் எவ்வாறு சொல்வது எப்படி என்பதைத் தன்னார்வலர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்.

விழிப்புணர்வு

சரி கல்லைத் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டுச் சென்றால் மட்டும் போதுமா? கண்டிப்பாகப் போதாது. ஏனென்றால், நீங்கள் கல்லைத் தூக்கி ஓரமாகப் போட்டு விட்டுச் சென்ற மறு நிமிடமோ மறு நாளோ மீண்டும் ஒரு கல் சாலையின் நடுவில் வருவதற்குச் சாத்தியம் உண்டு, அதைத் தவிர்ப்பதற்கு, சாலையின் நடுவில் இருக்கும் கற்களால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து களையும் இடைஞ்சல்களையும் பற்றிய விழிப்புணர்வை அங்கு வசிக்கும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் ஏற்படும் விழிப் புணர்வே சமூக சேவையின் உச்சம்.

ஒருங்கிணைப்பு

ஒரே நபரால் இவை அனைத்தையும், கண்டிப்பாக செய்ய முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு நபரின் திறமையும் மாறுபடும். சிலர் கல்லை அகற்றுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சிலர் மக்களிடம் சுமுகமாகப் பேசுவதில் இயல்பாகவே திறன் மிகுந்தவர் களாக இருப்பர். சிலர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வதில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் அனைவரிடம் இருந்தும் சிறந்த முறையில் வேலை வாங்க நல்ல மேலாளர் தேவை. நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மேலாளர் தேவைப்படுவார். அந்த மேலாளர்களை எல்லாம் ஒருங்கிணைக்க ஒரு ஒருங்கிணைப்பாளர் தேவைப்படுவார்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்

கல்லை அகற்றும் ஒரு சின்ன முயற்சி, நாடு முழுவதற்கும் என்றாகும்போது, அதற்காகத் தேவைப்படும் ஆட்களின் எண்ணிக்கையாலும் திட்டமிடலாலும்  பயிற்சி யாலும் எப்படி மலைப்பூட்டும் விதமான பெரும் முயற்சி ஆகிறது என்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். ஒரு சிறு முயற்சி பெரு முயற்சி ஆகும் இடத்தில்தான் -க்கள் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உருவா கின்றன.

என்ஜிஓ-க்களின் நோக்கம் உண்மையாகவும் உன்னத மாகவும் இருந்தால், அவர்களை நம்பி தேவைக்கும் அதிகமாக நன்கொடைகளைக் கொடுக்கப் பலர் இன்று உள்ளனர். இதனால் என்ஜிஓ-க்களின் எண்ணிக்கை தற்போது மிகவும் அதிகமாகி விட்டது. பணம் அவர்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. திட்டத்தின் வெற்றியே அவர்களுக்கு முக்கியம். இதனால், அவர்களுடைய திட்டத்தைச் செயல்படுத்தும் தகுதியான நபர்களுக்கு அய்.டி துறைக்கு இணையான சம்பளத்தை அவர்கள் வழங்குகிறார்கள்.

என்ன படிக்க வேண்டும்?

சமூக சேவையிலோ உளவியலிலோ பட்டம் (ஙி.ஷிநீ றிsஹ்நீலீஷீறீஷீரீஹ், ஙிணீநீலீமீறீஷீக்ஷீ ஷீயீ ஷிஷீநீவீணீறீ கீஷீக்ஷீளீs) பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இளநிலையில் வேறு பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள், ஆன்லைனில் இருக்கும் இலவச வகுப்புகளில் படித்துப் பட்டம் பெற்று சமூக சேவையில் குதிக்கலாம்.

எங்குப் படிக்கலாம்?

https://www.coursera.org/courses?query=social%20work
https://www.udemy.com/learn-social-psychology-fundamentals/
https://www.udemy.com/learn-psychology/
https://www.class-central.com/tag/social%20work
https://academicearth.org/social-work/
http://www.open.edu/openlearn/search-results?as_q=social+works
http://learningpath.org/articles/Free_Online_Social_Work_Courses_from_Top_Universities.htm

பெல் நிறுவனத்தில் பயிற்சி வாய்ப்பு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக பெல் என அறியப்படுகிறது.  இத் துறையில் பல்வேறு பொருட்களைத் தயாரித்தல், மேம்படுத்துதல் மற்றும் சேவைகளை மேற்கொள்ளும் நிறுவனமாக வளர்ந்துவருகிறது. இதில் பயிற்சியாளர் பிரிவில் ஆட்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பெல் நிறுவனத்தின் இத்திட்டம் நீம் (என்.இ.இ.எம்.,) என்ற அடிப்படையில் இருக்கும். வயது: 2018 செப்., 1 அடிப்படையில் விண் ணப்பதாரர்கள் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.பார்ம், பி.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் அண்டு டிப்ளமோ படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்த வர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஸ்டைபண்டு: பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மாதம் ரூ.10,775, ஸ்டைபண்டாகப் பெற முடியும்.

விபரங்களுக்கு: http://bel-india.in/Documentviews.aspx?fileName=NEEM-Advertisement-details.pdf


 

 

 

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தனியார் வேலை வாய்ப்புச் சந்தை நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்புச் சந்தை நடத்தப்பட்டு வருகிறது.

வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த வேலைவாய்ப்புச் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம்.

இளைஞர்களும் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பம், பாஸ்போர்ட் அளவு நிழற்படம்-5, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் நகல்களுடன் நேரில் பங்கேற்று பயன் பெறலாம். இதன்மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக் காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படாது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் திறன் மேளா நடத்தப்படும். பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இம்மாதம் 26 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் திறன் மேளாவில் வேலைநாடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படவுள்ள தொழில் நுட்ப சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் சிறப்பு வல்லுநர்கள் உதவி யுடன் வரும் 28ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பில் மின் பொறியியல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் தேர்ச்சி பெற்ற பொதுப் பிரிவில் 28 வயதுக்கு உள்பட்டவர்களும், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் பிரிவில் 30 வயது வரையும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 33 வயதுக்கு உள்பட்டவர்களும் இதில் கலந்து கொள் ளலாம்.  பயிற்சி வகுப்பும், பாடக் குறிப்புகளும் இலவச மாக வழங்கப்படும்.

வாரம் தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். தற்போது காவலர் பணியில் 5 ஆண்டு களுக்கு மேலாக பணிமுடித்த காவலர்களும் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் கூறப் பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகளை தரும் உயர்கல்வி

உயர் கல்வியில் இயற்பியல், வேதியியல் போன்ற பாரம்பரியமான அறிவியல் படிப்பு களின் வரிசையில் தாவரவியல், விலங்கியல் குறித்தான இளம் அறிவியல் பட்டப் படிப்புகளும் அடங்கும். பிளஸ் 2-வில் உயிரியல், அறிவியல், பயின்ற மாணவர்கள் அதற்கேற்ற மாதிரி இளம் அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரத் தகுதி பெறுகிறார்கள்.

தாவரவியல்

உயிர் மண்டலத்தில் நம்மைச் சூழ்ந்தி ருக்கும் பூஞ்சைகள், பாசிகள், தாவரங்கள் ஆகியவற்றைப்பற்றித் தாவரவியலில் படிக்கலாம். தாவரத்தின் இயற்பியல், வேதி யியல் பண்புகள், வளர்சிதை மாற்றம், வளர்ச்சி, பரவல், கட்டமைப்பு, பாதிக்கும் நோய்க் கூறுகள் எனப் பல்வேறு அம்சங்களைச் செயல்முறை அறிவுடன் இப்படிப்பு போதிக் கிறது. சிறப்புப் பாடங்களாக சூழலியல், உயிர் இயற்பியல், உயிர் வேதியியல், உயிரணுவியல், மரபியல் உள்ளிட்ட பல்வேறு வளரும் துறைகளைப் பற்றியும் படிக்கலாம். தொடர்ந்து முதுநிலை மேற்படிப்பு முதல் ஆராய்ச்சி நிலை வரை பயின்றால், தனித்துவமான வேலைவாய்ப்புகள் நிச்சயமாகும்.

விலங்கியல்

விலங்கியல், இதர உயிரியல் படிப்புகளில் சேர்ந்து ஆராய்ச்சி நிலைவரை தங்களை உயர்த்திக்கொள்வதன் மூலம், மருத்துவத் துறைக்கு ஈடான துறைசார் ஆழ்ந்த அறி வையும் பணி திருப்தியையும் அதிகச் செல வின்றிப் பெறலாம். விலங்கியல் மாணவர்கள் முதுநிலைப் படிப்புகளில் பல்லுயிர்ப் பெருக் கம், உயிர்த் தகவலியல், சூழலியல் கண் காணிப்பு, காட்டுயிர்ப் பாதுகாப்பு, சூழலியல் மேலாண்மை உள்ளிட்ட வளரும் துறை களிலும் தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.

இளம் அறிவியல் நிலையில் விலங்கியல் படித்தவர்கள், மேற்கொண்டு முதுநிலைப் பட்டம் அல்லது பட்டயப் படிப்பாக விலங் கியல், அப்ளைடு ஜூவாலஜி, லைஃப் சயின்ஸ் போன்றவற்றைப் பயிலலாம். மேலும் பயோ டெக்னாலஜி, ஃபார்மா, டெய்ரி, கிளினிக்கல் ரிசர்ச் உள்ளிட்ட பிரிவுகளில் எம்.பி.ஏ. பயில் வதன் முதல் அத்துறையின் மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறைகளின் உயர் பணியிடங்களைக் குறிவைக்கலாம்.

உயிரியல் தொழில்நுட்பம்

உயிரியலும் தொழில்நுட்பவியலும் இணைந்த இளம் அறிவியல் பட்டப் படிப்பே உயிர் தொழில்நுட்பவியல். மருத்துவம், தொழில்நுட்பம், பொறியியல், உயிர்நுட்பம் எனப் பல சுவாரசியமான துறைகளின் கலவை இது. உயிரிகளின் செல், மூலக்கூறு அள விலான ஆராய்ச்சி, பரிசோதனைகள் மூலம் நோய்களுக்கான மருந்துப் பொருட்கள், நோய் எதிர்ப்புப் பொருட்கள், உணவுப் பொருட்கள், விவசாய உற்பத்திக்கான நுட் பங்கள் ஆகியவை மூலம் மனிதனின் வாழ்க் கைத் தரம் உயர இத்துறை சார்ந்த படிப்பு உதவுகிறது.

இதன் முதுநிலைப் படிப்பாக விவசாயம், மருத்துவம், கால்நடை சார்ந்த பல்வேறு பயோடெக்னாலஜி பிரிவுகளில் சேர்ந்து பயிலலாம். எம்.எஸ்சி. பயோடெக்னாலஜியை அய்ந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பாகவும் சில கல்லூரிகள் வழங்குகின்றன. பயோடெக்னாலஜியை பி.எஸ்.சி., என்ற மூன்று ஆண்டு இளம் அறிவியல் படிப்பைப் போன்றே, பி.டெக்., என்ற நான்கு வருடப் பொறியியல் படிப்பாகவும் படிக்கலாம்.

மைக்ரோபயாலஜி

நம்மைச் சூழ்ந்திருக்கும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் உள்ளிட்ட நுண் ணுயிரிகள் குறித்தும் அவை நமது ஆரோக் கியம், உணவு, விவசாயம் உள்ளிட்டவற்றில் ஏற்படுத்தும் நன்மை தீமைகள் குறித்தும் படிப்பதே மைக்ரோபயாலஜி. மருத்துவ ஆராய்ச்சி, இயற்கையாகவும் செயற்கை யாகவும் தயாரிக்கப்படும் உணவு ரகங்கள், அழகு-ஆரோக்கியத்துக்கான பொருட்கள், விவசாயப் பொருட்கள் உள்ளிட்டவற்றில் மைக்ரோபயாலஜி துறையின் பங்கு அதிகம். கூடுதலாக முதுநிலைப் பட்டம் அல்லது பட்டயம் படித்தோ, ஆராய்ச்சி மேற்படிப்பு மூலமாகவோ பாக்டீரியாலஜிஸ்ட், வைரால ஜிஸ்ட், பயோகெமிஸ்ட், செல் பயாலஜிஸ்ட் போன்ற பணிகளைப் பெறலாம். மருத்துவத் துறையில் மரபியல் பொறியியல் மூலம் மரபு நோய்கள், அச்சுறுத்தும் புதிய தொற்று நோய்களுக்கான மருந்துப் பொருள் தயாரிப் பிலும், தடுப்பூசிகள் தயாரிப்பிலும் வியத்தகு வளர்ச்சியை மைக்ரோபயாலஜி கொண் டுள்ளது.

பயோடெக்னாலஜிக்கு இணையான இளம் அறிவியல் படிப்பாக பி.எஸ்சி., உயி ரியல் பட்டப்படிப்பைப் பல கல்லூரிகள் வழங்குகின்றன. ஆனபோதும் பாடத் திட்டத்தில் இந்த இரண்டுக்கும் இடையில் அடிப்படையான சில வேறுபாடுகள் உண்டு. பி.எஸ்சி. உயிரியல் அறிவியல் பாடமாகும். பயோடெக்னாலஜி தொழில்நுட்பப் பாட மாகும். வகைப்பாட்டியல், வாழும் உயிரி னங்கள், அவற்றின் வளர்ச்சி, மரபியல், செயலாக்கம், பயன்பாடுகள் குறித்து உயிரியல் படிப்பு கற்றுத் தருகிறது. இளநிலையில் தாவரவியல், உயிரியல், விலங்கியல் பாடங் களைப் பயின்று முதுநிலையில் பயோடெக் னாலஜி, மைக்ரோபயாலஜி போன்றவற்றைப் பயில்வதும் பலரது தேர்வாக இருக்கிறது.

ஆசிரியர் பணி முதல் அய்.எஃப்.எஸ். எனப்படும் இந்திய வனப் பணிவரை பலவிதமான வேலைவாய்ப்புகளுக்கு இந்தப் பட்டப் படிப்புகள் உதவும்.

தாவரவியலைப் பயின்றவர்களுக்கு வேதியியல் தொழிற்கூடங்கள், எண்ணெய் வயல்கள், தேசியப் பூங்காக்கள், பள்ளி-கல்லூரி- பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தாவரவியல் ஆய்வுக் கூடங்கள், உயிர் நுட்பவியல் ஆராய்ச்சி எனப் பல துறைகள் சார்ந்த பணிகள் காத்தி ருக்கின்றன.

விலங்கியல் பட்டப்படிப்பை முடித்த வர்கள் காட்டுயிர் ஆராய்ச்சியாளர், சூழலியல் அலுவலர், ஆய்வக உதவியாளர் போன்ற பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

பட்டதாரிகளுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள 158 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு!

தமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி:   Forest Apprentice - 148  (Regular)

பணி:   --Forest Apprentice -10 (Shortfall vacancies for SC applicants only)

சம்பளம்: மாதம் ரூ. ரூ.37,700 முதல் ரூ.1,19,500

தகுதி: விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அறிவிப்பை பார்த்து முழுமையான தகுதி விவரங்களை தெரிந்துகெள்ளவும்.

வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு சலுகை வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.08.2018.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/notifications/2018_12_notfy_Forest_Apprentice.pdf 
லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

 

 

 

 

Banner
Banner