இளைஞர்

பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.), மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.அய்.ஆர்.) ஆகியவை நெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகின்றன. இதில் வெற்றிபெற்று ஜெ.ஆர்.எஃப். (ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோசிப்) தகுதி பெறும் முதுகலைப் பட்டதாரிகள் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள மாதம்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப் படுகிறது.

தகுதியும் தேர்வுமுறையும்

இதேபோல, மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கிவரும் தேசிய உயர் கணித வாரியம்,  கணிதம் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் எம்.எஸ்சி. கணிதம் படிக்க மாதம்தோறும் ரூ.6 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்குகிறது.

இந்த உதவித்தொகை 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும். தகுதியான மாணவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

2018-2019ஆம் கல்வி ஆண்டுக்கான உதவித் தொகை வழங்குவதற்குத் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பி.எஸ்சி. பட்டதாரிகளும் ஜூலை மாதம் படிப்பை முடிக்க இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

முதல் வகுப்பு மதிப்பெண் அவசியம். எழுத்துத் தேர்வு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. தேர்வில் கணிதப் பட்டப் படிப்பு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.

தகுதியுடைய பி.எஸ்சி. கணிதப் பட்டதாரிகள் ஷ்ஷ்ஷ்.ஸீதீலீனீ.பீணீமீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஜூலை 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இந்த இணையதளத்தில் விளக்க மாக அறிந்துகொள்ளலாம்.

காகிதத் தொழில் சாதனையாளர்

வெளிநாட்டில் சென்று அறிவை விற்பதற்குப் பதிலாக அங்கிருந்தே ஒரு அறிவை, யோசனை யைப் பெற்று இந்தியா திரும்பியுள்ளார் ஒரு இளைஞர். அவர் திருச்சியைச் சேர்ந்த பிரவீன் குமார். அவர் கொண்டு வந்த அறிவு, சொந்தத் தொழில் செய்யும் யோசனை.

பிரவீன் குமார், 12ஆம் வகுப்புவரை திருச்சியில் படித்தார். அப்போதே அவருக்குச் சொந்தமாகத் தொழில் தொடங்குவது தான் விருப்பமாக இருந்தது. ஆனால், அவரது தந்தைக்கு மகன் லண்டனில் சட்டம் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பம். அதனால் தந்தை சொல்தட்டாமல் லண்டன் சென்றார். ஆனால், அங்கு அவரால் ஒழுங்காகப் படிக்க முடிய வில்லை. சொந்தமாகத் தொழில் தொடங்குவது குறித்து அங்கி ருந்தபடியே எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருந்திருக்கிறார்.

அப்படியான ஒரு நேரத்தில்தான் என்ன தொழில் தொடங் கலாம் என்ற கேள்விக்கான விடை கிடைத்துள்ளது. அது, டிஷ்யூ காகிதம் தயாரிக்கும் தொழில். உணவகங்களில் கை துடைக்கத்தான் நாம் அதிகமாக டிஷ்யூ காகிதத்தைப் பயன் படுத்துகிறோம். ஆனால், லண்டனில் கழிவறைப் பயன் பாட்டுக்கும், முகம் துடைப்பதற்கும், உணவுப் பண்டங்களை கொண்டுவருவதற்கும் டிஷ்யூ காகிதம்தான் பயன்படுகிறது. அதனால் மாதாமாதம் மளிகைப் பொருள் வாங்குவதுபோல அங்கு டிஷ்யூ காகிதத்தை எல்லோரும் வாங்குகிறார்கள். இந்தியாவில் டிஷ்யூ பயன்பாடு இப்போதுதான் பெருகிவருகிறது. அதனால் இதையே தொழிலாகக்கொள்ளலாம் எனத் தீர்மானித்திருக்கிறார்.

இந்தியா திரும்பியதும் டிஷ்யூ தயாரிப்புக்கான முக்கியமான மூலப் பொருளான காகிதத்தைக் குறித்து தேடிக் கண்டடைந் திருக்கிறார். யூகித்தபடியே டிஷ்யூ காகிதத்தின் பயன்பாடு இந்தியாவில் பெருகத் தொடங்கியது. இனியும் காலம் கடத்தத் தேவையில்லை என உடனடியாகக் களத்தில் இறங்கினார்.

இந்தத் தொழில் வசப்பட ஒரு மாதக் காலம் ஆகி இருக்கிறது. இவரையும் சேர்த்து மொத்தம் பணியாளர்கள் நால்வர்தான் தொடக்கத்தில் இருந்துள்ளனர். அதன்பிறகு தொழில் பெருகப் பெருக அதற்குத் தகுந்தாற்போல் இயந்திரங்களையும் அதிகப் படுத்தி இருக்கிறார் பிரவீன்.

காகிதத்தைப் பொறுத்தவரை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் காகிதம், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம் ஆகிய இரு வகையான காகிதங்கள் பயன்படுத்தப்படு கின்றன. நாங்கள் இரு வகையையும் பயன்படுத்துகிறோம். இவற்றில் மறுசுழற்சி காகிதத்தைப் பயன்படுத்துவதால் மரங்கள் காகிதங்களுக்காக வெட்டப்படுவது குறையும். இந்த வகை காகிதத்தின் பயன்பாடு இப்போது அதிகரித்து வருகிறது எனும் பிரவீன் இப்போது மாதம் 13 டன்வரை டிஷ்யூ காகிதம் உற்பத்தி செய்துவருகிறார்.

தொடக்கத்தில் 3 டன் மட்டுமே அவரால் உற்பத்திசெய்ய முடிந்தது. டன் ஒன்றுக்கு தோராயமாக ரூ. 10,000 வரை வருமானம் கிடைக்கும் என பிரவீன் சொல்கிறார். இப்போது 14 பேர் இவரால் வேலை பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, புதுச்சேரி ஆகிய பிற மாநிலங்களுக்கும் டிஷ்யூ காகிதத்தை மொத்த விற்பனைசெய்து வருகிறார். அவரது நிறுவனத்துக்கென வீ ஃப்ரெஷ்  என்ற பெயரில் டிரேட் மார்க்கையும் பெற்றுள்ளார். இப்போது டிஷ்யூ காகிதங்களை இலங்கை, மாலத்தீவு போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யத் தொடங்கியுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கிப் பணி

இந்திய ரிசர்வ் வங்கி, கிரேட் பி அதிகாரிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெயிட்டிருக்கிறது. காலிப் பணியிடங்கள்: 166

வயது: 01.07.2018 அன்று குறைந்தபட்ச வயது 21, அதிகபட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்புச் சலுகை உண்டு. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இளை நிலைப் பட்டம், முடித்திருக்க வேண்டும்; சில பணிகளுக்குப் பொருளாதாரத்திலும் சில பணிகளுக்குப் புள்ளியியலிலும் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: இரு நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு ரூ. 100. பிறருக்கு ரூ. 850. விண்ணப்பக் கட்ட ணத்தை ஆன்லைன் மூலம் கட்ட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதியுடையோர் ... ஷ்ஷ்ஷ்.க்ஷீதீவீ.ஷீக்ஷீரீ.வீஸீ  என்னும் இணையதளத்தில் 2018 ஜூலை 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.07.2018

முதல் நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 16.08.2018

இரண்டாம் நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 06.09.2018 அல்லது 07.09.2018. கூடுதல் விவரங்களுக்கு: : https://goo.gl/QYbwDn

காவல்துறைப் பணியிடங்கள்

தமிழ்நாடு காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் (துணை ஆய்வாளர்) தொழில்நுட்பம் பிரிவில் 309  காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மாநிலச் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட் டுள்ளது.

எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் இன்ஜினீயரிங் பாடத்தில் டிப்ளமோ படித்தவர்களும், இதே பாடத்தில் பட்டப் படிப்பு (பி.இ., பி.டெக்.) படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேவையான தகுதி

வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 28 ஆகவும், பி.சி., பி.சி.-முசுலிம், எம்.பி.சி. வகுப்பினருக்கு 30 ஆகவும், எஸ்சி, எஸ்.டி. வகுப்பினருக்கு 33 ஆகவும், ஆதரவற்ற கைம்பெண்களுக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காவல்துறைப் பணியில் இருந்தால் வயது வரம்பு 45 ஆகும். மொத்தக் காலியிடங்களில் 20 சதவீதம் காவல் துறையில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு ஆன்லைன் வழியில் நடைபெறும். இதில் பொது அறிவு பகுதியில் 60 வினாக்களும் தொழில்நுட்பப் பாடத்தில் 100 வினாக்களும் இடம்பெறும். 3 மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு வினா வுக்கும் அரை மதிப்பெண் வீதம் எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 80 மதிப்பெண்.

கூடுதல் கல்வித் தகுதிக்கு 5 மதிப்பெண், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., விளையாட்டு பங்கேற்பு ஆகியவற்றுக்கு 5 மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண். ஒட்டுமொத்தமாக 100 மதிப்பெண்.

எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் அவர்கள் நேர்முகத் தேர்வுக்குத் தகுதிபெற முடியும். ஒரு காலியிடத்துக்கு 3 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் படுவார்கள்.

உரிய கல்வித் தகுதியும் வயது வரம்பும் உடல் திறன் தகுதியும் உடையவர்கள் ஷ்ஷ்ஷ்.tஸீusக்ஷீதீஷீஸீறீவீஸீமீ.ஷீக்ஷீரீ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் படைகளில் முக்கிய படையாக இந்தியன் நேவி திகழ்கிறது. தொழில்நுட்ப ரீதியிலும், அளவிலும், அர்ப்பணிப்பு உணர்விலும் அனைவராலும் அறியப்படும் இந்தியன் நேவியில் லஸ்கர் - 1 பிரிவில் காலியாக இருக்கும் 46 இடங் களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். நீச்சல் பயிற்சி பெற்றவராகவும், நீந்தத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியனுபவம்: ஏதாவது ஒரு கப்பலில் ஒரு ஆண்டு காலத்திற்கு பணியாற்றிய அனுபவம் தேவைப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

கடைசி நாள்: 2018 ஆக., 14.

The Admiral Superintendent {for Manager Personnel}, Naval Dockyard, Visakhapatnam - 530014

விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_ 10702_52_1819b.pdf

நீர்வள மேம்பாட்டு

அமைப்பில் பணியிடங்கள்

உலக வங்கியின் உதவியுடன் தமிழக அரசின் சார்பாக டி.என்., இரிகேட்டு அக்ரிகல்சர் மாடர்னிசேஷன் புராஜக்ட் செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள்: அக்ரி பிஸினஸ் ஸ்பெஷலிஸ்டில் 1, என்விரான்மென்டல் ஸ்பெஷலிஸ்டில் 1, ஜி.அய்.எஸ்., ஸ்பெஷலிஸ்டில் 1, கம்யூனிகேஷன் ஸ்பெஷலிஸ்டில் 1, புரொகிராமரில் 1, டைப்பிஸ்ட் வித் ஷார்ட்ஹேண்டில் 1, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டரில் 5ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் அனுப்ப வேண்டும்.

The Head Administration, TN-IAM Project, MDPU Office, Dam Safety Building, P.W.D Complex, Chepauk, Chennai - 600 005

கடைசி நாள் : 2018 ஜூலை 23.

விபரங்களுக்கு: : www.iamwarm.gov.in/IAMP/Recruitment-Advertisement.pdf

ரிசர்வ் வங்கியில் 166 அதிகாரி பணியிடங்கள்

நமது நாட்டின் வங்கித்துறையை நிர்வகித்தல், கட்டுப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் மத்திய வங்கி யாகவும், அரசின் நிதித்துறை சார்ந்த முக்கிய முடிவுகளை வழங்குவதாகவும் பாரத ரிசர்வ் வங்கி இருக்கிறது. இதில் 166 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: அதிகாரிகள் பிரிவு ‘பி’ - ஜெனர லிஸ்ட் பதவியில் 127 இடங்களும், இதே பிரிவிலான டி.இ.பி.ஆர்., பதவியில் 22 இடங்களும், இதே பிரிவிலான டி.எஸ்.அய்.எம்., பிரிவில் 17 இடங்களும் சேர்த்து மொத்தம் 166 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஜெனரலிஸ்ட் பதவிக்கு விண்ணப் பிப்பவர்கள், குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண் களுடன், ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித் திருக்க வேண்டும். டி.இ.பி.ஆர்., பதவிக்கு விண் ணப் பிப்பவர்கள் எகனாமிக்ஸ் பிரிவில் முதுநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். டி.எஸ். அய்.எம்., பிரிவுக்கும் எகனாமிக்ஸ் படிப்பு தேவைப்படும்.

தேர்ச்சி முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ச்சி நடைபெறும். விண்ணப் பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 850.

கடைசி நாள்: 2018 ஜூலை 23.

விபரங்களுக்கு:https://opportunities.rbi.org.in/Scripts/Vacancies.aspx

ரயில்வேயில் பயிற்சி பெற வாய்ப்பு

தென்பிராந்திய ரயில்வேயின் ஒரு அங்கமாக சென்னையிலுள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி எனப்படும் அய்.சி.எப்., அமைப்பு அமைந்து உள்ளது. இங்கு ரயில் பெட்டிகள் கட்டப்படுகின்றன. இதில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: கார்பென்டரில் 36, எலக்ட்ரீசியனில் 66, பிட்டரில் 100, மெஷினிஸ்டில் 32, பெயின்டரில் 30, வெல்டரில் 162, எம்.எல்.டி., ரேடியாலஜி மற்றும் பேதாலஜியில் தலா 4ம் காலியிடங்கள் உள்ளன.

பயிற்சி காலம்: அப்ரெண்டிஸ் பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள். இதில் முதலாம் ஆண்டில் மாதம் ரூ.5700ம், இரண்டாம் ஆண்டில் ரூ.6500ம், மூன்றாம் ஆண்டில் ரூ.7350ம் ஊதியமாக வழங்கப்படும்.

கல்வித் தகுதி: என்.டி.சி., அங்கீகாரம் பெற்ற அய்.டி.அய்., படிப்பை உரிய டிரேடிங் பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதே போல, பிளஸ் 2, படிப்பை அறிவியல் புலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை: மெரிட் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100.

கடைசி நாள்: 2018 ஆக., 8.

விபரங்களுக்கு : www.icf.indianrailways.gov.in/ticker/1530684359189app2018notification.pdf

என்.அய்.டி., கல்லூரியில் ஆசிரியர் பணியிடங்கள்

தமிழகத்தில் உள்ள ஒரே என்.அய்.டி., கல்லூரி திருச்சியில் உள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

பிரிவுகள்:

ஆர்க்கிடெசர் பிரிவில் 7,

சிவில் இன்ஜினி யரிங் 7,

கம்ப்யூட்டர் சயின்ஸ் 10, இ.இ.இ.,யில் 6,

இ.சி.இ., யில் 7, இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்டு கன்ட்ரோல் 4, மெக்கானிக்கில் 8, மெட்டீரியல்ஸ் இன்ஜினி யரிங்கில் 5, புரொடக்சன் இன்ஜினியரிங்கில் 9,

எனர்ஜி அண்டு என்விரான்மென்டில் 2, இயற்பியலில் 3, வேதியியலில் 2, கணிதத்தில் 7, ஹியூமானிடீஸ் அண்டு சோசியல் சயின்ஸ் - எகனாமிக்சில் 2, ஆங்கிலத்தில் 5ம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்சில் 6, மேனேஜ்மென்ட் ஸ்டடீசில் 7ம் காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி : இன்ஜினியரிங்  பிரிவுகளுக்கு விண்ணப் பிப்பவர்கள் உரிய பிரிவில் முதல் வகுப்பில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இதர பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் முதல் வகுப்பில் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டம் முடித் திருப்பதோடு பி.எச்டி., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்து, உரிய இணைப்புகளுடன் அனுப்ப வேண்டும். The Registrar, NIT, Tiruchirappalli - 620 015, Tamil Nadu

கடைசி நாள் : 2018 ஜூலை 18.

விபரங்களுக்கு : : https://recruitment.nitt.edu/tmpfaculty

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) கீழ், முன்னணி பயிற்சி மற்றும் கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய தொலை யுணர்வு நிறுவனம். 1966-இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தொலையுணர்வு, புவித் தகவல்கள், இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பேரழிவு மேலாண்மை ஆகியவற்றில், புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத் திறனாளர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தொழில்நுட்பங்களை பொதுமக்களுக்கு கொண்டு சென்று, அவர்களிடம் திறன்களை உரு வாக்குவது, புவியியல் தகவல் நுட்பம் மற்றும் தொலையுணர்வு பயன்பாடுகளில் மாணவர் களுக்கு முதுநிலைப் பட்டங்கள் வழங்குவது ஆகியன இதன் முக்கிய செயல்பாடுகள்.

மேலும், இயற்கை வள மேலாண்மை, தொலையுணர்வு, புவியியல் தகவல் அமைப்புகள், உலகளாவிய நிலைப் படுத்தல் அமைப்பு தொழில் நுட்பம் ஆகியவற்றில் இந்திய தொலையுணர்வு நிறுவனம் மேம்பட்ட சேவையை வழங்கி வருகிறது. இதன் பத்தாயிரத்துக்கும் அதிகமான முன்னாள் மாணவர்கள் உலகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.

அண்மைக்காலமாக, புவியில் இருந்து அனுப்பப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்கள், நிலம், கடல், வளி மண்டலம், சுற்றுச்சூழலின் பல அம்சங்கள் தொடர் பான தகவல்களை நமக்கு அனுப்பி வருகின்றன. இந்தத் தகவல்கள் அனைத்தும் இயற்கை வளங்களை நிர் வகிப்பது, கண்காணிப்பது, தட்பவெப்ப நிலைகளை முன்கூட்டியே அறிவிப்பது, பேரிடர் மேலாண்மை உதவி, வளர்ச்சி செயல்பாடு களைத் திட்டமிடுவது-கண் காணிப்பது ஆகியவற்றில் மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான ஆட்சிக்கு உதவி செய்யக் கூடியவையாக உள்ளன.

இந்திய தொலையுணர்வு நிறுவனம் An Overview for Decision Maker’s Course என்ற  பாடம் நடத்தி வருகிறது. இதில், எந்த ஒரு நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், மேலாளர்கள், திட்ட தலை வர்கள், திட்டமிடுநர்கள், கொள்கை வடிவமைப் பாளர்கள், வேளாண்மை, வனத்துறை, நீர்வளம், சுற்றுச்சூழல், சூழலியல், பேரிடர் மேலாண்மை, வானவியல், புவியியல், பொருளாதாரம், நகரம், கடலியல் ஆகிய துறைகளில் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

இயற்கை வளம், பேரிடர் மேலாண்மை, திட்டமிடுதல் ஆகியவற்றில், தொலையுணர்வு தொழில்நுட்பம் மற்றும் புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தின் மூலம் உதவிசெய்து, அதன் நன்மைகள் மற்றும் தடைகளை பொதுமக்கள் மதிக்கும் போக்கை வளர்ப்பதே இந்த பாடத்தின் நோக்கம். இதேநோக்கில், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான  கோடைக்கால வகுப்பும் டேராடூன் வளாகத்தில் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது.

மேலும், விண்வெளி தொழில்நுட்பம், அதன் பயன்பாடுகள் குறித்து பயனாளர்கள் மற்றும் கல்வித் துறையில் வலுவான புரிதலை ஏற்படுத்தும் பொருட்டு, இணையவழி கல்வியாக    என்ற திட்டமும் செயல்படுத்தப் படுகிறது. இது, இணையவழி நேரலை கலந்துரையாடல் முறை (Edusat), e-Learning Mode âù 2 என 2 வழிகளில் செயல்படுத்தப்படுகிறது.

நேரலை முறையில், ISRO, IIRS  உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் நிபுணர்கள் வகுப்புகளை நடத்துவார்கள். இந்த முறையில்  இதுவரை 22 பாடங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இதில் 626 கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த சுமார் 47 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்த அவுட்ரீச் திட்டத்தில் சேர்ந்து இணையம் வழியாகப் பயில கட்டணம் கிடையாது.

மத்திய, மாநில, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்,  மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், புவியியல் தொழில்துறை, தன்னார்வ நிறுவனங்கள், கல்லூரி மாண வர்கள் இந்த அவுட்ரீச் திட்டத்தில் சேர்ந்து பயிலலாம்.

நிறுவனங்கள், இணையவழி நேரலை பயிற்சிக்கான வகுப்பறையை தங்கள் சொந்த செலவிலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். கல்லூரி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே கணினி மூலம் இந்த நேரலை வகுப்பில் பங்கேற்கலாம். நிறுவனங்கள், அவற்றின் சார்பாக ஒருங்கிணைப்பாளரை நியமித்து இதில் பங்கேற்க வேண்டும்.

இந்த ஒருங்கிணைப் பாளர்களுக்கு ஒவ்வொரு பாடத் தின் நிறைவிலும் சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்படும். அதோடு, தொலையுணர்வு மற்றும் புவியியல் தொழில் நுட்பம் குறித்த தொடர்ச்சியான புது தகவல்களை மிமிஸிஷி-இல் இருந்து இந்த ஒருங்கிணைப்பாளர்கள் இலவச மாகப் பெறலாம்.

மேலும்,  பயனாளர் ஆண்டு கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர்கள் அழைக்கப்படுவர்.  இந்த பாடத்தில் பங்கேற்கும் அலுவலர் களுக்கு 70 சதவீத வருகைப் பதிவு மற்றும் செயல்திட்ட ஒப்படைப்பின் அடிப்படை யிலும், கல்லூரி மாணவர்களுக்கு 70 சதவீத வருகைப்பதிவு மற்றும் இணையவழி தேர்வின் அடிப்படையிலும் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்திய தொலையுணர்வு நிறுவனத்தில் அளிக்கப்படும் பயிற்சிகள், நடத்தப்படும் பாடங்கள் குறித்த மேலும் விவரங்களை  An Overview for Decision Maker’s Course  என்ற இணையதளத்துக்குச் சென்று அறிந்துகொள் ளலாம்.

SPIE - The International Society for Optics and Photonics  என்ற அய்ரோப்பிய தன்னார்வ நிறுவ னத்தின்    பிரிவு புவி கண்காணிப்பு அமைப்பு, தொழில்நுட்பம், பயன்பாடு ஆகியவற்றில் நவீன வளர்ச்சி குறித்த சர்வதேச மாநாட்டை ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் வரும் செப்டம்பர் 10-13ஆம் தேதி வரை நடத்துகிறது.

இதில், தொலையுணர்வு தொடர்பான 11 தலைப்புகளில் நிபுணர்கள் பங்கேற்று கருத்து களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க பொறியாளர்கள், விஞ்ஞானிகள், திட்ட மேலாளர்கள், கொள்கை வடிவமைப் பாளர்கள் உள்ளிட்ட ஆர்வலர்களுக்கு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

லிஃப்ட் அன்ட் எஸ்கலேட்டர் மெக்கானிக்!

முன்பெல்லாம் ஒரு மாடி, 2 மாடி என்றாலே மிகப்பெரியதாக இருந்தது. ஆனால் தற்போது சுமார் 15 அல்லது 20 மாடி என்பது சாதாரணமானதாக ஆகி கிவிட்டது. அவற்றுக்கு லிப்ட் பொருத்தி விடுகின்றனர். மாநகரங்களைச் சொல்ல வேண்டியதே இல்லை. அங்கு 10, 15, 20 மாடிகள் என அடுக்குமாடி குடியி ருப்புகள், வணிக வளாகங்கள் கட்டப்படு கின்றன.

மாடிப்படிகளில் ஏறி செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இத்தகைய சூழ்நிலை யில் 15, 20 மாடிகள் என்பது நினைத்துப் பார்க்கவே முடியாது. அங்கு செல்ல வேண்டுமானால் லிஃப்ட் மிகவும் அவசிய தேவையாக உள்ளது.

வணிக வளாகங்களில் லிஃப்ட் இருப்பதோடு எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படு கின்றன. அதனால் லிஃப்ட் மற்றும் எஸ் கலேட்டர்கள் பழுது ஏற்படும் சமயத்தில் அதனைச் சரிசெய்ய அது சம்பந்தான படிப்பை படித்த மெக்கானிக் இருந்தால் மட்டுமே அந்த பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.

அதனால் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் மெக்கானிக் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு காத்திருக் கின்றது. 10ஆம் வகுப்பிற்கு பிறகு இத்தகைய லிஃப்ட் அன்ட் எஸ்க லேட்டர் குறித்த படிப்பை படிக்கலாம்.

லிஃப்ட் அன்ட் எஸ்கலேட்டர் சம்பந்த மான படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவ னங்கள்:

1. Bharat Institute of Elevators,  88 Manthralaya Garden, Sengalipalayam , Coimbatore - 641022  http://bharatinstituteofelevators.com/
2. Sudhar - Son Lift Technology Institute, 16, SRV Main Road, SRV Nagar, Harveypatti , Madurai (Madurai Dist.)  625005
3. Lalji Mehrotra Technical Institute Opp. Hema Industrial Estate, Sarvodya nagar, Jogeshwari (E), Mumbai - 400060
4.  INSTITUTE OF FIRE AND SAFETY ENGINEERING & LIFT, # 16-2-753/A/1, 3rd Floor, Above Bata Showroom, Revenue
Board Colony, Near Konark Diagnostic Centre, Dilsukhnagar, Hyderabad -  500 060. http://www.ielt.in/index.php

ரப்பர் தொழில்நுட்ப படிப்புகள்

ரப்பர் பொருட்கள் வாழ்வின் அனைத்து துறைகளிலும் ஏதேனும் ஒருவிதத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ரப்பர் பயன்பாடு இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லலாம்.

பள்ளி மாணவர்கள் பென்சிலால் எழுதியதை அழிப்பதற்கு பயன்படும் ரப்பரில் தொடங்கி நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் ஓர் இன்றியமையாத பொருளாக ரப்பர் உள்ளது. எனவே ரப்பர் சார்ந்த தொழில்களில் நிறைய வேலை வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

ரப்பர் தொழில்நுட்பம் சார்ந்த பட்டயப் படிப்பு , பி.இ. பிடெக், எம்டெக், பிஎச்டி என பல படிப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு:

Madras Institute of Technology - http://www.mitindia.edu/en/
academic-programs
Indian Rubber Institute - www.iri.net.in/

 

 

இந்திய ராணுவத்திலும் கடற் படையிலும் விமானப் படையிலும் 383 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு [National Defence Academy & Naval Academy Examination (II), 2018] குறித்த அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

கல்வி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 02.01.2000 முதல் 01.01.2003 வரையான காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்குக் கட்டண மில்லை. பிறருக்குக் கட்டணம் ரூ.100. கட்டணத்தை ஆன்லைனிலோ வங்கி சலான் மூலமோ கட்டலாம்.

உரிய உடல், கல்வி, வயதுத் தகுதி கொண்டோர் 06.06.2018 முதல் 02.07.2018 மாலை 6:00 மணிவரை : https://upsconline.nic.in// என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாள்: 02.07.2018 | தேர்வு நாள்: 09.09.2018

கூடுதல் விவரங்களுக்கு: https://goo.gl/NdKrgt

வங்கியில் காலிப் பணியிடங்கள்

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் புரோபேஷனரி ஆபீசர் பதவிக் கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு அதிகாரிகளாகப் பணியமர்த்தப்படுவார்கள். பயிற்சிக் கட்டணம் ரூ. 3,45,000. வங்கிக் கடன் பெற்று பயிற்சிக் கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

காலிப் பணியிடங்கள்: 600

வயது: 02.07.2018 அன்று குறைந்தபட்ச வயது 20, அதிகபட்ச வயது 28. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்புச் சலுகை உண்டு.

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி ஆகியோர் 50 சதவீத மதிப்பெண்களும், பிறர் 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு ரூ. 100. பிறருக்கு ரூ. 600. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதியுடையோர் www.bankofbaroda.com என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் 2018 ஜூலை 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் வெளியாகத் தொடங்கிய நாள்: 12.06.2018.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 02.07.2018

எழுத்துத் தேர்வு: 28.07.2018 (மாறுதலுக்குட்பட்டது)

கூடுதல் விவரங்களுக்கு:https://goo.gl/p9tfzH

பிளஸ் 2வுக்குப் பிறகு: கல்வி உதவித்தொகைகள்!

பிளஸ்டூவுக்குப் பிறகு எடுக்கும் முடிவுதான் பெரும் பாலான நேரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வியை நம்முடைய பொருளாதாரத் தடைகள் தீர்மானிக்க விடலாமா? நிச்சயமாகக் கூடாது.

ஒரு காலத்தில் வசதியானவர்கள் மட்டுமே படிக்கக் கூடியதாகக் கருதப்பட்ட உயர்கல்வி இன்று எல்லாத் தரப்பு மக்களும் படிக்கக்கூடிய கல்வியாக மாறி உள்ளது. அதற்கு மிக முக்கியக் காரணம் அரசு அளிக்கக்கூடிய கல்வி உதவித்தொகைகளும் சலுகைகளும்தான். அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகம்  ‘பிரகதி’ என்ற திட்டத்தின் மூலம் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய மாணவிகள் இலவச மாகப் பொறியியல் கல்வி பயிலக் கல்வி கட்டணம் முழுவதையும் கல்லூரிகளுக்கே செலுத்திவிடுகிறது. இதற்குப் பிளஸ் டூ வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

இசுலாமிய, கிறித்தவ மாணவர்கள் பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து இருந்தால் சிறுபான்மை துறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.25 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். ஆண்டுதோறும் உதவித்தொகையைப் பெற அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். கல்லூரியில் படிக்கும்போது அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி அடைய வேண்டும். இந்த உதவித்தொகையைப் பெற  Indian Oil Academic Scholarship’, ‘HDFC Scholarship’, ‘North South Foundation’  இல் விண்ணப்பிக்க வேண்டும்.

மாநில அரசானது முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவ - மாணவியர்களுக்கு ரூ.25 ஆயிரம் கல்விக் கட்டணமாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கே அரசு சார்பில் செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அரசு ஒதுக்கீட்டில் சேரக்கூடிய மாணவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படுகிறது. பொறியியல் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகக் கலந்தாய்வில் கலந்துகொண்டு முதல் தலைமுறைப் பட்டதாரிச் சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். முதல்தலைமுறைச் சான்றிதழை தாலுகா அலுவலகத்தில் சென்று விண்ணப்பித்துப் பெற வேண்டும்.

பட்டியலின மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகை உள்ள கல்லூரிகளைத் தேர்வுசெய்து படிக்கலாம்.

மேலும் சில அரசு, தனியார் அமைப்புகளும் கல்வி உதவித்தொகைகளை வழங்கிவருகின்றன. அதில்   கல்வி உதவித்தொகை, Indian Oil Academic Scholarship’, ‘HDFC Scholarship’, ‘North South Foundation’
கல்வி உதவித் தொகை,   ‘‘Fair and Lovely Scholarship for Women’  போன்ற வற்றை பெற அவற்றின் இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கிக் கடனைப் பெற விரும்புவோர் ‘www.vidyalak shmi.com’ என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். பிறகு நீங்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் வங்கியில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். மாணவர், பெற்றோரின் பான் கார்டு, ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ்கள், தேர்ந்தெடுத்த கல்லூரியில் பெறப்பட்ட   போன்ற ஆவணங்களைச் சமர்ப்பித்தால் வங்கிக் கடன் எளிதாகக் கிடைக்கும். எனவே, உயர் கல்விக்குப் பொருளாதாரச் சூழ்நிலை என்பது எந்த வகையிலும் தடை இல்லை என்பதைப் பெற்றோர்களும் மாணவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

விமான நிலையங்களில் காலிப் பணியிடங்கள்

மத்திய அரசின் முன்னணிப் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய விமான நிலையங்கள் ஆணை யத்தின் தென்பிராந்தியம் இளநிலை உதவியாளர் (தீயணைப்பு பணி) பதவியில் 147 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப உள்ளது.

தேவையான தகுதி

எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு மூன்றாண்டுகள் பொறியியல் டிப்ளமா (பாலிடெக்னிக்) முடித்த அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆண்களும், பெண்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். அதோடு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அல்லது லகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று இரண்டாண்டுகள் பூர்த்தியானவர்களாக இருக்க வேண்டும். நல்ல பார்வை அவசியம். உயரம் ஆண் களுக்கு 167 செ.மீ., பெண்களுக்கு 157 செ.மீ. அவசியம்.

வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவி னருக்கு அய்ந்து ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு மூன்று ஆண்டு களும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப் படும்.

என்ன கேட்பார்கள்?

எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது. ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வில் எஸ்.எஸ்.எல்.சி. நிலை அடிப்படைக் கணிதம், அடிப்படை அறி வியல், அடிப்படை ஆங்கிலம், இலக்கணம் ஆகியவற்றில் தலா 25 கேள்விகளும், பிளஸ் டூ நிலை பொது அறிவு பகுதியில் 25 கேள்விகளும் (மொத்தம் 100 கேள் விகள்) இடம்பெறும்.

தேர்வு 2 மணி நேரம். மொத்த மதிப்பெண் 100. உடல் திறன் தேர்வில் 100 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல், கம்பி ஏறுதல், ஏணி ஏறுதல், கூடுதல் எடையை வைத்துக்கொண்டு 60 மீட்டர் ஓட்டம் ஆகியவை இடம்பெறும்.

எழுத்துத் தேர்வு சென்னை, பெங் களூரு, கொச்சி, அய்தராபாத் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும். உரிய கல்வித் தகுதி, வயது வரம்புத் தகுதி, உடல் திறன் தகுதி உடையவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

ஜூலை 15

இணையதளத் தகவல்:www.aai.aero

 

 

உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாகவும், 10இல் ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கும் பிரிவாகவும் திகழ்கிறது சுற்றுலாத் துறை. இந்தத்துறைத் தொடர்பான சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பட்டப் படிப்புக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகமாகிவருகிறது. மேலாண்மை சார்ந்த கல்வி, உலகச் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய பாடத்திட்டம், படிக்கும் போதே சுற்றுலா சார்ந்த நிறுவனங்களில் பயிற்சி, படித்து முடித்த உடன் வேலை, எனப் பல சிறப்புகளைக் கொண்டு இருக்கும் சுற்றுலா படிப்புகள் உலக அளவில் அநேக மாணவர்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் படிப்பாக உள்ளது.

சுற்றுலா சார்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவிச் சிறப்பாகச் செயல்பட்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துவருகின்றன. ஆனாலும், தமிழகத்தில் சுற்றுலா படிப்பைப் பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் அவ்வளவாக இல்லை என்பதே நிதர்சனம்.

கற்றுக்கொள்ள ஏராளம்

பிளஸ் டூ முடித்த மாணவர்கள், இளநிலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட், பி.பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட், பி.காம். டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட் எனப் பல பெயர்களில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கோவை அரசு கலைக் கல்லூரி உட்படப் பல அரசு, தனியார் கல்லூரிகளில் பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட் என்ற மூன்று ஆண்டு பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பிரிவில் படித்த மாணவர்களும் இந்தத் துறையைத் தேர்தெடுத்துப் படிக்கலாம். தகவல் தொடர்புத் திறன், ஆளுமை மேம்பாடு, பயண நிறுவனம் மேலாண்மை, உலகச் சுற்றுலாத் தலங்களைப் பற்றிய அறிவு , சுற்றுலா தொகுப்பு வடிவமைப்பு, சந்தைப் படுத்தல் மேலாண்மை, சுற்றுலா பொருளாதாரம், விருந்தோம்பல் மேலாண்மை, நிகழ்வு மேலாண்மை, விமான மற்றும் விமான நிலைய மேலாண்மை ஆகியவை சுற்றுலா பாடத்திட்டத்தில் உள்ள மிக முக்கியமான பாடங்கள். இந்தப் பாடப் பிரிவில் கற்றுத்தேர்ந்து சிறந்த அறிவும் ஆங்கில மொழிப் புலமையும் பேச்சுத் திறனும் வளர்த்துக் கொண்டால் சுற்றுலாத் துறையில் பிரகாசமான எதிர்காலம் நிச்சயம்.

அதுக்கும் மேலே

ஏதாவது ஓர் இளநிலை பட்டம் பெற்ற பிறகும்கூட, முதுநிலை பட்டமாக சுற்றுலா படிப்புகளைப் படிக்கலாம்.  மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியச் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை கல்வி நிறுவனம் குவாலியர், நொய்டா, புவனேஸ்வர், கோவா, நெல்லூர் ஆகிய இடங்களில் சுற்றுலா சார்ந்த உயர் கல்வியை வழங்குகிறது.

புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுடில்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்,  கர்வால் பல்கலைக்கழகம், ஜம்மு மத்தியப் பல்கலைக்கழகம், ஹிமாச்சல் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய மத்தியப் பல்கலைக்கழகங்களில் சுற்றுலா சார்ந்த முதுநிலை பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை அரசு கலைக் கல்லூரியிலும் சுற்றுலா சார்ந்த முதுநிலை பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன.

தனித்துவம் வாய்ந்த பொறியியல் படிப்புகள்

பொறியியல் உயர்கல்வி என்பது ஒருவரின் பொருளாதார எதிர்காலத்தை அமைத்துத் தருவது மட்டுமல்ல. அவரது கனவு, லட்சியம் ஆகியவற்றை ஈடேற்றுவதும்கூட. அப்படிச் சுவாரசியமும் சவாலும் நிரம்பிய தனித்துவமானவர்களுக்கான சில பொறியியல் படிப்புகள் உள்ளன.

வான், விண் ஊர்திகளுக்கு

வானூர்திகள் முதல் விண்கலங்கள்வரையிலான படிப்புகள் தற்போதைய தலைமுறையினர் மத்தியில் சிறுவயதுக் கனவாக உள்ளன. இவை குறித்தான படிப்புகள் ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிகல் என இரண்டு துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலோட்டமாகப் பார்த்தால் இவை ஒன்றுபோலவே தோன்றலாம். ஆனால், ஏரோநாட்டிகல் என்பது விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல்வகை வானூர்திகளைப் பற்றிய படிப்பு. ஏரோஸ்பேஸ் என்பதில் ஏரோநாட்டிகல் பாடங்களுடன், ஏவுகணை, ராக்கெட், விண்வெளி மய்யம், விண்வெளி ஓடம் உள் ளிட்டவற்றையப் பற்றியும் படிக்கலாம். இவற்றில் விண் வெளியை மட்டுமே மய்யமாகக் கொண்ட அஸ்ட்ரோ நாட்டிகல் பொறியியல் துறையும் தனியாக உள்ளது.

விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு இந்தியா முக்கியத் துவம் அளித்துவருவதால் அடுத்த பத்தாண்டுகளில் பெரும் பாய்ச்சலை இந்தத் துறைகள் ஏற்படுத்துமெனக் கணிக்கப்படுகிறது. இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., ஏர் இந்தியா என விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு, பயணிகள் விமான சேவை உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் தனியாக உள்ளன. தற்போதைக்கு இங்கு ஏரோஸ்பேஸ் அரசு வசமே இருந்தாலும், 49 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு வரவிருப்பதால் இத்துறையில் பணிவாய்ப்புகள் அதிகரிக்கும். பன்னாட்டு விமான நிறுவனங்களுக்கான மென்பொருள் சேவை வழங்கும் இந்திய மென்பொருள் சந்தையிலும் உயர்பதவிகள் காத்திருக்கின்றன.

இளநிலைப் பொறியியல் பட்டத்துடன், முதுநிலையில் எம்.டெக்., அல்லது எம்.எஸ்., அதைத் தொடர்ந்து ஆராய்ச்சி நிலையில் பி.ஹெச்டி. வரை படிப்பவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. சிறு வானூர்தி ரகங்களான ட்ரோன், வேவுப் பணிக்கான ஆளில்லா விமானங்கள் தயாரிப்பது, வான்/விண் வாகனங்களுக்கான மின்னணுக் கட்டுப் பாட்டுச் சாதனங்களைத் தயாரிக்கும் ஏவியானிக்ஸ் துறை என வேலைவாய்ப்புகள் ஏறுமுகத்தில் உள்ளன.

கப்பல் கட்டலாம்

வானில் உயரப் பறப்பதுபோலவே கப்பலில் பணிபுரிவதும் சுவாரசியமானதே! கடந்த சில ஆண்டுகளில் கப்பல் கட்டுமானத்தில் இந்தியா முன்னேறி இருப்பதும் இந்தியத் துறைமுகங்களுக்கு இடையே சரக்குப் போக்கு வரத்து அதிகரித்து இருப்பதும் கப்பல் சார் பொறியியல் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளன. பயணிகள் கப்பல், சரக்குக் கப்பல், அதிவேகப் படகு, உல்லாசப் படகு, நவீன மீன்பிடி கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் எனக் கப்பல் கட்டுமானத் துறை பரந்துவிரிந்தது. போக்குவரத்து மட்டுமன்றிப் பாதுகாப்பு சார்ந்தும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் கப்பல்களும் படகுகளும் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

கடலில் மிதக்கும் இந்தக் கலன்களுக்காக நீரிலும், நிலத்திலும் அதிக எண்ணிக்கையில் பணிபுரிய பொறி யாளர்கள் தேவைப்படுகின்றனர். மெக்கானிக்கல், எலெக்ட் ரிக்கல் மட்டுமன்றி மரைன் இன்ஜினீயரிங் துறை மூலம் திறன் வாய்ந்த பொறியாளர்கள் பணி அமர்த்தப் படுகின்றனர். கப்பல் கட்டுமானத் துறை அய்ரோப்பா விலிருந்து ஆசியாவின் துறைமுக நகரங்களுக்கு நகர்ந்திருக்கிறது. வடிவமைத்தல், கட்டுமானம் மட்டுமன்றி, பழுது நீக்கல், பராமரிப்பு, ஆராய்ச்சி மேம்பாடு போன்றவற்றிலும் மரைன் பொறியாளர்களுக்கு நிறைவான ஊதியம் கிடைக்கிறது.

சுற்றுச்சூழல் காக்கும் பொறியியல்

சூழலியல் பொறியியல் என்பது ஒரு தனித்துவமானத் துறை. சிவில் பொறியியலில் ஒரு பகுதியாக மட்டுமே முன்பு அது இருந்தது, தற்போது காலத்தின் கட்டாயத்தால் தனித் துறையாக வளர்ந்திருக்கிறது. உயிரியல், இயற்பியல், வேதியியல் எனப் அறிவியலில் இருந்தும், சிவில், எலெக்ட்ரிகல், மெக்கானிக்கல், கெமிக்கல் இன்ஜினீயரிங் எனப் பொறியியல் துறைகளில் இருந்தும் கலவையான பாடத்திட்டத்தில் இந்தச் சுற்றுச்சூழல் பொறியியல் துறை உருவாகி உள்ளது.

மேற்கண்ட அறிவியல்,பொறியியல் படிப்புகளை இளநிலையாகப் பயின்றவர்கள், முதுநிலையாகச் சுற்றுச்சூழல் சார்ந்த படிப்புகளில் சேர்ந்து வந்தனர். தற்போது சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கைகள், திட்டங்கள், புதிய சட்டங்கள், விழிப்புணர்வு காரணமாகவும் அத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஊதியத்துக்கு அப்பால் மனத் திருப்தியையும் தரும் இந்தப் படிப்புக்கான பணியில் பெறலாம்.

கட்டுமானம், மருந்து ஆராய்ச்சி, வேதிப்பொருள் தயாரிப்பு எனத் தொழிற்துறைகள் எதுவானாலும் சுற்றுச்சூழல் சீர்கேடு இன்றித் தங்கள் பணிகளை அவர்கள் மேற்கொண்டாக வேண்டும். இவற்றுக்கு ஆலோசகர்கள், அரசு, அரசுசாரா நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள், தொழிற்துறை, கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

சுரங்கம், மாசுக் கட்டுப்பாடு, நீர் மற்றும் கனிம வளம் போன்றவை சார்ந்த துறைகளிலும் தனியார், அரசுப் பணியிடங்களில் சேரலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை மய்யமாகக்கொண்டு செயல்படும் அரசு சாரா தொண்டு, ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பணிவாய்ப்புகள் உண்டு.

இந்தியப் பாதுகாப்புப் படையில் பணியிடங்கள்

இந்திய ராணுவத்திலும் கடற் படையிலும் விமானப் படையிலும் 383 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

கல்வி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 02.01.2000 முதல் 01.01.2003 வரையான காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப் பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவின ருக்குக் கட்டணமில்லை. பிறருக்குக் கட்டணம் ரூ.100. கட்டணத்தை ஆன்லைனிலோ வங்கி சலான் மூலமோ கட்டலாம்.

உரிய உடல், கல்வி, வயதுத் தகுதி கொண்டோர் 06.06.2018 முதல் 02.07.2018 மாலை 6:00 மணிவரை https://upsconline.nic.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாள்: 02.07.2018 | தேர்வு நாள்: 09.09.2018

Banner
Banner