இளைஞர்

போக்குவரத்து அதிகம் நிறைந்த மெட்ரோ நகரங்களில், பொது மக்களின் தலையாய தேவையாக மாறிவருவதுதான் மெட்ரோ ரயில் எனப்படும் நவீன ரயில் போக்குவரத்து சேவை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தற்சமயம் காலியாக உள்ள

பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இடங்கள் பி.ஜி., டிப்ளமோ இன் மெட்ரோ ரயில் டெக்னாலஜி & மேனேஜ்மென்ட் படிப்பாக துவங்கி பின்னர் வேலை வாய்ப்புடன் முடியும் என்று தெரிகிறது.

காலியிட விபரம்: சிவில் பிரிவில் 5, எலக்ட்ரிகலில் 10, எலக்ட் ரானிக்சில் 8, மெக்கானிகலில் 2ம் சேர்த்து மொத்தம் 25 பொறியியல் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 2018 மே 27அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : மேற்கண்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை : மாதம் ரூ.20 ஆயிரத்தை பயிற்சிக் காலத்தில் பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.

கடைசி நாள் : 2018 ஜூன் 16.

விபரங்களுக்கு: https://chennaimetrorail.org/wp-content/uploads /2018/05/Advertisement_No.CMRL-HR-04-2018.pdf

புதிய சாதனை... ஹைட்ரஜன் எரிபொருள்!

சூரிய ஒளியில் இருந்து ஒருமணி நேரத்தில் கிடைக்கக்கூடிய ஆற்றல், இன்று மனிதகுலம் ஓராண்டு பயன்படுத்தும் ஆற்றலுக்கு இணையானது. ஆனால், இயற்கை அளித்துள்ள இந்த கொடையை நமக்குத் தேவையான ஆற்றல் மூலங்களாக இன்றைய சாதனங்கள் மூலம் மாற்றுவது என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது.

அதேநேரத்தில், யு.கே.வில் உள்ள  பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட விஞ்ஞானி கோவிந்தர் சிங் பவாரின் சூரிய சக்தி எரிபொருள் குறித்த ஆராய்ச்சி ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனையும், ஆக்சிஜனை யும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி பிரித்து எடுத்து, ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் பவார் குழுவினரின் மேம்படுத்தப்பட்ட புதுமையான ஆய்வு முறை குறித்து கடந்த பிப்ரவரி மாதம்   என்ற அறிவியல் ஆய்விதழில் விளக்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

சுத்தமான ஹைட்ரஜன் வாயு, காற்றில் எரியும்போது, காற்றிலுள்ள ஆக்ஸிஜனோடு வினைபுரிந்து தண்ணீராக மாறுவதோடு ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.

இந்த ஹைட்ரஜன் பூஜ்ய உமிழ்வு எரிபொருள் என்பதோடு, இதன் உப உற்பத்தியாக தண்ணீர் மட்டுமே வெளியாகிறது. ஆனால், சுத்தமான ஹைட்ரஜனைப் பெறுவது சவாலாகவே உள்ளது. இது பூமியில் இயற்கை யாகக் கிடைப்பதில்லை. எனினும், இந்த எளிய மூலக்கூறு தண்ணீர் வடிவில் எங்கும் காணப்பட்டாலும், அதிலிருந்து ஹைட்ரஜனை மட்டும் தனியாகப் பிரித்தெடுப்பது கடினமாகவே இருந்து வருகிறது.

ஆனால், இந்த வகையிலான ஓர் இயற்கை நடைமுறை பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. அது தாவரங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கை நிகழ்வுதான். தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீர், இலைகளுக்குச் சென்ற பிறகு, அதிலுள்ள பச்சையம் சூரிய ஒளியைப் பயன்படுத்தி தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளை பிரித்து உணவாக எடுத்துக் கொள்கிறது.

இந்த வகையிலேயே கோவிந்தர் சிங் பவாரின்ஆய்வில் செயற்கையாக தண்ணீரில் ஒளியை செலுத்தி மின்னாற் பகுப்பு மூலம் அதிலுள்ள ஹைட்ரஜன் பிரிக்கப்படுகிறது. அதாவது, தாவர ஒளிச்சேர்க்கை முறையைப் பின்பற்றி ஒளிமின்முனைகளைக்  கொண்டு தண்ணீரில் உள்ள ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் பிரிக்கப்படுகிறது. இந்த செயல்முறையின் திறனை தீர்மானிப்பதில் ஒளிமின் முனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த ஒளி மின்னாற்பகுப்பில், வெப்ப இயக்கவியல் மற்றும் இயக்கவியல் அளவுகோல்களின்படி, நிலையான, குறைந்த செலவிலான குறைகடத்திகளாக செயல்படும் ஒளிமின்முனைகளை உருவாக்குவதிலேயே இதன் வெற்றி உள்ளது. அது அவ்வளவு எளிதானதாக இல்லை.

இதுபோன்ற மலிவான, மேம்பட்ட தெளிப்பு வெப்பச் சிதைவு முறையில் பயன்படும்படியான ஒளிமின்முனை குறைகடத்தியைதான் கோவிந்தர் சிங் பவார் தற்போது உருவாக்கியுள்ளார். இந்த ஒளிமின்முனைக்கான குறை கடத்தி லேந்தனம், இரும்பு, ஆக்சிஜன் ஆகிய தனிமங்கள் அடங்கிய நானோ துகள்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதுமையான குறைகடத்தி வேறு வெளிப்புற பொருள்கள் எதையும் பயன்படுத்தாமல், தன்னிச்சையாக தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுக்கக்கூடியது. இது இப்போது 30 சதவீத செயல்திறனை வெளிப் படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களில் உண்மையான மாற்றத்துக்கான நிலையான பாதையை அளிப்பதில் கோவிந்தர் சிங் பவார் குழுவின் ஆய்வு அடிப்படையாக அமையும் என கருதப்படுகிறது.

தற்போது நாம் செலவுமிக்க, படிம எரிபொருள்களை எரிப்பதன் மூலம் கிடைக்கும் 85 சதவீத ஆற்றலைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், லேந்தனம் இரும்பு ஆக்சைடு குறைகடத்தி கண்டுபிடிப்பு மூலம் போக்கு வரத்துக்கும், சேமித்து வைப்பதற்கும் உகந்ததுமான சுத்தமான எரிசக்தி ஆற்றலை நாம் பெறமுடியும்.

செயற்கை ஒளிச்சேர்க்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த ஹைட்ரஜன் எரிபொருள் கடுமையான கார்பன் உமிழ்வைக் குறைப்பதுடன், இது கிட்டத்தட்ட வரம்பற்ற ஆற்றல் மூலமாக உள்ளது என  பல்கலைக்கழகம்

தெரிவித்துள்ளது. ஒளிமின் வேதியியல்  தண்ணீர் பிளவு, இயற்கை ஒளிச்சேர்க்கையை விஞ்சும் அளவில் கார்பன் (கரி) இல்லாத ஹைட்ரஜன் பொருளாதாரமாகவும் பார்க்கப் படுகிறது. மேலும், இதில் பயன்படுத்தப்படும் பொருள்கள் 21 மணிநேர தொடர் ஆய்வுக்குப் பிறகும் சிதையாது, சிறந்த உறுதிப்பாட்டுடன், நீர் பிளவு பயன்பாட்டுக்கு ஏற்றதாக உள்ளன.

கோவிந்தர் சிங் பவார் மற்றும் அவரது தலைமையிலான குழு ஹைட்ரஜன் தயாரிப்புக்கான இந்தப் பொருள் களின் உறுதிப்பாட்டை மேலும் உயர்த்தும் பொருட்டு தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வு முழு வெற்றிபெறும்பட்சத்தில் இது ஓர் உலக சாதனையாக அமையும். எப்படியோ, பெட்ரோலுக்குப் பதிலாக வாகனங்கள் தண்ணீரில் ஓடும் காலம் வெகு தொலைவில் இல்லை.

 

 

வேலைவாய்ப்புகள் நிறைந்த ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட்

எந்தத் தொழில் வளர்கிறதோ இல்லையோ மருத்துவத்துறை வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. புதிய புதிய நோய்கள் மனிதர்களை வாட்டி வதைக்கின்றன. இதனால் மருத்துவத் தொழில் மிக வேகமாக வளர்ந்து மிகப்பெரிய துறையாக பரந்து விரிந்துள்ளது. மருத்துவ சிகிச்சை பெற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கூட இந்தியாவிற்கு வந்து செல்கின்றனர்.  வளரும் எந்தத்துறையும் பெரிதாக, பெரிதாக அதை நிர்வகிக்க தனித்துறையே செயல்பட வேண்டியுள்ளது. மருத்துவத் துறையை மேலாண்மை செய்ய ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் என்ற துறை உருவாகியிருக்கிறது. அத்துறையில் வேலை செய்ய அதற்கான கல்வியைக் கற்க வேண்டியது அவசியமாகும். எம்பிஏ படிப்பில் அதற்கென தனியாக ஹெல்த்கேர் படிப்பே உள்ளது. இத்துறை மிகப்பெரிய துறையாக விளங்குவதால் வேலை வாய்ப்புகள் அதிமாக உள்ளன.

ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் சம்பந்தமான படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் :

Hinduja Institute  of  Healthcare Management } http://www. hindujagroup.com/hinduja}foundation/healthcare.html,  Indian Institute Of Health Management Research } https://www.iihmr.edu.in/, Institute of Health Management Research } http://www. bangalore.iihmr.org/, ICRI India} H

நாள் முழுவதும் படி படி என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் வலியுறுத்துவதாலேயே பல குழந்தைகளுக்குப் படிப்பின் மீதான இயல்பான நாட்டம்கூடக் குறைந்துபோகிறது.

விருப்பம் இன்மையால் பள்ளியிலிருந்து இடைநின்று போகும் பல குழந்தைகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளித்துவருகிறது கடலூரில் உள்ள சங்கம் ஸ்போர்ட்ஸ் அண்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி.

மீண்டும் அவர்களை பள்ளிக்கு அனுப்பிப் படிப்பிலும் விளை யாட்டிலும் திறனை மேம்படுத்த முயல்கிறது. நானே பதினோராம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டவன்தான் என்கிறார் இந்த அமைப்பின் நிறுவனர் மாஜி சிங்.

11ஆம் வகுப்பு இடைநிற்றலுடன், கராத்தே, ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை 15 ஆண்டுகள் கற்று நிபுணத்துவம் பெற்றேன். பீப்பிள்ஸ் வாட்ச் மனித உரிமை அமைப்பின் மண்டல ஒருங்கிணைப் பாளராக எட்டு மாவட்டங்களில் களப் பணியாற்றினேன். அந்த காலகட்டத்தில்தான் விளிம்புநிலை மக்களின் வளர்ச்சி, முன்னேற்றம், பாதுகாப்பு சார்ந்த பல்வேறு செயல்பாடுகள் பற்றிய விசாலமான பார்வை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து எட்டாண்டுகள் நான் பணியாற்றிய ரோட் நிறுவனம், சங்க வளர்ச்சி சார்ந்த பணிகளைத் திட்டமிட உதவியது. இப்படியாகத் தனிநபர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவி, வழி காட்டுதலுடன் விளிம்புநிலை மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக் கான பணிகளை செய்ய ஆரம்பித்தேன் என்கிறார் மாஜி சிங்.

எழுத்தறிவு மட்டும் போதாது என்ற புரிதல் ஏற்பட்டவுடன், விளையாட்டு, வாழ்திறன் வளர்ச்சிக்கு உதவிகள் செய்ய ஆரம் பித்திருக்கிறார் இவர். அதிலும் கல்வி, வேலைத்திறனில் பின்தங்கி இருப்பவர்களை விளையாட்டுத் திறன் மூலமாக முன்னேற்றலாம் என்ற யோசனை வந்தது. அதன் பின்னர் ஆதிதிராவிட நலப்பள்ளி மாணவர்கள், விளிம்புநிலையை மாணவர்களையும் விளையாட்டில் ஈடுபடுத்தப் பல்வேறு விளையாட்டு சங்கங்களுடன் கைகோத்தார்.

மாவட்ட, மாநில, தேசியப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற் பதற்கான முயற்சிகளை எங்களுடைய சங்கம், அறக்கட்டளை மூலமாக எடுத்தேன். அதோடு மாநில விளையாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதித் தேர்வுகளில் பங்கேற்க மாணவர்களுக்குப் பயிற்சிக்கான ஏற்பாடு செய்தேன்.

இதன் விளைவாக தமிழ்நாடு ஜூடோ சங்கம், தமிழ்நாடு தடகளச் சங்கம், தமிழ்நாடு ஊரக விளையாட்டுச் சங்கம் ஆகியவற்றின் உதவி யாலும், தனிநபர்கள் நிதியுதவியாலும் விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சிகளை தற்போது ஒருங்கிணைத்துவருகிறேன் என்கிறார்.

ரயில்வேயில் 9,739 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயின் காவல் படையான ரயில்வே போலீஸ் போர்ஸ் என்பது சுருக்கமாக ஆர்.பி.எப்., என அழைக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் ஆர்.பி.எப்.,பின் பணி மகத்தானது.

பெருமைக்குரிய இந்த காவல்படையில் கான்ஸ் டபிள் - எக்சிக்யூடிவ் மற்றும் உதவி  ஆய்வாளர் பிரிவில், 9,739 இடங்களை நிரப்புவதற்கு விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ரயில்வே மண்டல வாரியாக நிரப்பப்பட உள்ளன.

காலியிட விபரம்: மண்டல அளவிலான ஆண் களுக்கான கான்ஸ்டபிள் (எக்சிக்யூடிவ்) பிரிவில் 4,403 இடங்களும், இதே பிரிவிலான பெண் களுக்கான பிரிவில் 4,216 இடங்களும், உதவி ஆய்வாளர் பிரிவில் ஆண்களுக்கு 819 இடங்களும், பெண்களுக்கு 301 இடங்களும் சேர்த்து மொத்தம் 9739 இடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உடல் தகுதி : குறைந்தபட்ச உடல் தகுதிகள், ஆண்கள் உயரம் 165 செ.மீ., பெண்கள் உயரம் 157 செ.மீ., மற்றும் உயரத்திற்கு நிகரான எடை பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்.பி.எப்., பின் மேற் கண்ட இடங்களுக்கு ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.  கடைசி நாள் : 2018 ஜூன் 30.

விபரங்களுக்கு: www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,1,304,366,533,2015

கடல் சார்ந்த நிறுவனத்தில் பணி வாய்ப்பு

நேஷனல் சென்டர் பார் சஸ்டெய்னபிள் கோஸ்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம் கடல் சார்ந்த வளங்களை நிர்வகிக்கும் நிறுவனமாகும். என்.சி. எஸ்.சி.எம்., என அழைக்கப்படுகிறது.

காலியிட விபரம் : என்.சி.எஸ்.சி.எம்., நிறுவனத் தின் மேற்கண்ட இடங்கள் புராஜக்ட் அசோசியேட், புராஜக்ட் சயின்டிஸ்ட், ரிசர்ச் சயின்டிஸ்ட், அட்மினிஸ்டிரேடிவ் அசிஸ்டென்ட் என்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன.

வயது : புராஜக்ட் அசோசியேட் பதவிக்கு அதிக பட்சம் 45 வயதும், புராஜக்ட் சயின்டிஸ்ட் பதவிக்கு அதிகபட்சம் 40 வயதும், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பிரிவுக்கு அதிகபட்சம் 35 வயதும் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.

கல்வித் தகுதி : மல்டி டாஸ்கிங் அசிஸ்டென்ட் பதவிக்கு பத்தாம் வகுப்பும், இதர பிரிவுகளுக்கு பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப் பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 2018 ஜூன் 1.

விபரங்களுக்கு: http://ncscm.res.in/cms/careers/careers.php

என்றென்றும் அறிவியல்!

கல்வியாண்டுதோறும் புதிது புதிதாக உயர்கல்விப் படிப்புகள் அறிமுகமாகி வருகின்றன. ஆனபோதும் ஒரு சில அடிப்படையான பாரம்பரியப் படிப்புகள், தலைமுறைகள் தாண்டியும் வரவேற்பு இழக்காமல் இருக்கின்றன. கணிதம், இயற் பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் படிப்புகள் அந்த வரிசையில் சேரும். பிளஸ் டூ-வில் இவற்றை முதன்மைப் பாடங்களாகப் படித்தவர்கள், கல்லூரிகளில் இளம் அறிவியல் படிப்புகளுக்கு விண் ணப்பிக்கலாம்.

வாய்ப்பு நிறைந்த அறிவியல்

இயற்பியல், வேதியியல் உயர்கல்வித் துறைகள் பள்ளி, கல்லூரி ஆசிரியர் பணிகளுக்கு அப்பால் அதிகக் கவனம் பெறாதிருக்கின்றன. பி.எஸ்சி. இயற்பியல் படித்தவர்களுக்கு ஏரோ ஸ்பேஸ், எண்ணெய், எரிவாயு, பொறியியல், உற்பத்தி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. முதுநிலையில் இயற்பியல் அல்லது அப்ளைய்டு பிஸிக்ஸ், ஆராய்ச்சிப் படிப்புகள், எம்.பி.ஏ. போன்றவை மூலம் உயர்கல்வித் தகுதியை மாணவர்கள் உயர்த்திக்கொள்ளலாம்.

பி.எஸ்சி. வேதியியல் படித்தவர்களுக்கு வேதிப்பொருள் ஆய்வகங்கள், மருந்துவ, மருந்து பரிசோதனைக் கூடங்கள், சுகாதாரம்-ஆரோக்கியம் சார்ந்த நிறுவனங்கள், அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு - ஆராய்ச்சி நிறுவனங்களில் பல்வேறு நிலைகளில் பணிகள் காத்திருக்கின்றன.

தொடர்ந்து எம்.எஸ்சி.யில் பயோ கெமிஸ்ட்ரி, அப்ளைடு கெமிஸ்ட்ரி, இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, ஃபார்மாசூட்டிகல் கெமிஸ்ட்ரி உள்ளிட்டவற்றைப் படித்துப் பொதுத் துறை, தனியார் துறைகளில் பணிவாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ளலாம்.

இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்குச் சில மாதங்கள் பயிற்சியளித்து அய்.டி. துறை பணியில் அமர்த்திக்கொள்கிறது. மருத்துவ சேவை, அழகுசாதனங்கள், மருந்துப் பொருள் தயாரிப்பு தொடர்பிலான பி.பி.ஓ. நிறுவனங்களும் இதேபோன்று இளம் அறிவியல் பட்டதாரிகளுக்குப் பயிற்சி அளித்துப் பணியில் சேர்த்துக் கொள்கின்றன.

இளம் அறிவியல் படிப்புடன் முதுநிலையை மேற்கொள்ள விரும்புவோர், எம்.எஸ்சி. நேனோ டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ், பயோ டெக்னாலஜி போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் சென்னையில் உள்ள மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனம்(https://www.clri.org/), காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வு மய்யம் (http://www.cecri.res.in/), மொஹாலியில் உள்ள  (http://www.inst.ac.in/)ஆகிய மய்யங்களில் அவற்றைப் பயிலலாம்.

 

பொறியியல் சேர்க்கையில் அய்.அய்டி., என்.அய்.டி., அரசுக் கல்லூரிகள் போன்ற வாய்ப்புகளுக்கு அப்பால் தங்கள் முன்பாக இரைந்து கிடக்கும் பொறியியல் கல்லூரிகளில் சிறப்பான ஒன்றை, விரும்பிய பாடப்பிரிவுடன் கண்டறிந்து சேர விழையும் மாணவர்களே எண்ணிக்கையில் அதிகம் இருக்கிறார்கள்.

பொறியியல் படிப்பில் தணியாத ஆர்வமும் சாதிக்கும் வெறியும் கொண்டவர்களுக்குப் பொறியியல் படிப்பு என்றும் நல்ல பிரகாசமான எதிர்காலம். தரக்குறைவால் மாணவர்களின் வரவேற்பை இழந்த வையும் வணிக நோக்கிலான எதிர்பார்ப்பில் பொய்த்த கல்லூரிகளுமே பெரும்பாலும் மூடப்பட்டு வருவதால், அவற்றையும் இத்துறையின் ஆரோக்கியமான போக்காகவே கருதலாம்.

விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும் ஏதோவொரு கல்லூரியில் சேர்ந்து படிக்கலாமா, சிறந்த கல்லூரியில் கிடைக்கும் ஏதோவொரு பொறியியல் படிப்பில் சேர்ந்து படிப்பதா? பெரும்பாலும் பெற்றோர்கள் அருகில் அமைந்திருக்கும், அதிகம் செலவு வைக்காத கல்லூரிகளில் சேருமாறு தங்களுடைய குழந்தைகளை வற்புறுத்துவார்கள். இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பமே எஞ்சும்.

இதற்குத் தீர்வு என்ன? குறிப்பிட்ட பொறியியல் பாடத்தில் மாணவர் அதீத ஆர்வம் கொண்டிருப்பின் அவரது விருப்பத்துக்குப் பெற்றோர் செவிசாய்க்கலாம். அவ்வாறு சேரும் கல்லூரி தரவரிசையில் சற்றுப் பின்தங்கியிருந்தாலும், மாணவர் தனது தனிப்பட்ட ஊக்கத்தால் சிறப்பாகத் தேறிவிடுவார். மாறாக வேலைவாய்ப்பு சார்ந்து ஏதேனும் ஒரு பட்டம் படிப்பதே அவரது நிலையாக இருப்பின் சிறப்பான கல்லூரியில் சேர்வதற்கு முன்னுரிமை வழங்குவது நல்லது.

சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுக்க

தரவரிசைப் பட்டியலில் சிறப்பான இடம், உள்கட்டமைப்பு வசதிகள், நவீன ஆய்வகங்கள், சர்வதேச நூல்கள் அடங்கிய மின் நூலகம், சரியான ஆசிரியர் மாணவர் விகிதம், கூடுதலாக வழங்கப்படும் கல்வி இணைச் செயல்பாடுகள், மென் திறன் பயிற்சி வகுப்புகள், தொழிற்சாலைகளில் செயல்முறைப் பார்வையிடல், பிரபல வெளிநாட்டு /உள்நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் வருகை, பாடம் சார்ந்த ஆராய்ச்சிகளில் கொடுக்கப்படும் முக்கியத் துவம், வளாக வேலைவாய்ப்பு உத்திரவாதங்கள், முந்தைய வருடங்களின் தேர்ச்சி விகிதம், இண்டர்ன்ஷிப் வாய்ப்புகள் எனப் பல அம்சங்கள் இந்த வரிசையில் இடம் பெற்றிருக்கும்.

இவற்றை, கல்லூரிகளின் சேர்க்கைத் தரகர்கள் தரும் இனிப்பான வாக்குறுதிகள், பளப்பான விளம்பரக் கையேடுகள், ஆர்ப்பாட்டமான இணையதளங்கள் வாயிலாக மட்டும் உறுதிசெய்வது போதாது.

நேரில் சென்று பார்வையிடுவது விசாரிப்பது, முன்னாள் மாணவர்களைக் கலந்தாலோசிப்பது, தெரிந்தவர்கள் வாயிலாக நிர்வாகத்தின் தரப்பில் விசாரித்த விவரங்களை உறுதிசெய்துகொள்வது ஆகியவையும் அவசியம். இவை அனைத்தையும்விட முக்கியமாக ஏ.அய்.சி.டி.இ., யு.ஜி.சி., அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணையதளங்கள் உதவியுடன் குறிப்பிட்ட கல்லூரியின் அதிகார பூர்வ மான அனுமதி, அங்கீகாரம், இணைவு ஆகியவற்றைச் சரிபார்த்துக் கொள்வது முக்கியம்.

எய்ம்ஸ் மருத்துவமனைப் பணியிடங்கள்

ஆந்திரப் பிரதேச மாநிலம் மங்கலகிரியிலும், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் லேப் டெக்னீஷியன், எழுத்தர், காசாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட குரூப் பி, சி பதவிகளுக்கான 60 காலிப் பணியிடங்கள் (தலா 30) நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

பெரும்பாலான பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: குறைந்தபட்ச வயது 18, அதிகப்பட்ச வயது 45. பதவிகளுக்கு ஏற்ப வயதுத் தகுதி மாறுபடுகிறது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.

விண்ணப்பக் கட்டணம்:  பொதுப் பிரிவினருக்கும், ஓ.பி.சி.யினருக்கும் ரூ.1,000., பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகி யோருக்கு கட்டணமில்லை. கட்டணத்தை ஆன் லைன் மூலமாகவே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க: உரிய தகுதியுடைய விண்ணப் பதாரர்கள் www.aiimsraipur.edu.in என்னும் இணைய தளத்தில் 18.06.2018 மாலை 5 மணிவரை விண்ணப் பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு:https://goo.gl/KSk6rv (மங்கலகிரி)https://goo.gl/YW9fXd (நாக்பூர்)

பட்டதாரிகளுக்கு மத்திய அரசுப் பணியிடங்கள்

மத்திய அரசுப் பணிகளில் குரூப் பி, குரூப் சி ஆகிய பிரிவுகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக, பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நடத்த இருக்கிறது. இந்தத் தேர்வின் மூலம் உதவித் தணிக்கை அலுவலர், உதவிக் கணக்கு அலுவலர் உள்ளிட்ட பல பதவிகளுக்கான காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. முதல்நிலைத் தேர்வு 25.07.2018-லிருந்து 20.08.2018வரையான நாட்களில் நடத்தப்பட இருக்கிறது.

எழுத்துத் தேர்வு நான்கு நிலைகளாக நடத்தப் படும். 2ஆம் நிலை, 3ஆம் நிலை, 4ஆம் நிலை ஆகியவற்றுக்கான தேர்வுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

வயதுத் தகுதி: 2018 ஆகஸ்ட் 1 அன்று, குறைந்த பட்ச வயது 18 ஆகவும் உச்சபட்ச வயது 32 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதவிகளுக்கு ஏற்ப குறைந்தபட்ச, உச்சபட்ச வயதுத் தகுதி மாறுபடுகிறது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆதர வற்ற கைம்பெண்களுக்கும் வயது வரம்பில் சலு கைகள் உள்ளன.

கல்வித் தகுதி: பதவியைப் பொறுத்துக் கல்வித் தகுதியும் மாறுபடுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டுத் தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பெண்களுக்கும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும் மாற்றுத் திறனாளி களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை. பிற ருக்குக் கட்டணம் ரூ. 100. ஆன்லைன் மூலமாகவும் வங்கி செலான் மூலமாகவும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம்.

உரிய தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் :http://www.ssconline.nic.in. என்னும் இணையதளத் தில் 04.06.2018 மாலை 5:00 மணிவரை விண்ணப் பிக்கலாம்.

இறுதி நாள்: 04.06.2018 மாலை 5.00 மணி.

முதல் நிலை எழுத்துத் தேர்வு: 2018 ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 20வரை.

கூடுதல் விவரங்களுக்கு https://bit.ly/2HZaQks

சவுத் இந்தியன் வங்கியில் அதிகாரிப் பணியிடங்கள்

கேரள மாநிலம் திருச்சூரை மய்யமாகக் கொண்டு செயல்படும் சௌத் இந்தியன் வங்கியில் புரோபேஷனரி ஆபீசர் பணிகளுக்கான 150 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறலாம்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் (60 சதவீத மதிப்பெண்களுடன்) பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 31.12.2017 அன்று 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை உண்டு

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 800, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200. கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. உண்டு.

விண்ணப்பிக்க: உரிய தகுதி உடைய விண்ணப்ப தாரர்கள் www.southindianbank.comஎன்னும் இணைய தளத்தில் மே 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு: ஜூன் 2018 (மாறுதலுக்கு உட்பட்டது).

இறுதி நாள்: 25.05.2018

கூடுதல் விவரங்களுக்குhttps://goo.gl/CDUvWR

மேலாண்மைப்

பயிற்சியாளர் பணியிடங்கள்

விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் (ராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட்), மனிதவளத் துறையிலும் மார்க்கெட்டிங் துறையிலும் மேலாண்மைப் பயிற்சியாளர் பதவிக்கான 14 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டுத் தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்கலாம். உச்சபட்ச வயது 27 (01.02.2018 அன்று). இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கும் ஓபிசியினருக்கும் ரூ.500. மாற்றுத்திறனாளிகளுக்கும் எஸ்.சி, எஸ்.டி.யினருக்கும் ரூ.100. விண்ணப்பக் கட்டணத்துக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதி உடைய விண்ணப்பதாரர்கள்www.vizagsteel.com  என்னும் இணைய தளத்தில் ஜூன் 25 முதல் ஜூலை 16வரை விண்ணப் பிக்கலாம். 2018 ஜூலை 8 அன்று நடைபெறும் யூ.ஜி.சி.-நெட் ஜூலை 2018 தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் மாத்திரமே இந்தப் பணிகளுக்குத் தகுதியுடையவராகக் கருதப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://goo.gl/JYwXGX

தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கான படிப்புகளை படித்தவர்கள் எந்த துறையிலும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி மேம்பாடு அடையலாம்.

ஒரு நிறுவனம், தொழிற்சாலை, அமைப்புகள் என அனைத்து துறைகளிலுமே நிர்வாகிகளுக்கு தலைமை பண்புகள் அவசியம் இருக்க வேண்டும். அப்போது தான் தங்களுடைய நிர்வாகத் திறமை மூலம் அந்தந்த அமைப்புகளை சரிவர இயக்கிச் செல்ல முடியும்.

தலைமைப் பண்புள்ள ஒருவரே தனக்குக் கீழ் பணிபுரிபவர்களின் முழுத் திறமைகளையும் வெளிக் கொண்டு வர முடியும். அதைப் பயன்படுத்தி அவர் சார்ந்துள்ள நிறுவனத்திற்கு லாபம் தேடித் தர முடியும். அதன் மூலம் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்த முடியும். தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள அது சம்பந்தமான படிப்புகளைப் படிக்க வேண்டும். பல்வேறு கல்வி நிறுவனங்களால் அவை நடத்தப்படுகின்றன.

தலைமை பண்புகள் குறித்த கல்வி வழங்கும் நிறுவனங்கள் :

Indian Institute of Democratic Leadership - http://www.iidl.org.in/
Rajiv Gandhi National Institute of Youth Development - http://www.rgniyd.gov.in/content/post-graduate-diploma-political-leadership-pgdpl
MIT SCHOOL OF GOVERNMENT - http://www.mitsog.org/
National School of Leadership  - http://www.nsl.ac.in/
Ashoka University - https://www.ashoka.edu.in/page/politicsandsociety-programme-16
The Institute of Political Leadership - http://www.iplindia.in/
India School Leadership Institute  - http://www.indiaschoolleaders.org/

ஃபர்னிச்சர் டிசைனிங் படிக்கலாமே!

தொழிற்சாலை, அலுவலகம், வணிக நிறுவனங்கள், வீடு, பள்ளி, கல்லூரி ஆகிய எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அங்கு ஃபர்னீச்சர் எனப்படும் நாற்காலி, மேஜை, சோபா உள்ளிட்டவை அவசியம் இருக்கும். அத்தகைய ஃபர்னீச்சர்கள் தான் ஒரு வீட்டையோ, வணிக, தொழில் நிறுவனங்களையோ அழகுபடுத்துபவையாகும்.  மிக அழகாகவும் சிறந்த வடிவமைப்புகளுடனும் அவை தயாரிக்கப்படு கின்றன. பர்னீச்சர்கள் அவசிய தேவையாக இருப்பதால் அவற்றைத் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலிலும், அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பும் காத்திருக்கின்றன. சிறந்த முறையில் ஃபர்னீச்சர்களை வடிவமைக்க அது தொடர்பான படிப்புகள் நடத்தப்படுகின்றன.  ஃபர்னீச்சர் டிசைனிங் குறித்த கல்வியை வழங்கும் நிறுவனங்கள்: http://www.mitid.edu.in/Interior-Space-and-Furniture-Design-Courses.html,NATIONAL INSTITUTE OF DESIGN  - http://www.nid.edu

Srishti Institute of Art, Design and Technology  - http://srishti.ac.in/about-us

Indian Institute of Crafts & Design, Jaipur  - https://www.iicd.ac.in/hard -material -design -hmd/

நீங்களும் எச்.ஆர். ஆகலாம்

நீங்கள் உளவியல் படிக்க விரும்புகிறீர் என்றால், உளவியல் தொடர்பான பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போது இளங்கலையிலும் உளவியல் பட்டம் எதிர் பார்க்கப்படும். சொல்லப்போனால், எம்.எஸ்சி. உளவியல் படிக்க வேண்டுமானால் அதற்கு நீங்கள் ஏதோ ஓர் அறிவியல் பாடப்பிரிவில் இளநிலை படித்திருப்பது அவசியம். சில கல்வி நிறுவனங்கள் பி.எஸ்சி. சைக்காலஜி பட்டதாரிகளை மட்டுமே முதுநிலை உளவியல் படிக்க அனுமதிக்கின்றன.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் நீங்கள் உங்களை அடையாளம் காண வேண்டும். சமூகச் சேவையில் ஈடுபாடு இருக்கும் பட்சத்தில் எம்.எஸ்.டபிள்யூ எனப்படும் சமூகப்பணி முதுநிலைப் பட்டத்தைப் படிக்கலாம். அதன் பின்னர் அரசு சாரா நிறுவனங்களில் பணி புரியலாம்.

இந்தப் படிப்பில் Community Development, Human Resources,

ஆகிய பிரிவுகளைப் படித்தால் தொழிற்சாலை களில் எச்.ஆர்., தொழிலாளர் நல அலுவலர் போன்ற பணிவாய்ப்புகள் உள்ளன. அத்துடன் பி.ஜி.டி.எல்.ஏ.,  எனப்படும் Post Graduate Diploma in Labour Law and
Administrative Law

படித்தால் பணிவாய்ப்பு விரிவடையும்.

இன்றைய வணிக உலகின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எம்.பி.ஏ. படிக்கலாம். இதில் 60-க்கும் அதிகமான பாடப் பிரிவுகளில் சிறப்புப் படிப்புகள் நாடு முழுவதும் வழங்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றை உங்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இன்றைய தேதியில் தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய 400 கல்வி நிறுவனங்களில் மேலாண்மைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஆனால், இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது, தரம் வாய்ந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் படித்தால் மட்டுமே வளாகத் தேர்வில் பணிவாய்ப்புப் பெற இயலும். அத்தகைய முதன்மையான மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்திட CAT, XAT, SNAP, NMAT, AIMA MAT, AIMCET  உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதி உயர் மதிப்பெண் பெற வேண்டி இருக்கும்.  நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகுங்கள்.

உதவிக்கரம் நீட்டும் கட்செவி (வாட்ஸ் அப்) குழுவினர்

ஒருவருக்கு ஒருவேளை உணவை வாங்கிக் கொடுப்பதில் கிடைக்கும் திருப்தியைவிட, ஒருவரது கல்விக்கு உதவுவதில் கிடைக்கும் திருப்தியே தனி. முன்னது உடனடி விளைவு. உடனடி சந்தோஷம். இரண்டாவதில் கொஞ்சகாலம் பொறுத்திருக்க வேண்டும். படிப்புக்கான உதவியைப் பெற்றவர்கள் அதைப் பயன் படுத்திக்கொண்டு தேர்வு முடிவுகளில் பிரகாசிப்பதிலேயே உதவியவர்களுக்கு மனம் குளிர்ந்துவிடும். அந்தப் படிப்பின் மூலமாக நல்லதொரு வேலையும் கிடைத்து விட்டால், உதவியவர்களுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிடும். அப்படியொரு மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் ஏ.பி.ஜே. விஷன் இந்தியா 2020 எனும் பெயரில் இயங்கும் தன்னார்வக் குழுவினர்.

படிக்க உதவும் கட்செவி குழு (வாட்ஸ் அப்)

2017ஆம் ஆண்டில் 250 ஆதரவற்ற குழந்தைகளுடன் விழாவை தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் கொண்டாடினர். பிரியும்போது, தனி ஒரு மனிதரின் வாழ்க்கையில் அவரை மட்டும் அல்லாமல் அவருடைய குடும்பத்தையும் உயர்த்த வேண்டும் என்று தோன்றியது. உயர்ந்த கருவியாக இருக்கும் கல்வியைத் தங்களால் முடிந்த அளவுக்கு வசதி இல்லாதவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கலாம் எனும் முடிவோடு பிரிந்தனர்.

தாய், தந்தை இல்லாமல் வறுமையில் படிப்பவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தாய் அல்லது தந்தையை இழந்து படிப்பவர்கள், படிப்பைப் பாதியில் கைவிடும் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில்தான் இந்த வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கினோம் என்கிறார் கனவு மெய்ப்பட அறக்கட்டளையின் நிறுவனரான தினேஷ் ஜெயபாலன்.

ஆறு மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் மூலம் இதுவரை 18 மாணவர்களுக்குப் பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பதற்காக ஏறக்குறைய 2 லட்சத்து 80 ஆயிரம்வரை உதவி இருக்கின்றனர். குழுவில் இல்லாதவர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் பேரிலும் மாணவர்களின் குடும்பப் பின்னணி, படிப்பில் மாணவர் களுக்கு இருக்கும் ஆர்வம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு உதவுகிறது இந்த அமைப்பு.

முதன்முதலாக ஒரு கல்லூரி மாணவிக்கு 4 நாட்களுக்குள் 36 ஆயிரம் ரூபாய் கல்லூரிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்னும் கோரிக்கையை வாட்ஸ்அப் குழுவில் பதிவு செய்தோம்.

மூன்றே நாட்களில் அந்தத் தொகையைக் குழுவில் இருப்பவர்களின் உதவியோடு கட்ட முடிந்தது.

அந்த உதவியைப் பெற்ற மாணவி கண்ணீரோடு அதை ஏற்றுக்கொண்டு நன்றியைக் கண்களில் காட்டியபோது, இன்னும் நிறையப் பேருக்கு உதவ வேண்டும் என்னும் உத்வேகம் பிறந்தது என்கிறார் அறக்கட்டளையின் செயலாளர் கல்யாணகுமார் வீரபாண்டியன்.


கலை, வரலாறு உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் கொண்டவர் களுக்குச் சென்னையில் உள்ள தட்சிணசித்ரா, அருங்காட்சியகம் கலை மேலாண்மையில் ஓராண்டு பணிப் பயிற்சி அளிக்கவிருக்கிறது. அரும்பொருள் சேகரிப்பு மேலாண்மை, ஆவணப்படுத்துதல், கல்வியில் பாதுகாப்புக் கலை, நிகழ்ச்சி மேலாண்மை, நிர்வாகம், விருந் தோம்பல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். அருங்காட்சியகத்தில் பணிபுரியும் நேரடி அனுபவம் மூலம் அவர்களுக்கு கிடைக்கும். இந்தியக் கலை, பண்பாட்டுத் தளங்கள் சார்ந்த நிறுவனங்களில் பணி புரிவதற்கான அறிவு, திறன், ஆற்றலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். உங்களுடைய பயோ டேட்டாவுடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை . என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

தகுதி: பட்டதாரி

கால அவகாசம்: 18 ஜூலை 2018 தொடங்கி 11 மாதங்கள்

உதவித் தொகை: ரூ.10,000

விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்க: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 2018 மே 31

கூடுதல் தகவலுக்கு: 9841425149, 9841436149.

மருத்துவர்களுக்கு
மத்திய அரசுப் பணி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2018ஆம் ஆண்டுக் கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளுக்கான தேர்வை நடத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்வின் மூலம் மருத்துவத் துறையில் நிரப்பப்பட உள்ள மொத்த இடங்கள் 454.

வயதுத் தகுதி: 2018 ஆகஸ்ட் 1 அன்று 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது, 1986 ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவராக இருக்கக் கூடாது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் உள்ளன.
கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதித் தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளி ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பிறருக்குக் கட்டணம் ரூ. 200. ஆன்லைன் மூலமாகச் செலுத்தலாம்.

விண்ணப்பிக்க உரிய தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in 
என்னும் இணையதளத்தில்  25.05.2018 மாலை 6:00 மணிவரை விண்ணப்பிக்கலாம்.

இறுதி நாள்: 25.05.2018 மாலை ஆறு மணி.

எழுத்துத் தேர்வு: 22.07.2018

கூடுதல் விவரங்களுக்கு://www.upsc.gov.in/sites/default/files/Notification-CMSE-2018-Engl.pdf


வங்கிப் பணியிடங்கள்

இந்திய ஸ்டேட் வங்கி புரோபேஷனரி ஆபிசர்  பணிக்கு 2,000 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இருக்கிறது. இந்தப் பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
தற்போது கல்லூரியின் இறுதியாண்டு படிப்ப வர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்தாம்.

வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு தேர்வுகளைக் கொண்டது எழுத்துத் தேர்வு. இரண்டுமே ஆன்லைன் மூலமாக நடைபெறும்.

முதல்கட்டத் தேர்வான முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்கள் அடுத்த கட்டத் தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

இத்தேர்வில் அப்ஜெக்டிவ் முறை கேள்விகளும் கூடுதலாக விரிவாக விடையளிக்கும் வகையிலான வினாக்களும் இருக்கும்.

இதில் ரீசனிங், கணினி அறிவு, டேட்டா அனாலசிஸ், பொருளாதாரம், வங்கி நிர்வாகம், ஆங்கிலம் ஆகியவற்றில் இருந்து 155 கேள்விகளும் (200 மதிப்பெண்) ஆங்கிலத்தில் விரிவாகப் பதிலளிக்கும் வினாக்களும் (50 மதிப் பெண்) இடம்பெறும்.

முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு இரண் டுக்குமே அனுமதிச்சீட்டு அஞ்சலில் அனுப்பப் படாது, விண்ணப்பதாரர்களே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். முதல் நிலைத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை ஜூன் 18ஆம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.

இலவசப் பயிற்சி

எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கும், சிறுபான்மையினருக்கும் (கிறித்தவர்கள், முசுலிம்கள் போன் றோர்)  இந்திய ஸ்டேட் வங்கி சார்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்பு பவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே இது குறித்துக் குறிப்பிட வேண்டும்.

இலவசப் பயிற்சி ஜூன் 18 முதல் 23 வரை நடைபெறும். இதற்கான அனுமதிச்சீட்டை மே 28 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள் ளலாம்.

உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் உடைய பட்டதாரிகள் பாரத ஸ்டேட் வங்கி இணைய தளத்தின் (www.sbi.co.in/careers) மூலம் விண் ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை வங்கியின் இணைய தளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம். நேரடி அதிகாரிப் பதவிக்கு ஆரம்ப நிலையிலேயே ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும்.
முக்கியத் தகவல்கள்

2,000 அதிகாரிப் பணியிடங்கள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 13

முதல்நிலைத் தேர்வு: ஜூலை 1, 7, 8

முதல்நிலைத் தேர்வு முடிவு: ஜூலை 15 அன்று வெளியிடப்படும்.

மெயின் தேர்வு: ஆகஸ்டு 4

மெயின் தேர்வு முடிவு: ஆகஸ்டு 20 அன்று வெளியிடப்படும்.

மெயின் தேர்வில் வெற்றிபெறுவோருக்குக் குழு விவாதம், நேர்முகத்தேர்வு: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 12 வரை நடைபெறும்.

இறுதி தேர்வு முடிவு: நவம்பர் 11 அன்று

வெளியிடப்படும்.

வேளாண் பட்டதாரிகளுக்குத்
தமிழக அரசுப் பணியிடங்கள்

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்வின் மூலம் வேளாண் அதிகாரி (விரிவாக்கம்) பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெளியிட்டிருக் கிறது.
183+7 காலியிடங் கள் நிரப்பப் பட உள்ளன. காலியிடங்கள் தற்காலிகமானவை.

வயதுத் தகுதி: பொதுப் பிரிவினரில், வேளாண் கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் 30 வயதுக்குள்ளும், முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

எஸ்.சி. எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி., பி.சி, எம்.பி.சி., பிரிவினருக்கும் ஆதரவற்ற கைம்பெண்களுக்கும் உச்சபட்ச வயது வரம்பு இல்லை.
மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் வயது வரம்பில் 10 ஆண்டுகள் சலுகை உண்டு.

கல்வித் தகுதி: வேளாண் கல்வியில் இளநிலைப் பட்டம், தமிழில் போதுமான பயிற்சி.

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் நிரந்தரப் பதிவு செய்யாதவர்களுக்கு ரூ.150. தேர்வுக் கட்டணம் ரூ.200.

எஸ்.சி., எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி., ஆதரவற்ற கைம்பெண் ஆகியோருக்குத் தேர்வுக் கட்டணம் இல்லை. கட்டணத்தை ஆன் லைனிலும் வங்கி சலான் மூலமாகவும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்க: உரிய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 03.05.2018 முதல் 02.06.2018வரை ஆன்லைனில் www.tnpsc.gov.in / www.tnpsc exams.net/www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப் பிக்கலாம்.

இறுதித் தேதி: 02.06.2018

எழுத்துத் தேர்வு: 14.07.2018

கூடுதல் விவரங்களுக்கு: http://tnpsc.gov.in/notifications/2018_09_AO_EXTENSION.pdf

Banner
Banner