இளைஞர்


ராணுவப் படைகளுக்கு துணையாக பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (பி.எஸ்.எப்.,), சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் (சி.ஆர்.பி.எப்.,), சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸ் (சி.அய்.எஸ்.எப்.,), இந்தோ - திபெத் பார்டர் போலீஸ் (அய்.டி.பி.பி.,), சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) என்ற அய்ந்து மத்திய காவல் படைகள் உள்ளன. ஒவ்வொன்றும் பிரத்யேகமான பணிகளை செய்து வருகின்றன. இந்த படைகளில் காலியாக உள்ள, 398 அசிஸ்டென்ட் கமாண்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு, யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட் டுள்ளது.

காலியிட விபரம்: பி.எஸ்.எப்.,பில் 60, சி.ஆர்.பி.எப்.,பில் 179,

சி.அய்.எஸ்.எப்.,பில் 84, அய்.டி.பி.பி.,யில் 46, எஸ்.எஸ்.பி.,யில் 29ம் காலியி டங்கள் உள்ளன. 2018 ஆக., 1 அடிப்படையில் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: பல்வேறு நிலைகளைக் கொண்டதாக தேர்ச்சி முறை இருக்கும். இரண்டு தாள்களைக் கொண்ட எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு போன்ற நிலைகள் இருக்கும்.

தேர்வு மய்யங்கள் : சென்னை, மதுரை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மய்யங்களில் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 மே 21.

விபரங்களுக்கு: www.upsc.gov.in/whats-new/CentralArmedPoliceForces(ACs)Examination%2C2018/ExamNotification

பொறியியல் ஆராய்ச்சி மய்யத்தில் பணியிடங்கள்

சென்ட்ரல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என்பது மத்திய அறிவியல் மற்றும் தொழிலக மய்யத்தின் (சி.எஸ்.அய்.ஆர்.,) ஒரு அங்கமாகும். பெருமைக்குரிய இந் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள்: டெக்னீசியன் - கிரேடு 3 பிரிவிலான கோல்கட்டா மய்ய காலியிடங்கள் 25ம், லுதியானா மய்ய காலியிடங்கள் 14ம் நிரப்பப்பட உள்ளன. வயது: 2018 மே 21 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பிளஸ் 2 படிப்பை முடித்துவிட்டு, என்.ஏ.சி., அங்கீகாரம் பெற்ற அய்.டி.அய்., படிப்பை மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக், மெஷினிஸ்ட், வெல்டர், பிட்டர், மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மேன், ஷீட் மெட்டல் ஒர்க்கர், எலக்ட்ரிகல், மெஷினிஸ்ட், பிளம்பர், ஹாஸ்பிடல் ஹவுஸ்கீப்பிங் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 100 ரூபாய். கடைசி நாள் : 2018 ஜூன் 5.

விபரங்களுக்கு : www.cmeri.res.in

வாழ்க்கைக்கு உதவும் வன்திறன்

இன்றைய காலகட்டத்தில் வேலைக்குத் தேவை மென் திறன் என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. ஆனால், என்றென்றும் பணிவாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கைக்கும் கைகொடுப்பது வன் திறன். கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாக்க, கணினி மென்பொருட்களைக் கற்றறிவதில் காட்டும் முனைப்பை வன் திறன்களைக் கற்றுக்கொள்வதிலும் காட்டலாம்.

கணினி வன்பொருட்கள், வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றை இயக்குதல், அவற்றின் பரா மரிப்பு, பழுது நீக்குதல் குறித்து அறிந்துகொள்ளலாம். இந்தப் பயனுள்ள தொழிற்பயிற்சி அனுபவம் பிற்காலத்தில் வருமான வாய்ப்புகளை வழங்குவதுடன், நமது வீட்டிலி ருக்கும் மின் சாதனங்களை முறையாகப் பராமரிக்கவும் பிறர் உதவியின்றிச் சிறு பழுதுகளைச் சுயமாகக் களையவும் உதவும்.

கணினி சார் அறிவு என்றால் கணினி தொடர்பான மென்பொருட்கள், செயலிகள், இயங்கு பொருட்கள் ஆகியவற்றைக் கற்பதாகவே பெரும்பாலோர் கருது கிறார்கள். ஆனால், கணினியின் வன்பொருள் துறை சார்ந்த பெரும் படிப்புகளும், பணித் துறைகளும் உள்ளன. அவற்றுக்கான அடிப்படையாக கம்ப்யூட்டர் ஹார்டுவேர், நெட்வொர்க்கிங் குறித்துப் பயில்வதும் பயிற்சி பெறுவதும் அவசியமாகிறது. உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கணினியின் பாகங்கள் செயல்படும் விதம் குறித்தும், அடிப்படை ஹார்டுவேர் குறித்தும், கணினியின் தலை முறைகள், புதிய வளர்ச்சிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கணினி சார்ந்த சிறு பழுதுகள், அவற்றைச் சரிசெய்வது குறித்து அறிந்துகொள்ளலாம். இவற்றைச் செய்முறை சார்ந்த பயிற்சியாகப் பெறுவது கூடுதல் நன்மை.

ஏற்கெனவே இவை குறித்த அடிப்படை அறிவை பெற்றிருப்பவர்கள், முறையான சான்றிதழ், பட்டயப் பயிற்சியாகவும் பெறலாம். 6 மாதப் பட்டயப் பயிற்சிகளாகப் பெறுவது பின்னாளில் வருமான வாய்ப்புக்கும் உதவும். ஹார்டுவேர் பயிலும் மாணவர்கள் அவற்றுடன் இணைந்த நெட்வொர்க்கிங், கணினிப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பயில்வது சிறப்பு. ஹார்டுவேரில் அடிப்படை அறிந்தவர்கள், கார்ட் லெவல், சிப் லெவல் பயிற்சிகளில் சேரலாம்.

வீட்டு மின் சாதனங்கள்

வீட்டில் உள்ள செல்ஃபோன், டி.வி., ஏ.சி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி போன்றவற்றைப் பராமரிப்பது, பழுதுபார்த்தல் குறித்துக் கற்றுக்கொள்ளலாம். இதற்கெனத் தனியாகப் பயிற்சி நிறுவனம் சென்று பணம் கட்டி பயிற்சி பெறுவதைக் காட்டிலும், பழுது நீக்கும் பணியாளர்களில் நமக்குத் தெரிந்தவர்களிடமே கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் நேரடியாகச் செய்முறை அனுபவம் கிடைக்கும். எது ஒன்றையும் பாடமாகப் படிப்பதைவிட அனுபவபூர்வமாக அறிந்துகொள்ளும்போது தொழில் திறமைக்கான தன்னம்பிக்கை கிடைக்கும்.

இந்த வரிசையில் இரு சக்கர, நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் பணிமனைகளிலும் அனுபவ அறிவைப் பெறலாம். இதுவும் சொந்தமாக வாகனப் பராமரிப்பு, பழுது நீக்குவதற்குப் பின்னாளில் வெகுவாய் உதவும். பொறியியல் துறை சார்ந்த மேற்படிப்புக்கும், அது குறித்த ஆர்வத்தை வளர்த்துக்கொள்வதற்கும் இந்தப் பயிற்சிகள் கைகொடுக்கும். இன்வெர்ட்டர்கள், மோட் டார்கள், சி.சி.டி.வி., சோலார் பேனல்கள் நிறுவுதல்-பராமரித்தல் சார்ந்தும் கற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு கிடைக்கும் அனுபவத்துடன் நூலகம், இணையம் வாயிலாக வீட்டு மின் சாதனங்கள் செயல்படும் விதம், அவற்றின் அடிப்படை அறிவியல் குறித்தும் குறிப்பெடுத்துக்கொள்ளலாம். உயர்கல்வியில் அவை குறித்த பாடங்கள் வரும்போது ஏனைய மாணவர்களைவிட ஈடுபாட்டுடன் கற்பதும் தேர்வெழுதுவதும் செய்முறைப் பயிற்சிகளைச் செய்வதும் எளிதாக இருக்கும்.

அனுபவ அறிவுக்கு மரியாதை

கணினி, மின்னணு சார்ந்த சேவைத் துறையில் சான்றிதழ்களைவிட அனுபவ அறிவுக்கே முதலிடம் தரப்படுகிறது. எனவே, முறையான அனுபவ அறிவை வளர்த்துக்கொள்வதன் மூலம் எளிதிலும் சுயமாகவும் வருமானம் ஈட்ட முடியும். தொடரும் மேற்படிப்பு வாயிலாக முழுமையான தகுதிகளை வளர்த்துக்கொண்ட பிறகு, எவரிடமும் கைகட்டி வேலை பார்க்காது வங்கி உதவியுடன் கடன்பெற்றுச் சொந்த முயற்சியில் தொழில் முனைவோராகவும் வெற்றிபெற முடியும்.

பொதுத்துறை வங்கிகள் சார்பில் செயல்படும் கிராமப்புறச் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்கள், உதவித்தொகை, மதிய உணவுடன் இலவசத் தொழில் பயிற்சிகள் பலவற்றை வழங்குகின்றன. பயிற்சியைச் சிறப்பாக முடிப்பவர்களுக்கு வங்கிக் கடனில் முன்னுரிமை கிடைக்க வாய்ப்பபு கிடைக்கிறது. இவை தவிர்த்துக் கல்வி அறக்கட்டளைகள், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வாயிலாகச் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக் கான சிறப்புப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

எச்சரிக்கை

மின் சாதன உபகரணங்கள், மோட்டார் சாதனங்களை இயக்குவது, பழுதுபார்ப்பது, பராமரிப்பது ஆகியவற்றில் முன்னெச்சரிக்கையும், அனுபவமும் அவசியம். இத்துறைச் சார்ந்த நிபுணர்களின் மேற்பார்வையோ உதவியோ இல்லாமல் பயிற்சியற்றவர்களும் வயதில் சிறியவர்களும் அவற்றை ஆராய்வதோ, பழுதுநீக்க முற்படுவதோ கூடாது.

விளையாட்டு வீரர்களை அழைக்கிறது விமானப்படை

நாட்டின் முப்படைகளில் ஒன்று விமானப்படை. சர்வதேச அளவில் புகழ் பெற்றது. நவீன போர்க்கலங்கள், அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றும் வீரர்கள் என புகழ் பெற்ற இப்படையில், விளையாட்டுப் பிரிவுகளில் சிறப்பு தகுதி கொண்ட, திருமணம் ஆகாத ஆண்களை ‘குரூப் ஒய் டிரேடு’ பிரிவுகளில் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

எந்த பிரிவுகள்: தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கோல்ப், கிரிக்கெட், சைக்கிளிங், பென்சிங், கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, கைப்பந்து, கபடி, லான் டென்னிஸ், நீச்சல், வாலிபால், வாட்டர் போலோ, மல் யுத்தம், பளு துக்குதல், ஸ்குவாஷ் போன்ற பிரிவுகளில் வீரர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 1997 ஜூலை 7 - 2001 ஜூன் 27க்குள் பிறந்திருக்க வேண்டும்.

பிளஸ்2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப் பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து, ஏர் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கன்ட்ரோல் போர்டு முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 மே 11. விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng10801_4_1819b.pdf


மத்திய அரசின் முன்னணிப் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அதிகாரிப் பதவியில் 158 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.
தேவையான தகுதி

இப்பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு, எம்.பி.ஏ. பட்டம் அல்லது மேலாண்மையில் பட்டயம் அவசியம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 55 சதவீத மதிப்பெண் போதும். சி.ஏ., கம்பெனி செக்ரட்டரிஷிப், அய்.சி.டபிள்யு.ஏ. முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.

வயது குறைந்தபட்சம் 21 ஆகவும் அதிகபட்சம் 30 ஆகவும் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

என்ன கேட்பார்கள்?

எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தெரிவுசெய்யப்படுவர். ஆன்லைன்வழியிலான எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், வங்கித் துறை சம்பந்தப்பட்ட பொது அறிவு, நிதி மேலாண்மை ஆகிய 3 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும். இதற்கு மதிப்பெண் 150. தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.

ஆங்கிலப் பிரிவில், நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றாலே போதும். அதில் எடுக்கும் மதிப்பெண் மெரிட் பட்டியலுக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதற்கு 100 மதிப்பெண். எழுத்துத் தேர்வுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் 80:20 என்ற விகிதாச்சாரத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்படும். அதன் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.

உரிய கல்வித் தகுதியும் வயதும் உடைய பட்டதாரிகள் வங்கியின் இணையதளத்தைப் (ஷ்ஷ்ஷ்.தீணீஸீளீஷீயீவீஸீபீவீணீ.நீஷீ.வீஸீ ) பயன்படுத்தி மே 5-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேடி வரும் நவீன வேலை

பட்டதாரிகளின் எண்ணிக்கை தேவையை மிஞ்சிவிட்ட இன்றைய காலத்தில், வேலைப் பெறுவதற்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது. பட்டதாரிகள் தங்களைக் கூட்டத்திலிருந்து தனித்துக் காட்ட வேண்டியது அவசியமாக உள்ளது. அவர்கள் பட்டப்படிப்புடன் சேர்த்து ஏதாவது ஒரு குறிப்பிட்ட பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கல்லூரிக்குக் கட்டணம் கட்டியே மாளவில்லை, இன்னும் செலவு செய்ய வேண்டுமா என்று மலைக்க வேண்டாம். படிக்க வேண்டும் என்ற முனைப்பு மட்டும் இருந்தால் செலவு எதுவும் செய்யாமலேயே உங்களால் இப்போது படிக்க முடியும்.

எங்குப் படிக்கலாம்?

ணிபீஜ் எனும் இணைய வகுப்பறை மிகவும் பிரசித்தப் பெற்ற ஒன்று. இதன் சிறப்பு என்ன வென்றால் இங்கு அனைத்துப் பாடங்களும் இலவச மாகவே கற்றுத் தரப்படுகின்றன. உங்கள் படிப்புக்கு அங்கீகாரச் சான்றிதழ் வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே அதற்குச் சிறு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஹார்வர்டு, எம்.அய்.டி.போன்ற புகழ்பெற்ற பல் கலைக் கழகங்கள்கூட இலவசக் கல்வியை இணைய வகுப்பில் நடத்துகின்றன.

என்ன படிக்கலாம்?

கணினித் துறை என்றவுடன் பெரும்பாலோர் பொருள் வடிவமைப்பிலும் அதன் புரோகிரமிங் லாங்குவேஜ்களிலும் சுருக்கிக்கொள்கின்றனர். ஆனால், கணினி வடிவமைப்பு, ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை நிறுவுதல், நெட்வொர்க் வடிவமைப்பு, தரவுகளைப் பாதுகாத்தல், இணையத்தில் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துதல் என்று அதன் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டே செல்லலாம். இதில் தற்போது மிகுந்த தேவையும் ஆள் பற்றாக் குறையும் நிலவும் துறையாகத் திகழும் இணையப் பாதுகாப்பைப் பற்றிப் படிக்கலாம்.

இணையப் பாதுகாப்பு

இணையத்தால் இணைக்கப்பட்டுள்ள இன்றைய நவீன உலகில், உங்கள் தனிமையையும் அந்தரங் கத்தையும் தீர்மானிப்பது நீங்கள் வசிக்கும் வீடோ நீங்கள் அணிந்திருக்கும் உடையோ அல்ல. அவற்றைத் தீர்மானிப்பது இணையப் பாதுகாப்புதான்.

உங்களுடைய தனிமையையும் அந்தரங்கத் தையும் குலைப்பது இப்போது மிகவும் எளிது. உங்கள் கணினி வைரசால் பாதிக்கப்பட்டிருந்தாலோ உங்கள் மின்னஞ்சலின் கடவுக்சொல்லோ உங்கள் சமூக வலைத்தளங்களின் கடவுச்சொல்லோ திருடப் பட்டிருந்தாலோ நீங்கள் உங்களுடைய தனிமை யையும் அந்தரங்கத்தையும் இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

ஆனால், இன்றும் பெரும்பாலோர் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலோ சோம்பேறித் தனத்தாலோ கணினிக்கும் கைப்பேசிக்கும் எளிதான கடவுச் சொற்களையே பயன்படுத்துகின்றனர். உதார ணத்துக்கு 1234, குழந்தையின் பெயர், மனைவியின் பெயர் போன்றவை. அதில் இன்னும் சிலர் கடவுச் சொல்லே இல்லாமலும் அவற்றைப் பயன்படுத்து கின்றனர்.

இணையப் பாதுகாப்பு பற்றிய படிப்பு, உங்கள் கணினிக்கு என்னென்ன ஆபத்துகள் நேரச் சாத்தியமுள்ளது என்பதையும் அந்த ஆபத்துகளை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதையும் கற்றுத் தரும். மேலும் இணையத்தில் உங்கள் தரவுகளுக்கு இருக்கும் ஆபத்துகளையும் அந்தத் தரவுகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் கற்றுத் தரும்.

கற்றுத் தரப்படுபவை

முதலில் இணையப் பாதுகாப்பின் எல்லைகள் உங்களுக்குக் கற்றுத் தரப்படும். பின்பு அங்கு இருக்கும் ஆபத்துகளின் வகைகள் கற்றுத் தரப்படும். இணையத்திலிருந்து உங்கள் நெட்வொர்க் பாதுகாப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என்பதையும் ஆபத்து நேராமல் அதை எப்படிக் கண்காணிக்க வேண்டும் என்பதும் கற்றுத் தரப்படும்.

மேலும், கணினிக்குள் நுழைந்த வைரசை எப்படிக் களைய வேண்டும் என்பதும் அது நுழை யாமல் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதும் கற்றுத் தரப்படும். முக்கியமாக நீங்கள் உருவாக்கி இருக்கும் பாதுகாப்பு வளையக் கோட்டையில் இருக்கும் ஓட்டைகளை எப்படி அறிவது என்பதும் அந்த ஓட்டைகளை எப்படி அடைப்பது என்பதும் கற்றுத் தரப்படும்.

இணையப் பாதுகாப்பு பொறியியலாளருக்கான தேவை வருங்காலத்தில் மிக அபரிமிதமாக இருக்கும். இணையப் பாதுகாப்பு இப்போது மிகவும் முக்கியத் துறையாக இருப்பதோடு ஆள் பற்றாக்குறை காரணமாகச் சற்றுத் தடுமாறிக்கொண்டும் உள்ளது. பொறியியல் படிக்கும்போதே இணையப் பாதுகாப்பில் கொஞ்சம் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொண்டால், பட்டதாரியான பின் வேலையைத் தேடி நீங்கள் செல்ல வேண்டாம், வேலை உங்களைத் தேடிவரும்.

ஆன்லைன் கல்வி வழங்கும் பிஎஸ்என்எல்!

பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனம் “எஜு மித்ரா’ என்ற பெயரில் இயங்கும் இணைய தளம் வாயிலாக ஆன்லைன் கல்வியை வழங்கி வருகிறது.

அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் தொலைத் தொடர்பு வசதியை மட்டும் வழங்குவதோடு நிறுத்திவிடாமல், குறிப்பிட்ட கட்டணத்தில் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கும் பணிகளையும் தொடங்கியுள்ளது. தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும்விதமாக போட்டித் தேர்வுகள், கணிதம், அறிவியல், திறன் மேம்பாடு, மல்டிமீடியா ஆகியவை தொடர்பான பயிற்சி களையும் வழங்கி வருகிறது.

பல்வேறு மாநிலங்களின் கல்வித்துறையின் பள்ளிப் படிப்பு, சிபிஎஸ்இ பள்ளிப் படிப்பு சம்பந்தமான பயிற்சிகளையும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எஜு மித்ரா இணையதளத்தில் வழங்கி வருகிறது.

எஜு மித்ரா இணையதளத்தில் தங்களுடைய பெயரைப் பதிவு செய்து ஒவ்வொருவரும் தங்களுக் கென்று அய்டி (உள்ளீட்டு முகவரி), பாஸ்வேர்ட் (உள் நுழைவு ரகசிய குறியீடு) ஆகியவற்றை பெற வேண்டும்.

அதன் பிறகு எஜு மித்ரா இணைய தளத்திற்குள் சென்று தங்களுக்கு தேவையான பயிற்சியை பெறலாம்.

மேலும் தகவல்களுக்கு ::http://edumitra.net/website1 என்ற இணையதளத்தைப் பாருங்கள்.


பொதுத் தேர்வுகளை எழுதியிருக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் கோடை விடுமுறையைச் சுவாரசியமாகத் திட்டமிடலாம். இசை பழகுதல், ஓவியம் தீட்டுதல், நீச்சல் பழகுதல், தோட்டம் அமைத்தல் போன்ற பயனுள்ள பொழுதுபோக்குகளைத் தாண்டி உயர்கல்விக்கு உதவும் வகையிலும் விடுமுறை காலத்தைத் திட்டமிடலாம்.

வேற்று மொழிகள், ஒளிப்படக் கலை போன்றவற்றைக் கற்பது எதிர்காலத்தில் நம் பணிவாழ்க்கையாக மாறவும் கூடும். இது தவிர நுழைவுத் தேர்வுகளுக்கு இப்போதிருந்தே தயாராவது போன்ற பாடம் சார்ந்த சாத்தியங்களும் உண்டு. இந்த வரிசையில் பெரும்பாலானோரின் ஆர்வம் கம்ப்யூட்டர் கோர்ஸ்.

இணையத்தில் இணையலாமே!

பொதுத் தேர்வு எழுதியவர்கள் மட்டுமன்றிப் பள்ளி மாணவர்கள் அனைவரும், கணினி சார்ந்த அடிப்படையைக் கற்றுக்கொள்வது அவசியம். இதற்குத் தனியாகக் கணினிப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டுமென்பதில்லை. கடும் கோடையில் அவதியடைவதைத் தவிர்ப்பதற்காகவே பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, நண்பர்களாக நான்கைந்து பேர் கூடி, ஒருவர் இல்லத்தில் இருக்கும் கணினியில் பெரியவர்களின் அனுமதி யுடன் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இணைய இணைப்புகளை செல்போன் மூலமே எளிதாக அமைத்துக்கொள்ளலாம். இதற்கெனத் தனியாகப் பாடநூல்களும் அவசியமில்லை. இணையத்திலேயே அழகு தமிழிலும் ஆங்கிலத்திலும் எளிமையான வழிகாட்டுதல் பயிற்சிகள், வீடியோக்கள் கிடைக்கின்றன.

கூடுதலாக உள்ளூர் நூலகத்தின் உதவியை நாடலாம். மாவட்ட மய்ய நூலகங்கள் ஏராளமான பயனுள்ள நூல்களைக் கொண்டிருப்பதுடன், மாணவர்கள், போட்டி தேர்வர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் இணைய வசதியுடனான கணினிகளை அனுமதிக்கின்றன.

தட்டச்சுக்கான செயலி

முதல் கட்டமாகக் கணினியை இயக்குதல், விசைப் பலகையில் தட்டச்சு செய்தல் போன்ற அடிப்படைகளைப் பழகலாம். இணைய இணைப்புடன் கூடிய கணினி வீட்டிலிருந்தால் தட்டச்சு கற்க வெளியே அலைய வேண்டியதில்லை.

முறைப்படி தட்டச்சு பயிலவும், திருத்திக்கொள்ளவும், வேகம் பழகவும் பிரத்யேக இணையதளங்கள், செயலிகள் உள்ளன. ஆங்கிலத்தில் தட்டச்சு பழகியவர்கள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு எனத் தனியாகக் கற்க வேண்டியதில்லை. தட்டச்சு பயிற்சிக்கான  குறுவட்டுகள் ரூ.50இல் தொடங்கிக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கியும் பயன்படுத்தலாம்.

தட்டச்சுக்கு அடுத்தபடியாக மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் கூறுகளில் வேர்ட், பவர்பாயிண்ட், எக்ஸல் போன்றவை குறித்து அறிந்துகொள்ளலாம். புராஜெக்ட் சிக்ஷா என்ற திட்டத்தின் கீழ் மைக்ரோசாஃப்ட் அங்கீகாரம் பெற்ற வழிகாட்டி நூல் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எளிமையான, பெரிய படங்களுடன் கூடிய இந்த வழிகாட்டி உதவியுடன் கணினிசார் அடிப்படைகளைப் பழகலாம்.

மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மென்பொருட்களுடன் மின்னஞ்சல் அறிமுகம், பயன்பாடு குறித்தும் அறிந்து கொள்ளலாம். இவற்றுடன் தேடுபொறிகளை முறையாகப் பயன்படுத்துவது, தேவையான தலைப்புகளைக் குறை வான நேரத்தில் சரியாகத் தேடிப் பெறுவது குறித்தும் கற்றுக்கொள்ளலாம். மேலும் பாடம் சார்ந்த பயனுள்ள இணையதளங்கள் போன்றவற்றையும் அறிந்துகொள்ளலாம்.

திட்டமிட்டுத் தேர்ந்தெடுப்போம்

வழக்கமாக 3 முதல் 6 மாதங்கள்வரை குறுகியகாலக் கணினிப் பயிற்சிகள் பள்ளிப் பாட வேளைகளைப் போல முழு நாள் வகுப்புகளாக நடத்தப்படும். இவை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அயர்ச்சி அளிக்கலாம். எனவே, காலை அல்லது மாலை என ஒருவேளையாகப் பயிற்சி வகுப்புகளைத் திட்டமிடுவதுடன், எஞ்சிய வேளையில் பாடம் தொடர்பான செய்முறைப் பயிற்சிகளைப் பயிற்சி நிலையத்திலோ வீட்டுக் கணினியிலோ பழகுவது புத்திசாலித்தனம்.

இந்த வகையில் பள்ளி திறந்த ஓரிரு மாதங்களுக்குக் கணினிப் பயிற்சியை மாலை வகுப்பாகவோ வாரயிறுதி விடுமுறை கால வகுப்பாகவோ பெற வேண்டியிருக்கும். முறையான சான்றிதழ் அல்லது டிப்ளமோ பயிற்சிகள் எனில் இந்த அவகாசம் மாணவர்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

இந்தியன் வங்கியில் மென்பொருள் நிபுணர்களுக்கு பணியிடங்கள் 


முன்னணிப் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி, சிறப்பு அலுவலர் பதவியில் 145 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உதவிப் பொது மேலாளர், தலைமை மேலாளர், முதுநிலை மேலாளர், மேலாளர் எனப் பல்வேறு பணி நிலைகளில் இந்தப் பதவிகள் இடம்பெற்றுள்ளன.

சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர், டேட்டா அனலிட்டிக், தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு, சாப்ட்வேர் டெஸ்டிங், நெட்வொர்க் நிபுணர், சைபர் செக்யூரிட்டி நிபுணர் உள்ளிட்ட சாப்ட்வேர் தொடர்பான பிரிவுகளுக்கும், ரிஸ்க் மேனேஜ்மென்ட், பாதுகாப்பு மற்றும் எலெக்ட்ரிக்கல், சிவில், ஆர்க்கிடெக்ட் முதலிய பொறியியல் பிரிவுகளுக்கும் இந்தச் சிறப்பு அலுவலர்கள் தேர்வுசெய்யப்பட இருக்கிறார்கள்.

தேவையான தகுதி: கல்வித் தகுதி, வயது வரம்பு ஆகியவை பணிக்குப் பணி மாறுபடும். சாஃப்ட்வேர் துறைகளில் பணியாற்றுவோருக்கு நிறைய பதவிகள் உள்ளன. வயது வரம்பு பணிக்குத் தக்கவாறு அதிகபட்சம் 35, 38, 40 என வெவ்வேறு நிலைகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். உரிய கல்வித் தகுதி, பணி அனுபவம் உடையவர்கள் இந்தியன் வங்கியின் இணையதளத்தைப் பயன்படுத்தி (ஷ்ஷ்ஷ்.வீஸீபீவீணீஸீதீணீஸீளீ.நீஷீ.வீஸீ) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி, பணி அனுபவம், வயது வரம்பு, சம்பளம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை வங்கியின் இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

எழுத்துத் தேர்வு - 60 கேள்விகள், 60 மதிப்பெண்

எழுத்துத் தேர்வுக்கான கால அவகாசம்: 1 மணி நேரம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 2018 மே 2

சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியிடங்கள்

இந்தியாவில் மூன்று உயர்நீதிமன்றங்கள் 1862இல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிறுவப்பட்டன.  இதில் சென்னை உயர்நீதி மன்றமும் ஒன்று. இங்கு காலியாக உள்ள 82 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: நீதிபதிகளின் தனி உதவியாளர் பிரிவில் 71ம், பதிவாளர்களுக்கான உதவியாளர் பிரிவில் 10ம், துணை பதிவாளர்களுக்கான தனி உதவியாளர் பிரிவில் 1ம் சேர்த்து மொத்தம் 82 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: நீதிபதிகளுக் கான தனி உதவியாளர் பிரிவுக்கு, பட்டப்படிப்புடன், முதுநிலை ஆங்கில தட்டச்சு மற்றும் சுறுக்கெழுத்து பயிற்சி முடித்திருக்க வேண்டும். இதனுடன் கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷனிலும் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* பதிவாளருக்கான தனி உதவியாளர் பதவிக்கு, ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலை தட்டச்சு மற்றும் சுறுக்கெழுத்து பயிற்சி முடித்திருக்க வேண்டும். இதனுடன் கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷனிலும் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* இதே தகுதியே, துணைப் பதிவாளருக்கான தனி உதவியாளர் பிரிவுக்கும் தேவைப்படும்.

தேர்ச்சி முறை: ‘ஸ்கில் டெஸ்ட்’ மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரி யிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். இதனை ‘டிடி’யாக செலுத்த வேண்டும்.

கடைசி நாள் : 2018 மே 4.

விபரங்களுக்கு :www.hcmadras.tn.nic.in/Notf56of2018.pdf
கன்னியாகுமரி மாவட்டம், முள்ளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் எம். வேலையன். இவரால் கடந்த 2003-இல் தொடங்கப்பட்டதுதான் குமரி அறிவியல் பேரவை.

குமரி மாவட்ட கிராமப்புற பள்ளி மாணவர்கள் இயற்கை மற்றும் அறிவியல் கல்வியில் விழிப்புணர்வு பெறும் பொருட்டு அறிவியல் கண்காட்சி, விஞ்ஞானிகள்-மாணவர்கள் கலந்துரையாடல், அறிவியல் முகாம், அறிவியல் களப்பயணம் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது குமரி அறிவியல் பேரவை.

ஆண்டுதோறும் இந்த அமைப்பு நடத்திவரும் “இளம் விஞ்ஞானிகள் நிகழ்ச்சி’ மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இது குறித்து எம்.வேலையன் கூறியதாவது:

“இயற்கை சார்ந்த விழிப்புணர்வு கருத்துகளை பொத்தாம் பொதுவாக பேசுவதால் பெரிய பயன் இருக்காது என்பதால், அதை ஆர்வமும், துடிப்பும் மிக்க மாணவர்கள் மூலம் சமுதாயத்துக்கு கொண்டு சேர்க்க நினைத்து தொடங்கப்பட்டதுதான் குமரி அறிவியல் பேரவை. இதன் இளம் விஞ்ஞானிகள் நிகழ்ச்சிக்காக ஒவ்வோர் ஆண்டும் கோடை விடுமுறையில் ஆய்வுப் பொருள் திட்டமிடப்படுகிறது. பிறகு அது குறித்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் மாதம் தகவல் அனுப்பப்படுகிறது. ஜூலை மாதம் நடைபெறும் கருத்தரங்குக்கு பள்ளிகளில் இருந்து 8 ஆம் வகுப்பில் பயிலும் அறிவியல் நாட்டமுள்ள 5 மாணவ, மாணவிகளை அனுப்பிவைக்குமாறு கேட்கிறோம். இதன்மூலம் சுமார் 120 பள்ளிகளில் இருந்து 600 மாணவ, மாணவிகள் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். இவர்களில் இருந்து இளம் விஞ்ஞானிகளாக 55 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான தேர்வுமுறை சற்று கடினமானது.

ஜூலை முதல் அக்டோபர் வரை 9 தேர்வு முறைகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும். பேசும் திறன், வாசிப்புத் திறன், மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை நடுவது, மரக்கன்று நடுவது, சமூகப் பிரச்னை குறித்து வரைபடம் உருவாக்கி அதை விளக்குவது, தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி, விவாதங்களில் பங்கேற்பது, காந்தியம் குறித்து பேசுவது, திட்ட அறிக்கை தயாரித்து விஞ்ஞானிகள் மத்தியில் வெளிப்படுத்துவது, இந்திய மருத்துவம்-உணவுப் பழக்கம் குறித்து கருத்தரங்கில் பேசுவது, அறிவியல் செயல்விளக்கம், நூல் திறனாய்வு என இந்தத் தேர்வுமுறை அமைந்திருக்கும்.

இதில் தேர்வுபெறும் இளம் விஞ்ஞானிகள் 55 பேரும், 5 அணிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வோர் அணிக்கும் வண்ணச் சீருடை, அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த 5 அணிகளுக்கும் 5 ஆய்வுப் பொருள்கள் வழங்கப்  படுகிறது. ஒவ்வோர் அணிக்கும் அனுபவம் மிக்க 10 ஆலோசகர்கள் இருப்பார்கள். இவர்கள் எந்த நேரத்திலும் இளம் விஞ்ஞானிகளுக்கு உதவி செய்வார்கள். இவர்  களோடு ஓர் அணித் தலைவர் இருந்து அணியின் செயல்பாடுகள் குறித்து அமைப்பாளருக்கு தெரிவித்து வருவார்.

இளம் விஞ்ஞானிகள் நிகழ்ச்சிக்கான நிகழாண்டு தலைப்பு, “பூமியை காப்பாற்றுங்கள்’  என்பதாகும். இதில் “உயிரி மீட்பு’ என்ற துணை தலைப்பில், நுண்ணுயிரிகளை மீட்பது, கடற்கரை வளங்கள், உயிரி ஆதாரங்களில் மனிதத் தலையீடு உள்ளிட்டவை குறித்தும், “உணவு மற்றும் விவசாய மீட்பு’   என்ற துணைத் தலைப்பில், தமிழகத்தின் பாரம்பரிய உணவுகள், உணவுப் பழக்கத்தில் நவதானியங்களின் முக்கியத்துவம், பாரம்பரிய உணவுகளை மீட்டெடுப்பது, கலப்பின -மரபணு மாற்ற உணவுகளால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் ஆகியவை குறித்தும், “நீர் மீட்பு’  என்ற துணைத் தலைப்பில், தண்ணீரின் முக்கியத்துவம், பழங்கால நீர் மேலாண்மை-நீர் பகிர்வு, நிலையான நீர்வரத்துக்கு காடுகளின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் மேலாண்மையில் முகத்துவாரங்களின் முக்கியத்துவம், நீர் மாசுபடுதல் குறித்தும், “வளிமண்டல மீட்பு’ என்ற துணைத் தலைப்பில், வளிமண்டல அடுக் குகள்-அதன் முக்கியத்துவம், வானிலை மேலாண்மை, உயிரி வேதியியல் சுழற்சி, பசுமை இல்ல விளைவு, பூஜ்ஜிய உமிழ்வு-பூஜ்ஜிய மாசு, வளிமண்டல கண்காணிப்பில் துணைக் கோள் தொழில்நுட்பம் குறித்தும், “காடு மீட்பு’  என்ற துணை தலைப்பில் வன தாவரங்கள், வன விலங்குகள், வேட்டையாடுதல் - வனத்தில் அதன் தாக்கம், மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு, வனவிலங்கு மறுவாழ்வு, விலங்குகள் - மனித மோதல், மூலிகைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளன.

இதற்காக பல்வேறு கல்லூரிகள், கல்வி நிலையங் களுக்குச் செல்வது, பெரியகுளம், புத்தேரிகுளம், தேரிகுளம் உள்ளிட்ட 42 கடலோர கிராமங்களில் கள ஆய்வு, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் விஞ்ஞானிகள் உட்பட பல்துறை விற்பன்னர்களோடு கலந்துரையாடல், கோதையாறு பயணம், மார்த்தாண்டம் விப்ரோ டெக்னாலஜிஸ் வளாகத்தில் பெங்களூர் செயற்கைக் கோள் மய்ய விஞ்ஞானிகளுடன் அறிவியல் நிகழ்வு, மேற்கு தாமிரவருணி நீர் உப்புநீராக மாறியதற்கான காரணம் கண்டறியும் பயணம் என நிறைய களப் பயணங்களைச் செய்துள்ளனர். இவர்கள் ஆய்வு செய்த பொருள்களை நூல் வடிவில் உருவாக்கி வரும் மே மாதம் ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கவுள்ளனர்.

நிகழாண்டுக்கான இளம் விஞ்ஞானிகள் விருது மே மாத இறுதியில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது. குமரி அறிவியல் பேரவை மூலம் இதுவரை 800-க்கும் அதிகமான இளம் விஞ்ஞானிகள் உரு வாக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வருங்காலத்தில் பூமியை மீட்டெடுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடு வார்கள் என்பதோடு, அவர்களைச் சார்ந்த பல ஆயிரக்கணக்கானோருக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துவார்கள்’’ என்றார் வேலையன்.

தென்னக ரயில்வேயில்
2,652 காலியிடங்கள்

தகுதி: ஃபிட்டர்/ மெக்கானிஸ்ட்/ டர்னர்/ மெக்கானிக் (டீசல்) மெயின்டெனன்ஸ்/ அட்வான்ஸ் வெல்டர்/ எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்ஸ், பெயிண்டர், கார் பென்டர், பிளம்பர் உள்ளிட்ட 19 பிரிவுகளில் அய்டிஅய் / என்.டி.சி. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 24 வயதுக்குள் இருக்க வேண்டும். புதிதாக அய்டிஅய் தேர்ச்சி பெற்ற வர்களின் அதிகபட்ச வயது 22. எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

மேலும் விவரங்களுக்கு: http://www sr.indianrailways.gov.in/cris//uploads/files/1521004068059-ptj-act-apprentice-notification-2018-revised-1.pdf    என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 11-04-2018.

தேசிய அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியிடங்கள்

பதவி: சிறப்புக் கல்வி ஆசிரியர் (நிலை-6 ) (ஓ.பி.சி)

காலியிடம்: 1

தகுதி: சிறப்புக் கல்வியியல் டிப்ளமோ/ பி.எட். (அல்லது) பி.ஆர்.எஸ். (எம்.ஆர்) - சிறப்புக் கல்வி தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: ஹோம் விசிட்டர்/ டீச்சர் (நிலை-6) (எஸ்.சி)

காலியிடம்: 1

தகுதி: ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சோசியல் வொர்க்கில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: ஜூனியர் ஸ்பெஷல் எஜுகேஷன் டீச்சர் (நிலை -5)

காலியிடங்கள்: 1

கல்வித் தகுதி: சிறப்புக் கல்வியில் பட்டப்படிப்பு/ டிப்ளமோவுடன் மனநிலை சரியற்ற குழந்தைகளுடன் இரண்டாண்டுகள் பணியாற்றிய அனுபவம் (அல்லது) பி.எட். - சிறப்புக் கல்வி (அல்லது) பி.ஆர்.எஸ். (எம்.ஆர்) - சிறப்புக் கல்வி தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: சுருக்கெழுத்தாளர் (நிலை-4)

காலியிடம்: 1

தகுதி: எஸ்.எஸ்.எல்.சி முடித்திருக்க வேண்டும். ஆங்கில டைப்ரைட்டிங் நிமிடத்துக்கு 40 வார்த்தைகளும், ஆங்கில சுருக்கெழுத்து நிமிடத்துக்கு 100

வார்த்தைகளும் அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  http://www.niepid.nic.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

முகவரி:  Director, NIEPID, Manovikasnagar, Secunderabad - 500009.. - 500009.. மேலும் விவரங்களுக்கு: http://www.niepid.nic.in என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 09-04-2018.


உருவாக்குகிறார்கள்... இளம் விஞ்ஞானிகளை!


இப்போது எல்லாமே கணினி மயமாகி விட்டது. ரயில், பேருந்து டிக்கெட் போடுவதிலிருந்து, வீட்டுக்குத் தேவையான பல பொருள்களை வாங்குவது வரை. வாடகைக் கார் பிடிக்க வேண்டும் என்றால் ஸ்மார்ட் போனில் அதற்கான செயலியைப் பயன் படுத்தி உடனே காரை புக் செய்து கொள்ள லாம். சினிமா டிக்கெட் கூட கணினியில் வாங்கிக் கொள்ளலாம். சிறுகடை வைத்திருப்ப வர்கள் முதல் பெரிய பெரிய தொழில் நிறு வனங்களை நடத்துபவர்கள் வரை எல்லாரும் தங்களுடைய தொழிலைக் கணினி மய மாக்குகிறார்கள். பணமில்லாப் பரிவர்த்தனை என்கிற பெயரில் வங்கிச் சேவைகள் எல்லாம் கணினி மயமாகிவிட்டன. இப்படிப்பட்ட சூழ் நிலையில் தொழிலோ, வணிகமோ, சேவை நிறுவனங்களோ நடத்துபவர்கள் தங்களு டைய வேலைகளை கணினி மூலம் செய்யவே விரும்புகிறார்கள். அப்படிச் செய்ய வேண்டும் என்றால் அவர்களுடைய வேலைக்கேற்ற செயலியை உருவாக்க வேண்டும். அந்தச் செயலிகளை உருவாக்கித் தரும் பணியைச் செய்து வருகிறது ஒரு நிறுவனம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரைத் தலைமையகமாகக் கொண்ட அந் நிறுவனத்துக்கு பெங்களூருவிலும், சிங்கப் பூரிலும் கிளைகள் உள்ளன.

அந்த நிறுவனம் “நியூட்ரினோஸ்”. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதைத் தொடங்கி யவர்கள் சாமிக் கோஷ், சுரேஷ் சந்திரசேகர், செவிக் தேவ்நாத், ரம்யா ராகவேந்திரா.
தற்போது இந்த நிறுவனத்தில் 55 பேர் வேலை செய்கிறார்கள். “செயலி ஒன்றை உருவாக்குவது அவ்வளவு எளிதான வேலை இல்லை. ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே அதற்குத் தேவையான தொழில் நுட்ப வளர்ச்சி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவற்றை நாம்தான் உருவாக்க வேண்டி யிருக்கும். இரண்டாவது அதிக செலவு ஆகும். மூன்றாவதாக உடனடியாக  செய லியை உருவாக்கிவிட முடியாது. அதை உருவாக்க சிறிது காலம் ஆகும். அதனால்தான் செயலியை எல்லாரும் உருவாக்கிவிட முடிவதில்லை’’ என்கிறார் இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ரம்யா.

தொழில்நுட்ப வளர்ச்சி என்று சொல்கிற போது, அது பொதுவான அறிவாக இருப்ப தில்லை. தனியாருக்குச் சொந்தமாக உள்ளது. அவற்றை எல்லாரும் பயன்படுத்த முடியாது. தேவையான தொழில்நுட்பத்தை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். மேலும், ஒரு செய லியை உருவாக்க பலவிதமான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டி யிருக் கிறது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பொருத்தமான வகையில் ஒரு செயலியை உருவாக்க வேண்டியுள்ளது.

ஒரு செயலியை உருவாக்கினால், அது சாதாரணமாக அலுவலகத்தில் உள்ள கணினி யிலும் பயன்படுத்தப்பட வேண்டும். இணைய தளம் மூலமாகவும் அதைப் பயன்படுத்த வேண்டும். மொபைல் போன் மூலமாகவும் அதைப் பயன்படுத்த வேண்டும். டேப்லெட்ஸ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பலவிதமான நவீன கருவிகளிலும் அதைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு உகந்தவிதமாக ஒரு செயலியை உருவாக்க வேண்டியிருக்கிறது. ஒரு செயலியை உருவாக்க ஜாவா ஸ்கிரிப்ட்,  பயன்பட்டாலும், பலவிதமான ஊடகங் களிலும், கருவிகளிலும் அது பயன்படும் விதமாக அது உருவாக்கப்பட வேண்டும். எனவே ஒரு செயலியை யார் வேண்டு மானாலும் உருவாக்கிவிட முடியாது.

“தங்களுடைய தேவைக்கு ஏற்ற ஒரு செயலி வேண்டும் என்று எங்களிடம் வருப வர்கள், அந்தச் செயலியை உருவாக்கும் முழுப் பொறுப்பையும் எங்களிடம் கொடுத்து விட்டால், நாங்களே உரிய காலத்தில் அதை முடித்துக் கொடுத்துவிடுவோம். தாமே அந்தச் செயலியை செய்ய ஒருவர் விரும்பினால், அந்தச் செயலியை செய்வதற்குத் தேவை யான தொழில்நுட்ப அறிவு நிரம்பிய நபர்களை அவரிடம் அனுப்பி வைப்போம். அவர்களை வைத்து அந்த செயலியை அவர் செய்து கொள்ள வேண்டியதுதான். தற்போது எங்கள் நிறுவனம் வங்கி, நிதி சேவைகளுக்கு, ஊடகங் களுக்கு, பல்வேறுவிதமான சில்லறை வர்த்த கத்தினருக்குத் தேவையான செயலி களைச் செய்து தருகிறது. எந்தவொரு நிறு வனமும் அதற்கான வேலையை மேம் படுத்தவே கணினிமயப்படுத்த விரும்பும். அதற்குத் தேவையான செயலியை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் செய்து கொடுக்க வேண்டும். ஏனென்றால், தொழில் நுட்ப வளர்ச்சி மிக வேகமாக உள்ளது. செய லியைச் செய்து முடிப்பதற்குள் தொழில்நுட்பம் மாறிவிடக் கூடும். தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவே செயலியைச் செய்ய விரும்பு வார்கள். போட்டி நிறுவ னங்கள் முந்திக் கொண்டால், தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே எவ்வளவு விரைவாக ஒரு செய லியைச் செய்து தர முடியுமோ அவ்வளவு விரைவாகச் செயலியைச் செய்து தருகிறோம்‘’ என்கிறார் ரம்யா.

இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான சாமிக் கோஷ் பல்வேறு நாடுகளில் உள்ள வணிக, தொழில் வளர்ச்சி நிறுவனங் களில் வேலை செய்த அனுபவம் மிக்கவர். சுரேஷ் கட்டுமானத்துறை, வடிவமைப்புத் துறையிலும், செவிக் நிதி சேவை நிறுவனங் களில் கணினிசார்ந்த பிரிவுகளிலும், ரம்யா விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் துறையிலும் அனுபவம் உள்ளவர். இவர்களின் அனுபவங் களின் தொகுப்பாகவே இந்நிறுவனம் செயல் பட்டு வருகிறது. “வரும் ஆண்டுகளில் மலேசியா, ஹாங்காங், வட அமெரிக்காவில் நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்க உள்ளோம்‘’ என்கிறார் ரம்யா.

கிராமப்புற மாணவர்களுக்கு நடமாடும் ஆய்வகங்கள்

அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அறிவியல், கணிதம், கலை ஆகிய துறைகளில் படைப்பாற்றலை வளர்த்து அவர்களுக்கு புரியும் வகையில் விளங்கச் செய்யும் சேவையை ஒரு நிறுவனம் செய்து வருகிறது. அறிவியல் அறிஞர்கள், கல்வியாளர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட வர்களை கொண்டு 1999 ஆண்டு பெங்களூரை தலைமையிடமாக கொண்டு துவக்கப்பட்டது, அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுன்டேஷன். ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் சுமார் 172 ஏக்கர் பரப்பளவில் அறிவியல், கணிதம் ஆகிய வற்றுக்கான ஆய்வகங்களுடன் அகஸ்தியா பவுன் டேஷன் வளாகம் இயங்கி வருகிறது. இவ்வளாகத்தில் உள்ள கட்டடங்கள், அமைப்புகள் உள்ளிட்டவை வித்தியாசமான படைப்பாற்றலுடன், இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டே வடி வமைக்கப்பட்டுள்ளன.  கோளரங்கம் ஒன்றும்  இங்கே இயங்கி வருகிறது.

இந்தியா முழுவதும் சுமார் 150 மொபைல் லேப்கள், 59 பைக் லேப்கள், 63 அறிவியல் மய்யங்கள், 300 இரவு நேர கிராம பள்ளி மய்யங்கள் ஆகியவை இயக்கப்படுகின்றன.
அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டு இந்த பவுன்டேஷன் செயல் பட்டு வருகிறது. அறிவியலையும், கணிதத்தையும் எளிதாக புரிந்துக் கொள்ளக் கூடிய வகையில் இங்கு கணித, அறிவியல் (கெமிஸ்ட்ரி, பையோலஜி, பிசிக்ஸ்), கணினி அறி வியல் ஆய்வகங்கள், பட்டர்ஃப்ளை பார்க், படைப்பாற்றல் கற்பித்தல் மய்யம், நூலகம், கலை மற்றும் கண்டுபிடிப்பு மய்யம் உள்ளிட்ட பல்வேறு மய்யங்கள் இந்த வளாகத்தில் இயங்கி வருகின்றன.

குப்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 15இலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அகஸ்தியா பவுன்டேஷன் சார்பாக வாகனங்கள் அனுப்பப்பட்டு மாணவர்கள் குப்பம் வளாகத்திற்கு இலவசமாக அழைத்து வரப்படு கின்றனர். அவர்களுக்கு இவ்வளாகத்தில் உள்ள அனைத்து ஆய்வகங்கள், கோளரங்கம், மய்யங் களுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்படுகிறது. மாணவர்கள் மட்டு மல்லாது ஆசிரியர்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கு இங்கு அவ்வப்போது பயிற்சி முகாம்கள் நடத்தப்படு கின்றன. ஆண்டுக்கு 2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மொபைல் லேப் மூலம் மாணவர்களின் பள்ளிகளுக்கே சென்று அவர் களுக்கு அறிவியல், கணிதத்தை புரிய வைக்கிறோம். எங்களுடைய சேவையை மேலும் தெரிந்து கொள்ள: http://www.agastya.org/என்ற எங்கள் இணைய தளத்தைப் பாருங்கள்’’ என்றார்.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கல்வி!  

உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் குழந் தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், குழந்தைகளைக் கடுமையாக வேலை வாங்குவது, குழந்தைகளைப் புறகணித்தல், குழந்தைகளைக் கடத்துவது உட்பட பலவிதங்களில் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு கொடுமைகள் நடந்து வருகின்றன. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புனர்வாழ்வுக்காகவும், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கவும், குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை சட்டத் தின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதற் காகவும் உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அத்தகைய அமைப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு தேவையான கல்வியை வழங்குவது போன்ற சேவையை மேற் கொண்டு வருகின்றனர்.

அத்தகைய அமைப்புகளில் பணிபுரிய விருப்ப முள்ளவர்கள் குழந்தைகளைப் பாதுகாத்தல் குறித்த கல்வி அறிவைப் பெற்றிருக்க வேண்டும். அதே போல குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை தொடங்க விருப்பமுள்ளவர்களும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கல்வியைப் பெற்றிருக்க வேண்டும்.

Banner
Banner