இளைஞர்


என்ன படிப்பது, எப்படிப் படிப்பது, அடுத்து என்ன படிக்கலாம் என்பதை முடிவு செய்வதிலிருந்து நட்பில், உறவில், உணர்ச்சி பூர்வமான தருணங்களில் சில தவறான முடிவு களை எடுத்தவர்கள் பெரும்பாலும் சொல்வது யாராவது எனக்கு அந்த நேரத்தில் சரியாக வழிகாட்டியிருந்தால் இப்படி நடந்திருக்காது என்பதாகத்தான் இருக்கும்.
இந்நிலையில் கிராமப்புறங்களில் பொரு ளாதாரரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களில் வாழும் குழந்தைகளுக்கு எல்லா வகையிலும் வழிகாட்டுதல்கள் அவசியமாகவே உள்ளது. இதை உணர்ந்து தொடங்கப்பட்ட தன்னார்வ அமைப்புதான் வாழை.

தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு குழந் தைக்கும் ஒரு வழிகாட்டி அமர்த்தப்படுகிறார். அந்தக் குழந்தையின் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை அந்தக் குழந்தைக்கு உடன்பிறவா சகோதர சகோதரியாக மாறும் அந்த வழிகாட்டி, அந்தக் குழந்தையோடு தொலைபேசி, கடிதம் மூலமாகத் தொடர்பில் இருக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்துக் குழந்தையின் தனித்திறமைகளை வளர்ப்பதிலும் அவர்களோடு உணர்வுபூர்வ மாகப் பேசுவதிலும் தனது நேரத்தைச் செலவழிக்கிறார்.

கற்பிக்கும் முறை: வாழையின் கற்பிக்கும் முறை செயல்வழிக் கற்றல், மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் உத்திகளை அடிப் படையாகக் கொண்டது. எவ்வளவு கடினமான கருத்துகளையும் எளிதில் குழந்தைகள் புரிந்துகொள்ள இவர் கள் முறை உதவுகிறது. இங்குக் கல்வியல் திறன்களுக்குச் சமமாக வாழ்க்கை (அல்லது) வாழ்வியல் திறன்களுக் கும்  முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குழந் தைகளை முற்றிலும் முழுமையான மனிதனாக மாற்றும் வாழ்வியல் திறன்களை மட்டுமே மய்யமாகக்கொண்ட பிரத்யேகப் பயிற்சிப் பட்டறைகளும் நடத் தப்படுகின்றன.

2005இல் மாநிலக் கல்லூரியில் படித்த அன்புசிவம், அமுதரசன், ஞானவேல் உள் ளிட்ட அய்வரின் முயற்சியில் தொடங்கப்பட்ட அமைப்பு வாழை. கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டிகளை அளிக் கலாம் என்ற முடிவை இந்த இளைஞர்கள் எடுத்தனர். பேராசிரியர் பிரபா கல்விமணி, கல்வியாளர் பத்மாவதி ஆகியோரை ஆலோ சகராகக்கொண்டு இந்த அமைப்பு செயல் பட்டுவருகிறது.

20 குழந்தைகளுக்கு 20 வழிகாட்டிகள் என்ற அளவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பன்னிரண்டு ஆண்டுகளைக் கடந்து தற்போது விழுப்புரம், தர்மபுரி மாவட் டங்களில் 200 குழந்தைகளுக்கு 200 வழி காட்டிகள் என்ற அளவுக்கு வளர்ந்திருக் கிறது. சென்னையில் ஏறக்குறைய பத்து மாண வர்கள் பல்வேறு பிரிவுகளில் படித்துக்கொண்டி ருக்கிறார்கள். ஆனாலும், இழுத்துப் பிடித்துப் படிக்கவைத்தாலும், பத்தாவது, பிளஸ் டூ முடித்ததுமே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைத்துவிடும் சூழல்தான் இன்றுவரை கிராமங்களில் நிலவுகிறது. இரண்டு மூன்று பெண்கள் பி.எஸ்சி. நர்சிங் போன்ற படிப்புகளை விழுப்புரம் மாவட்டத் தைச் சுற்றியுள்ள கல்லூரிகளில் படித்திருக் கின்றனர். ஆனால் ஒரே வருத்தம், ஒரு பெண் ணைக்கூட உயர்கல்வி அளவுக்குப் படிக்க வைக்க முடியவில்லை. இதற்கு அந்தப் பகுதிகளில் இருக்கும் சமூகச் சூழலே காரணம் என்கிறார் வழிகாட்டிகளில் ஒருவரான அருண்குமார்.

வாழை அமைப்பில் வழிகாட்டியாக இணைய முன்வருபவர்களிடம் இவர்கள் எதிர்பார்ப்பது நேரத்தைத்தான். அவ்வாறு முன்வருபவர்களுக்கு மாணவர்களுக்கு வழிகாட்டத் தேவையான பயிற்சியும் இதே அமைப்பு அளித்துவருகிறது. தன்னார்வலர் களின் நன்கொடை, குழந்தைகளின் பெற் றோர்கள் அளிக்கும் ஊக்கம் போன்றவற்றால் தான் இது நடக்கிறது.

தினக்கூலிகள், வெளியூரில் சென்று வேலைக்குச் செல்பவர்களின் குழந்தைகள் தாத்தா, பாட்டி போன்றவர்களின் அர வணைப்பில் வளர்வார்கள். அந்தக் குழந்தை களுக்கு அவர்களின் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதற்குக் கூட யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பாலினச் சமத் துவம், பொதுச் சமூகத்தில் எப்படிப்பட்ட திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளை அளிப்போம்.

விழுப்புரம் சுற்றியுள்ள 8 கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் இருந்து ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களைத் தேர்ந் தெடுப்போம். குடும்பத்தில் முதல் குழந்தை, தாய், தந்தை இருவரில் ஒருவர் மட்டுமே இருக்கும் குழந்தை இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஒரு பள்ளியில் 20 குழந்தைகளைத் தேர்ந்தெடுப்போம். அவர்களுக்கு எங்களு டைய பயிலரங்கத்தில் கல்வியைத் தவிர்த்து இசை, நடனம் போன்ற துறைசார்ந்த நிபுணர் களைக் கொண்டு சில பயிற்சிகளும் அளிக் கிறோம். எங்களின் குழந்தைகள் கூகுள் டிராயிங் போன்றவற்றில் தங்களின் படைப்பு களை இடம்பெறச் செய்திருக்கின்றனர். தேசிய அறிவியல் மாநாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் ஓரிரு மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்வாகிறார்கள். கடந்த ஆண்டு தேசிய அளவில் ஒரு மாணவர் தேர்ந் தெடுக்கப்பட்டார் என்கிறார் அருண்குமார்

தொடர்புக்கு: http://www.vazhai.org

நபார்டு வங்கிப் பணி: மாதம் ரூ.61 ஆயிரம் சம்பளம்  

மத்திய அரசின் நபார்டு வங்கிக்கு (தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி) 92 உதவி மேலாளர்கள் (கிரேடு-ஏ) நேரடி நியமன முறையில் போட்டித் தேர்வு மூலம் தேர்வுசெய்யப்பட இருக்கிறார்கள்.

பொதுப் பணி - பொருளாதாரம், விவசாயம், கால்நடை மருத்துவம், கணக்குத் தணிக்கை, வனவியல், சமூகப் பணி, சுற்றுச்சூழல் பொறியியல், உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பம் முதலிய சிறப்புப் பிரிவுகளிலும் காலியிடங்கள் உள்ளன. பொதுப் பணிப் பிரிவில் மட்டும் 46 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

பொதுப் பணிப் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 45 சதவீத மதிப்பெண்போதும். மற்ற சிறப்பு பிரிவுகளைப் பொறுத்தவரை, அந்தந்தப் பாடப் பிரிவில் இதே மதிப்பெண் தகுதியுடன் பட்டம் அவசியம்.  வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 30 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவின ருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளி களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப் படையில் உதவி மேலாளர்கள் தேர்வுசெய்யப்படு வார்கள். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு நிலையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இரண்டுமே ஆன்லைன் வழியில் நடத்தப்படும்.

முதல்நிலைத் தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், கணினி அறிவு, பொது அறிவு, கணிதத் திறன், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள், விவசாயம், ஊரக வளர்ச்சி ஆகிய பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகள் கேட்கப்படும். 200 மதிப்பெண். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இது அப்ஜெக்டிவ் முறை, விரிவாக விடையளிக்கும் முறை  இரண்டும் கலந்ததாக அமைந்திருக்கும்.

மெயின் தேர்வில் இரண்டு தாள்கள். முதல் தாளில் பொது ஆங்கிலம் தொடர்பான கேள்வி களுக்கு (கட்டுரை எழுதுதல், அறிக்கை எழுதுதல் போன்றவை) கணினி விசைப்பலகையைப் பயன் படுத்தி விடையளிக்க வேண்டும். தேர்வு நேரம் ஒன்றரை மணி நேரம்.

இரண்டாவது தாள் அப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும். பொதுப் பணிக்குப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள், விவசாயம், ஊரக வளர்ச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும், மற்ற சிறப்புப் பிரிவு பணிகளுக்குச் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் இருந்தும் 100 மதிப்பெண்ணுக்குக் கேள்விகள் கேட்கப்படும். தேர்வு நேரம் ஒன்றரை மணி.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கு 25 மதிப் பெண். இறுதியாக, மெயின் தேர்வு மதிப்பெண், நேர் முகத் தேர்வு மதிப்பெண், இட ஒதுக்கீட்டு அடிப் படையில் பணி நியமனம் நடைபெறும். உதவி மேலா ளர்களுக்குத் தொடக்க நிலையிலேயே ரூ.61 ஆயிரம் சம்பளம். உரிய கல்வி, வயதுத் தகுதி உடைய பட்டதாரிகள் நபார்டு வங்கியின் இணையதளத்தை (www.nabard.org) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 2, முதல்நிலைத் தேர்வு: மே 12, மெயின் தேர்வு: ஜூன் 6

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனில் வேலை

www.nlcindia.com/

காலியிடங்கள்: 50

கல்வித் தகுதி: சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி அல்லது காஸ்ட் அக்கவுண்டன்சி தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத் திறனாளிகளுக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: ஷ்ஷ்ஷ்.ஸீறீநீவீஸீபீவீணீ.நீஷீனீஎன்ற இணைய தளத்தில் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை: இண் டர்மீடியட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படை யில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படு வார்கள்.

மேலும் விவரங்களுக்கு www.nlcindia.com/ என்ற இணையதளத்தைப் பாருங்கள்.


பாரத் ஹெவி எலக்ட் ரிக்கல்ஸ் லிமிடெட், ஒரு பொதுத்துறை நிறுவனம். திருச்சியில் உள்ள இந்நிறுவனம் ‘பெல்’ என அழைக்கப் படுகிறது. பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரென் டிஸ் பிரிவில் 918 காலியிடங்களை நிரப்பு வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : பிட்டரில் 330,வெல்டரில் G & E) 240, டர்னரில் 25, மெஷினிஸ்டில் 35, எலக்ட்ரீசியனில் 75, வயர்மேன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷனில் தலா 20, எலக்ட்ரானிக் மெக்கானிக், டீசல் மெக்கானிக், டிராப்ட்ஸ் மேன், ஷீட் மெட்டல் ஒர்க்கரில் தலா 15, புரொகிராம் அண்டு சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் அசிஸ்டென்டில் 50, போர்ஜர் அண்டு ஹீட் டிரீட்டரில் 10, கார்பென்டரில் 15, பிளம்பரில் 15, எம்.டி.எல்., பாதாலஜியில் 3ம் சேர்த்து மொத்தம் 918 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: ஏப்., 1, 2018 அடிப்படையில் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்ட வர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப் பிக்கும் டிரேடு பிரிவில் என்.டி.சி., அல்லது என்.சி.டி.வி.டி., அங்கீகாரம் பெற்ற அய்.டி.அய்., படிப்பு தேவைப்படும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : மார்ச் 20, 2018. விபரங்களுக்கு:: www.bheltry.co.in/appforms/AppCircular.pdf

நிலக்கரி நிறுவனத்தில் பணி  

எரிசக்தி துறையில் பிரசித்தி பெற்ற நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில், ஒரு ஆண்டு காலத்திற்கான இன்டஸ்ட்ரியில் டிரெய்னி (பினான்ஸ்) பிரிவில் 50 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: மார்ச் 1, 2018 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: இன்ஸ்டிடியூட் ஆப் சார்டர்டு அக்கவுண்டண்ட்ஸ் ஆப் இந்தியாவில், இன்டர்மீடியட் படிப்பு அல்லது இன்ஸ்டியூட் ஆப் காஸ்ட் அக்கவுன்டண்ட்ஸ் ஆப் இந்தியாவில், இன்டர்மீடியட் படிப்பு தேவைப்படும்.

தேர்ச்சி முறை : கல்வித் தகுதி மதிப்பெண்கள் மற்றும் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாள்: மார்ச் 27, 2018. விபரங்களுக்கு: www.nlcindia.com/new_website/index.htm

மத்திய காவல்படையில் பணியிடங்கள்

மத்திய காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளில் 1,330 காலியிடங்கள் மத்தியப் பணியாளர் தேர்வாணையம்  மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. டில்லி காவல்துறையில் ஆண்கள் பிரிவில் 97 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் பெண்கள் பிரிவில் 53 இடங்களும் மத்திய ஆயுதப் படையில் 1180 சப்-இன்ஸ்பெக்டர் இடங்களும் உள்ளன.

மத்தியத் தொழிற் பாதுகாப்புப் (சி.அய்.எஸ்.எப்.) படையில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் (நிர்வாகம்) பதவியில் காலியிடங்கள் எண்ணிக்கை அறிவிக்கப் படவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 20 லிருந்து 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஆண்கள் 170 செ.மீ. உயரமும் பெண்கள் 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். (எஸ்.சி. வகுப்பினருக்கு 162.5 செ.மீ.).

தேர்வு முறை:  விண்ணப்பதாரர்கள் எழுத்து, உடற்தகுதி, உடல்திறன் ஆகிய தேர்வுகள் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத் துத் தேர்வு முதல் கட்டத் தேர்வு, இரண்டாம் கட்ட தேர்வை உள்ளடக்கியது.

முதல் கட்டத் தேர்வில் பொது விழிப்புணர்வு, ரீசனிங், பொது அறிவு, கணிதத் திறன், ஆங்கிலம் ஆகிய நான்கு பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் அப் ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். மதிப்பெண் 200.

இரண்டாம் கட்டத் தேர்வில் பொது ஆங்கிலம் பகுதியில் இருந்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் 200. இரண்டு தேர்வுகளும் தலா இரண்டு மணி நேரம் நடத்தப்படும். முதல் கட்டத் தேர்வு பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்டத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

தகுதியுடைய பட்டதாரிகள் எஸ்.எஸ்.சி. இணை யதளத்தைப் (www.ssc.nic.in) பயன்படுத்தி ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை, தேர்வுக் கட்டணம், உடல் தகுதிகள், எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் உள் ளிட்ட விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 2018 ஏப்ரல் 2. முதல் கட்டத் தேர்வு: 2018 ஜூன் 4 - 10. இரண்டாம் கட்டத் தேர்வு: 2018 டிசம்பர் 1.

அஞ்சல் துறையில் 1058 காலிப் பணியிடங்கள்

இந்திய அஞ்சல் துறையின் தெலங்கானா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 1058 பணியிடங் களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு அல்லது அய்டிஅய்  முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.

பணி:   காலியிடங்கள்: 1058

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி இயக்குதல் குறித்த 60 நாட்கள் கொண்ட சான்றிதழ் பயிற்சியை பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  வயதுவரம்பு: 09.03.2018 தேதியின் படி 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியான வர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும். விண் ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவி னருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினரும் கட் டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.04.2018

மேலும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய :http://appost.in/gdsonline/என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

வங்கியில் அதிகாரி
பணியிடங்கள்

கருநாடக மாநிலம் மங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் துறை வங்கியான கருநாடகா வங்கியில், புரொபேஷனரி அதிகாரி பிரிவைச் சார்ந்த பல்வேறு இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள்: அக்ரிகல்சுரல் பீல்டு ஆபிசர்ஸ், லா ஆபிசர்ஸ், ரிலேஷன்ஷிப் மேனேஜர்ஸ் என்ற பிரிவுகளின் கீழ் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது ஜன., 1, 1990க்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 வருட சலுகை உள்ளது.

கல்வித் தகுதி : அக்ரி பிரிவுக்கு இதே பிரிவில், அக்ரிகல்சுரல் சயின்ஸ் சார்ந்த பட்டப் படிப்பு தேவைப்படும். லா ஆபிசர்ஸ் பிரிவுக்கு சட்டத்தில் பட்டப் படிப்பு தேவைப்படும். ரிலேஷன்ஷிப் மேனேஜர் பதவிக்கு, எம்.பி.ஏ., படிப்பை மார்க்கெட்டிங்கில் படித்திருப்பது தேவைப் படும். சரியான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

The Deputy General Manager (HR & IR),
Karnataka Bank Limited, Head Office,
Mahaveera Circle, Kankanady,
Mangaluru- 575002
கடைசி நாள்: மார்ச் 20, 2018


கணிப்பொறி நிறுவனமான இன்டெல் 2004-இல் அமெரிக்காவின் போர்ட்லேண்டில் நடத்திய சர்வதேச அளவிலான அறிவியல் மற்றும் பொறி யியல் கண்காட்சி அது. அதில் இடம்பெற்ற விண் வெளி அறிவியல், உயிரி வேதியியல் படைப்பு களில் பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்யச் சென்ற நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்த அந்தச் சிறுவனைப் பார்த்து கண்காட்சிக்கு வந்திருந்த எல்லாரும் திகைத்தனர். ஏனெனில், அப்போது அவனுக்கு வயது 15 மட்டுமே. அந்த நடுவர் குழுவில் நாசா விஞ்ஞானிகளுடன் அவன் இடம் பெற்றிருந்தான்.

பள்ளிப் படிப்பு கூட முடிக்காத அந்தச் சிறுவன் வேறு யாரு மில்லை, இந்தியாவைச் சேர்ந்த பிரவீன்குமார் கோரகாவி தான். அவனை நடுவர் குழுவில் சேர்ப்பதற்கு வித்திட் டவை, இளம் வயதில் அவன் உருவாக்கிய புதிய கண்டுபிடிப்புகளே. அவன் உருவாக்கிய 40,000 ஆண்டு நாள்காட்டியும், குடிநீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பமும், உணவுப் பொருள்களைக் கெடாமல் பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பமும் அவனது கண்டுபிடிப்புகளில் சில. ஒருங் கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகராக இருந்த அய்தராபாத்தில், 1989 மே 24-இல், கோரகாவி- ராமலட்சுமி தம்பதியரின் இரண்டாவது மகனாக பிரவீன்குமார் பிறந்தார். பிரவீணின் அண்ணன் பவன்குமார் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்.

பிரவீண்குமார் தனக்கு 13 வயதாக இருந்த போது 3,000 ஆண்டுகளைக் கணக்கிடும் நாள் காட்டி ஒன்றை உருவாக்கினார். பொது யுகத்துக்கு முந்தைய 1,500 ஆண்டுகளில் தொடங்கி பொது யுகத்துக்குப் பிந்தைய 1,500 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்துக்கான நாள்காட்டி அது. அதன்மூலம், ஒரு குறிப்பிட்ட தேதியில் என்ன கிழமை இருந்தது என்பதை அறிய முடிந்தது. அதனை வடிவமைக்க 27 கணித சூத்திரங்களை பிரவீண் பயன்படுத்தினார்.

மிக விரைவில் அதனை மேலும் மேம்படுத்தி, சுமார் 40,000 ஆண்டுகளுக்கான நாள்காட்டியாக வடிவமைத்தார் பிரவீன். இதற்காக “லிட்டில் மாஸ்டர்’ என்ற பட்டமும் “பாலரத்னா’ என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டன. அடுத்த ஆண்டே, 31,000 ஆண்டுகளுக்கான நாள் காட்டியை பார்வையற்றோரும் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி முறையில் அவர் வடி வமைத்தார். அதனை ஆந்திர அரசு வெளியிட்டது. இந்த நாள்காட்டிகள் சிங்கப்பூரில் உள்ள அறிவியல் மய்யத்திலும், அய்தராபாத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்திலும் காட்சிக்கு வைக் கப்பட்டுள்ளன.

அடுத்து, ஏவுகணையில் உந்துவிசை எரிபொருளாக சாதாரண மெழுகைப் பயன் படுத்த முடியும் என்று கண்டறிந்தார் பிரவீண். அதனை, 2004-இல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் (டிஆர்டிஓ) அய்தராபாத்- இம்ராத் மய்யத்தில் செயல் விளக்கமும் செய்து காட்டினார். அப்போது நேரில் அதைப் பார்வையிட்ட அந்நிறுவனத்தின் தலைவரும் விஞ்ஞானியுமான வி.கே.சாரஸ்வத் பாராட்டினார். அதையடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் “பாலசிறீ’ விருதை வழங்கினார்.

இந்நிலையில், ஊனமுற்றோருக்கான செயற் கைக்காலை குறைந்த செலவிலும், தொடைக்கு மேல் பொருத்தி மடக்கக் கூடிய விதமாகவும் தயாரித்தார் பிரவீன். அதன் எடை 1.5 கி.கி. மட்டுமே. அதனைப் பொருத்திக்கொண்டால் 20 கி.மீ. வேகத்தில் ஓட முடியும். இந்தத் தொழில் நுட்பத்தை அவர் ஆந்திர அரசின் கூட்டுறவுத் துறையிடம் ஒப்படைத்தார். அம்மாநில அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதற் காக ஆந்திர மாநில அரசு “யுகாதி கௌரவ் புரஸ்கார்’ விருதையும், இந்திய அரசு தேசிய அறிவியல் பதக்கத்தையும் (2004) பிரவீனுக்கு வழங்கின. பிறகு உணவு கெடாமல் பாதுகாக்கும் கருவியையும், குறைந்த செலவில் உப்புநீரை நன்னீராக மாற்றும் தொழில்நுட்பத்தையும் அவர் உருவாக்கினார்.

நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறியும் செயற்கைக்கோளை வடிவமைத்து அதனை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிடம் வழங்கினார் பிரவீன். மேற்படி கண்டுபிடிப்புகளால் நாசா விஞ்ஞானிகளின் பாராட்டையும் பெற்றார். இந்தக் கண்டுபிடிப்பு களால் அடைந்த புகழே அவர் இளம் வயதில் சர்வதேச அறிவியல் கண்காட்சியில் நடுவராகச் செயல்படும் தகுதியை அவருக்கு வழங்கின. அவர், இளம் விஞ்ஞானி, வேதிப் பொறியியலாளர், கண்டுபிடிப்பாளர், பலதுறை வல்லு நர், பிறவி மேதை, தொழில்நுட்ப ஆலோசகர் எனப் பல பரிமாணங்களை உடையவராகப் போற்றப்படுகிறார்.

தொடர்ந்து, 2011-இல் இன்ஃபோசிஸ் நிறுவனம், ஆப்பிரிக்க கிளிமஞ்சாரோ பார்வை யற்றோர் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து, பார்வையற்றோருக்கான மிக குறைந்த விலையிலான பிரெய்லி டைப்ரைட் டரை வடிவமைத்தார். பல வண்ண நகப்பூச்சுக் கருவி, சூரிய ஒளி நிறப்பிரிகையை இருகூறாக்கும் கருவி (2012), உணவு பாதுகாக்கும் பொருள், திரவப் பொருள் பேக்கிங் தொழில்நுட்பம், மின் பல்துலக்கியில் பயன்படும் திரவப் பீய்ச்சு தொழில்நுட்பம், கசங்காத ஆடைக்கான துணி வடிவமைப்பு, 256 நிறங்களில் எழுதும் பேனா உள்பட பல புதிய கண்டுபிடிப்புகளை பிரவீன் உருவாக்கினார். விண்வெளியின் சிறுகோள் மண்டலத்தில் இரு புதிய கோள்களை தொலை நோக்கியால் கண்டறிந்து அது குறித்த அறிக் கையை மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்துக்கு பிரவீன் அனுப்பியுள்ளார். அதனை விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்கிறார்கள்.

2017 அக்டோபர் நிலவரப்படி, அவரது 27 கண்டுபிடிப்புகள் பல்வேறு அரசு சார்பு நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்களில் பயன்பட்டு வருகின்றன. இவரது 38 ஆராய்ச்சி அறிக்கைகள் சர்வதேச விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. 30-க்கும் மேற் பட்ட சர்வதேச மாநாடுகளில் அவர் பங்கேற் றுள்ளார். 7 சர்வதேச அங்கீகாரங்கள், 13 தேசிய விருதுகள், பல்வேறு மாநில விருதுகள், அரசு உதவித் தொகைகளை இந்தச் சிறுவயதில் பெற்றவராக பிரவீன் திகழ்கிறார்.

இதுவரை 45 கண்டுபிடிப்புகளை அவர் நிகழ்த்தியுள்ளார். பிரவீன்குமார் கோரகாவிக்கு இப்போது வயது 28. நோபல் பரிசு பெறுவதும் அவரது மற்றோர் இலக்கு.

தலைக்கவசம் அணியாவிட்டால் பைக் இயங்காது!

இளைஞர்கள் பலர் படு வேகமாக பைக்கு களை ஓட்டுகின்றனர். இதனால் பல சமயங் களில் விபத்துக்களில் சிக்கி உயிரை இழந்து வருகின்றனர்.

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாக னத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிந்தும் கூட பலர் தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டுகின்றனர்.

இவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள குக்கிராமமான ஆய்க்குடி-அகரக்கட்டு ஜெ.பீ. பொறியியல் கல்லூரி மாண வர்கள் அசத்தலான கண்டுபிடிப்பினை கண்டு பிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக இதை உருவாக்கிய ஜெ.பீ. பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் நான்காமாண்டு மாணவர்கள் எம்.மணி கண் டன், எஸ்.மணிகண்டன, ரமேஷ்பாபு ஆகி யோர்  கூறியதாவது: “பெரும்பாலான சாலை விபத்துக்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வதால்தான் உயிரி ழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தடுக்கும் வகையில் புதிய கருவியை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டோம்.

இது தொடர்பாக துறைத் தலைவர் மனோஜ்குமார் ஆலோசனை வழங்கினார்.

கல்லூரி நிர்வாகம் கொடுத்த ஒத்துழைப்பின் மூலம், புதிய வகை தலைக்கவசத்தை உருவாக் கினோம். இந்த தலைக்கவசத்தில் 3 சென்சார்கள் இருக்கும். பைக்கில் பொருத்தப்பட்டுள்ள சென் சார்கள் சிக்னலை ரிசீவ் செய்யும் வகையிலும், தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டுள்ள சென் சார்கள் சிக்னலை அனுப்பும் விதமாகவும் செயல்படும் வகையில் வடிவமைத்துள்ளோம்.

இந்த சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ள தால், தலைக்கவசம் அணியாமல் பைக்கை இயக்கவே முடியாது. மேலும் சீரான இதய துடிப்பு இல்லை என்றாலும், மது அருந்தி யிருந்தாலும் கூட தலைக்கவசத்தில் பொருத்தப் பட்டுள்ள சென்சார் பைக் இயங்குவதற்குரிய சிக்னலை பைக்கின் இன்ஜினில் பொருத்தப் பட்டுள்ள சென்சாருக்கு அனுப்பாது. இதனால் வாகனம் இயங்காது.

எங்களுடைய புதிய கண்டுபிடிப்பை திரு நெல்வேலி மண்டல அண்ணா பல்கலைக் கழகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை ஆகியவை 2017 இல் காட்சிப் படுத்தினோம். இதில் 100-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நாங்கள் உருவாக்கிய சென்சாருடன் கூடிய தலைக்கவசம் மற்றும் சென்சாருடன் கூடிய பைக் முதல் பரிசைப் பெற்றதுடன், மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றது.

எங்களின் கண்டுபிடிப்பைப் பாராட்டி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி கவுரவித்தார்’’ என்று மகிழ்ச்சியுடன் கூறினர் மாணவர்கள்.

வனத்துறையில் வேலை

பதவி: இந்திய வனச் சேவை

காலியிடங்கள்: 110

கல்வித் தகுதி: Animal Husbandry &
Veterinary Science, Botany, Chemistry,
Geology, Mathematics, Physics, Statistics and Zoology,  Agriculture  இவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயதிலிருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி:

06-03-2018


ஆளில்லாத் தெருக்களில் இரவு முழுக்க வீணாக எரிந்துகொண்டிருக்கும் தெருவிளக்கு களைப் பார்த்திருக்கிறோம். சென்னை மாநகரத் தில் மட்டும் ஆண்டுதோறும் தெருவிளக்கு களுக்கென ரூ. 52.08 கோடி செலவில் 331.32 மெகா வாட்ஸ் மின்சாரத்தைச் சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது. இதில் கிட்டத்தட்ட 40 சதவீத மின்சாரம் வீணாகிறது. மின்சாரத்தைச் சேமிக்கும் விதமாகப் பொருத்தப்பட்டுள்ள எல். இ.டி. விளக்குகளும் இதில் அடங்கும். இது போன்ற செய்திகளை படித்துவிட்டுக் கடந்து போயிருப்போம்.

ஆனால், சென்னை அய்.அய்.டி. மாணவர் களான சுஷாந்த், அபிஷேக், அர்னாப் சிறீவாஸ் தவா, ஷஷாங்க் ஆகியோர் அறிவுப் பூர்வமாக இதற்குத் தீர்வு கண்டறிந்திருக்கிறார்கள். மின்சார விரயத்தைத் தடுக்கப் போக்குவரத்து இருக்கும் போது மட்டும் 100 சதவீதம் ஒளி வீசி மற்ற நேரங்களில் மங்கலாக ஒளிரும் மின்விளக்குத் தொழில்நுட்பத்தை இவர்கள் வடிவமைத்திருக் கிறார்கள். புத்திசாலித்தனமாக ஒளியூட்டும் அமைப்பு என்ற இவர்களுடைய திட்டத்தின் மூலம் சாலையில் நடமாட்டம் இல்லாதபோது 30 சதவீதம் மட்டுமே மின்விளக்குள் ஒளிரும்.  மின்சாரச் சேமிப்பு, செலவு குறைப்பு

நெடுஞ்சாலைகளைத் தவிர மற்ற தெருக் களில் மக்கள் இரவு முழுவதும் பயணித்தபடியே இருப்பதில்லை. இதை அடிப்படையாக வைத்து யோசித்தால் தற்போது செலவழிக்கப்படும் மின்சாரத்தில் 40 சதவீதத்தை மிச்சப்படுத்தலாமே! இதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தால் என்ன என்ற யோசனை சென்னை அய்.அய்.டி.யில் சேர்ந்ததுமே எழுந்தது என்கிறார் சென்னை அய்.அய்.டி.யின் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாணவரான சுஷாந்த்.

தன்னுடைய கருத்தை சுஷாந்த் நண்பர் களிடம் பகிர்ந்தபோது அதில் உற்சாகமாகப் பங்கேற்க முன்வந்ததாக, சுஷாந்த்தின் வகுப்புத் தோழர் ஷஷாங்க், பி.இ. எலக்ட்ரானிக் இன்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாணவர்களான அபி ஷேக், அர்னாப் சிறீவஸ்தவா ஆகியோர் தெரி விக்கின்றனர். 2016ஆம் ஆண்டு நவம்பரில் இதற் கான ஆய்வை நால்வரும் இணைந்து தொடங் கினர். அதை அடுத்துப் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் கார்பன் ஜீரோ சேலஞ்ச் என்னும் தென்னிந்திய அள விலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த போட்டியில் வெற்றிபெற்றனர்.

நம்மால் புதிய ஆற்றலை உருவாக்க முடியா விட்டாலும் இருப்பதைச் சேமித்து வீணாகாமல் தடுக்கலாம் இல்லையா? எங்களுடைய திட்டத் தின் அடிப்படையே மின்சாரத்தை சேமித்து அதற்கான செலவையும் குறைக்க வேண்டும் என்பதுதான். பொறியாளர்கள் இதுபோன்ற பிரச் சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் வேறு யார்தான் செய்வார்கள்? என்று உற்சாகமாகக் கேள்வி எழுப்புகிறார்கள் நால்வரும்.

ராணுவ வீரர் ஆள்சேர்ப்பு: 8 மற்றும் 10ஆம் வகுப்பு தகுதி  

ராணுவத்தில் படைவீரர் பணிக்கு ஆள் சேர்ப்பு முகாம் விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

ராணுவத்தின் சென்னை மண்டல தலைமை அலுவலகம், படைவீரர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாமை நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருது நகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். ராணுவவீரர், டெக்னிக்கல், நர்சிங் உதவியாளர், பொதுப் பணி, கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் போன்ற பிரிவுகளில் இவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமை பெற்றவராகவும், திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரராகவும் இருக்க வேண்டும். இதற்கான ஆட்சேர்ப்பு முகாம், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 10.4.2018 முதல் 23.4.2018 வரை நடைபெறும்.
படைவீரர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 17 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண் டும். சில பணிகளுக்கு 21 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு 1.10.2018 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

கல்வித்தகுதி: பிளஸ்2 படிப்பில் அறிவியல் பாடம் படித்தவர்கள், அய்.டி.அய். மற்றும் டிப்ள மோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஆகியோருக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் குறிப்பிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணைய தளத்தில் பார்க்கலாம். விண்ணப்பதாரர் குறிப் பிட்ட உடல் தகுதி பெற்றிருப்பது அவசியம். உடல்தகுதி மருத்துவ பரிசோதனை மூலம் சோதிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: சான்றிதழ் சரிபார்த்தல், உடல் அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப் படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24.2.2018 ஆம் தேதி இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்குகிறது. 25.3.2018ஆம் தேதி வரை விண் ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

தமிழக மருத்துவ துறையில் பார்மசிஸ்ட் பணியிடங்கள்

தமிழக அரசு மருத்துவ சேவைப் பணிகள் துறைக்கு பார்மசிஸ்ட் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவ சேவைப் பணிகள் துறைக்கு ஆட்களை தேர்வு செய்ய எம்.ஆர்.பி. எனும் மருத்துவ தேர்வு வாரியம் செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு பார்மசிஸ்ட் பணியிடங்களை நிரப்ப விண் ணப்பம் கோரி உள்ளது. சித்தா பிரிவில் 148 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோல ஆயுர்வேதா பிரிவில் 38 பேரும், ஓமியோபதி பிரிவில் 23 பேரும், யுனானி பிரிவில் 20 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 229 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும் புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள்:

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியான வர்களாகவும், 40 வயதுக்கு உட்பட்டவர் களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. எஸ்.சி.ஏ., பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.என்.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் அந்தந்த மருத்துவப் பிரிவுகளில் பார்மசி டிப்ளமோ படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும்.

கட்டணம் : விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணம் செலுத்தி னால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 5.3.2018ஆம் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங் களை தெரிந்து கொள்ளவும் www.mrb.tn.gov.in என்ற இணைய தள முகவரியை பார்க்கலாம்.

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தின் பல்வேறு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அமைப்பில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சீனியர் பேக்டரி அசிஸ்டன்ட், டெக்னீசியன் உள்ளிட்ட பணிக்கு 38 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அய்.டி.அய். படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக் கலாம். 16.3.2018ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

கோவை மாவட்டத்தில் மேலாளர், டிரைவர், எக்சிகியூட்டிவ் அதிகாரி, எக்ஸ்டென்சன் ஆபீசர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் போன்ற பணிக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

முதுநிலை பட்டதாரி, இளநிலை பட்டதாரி மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதில் பணியிடங்கள் உள்ளன.  27.2.2018ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஈரோடு மாவட்டத்தில் மேலாளர், எக்சிகியூட்டிவ் உள் ளிட்ட பணிக்கு 6 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள்.  28.2.2018ஆம் தேதிக்குள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டையில் மேலாளர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப் படுகிறார்.

6.3.2018ஆம் தேதிக்குள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இவை பற்றிய விவரங்களை ::http://www.aavinmilk.comஎன்ற இணையதளத்தில் பார்க் கலாம்.ஒளியால் இந்த உலகம் இயங்கி வரும் நிலையில், இன்றைய அறிவியல் அந்த ஒளியை வைத்து உலகுக்கு மறுவடிவம் கொடுத்து வருகிறது என்றால், அது மிகையில்லை. இயற்பி யலின் ஓர் உட்பிரிவான ஃபோட்டானிக்ஸ் தொழில்நுட்பம் தான் இந்த மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஒருகாலத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு தந்தியை பயன்படுத்தி வந்த நாம், பிறகு கம்பியில்லா தந்தி, தொலைபேசி, செல்லிடப்பேசி, இணையம் என எண்ணற்ற மாற்றங்களைப் பெற்று, இன்று நொடிக்கும் குறைவான நேரத்தில் புவியின் எந்த இடத்துக்கும் தகவலை அனுப்பி வருகிறோம். குறிப்பாக, ஒரு மயிரிழை அளவில் உள்ள கண்ணாடி நாரிழை வழியாக ஒரே நேரத்தில் 30 கோடிக்கும் அதிக மான தொலைபேசி அழைப்புகளை அனுப்பியும், பெற்றும் வருகிறோம். இவையெல்லாம், ஒளியில் உள்ள ஃபோட்டான் என்ற அடிப்படை ஒளித்துகளை உருவாக்குவது, கண்டறிவது, கட்டுப்படுத்துவது என்ற அறிவியல் வழியாகவே சாத்தியமாகியுள்ளது. இதுவே ஃபோட்டானிக்ஸ் தொழில்நுட்பம் என கூறப்படுகிறது.

20 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பம் மின்னணுவியல் என்றால், 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பம்  ஆகும். இது மின்னணுவியல் மற்றும் ஒளியியல் ஆகியவற்றின் தொழில்நுட்ப இணைவு. தொலைத்தொடர்பு, மருத்துவம், பாதுகாப்புத்துறை, ஒளி மற்றும் மின்னணுவியல் போன்றவற்றில்  கண்டுபிடிப்புகள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடி நாரிழை வழியாக தகவல்களை எடுத்துச் செல்வது, கதிரியக்க ரேடார் மற்றும் பிற உணர் கருவிகள் மூலமாக தகவல்களை மீட்டெடுப்பது, கதிரியக்க அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றில் ஃபோட்டான் துகள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மின்னணுவியல் உள்ளிட்ட அதிநவீன பயன்பாடுகள், கதிரியக்க அறுவைச் சிகிச்சை, தொலைத்தொடர்பு, டிஜிட்டல் குடும்ப விடியோ எடுக்கப் பயன்படும் சிலீணீக்ஷீரீமீபீ-சிஷீuஜீறீமீ ஞிமீஸ்வீநீமீs (சிசிஞி), புதிய கோள்களைக் கண்டுபிடிப்பது, உயிரி தொழில்நுட்பவியல், நுண்ணுயிரியியல் போன்றவற்றில் ஃபோட்டா னிக்ஸின் பங்கு மிக அதிகம். மிகச் சிறப்பான, அதிவேக செயல்பாடு காரணமாக ஃபோட் டானிக்ஸ் உலகம் முழுவதற் குமான அடிப்படை தொழில்நுட்பமாக மாறி யுள்ளது. ஃபோட்டானிக்ஸ் தொழில்நுட்பம் பயின்ற திறமையான மாணவர்களுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

இவர்கள் விஞ்ஞானியாக, பொறியாளராக, தொழில்நுட்ப வல்லுநர்களாக பல்வேறு நிறுவனங்களிலும், அரசுத் துறைகள், பல்கலைக் கழகங்களில் தொழில்முறை அலுவலர்களாகவும் பணியாற்றலாம். இயற்பியல், கணிதம் முடித்த இளநிலை பட்டதாரிகள் சேரலாம். முதுகலை இயற்பியல், ஃபோட்டானிக்ஸ் முடித்தவர்கள் எம்.டெக்., எம்.பில்., பி.எச்டி ஆகியவற்றில் சேரலாம்.

இந்தியாவில் ஃபோட்டானிக்ஸ் படிப்பு மிகச் சில கல்வி நிறுவனங்களிலேயே உள்ளது. அவற்றில், கேரளத்தில் உள்ள  சிஹிஷிகிஜி என்பது குறிப்பி டத்தக்கது. மேலும், அய்.அய்.டி-சென் னை, சென்னை பல்கலைக்கழகம் ஆகிய வற்றிலும் ஃபோட்டானிக்ஸ் படிப்பு உள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல்       ஃபோட்டானிக்ஸ்  சார்ந்த துறை செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கு 18 மாணவர்கள் சேர்க்கப்படு கின்றனர். மேலும், இயற்பியல், மின்னணுவியலில் முது நிலை பட்டம், முடித்தவர்கள் 2 ஆண்டுகள் கொண்ட படிப்பில்  சேரலாம்.

அதேபோல, முதுநிலை இயற்பியல், மின் னணு அறிவியல் பயின்ற மாணவர்கள் ஓராண்டு படிப்பில் சேரலாம். அதோடு, இயற்பியல், மின் னணுவியல், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், மின்னியல் ஆகியவற்றில் முதுநிலை பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 3 முதல் 5 ஆண்டுகள் கொண்ட முனைவர் பட்ட ஆராய்ச்சி திட்டத்தில் சேரலாம்.

5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்ஸி., ஃபோட்டானிக்ஸ் கோர்ஸ் பயில ஒரு செமஸ் டருக்கு கல்விக் கட்டணம் மட்டும் சுமார் ரூ. 22 ஆயிரம். ஃபோட்டானிக்ஸ் கோர்ஸ் முடித்த வர்கள் இந்தியாவில் தொடக்கநிலை ஊதியமாக இதர பலன்கள் மற்றும் சலுகைகள் தவிர்த்து மாதத்துக்கு ரூ. 20-35 ஆயிரம் பெறலாம். அதே சமயம், அனுபவம், திறமைக்கேற்ப ஊதியம் அதிகரிக்கும். அமெரிக்கா, கனடா, யு.கே. போன்ற நாடுகளில் ஆண்டு ஊதியமாக ரூ. 24-75 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

விண்வெளி சம்பந்தமான படிப்புகள்!  

விண்வெளி அறிவியல் சம்பந்தமான படிப்பு களைப் படித்து அத்துறையில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.

விண்வெளி அறிவியல் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த படிப்பாக உள்ளது. ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் விண்வெளி ஆராய்ச் சிக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளி ஆராய்ச்சி நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், காலநிலை மாற்றங்களை முன் கூட்டியே அறிந்து கொள்தல் ஆகியவற்றுக்கும் பயன்படுகிறது.

விண்வெளி ஆராய்ச்சித் துறை மூலம் செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு, வானவெளியில் நிலை நிறுத்தப்பட்டு பல்வேறு ஆராய்ச்சிகளையும், ஆய்வுகளும் மேற் கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

இத்துறையில் நல்ல வேலை வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. அதனால் அது சம்பந்தமான படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து படித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது.

மத்திய அரசின் விண்வெளித்துறையின் கீழ் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி என்ற கல்வி நிறு வனம் துவக்கப்பட்டு பல்வேறு பாடப் பிரிவுகள் நடத்தப்படுகின்றன.
விண்வெளித்துறை தொடர்பான படிப்பு களை மாணவர்கள் படிக்கலாம்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

பதவி: டிரேட் அப்ரண்டீஸ் (ஃபிட்டர்/ எலெக்ட்ரிசியன்/ எலெக்ட்ரானிக் மெக்கானிக்/ இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக்/ மெக்கா னிஸ்ட், அக்கவுண்டன்ட் பிரிவுகள்)

காலியிடங்கள்: 350

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் அய்டிஅய் முடித்தி ருக்க வேண்டும். டிரேட் அப்ரண்டீஸ்-அக்கவுண் டண்டாகப் பணியாற்ற ஏதேனும் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயலிருந்து 24 வயதுக்குள் இருக்க வேண்டும். (எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு)

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com (Careers->  Latest  Job  Opening->  Engagement  of  Apprentices  in  Southern  Region (Marketing Division)-FY 2017-18 என்ற இணையதளத்துக்குச் சென்று தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் ஆகியவற்றைப் பதிவேற்றி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:http://180.179.13. 165 IOCLSRMDTDAP Live18/Images/Advt_SRO_Apprentice_FY_2018_2என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.02.2018.

பொறியியல் மற்றும் டிப்ளமோ
படித்தவர்களுக்கான பணியிடங்கள்

பதவி: இளநிலை ஆலோசகர்

கல்வித் தகுதி: மெக்கானிக்கல்/ ஆட்டோ மொபைல்/ எலெக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூ மெண்டேசன் / எலெக்ட்ரிக்கல்/சிவில் இன்ஜி னியரிங் படிப்புகளில் பி.ஈ./ பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி தேவை.

பொறியியல் சாராத பணிகள்:

ஃபேசன்/ ஆபேரல் டிசைன்/ காஸ்ட்யூம் டிசைன்/ டிரெஸ் மேக்கிங்/ கார்பெண்ட் ஃபேப்ரிகேசன் டெக்னாலஜி படிப்புகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. மேற்கண்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்தவர் களுக்கு 5 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.

விண்ணப்பிக்கும் முறை :www.atichennai.org.in என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல் களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி:The Director, Advanced Training Institute, 10, Alandur Road, Chennai - 600032.

மேலும் விவரங்களுக்கு: http://www.atichennai.org.in/mediawiki116/index.php/Announcement#ENGAGEMENT_OF_JUNIOR_CONSULTANT_AT_ADVANCED_TRAINING_INSTITUTE_CHENNAI என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 20.02.2018.

Banner
Banner