எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசு அய்டிஅய்-யில் கோபா பிரிவு பயிற்றுநர் பணியிடங்கள்

ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்று வரும் பொது மற்றும் தனியார் கூட்டமைப்புத் திட்டத்தில் காலியாக உள்ள கோபா பிரிவில் கணினி ஆபரேட்டர், புரோகிராமிங் அசிஸ்டென்ட் என்னும் பயிற்றுநர் பணியிடம் காலியாக உள்ளது.

இப்பணியிடம் இன சுழற்சி அடிப்படையில் எம்.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப் படையில் மாற்றுத் திறனாளிகள், கலப்புத் திருமணம் செய்தோர், ஆதரவற்ற விதவைகள், முன்னாள் ராணுவத் தினரின் வாரிசுகள், அரசுக்கு நிலம் கொடுத்தவர்கள், ஆதர வற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படுவோருக்கு மாதந்தோறும் தொகுப் பூதியமாக ரூ. 14,000 வழங்கப்படும். கணினி அறிவியலில் இளநிலைப் பொறியியல் பட்டம், பட்டயச் சான்றிதழ், எம்.சி.ஏ., பி.சி.ஏ., தேசிய கைவினைப் பயிற்றுநர் (கோபா பிரிவில்) உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடைய நபர்கள் தங்களது பெயர், கல்வித் தகுதி, ஜாதிச் சான்றிதழ், முன் அனுபவச் சான்று, வீட்டு முகவரி, செல்லிடபேசி எண் ஆகியவற்றுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜனவரி 10-ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், சென்னிமலை சாலை, ஈரோடு-638009 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

அரசு கூர்நோக்கு இல்லங்களில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்கள்

தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் சென்னை, கடலூர், திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் இயங்கும் அரசு கூர்நோக்கு இல்லங்கள், சென்னை மற்றும் செங்கல்பட்டில் இயங்கும் அரசு சிறப்பு இல்லங்களில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு ஆற்றுப் படுத்துதல் சேவை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல் களுடன், நன்னடத்தை அலுவலர், அரசினர் கூர்நோக்கு இல்ல வளாகம், மேலப்பாளையம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு ஜனவரி 6 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இதுகுறித்த விவரங்களுக்கு மாவட்ட நன்னடத்தை அலுவலரைத் தொடர்புகொள்ளலாம் எனக் குறிப் பிடப் பட்டுள்ளது என  மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner