எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தொழில் முனைவோருக்கான ஆய்வுப் படிப்பில் ஏன் தயக்கம்?

கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் வேலை வாய்ப்புகளைத் தேடிப் பெரும்பாலானோர் புகுந்துவிடுவதே வழக்கம். ஆனால், சிலருக்கு இதில் விருப்பமில்லாமல் தனியே தொழில் தொடங்க வேண்டும் என்னும் ஆர்வம் முளைக்கும். தொழில் தொடங்குவதற்கு ஆசைப்பட்டு அது தொடர்பான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள்.

பொதுவாகவே தொழில் தொடங்குவது என்பதில் நம்மவர்களுக்கு அதிக ஆர்வம் இருப்பதில்லை. தொழில் முனைவதற்கு மட்டுமல்ல; அது தொடர்பான ஆய்வுப் படிப்புகளில் கூட அநேகர் ஆர்வம் காட்டுவதில்லை என்ற உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது ஓர் ஆய்வு.

அதிகம் படித்தவர்கள் குறைவு

காந்திநகரில் அமையப்பெற்றிருக்கும் தொழில்முனை வோர் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றின் உறுப்பினரான கவிதா சக்ஸேனா என்பவர் இந்த ஆய்வை நடத்தி யிருக்கிறார். கடந்த 16 ஆண்டுகளில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 740 பல்கலைக்கழகங்களில் முனைவர் ஆய்வுப் பட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டோர் குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வை அவர் மேற்கொண்டிருக்கிறார். இதன்படி, வெறும் 66 பல்கலைக்கழகங்களில் மட்டுமே தொழில் முனைவோர் குறித்த முனைவர் ஆய்வுப் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த 16 ஆண்டுகளில் வெறும் தொழில்முனைவோர் குறித்த முனைவர் ஆய்வுப் பட்டத்தை 177 பேர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பெற்றிருக்கிறார்கள். இந்தப் பட்டங்களைப் பெற்றவர்களில் ஆண்கள் 104 பேர், பெண்கள் 73 பேர். இந்த 177 பேரில் 167 பேர் ஆய்வை ஆங்கிலத்திலும் ஏனைய 10 பேர் இந்தியில் மேற்கொண் டிருக்கிறார்கள்.

முனைப்பான தொழில்முனைவோர் தேவை

மாநிலங்களைப் பொறுத்தவரை மகராஷ்டிரத்தில் 25 பட்டங்களும், கர்நாடகத்தில் 18 பட்டங்களும், மத்தியப் பிரதேசத்தில் 15 பட்டங்களும், ஆந்திரப் பிரதேசத்திலும் தெலங்கானாவிலும் தலா 12 பட்டங்களும் வழங்கப் பட்டிருக்கின்றன.

தொழில்முனைவோர் குறித்த ஆய்வின் இயல்பையும், தொழில்முனைவோர் ஆய்வின் திசையையும் அறிவதற் காகவே இந்த ஆய்வு நடத்தப் பட்டிருக்கிறது. தொழில்முனைவோர் முனைப்புடன் அதில் ஈடுபடும் போதுதான் இந்த வகையான ஆய்வும் அதிகரிக்கும் என்று மட்டுமே இப்போதைக்குச் சொல்ல முடிகிறது.


தொழிலாளர்களின் சுமைதாங்கி!

கட்டுமானத் தொழிலாளர்களின் பாரத்தைக் குறைக் கும் வகையில் மிதிவண்டியைப் பயன்படுத்திக் குறைந்த செலவில் லிஃப்ட் சிஸ்டம் ஒன்றை விஜய சங்கரும் பூபதியும் இணைந்து வடிவமைத்துள்ளனர். இவர்கள் இருவரும் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைத் தொடர்புத் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள்.

மிதிவண்டியின் பெடலை மிதிக்கும்போது இயங்கும் இந்த லிஃப்ட்டைச் செங்கல் சுமக்கும் கூலித் தொழிலா ளர்களுக்காக உருவாக்கியிருக்கிறார்கள். நாங்களும் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என யோசித்த போது எங்கள் வீட்டின் அருகில் கட்டிட வேலை நடந்துகொண்டிருந்தது.

அந்தக் கட்டிடத்தின் இரண்டாவது தளம் கட்டப்பட்டுவந்ததால் அதற்குத் தேவைப்படும் மணல், செங்கல், சிமெண்ட் போன்ற வற்றைத் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்துடன் எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து நாங்கள் இவர்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தோம் என்கிறார்கள் விஜய சங்கரும் பூபதியும்.

இரண்டே வாரத்தில் பொருட்களை மேலேற்றும் இந்தக் கருவியை வடி வமைத்திருக்கிறார்கள். மின் தட்டுப்பாடும் மின் சாரக் கட்டணம் உயர்வும் சிக்கலாக இருக்கும் இந்தக் காலத்தில் மின்சாரமோ, டீசல், பெட்ரோல், மண் ணெண்ணை, எரிவாய்வு போன்ற எதுவுமே இல்லாமல் மாற்று சக்தியாக முற்றிலும் மனித சக்தியைக்கொண்டு மிக எளிதாக இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த முடியும். அதே வேளையில் மனித சக்திக்கு மாற்றாகச் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தியும் இந்த இயந்திரத்தை இயக்கலாம்.

இந்தக் கருவியைப் பொறுத்தவரை நின்ற இடத்தில் மிதி வண்டியை மிதிப்பதன் மூலம் கியர் பாக்ஸில் முப்பது சுற்றுக்கு 1 சுற்று விகிதத்தில் மாற்றி 300 கிலோ வரையிலான எடையை 100 மீட்டர் உயரத்துக்குக் கொண்டு செல்ல முடியும். மேலும் சூரிய ஒளிசக்தியை பயன் படுத்தியும் பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின் சாரத்தை டி.சி. மோட்டார் பயன் படுத்தியும் இயக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner