எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய நிலக்கரி
நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் முன்னணி பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய நிலக்கரி நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுரங்கப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

மகாரத்னா தகுதி பெற்ற இந்த நிறுவனத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள். இந்த நிறுவனத்தில் நிர்வாக பயிற்சியாளர் பதவிக்கு 1319 இடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

மைனிங், எலெக்ட்ரிக்கல், மெக் கானிக்கல், சிவில், கெமிக் கல், மினரல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன், இண்டஸ்ட்ரியல் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் என்ஜினியரிங் பட்டதாரிகளும், எம்.சி.ஏ., பி.எல்., எம்.எஸ்சி. (ஜியாலஜி) பட்டதாரிகளும், சி.ஏ., அய்.சி.டபிள்யூ.ஏ., எம்.பி.ஏ. (மனித வள மேம்பாடு), எம்.ஏ. (இதழியல்) பட்டதாரிகளும், எம்.எஸ்.டபிள்யூ., எம்.ஏ. (சமூகப்பணி) பட்டதாரிகளும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் இருக்க வேண்டும். வயது வரம்பு 30. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டு களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். ஆன்லைன் வழியாகத் தேர்வு நடைபெறும் தேர்வில் வெற்றிபெறுவோர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண் அடிப் படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு தேர்வுசெய்யப்படுவர்.

உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் உடைய பட்டதாரிகள் இந்திய நிலக்கரி நிறுவன இணையதளத்தின் (www.coalindia.in) மூலம் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். (Career with CIL  என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்) எழுத்துத் தேர்வு மார்ச் 26ஆம் தேதி நடைபெறும்.  கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறியலாம்.