இப்போதெல்லாம் கட்டுப்படியாகும் செலவிலேயே உள்ளங்கையில் அடங்கும் கைப்பேசிகள் சந்தையில் கிடைத்து விடு கின்றன. அந்தக் கைப்பேசிகளில் பலவகை யான செயலிகளை நிறுவிக்கொண்டால் மட்டுமே கைப்பேசிகளை பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வு களுக்குத் தயாராவோர் தங்களது அன் றாடப் பாடம், தேர்வு, திட்டமிடல், உடல்-மனநலப் பராமரிப்பு போன்றவற்றுக்கு உதவியாக உள்ள செயலிகள் சிலவற்றை பார்ப்போம்.
ஸ்மார்ட் ஃபோன், டேப்லட், மடிக் கணினி ஆகியவற்றில் நிறுவிக்கொள்வதற்கான பல செயலிகள் கிடைக்கின்றன. எவை நமக்குத் தேவையானவை என்பதைக் கண்டறிந்து அவற்றை நிறுவிக்கொள்வது சவாலான செயல்தான். ஆண்ட்ராய்டு, ஆப்பிள், பிளாக்பெரி, விண்டோஸ் எனச் செயலிகள் அடிப்படையில் ஸ்மார்ட் ஃபோன்கள் வேறுபட்டாலும், இங்கே பெருவாரி பயன்பாட்டில் உள்ள ஆண்ட்ராய்டு செயலிகளே தரப்பட்டுள்ளன. அவற்றை ஒட்டியே இதர பயனர்கள் தங்களுக்கான செயலிகளையும் அடையாளம் காணலாம்.
திட்டமிட்ட தயாரிப்புகளுக்கு
பாடம் தொடர்பான குறிப்புதவி, தேடல், பிரதியெடுத்தல் ஆகியவற்றுடன் அன்றாடச் செயல்களைத் திட்டமிட்டு மேற்கொள்வதற்கும் நினைவூட்டுவதற்கும் உதவும் செயலிகள் மாணவர்களுக்கு அடிப்படையானவை. பெரும்பாலானோர் அறிந்திருக்கும் இந்தச் செயலிகளின் பட்டியலில் EverNote, Google Keep, Pocket, AnyDo, MyGenda போன்றவை முக்கியமானவை.
மொபைல் கேமரா கொண்டு குறிப்புதவி நூல்களைப் பிரதி எடுப்பதோடு ஆவணப்படுத்தவும் ,
CamScanner, DocScanner ஆகியவை உதவும். இதே கேமரா உதவியுடன் கணிதச் சமன்பாடுகளைத் தீர்க்க அவசியம். கேமரா மூலம் வகுப்பறை வெண்பலகையின் குறிப்புகளைப் படமெடுத்து அவற்றை , PDF, Word கோப்புகளாகச் சேமிக்க உதவும். குரல் பதிவு மற்றும் பாடக் குறிப்புகளை ஒருசேரச் சேமிக்கவும், அவற்றை ஒத்திசைவுடன் பயன்படுத்தவும் கட்டணப் பதிப்பாக செயலி உதவுகிறது. அன்றாடப் படிப்பு, வீட்டுப் பாடம், பருவத் தேர்வுகளுக்கான தயாரிப்பு ஆகியவற்றுக்கு Timetable, My Class Schedule, My Homework
செயலிகள் உதவும்.
அதிகப்படியான பாடம் சார்ந்த செயல்பாடுகளை மொபைல் ஃபோனில் இலகுவாக்க Native Clipboard
முக்கியம். உங்களது கைப்பேசியை டேப்லட் மற்றும் இதர கணினிகளுடன் இணைத்துப் பயன்படுத்தவும், கோப்புகளைப் பரிமாறிக்கொள் ளவும்AirDroid உதவும். Dictionary.com பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அவசியமானது. கணிதப் பாடத்தை எளிமையாகக் கற்றுக் கொள்ளவும், பிரத்யேக வீட்டுப் பாடங் களுக்கும் MathWay உதவும்.
திருப்புதலும் தேர்வு
ஆயத்தமும்
சிறிய பிரேக், காத்திருப்புகள் என எந்நேரத்தையும் பொன்னாக்கும் விதமாகப் படித்ததை விரைவாகத் திருப்பிப் பார்ப்பதற்கு, StudyBlue, GoConqr செயலிகள் உதவும். பாடக்குறிப்புகள், ஃபிளாஷ் கார்ட்ஸ், மன வரைபடம், ஸ்லைடுகள் ஆகியவற்றின் அடிப்படையிலான திருப்புதலை இவற்றில் பெறலாம். Tcy Exam Prep
என்ற தலைப்பின் கீழ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கான பாட உதவிகள் JEE, CAT, GATE, GREநிஸிணி தேர்வுகளுக்கான தயாரிப்புகள் கிடைக் கின்றன. செயலி சமூக வலைத்தள அடிப்படையில், பாடக் குறிப்புகள் மற்றும் விநாடி வினா பாணியில் தேர்வு தயாரிப்புக்கு உதவும். கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆய்வுக்கான நூற்பட்டியலை இணைக்கும் பணியைப் புத்தகத்தின் பார்கோடு உதவியுடன் முடித்துத் தருகிறது
Easybib செயலி. பிரெஞ்சு, ஜெர்மன் உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளைக் கையாளவும், கற்றுக் கொள்ளவும்DuoLingo உதவும்.
பாதுகாப்புக்கான செயலிகள்
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தங்கள் பாதுகாப்புக்காகவும், அவசரகால உதவியாகவும் பயன்படுத்திக்கொள்ள ஏராளமான செயலிகள் உள்ளன. அவற்றில் பிரதானமான Circle of 66 போன்ற செயலிகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். டெல்லி நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் பெண்களுக்கு எனப் பிரத்யேகச் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அறிமுகமில்லாத புதிய இடங்களுக்குச் செல்லும்போதும், பாதுகாப்பில் அய்யம் எழும்போதும் பெற்றோர் அல்லது
நம்பகமானவர்களுடன் தொடர்பில் இருப்பது, காவல் துறையினர் உதவியைப் பெறுவது உள்ளிட்ட உதவிகளை My Safety Pin, bsafe, React mobile, chilla, women safety, smart 24x7, Shake2Safety, Raksha
போன்ற செயலிகள் மூலம் பெறலாம். இந்தச் செயலிகளில் ஒவ்வொன்றாக நிறுவிப் பார்த்துத் தனக்கு உகந்ததை இறுதியாக முடிவுசெய்வது நல்லது. நிஷீஷீரீறீமீ விணீஜீs அவ்வப்போது அப்டேட் செய்துகொள்வது படிப்பு நிமித்தம் புது ஊரில் புழங்குபவர்களுக்கு அவசியமானது. வங்கிக் கணக்கை மொபைல் ஆப் வாயிலாக அணுகுவது அலைச்சலைத் தவிர்க்கும். கல்லூரி மாணவர்கள் தங்களது அன்றாடச் செலவுகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஜிஷீsலீறீ உதவும்.
மிதந்து கொண்டும் எதிர்நீச்சல் போடலாம்
வேலைக்காக ஒருவரைத் தயார் படுத்து வதுதான் கல்வியின் உட்சபட்ச இலக்கா? இல்லை. வாழ்க்கையின் சவால் களை எதிர்கொள்ளவும் சக மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தவும் உந்தித்தள்ளுவதே கல்வி யின் உண்மை யான நோக்கம் என்கிறார் ரிஷிகேஷ்.
ராமேஸ்வரக் கடற்கரையில் காலார விளையாடும் போதெல்லாம் கடலோடிகளின் மரண ஓலம் இவருடைய காதுகளைத் துளைத்தது, மனதை உலுக்கியது. கடலில் மீன் பிடிக்கச்செல்லும் கடலோடிகள் அதில் மூழ்கிப்போகும் அவலத்தை மாற்ற முடியாதா எனச் சிந்திக்கத் தொடங் கினார். மீனவர்களுக்கான பாதுகாப்பு வளையங்களை வாங்கும் வசதி இல்லாதவர்களுக்கு மாற்று என்ன என ஆராய ஆரம்பித்தார்.
2014இல் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கபுரத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண் டிருந்தார் ரிஷிகேஷ். அவருடைய தேடலுக்குத் தோழர்கள் பிரவீன், நவீன்குமார், கார்த்தி, குகன் கைகொடுத்தனர். நீரில் மூழ்காமல் மிதக்க உதவும் கருவியைச் செலவில்லாமல் உருவாக்க அந்தச் சிறுவர்கள் திட்டமிட்டனர். பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய கிராமப்புறத்தைச் சேர்ந்த அவர்களுடைய கண்ணில் திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் குப்பை தென்பட்டது. கடலில் மிதந்து சென்றுகொண்டிருந்த சில பிளாஸ்டிக் பாட்டில்களை ஒரு நாள் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது சட்டென ரிஷிகேஷூக்கு ஒரு சிந்தனை உதித்தது.
மண்ணையும் நீர்நிலைகளையும் பாழாக்கும் பிளாஸ் டிக் பாட்டில்களை நண்பர்களோடு சேர்ந்து சேகரித்தார். 24 வெற்று பிளாஸ்டிக் பாட்டில்களை சேர்த்துக் கட்டித் தண்ணீரில் தூக்கி எறிந்தார். இயற்பியல் விதிப்படி கனமான பொருளையும் அவை மிதக்கவைத்தன. நீச்சல் தெரிந்த ரிஷிகேஷ் தன்னைச் சுற்றி இந்தப் பிளாஸ்டிக் பாட்டில் குவியலைக் கட்டிக்கொண்டு வீட்டருகில் உள்ள ஏரி ஒன்றில் குதித்துத் தன்னைத் தானே சோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். லாவகமாகத் தன்னால் மிதிக்க முடிந்தது அப்போது தெரியவந்தது. அடுத்து, நீச்சல் தெரியாத தன்னுடைய நண்பன் பிரவீனை வைத்தும் சோதித்தார்.
எதிர்பார்த்தபடியே பிளாஸ்டிக் பாட்டில்களின் உதவி யோடு பத்திரமாகக் கரையேறினார் பிரவீன். சிறுவர் களுக்குச் சவால் மிகுந்த போட்டிகள் நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான டிசைன் ஃபார் சேஞ்ச்-ன் அய் கேன் வின் அவார்டு 2014-க்கு ரிஷிகேஷின் எளிமை யான கண்டுபிடிப்பை அனுப்பிவைத்தார் அவருடைய வழிகாட்டி முருகானந்தம். சமூக மாற்றத்துக்கு வித்திடும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படும் இப்போட்டிக்கு ரிஷிகேஷின் கண்டுபிடிப்போடு சேர்த்து மொத்தம் 1,992 கண்டுபிடிப்புகள் வந்து குவிந்தன.
2014இல் அறிவிக்கப்பட்ட இப்போட்டியின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் துணிச்சலான சிந்தனை என்கிற விருதும் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையும் ரிஷிகேஷூக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதைத் தன் நண்பர்களோடு சேர்ந்து பெருமையாகப் பெற்றுக் கொண்டார் ரிஷிகேஷ். தற்போது பத்தாம் வகுப்புக்காக மும்முரமாகப் படித்துக்கொண்டிருக்கும் இவர் பள்ளி வாழ்க்கையின் முதல் சவால் மிகுந்த பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கு முன்னதாகவே வாழ்க்கையின் சவாலை வென்றெடுத்துவிட்டார்!
வங்கிகளில் 14192 பணியிடங்கள்
தற்போது மீண்டும் வங்கி வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான 14,192 குரூப் ‘ஏ’ அதிகாரி மற்றும் குரூப் ‘பி’ அலுவலக உதவியாளர்
பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (அய்பிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. வங்கி பணியே தனது ஒரே நேக்கம் என திட்டமிட்டுள்ள இளைஞர்களுக்கு இதுவெரு சரியான சந்தர்ப்பம் எனலாம். மேலும் விபரங்களுக்கு: http://www.ibps.in/ காணவும்.