எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசின் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் உதவியாளர் பணியில் 696 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

தேவையான தகுதி

இப்பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

பதவி உயர்வு பெறலாம் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரு தேர்வுகளைக் கொண்டது. இரு தேர்வுகளுமே ஆன்லைன் வழியில் நடத்தப்படும். முதல்நிலை தேர்வில், பொது ஆங்கிலம், ரீசனிங், அடிப் படை கணிதம் ஆகிய பகுதிகளில் 100 கேள்விகள் கேட்கப்படும். முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறுவோர் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இத்தேர்வில் ரீசனிங், பொது ஆங்கிலம், பொது அறிவு, அடிப்படை கணினி அறிவு, அடிப்படை கணிதம் ஆகிய 5 பகுதிகளில் இருந்து தலா 40 கேள்விகள் வீதம் 200 கேள்விகள் இடம்பெறும்.

உதவியாளர் பணிக்கு ஆரம்ப நிலையில் ரூ.23 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும். பணியில் இருந்து கொண்டே துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உதவி நிர்வாக அதிகாரி, நிர்வாக அதிகாரி எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறவும் வாய்ப்புகள் உள்ளன.

தகுதியுடையோர் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தை (www.nielit.gov.in) பயன் படுத்தி ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை நிறுவனத்தின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியிடங்கள்

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்  விஞ்ஞானி (கிரேடு-பி) பதவியில் 81 காலியிடங்களும் அதன் சார்பு நிறுவனமான தேசியத் தகவலியல் மய்யத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் 259 காலியிடங்களும் நேரடி நியமன முறையில் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. விஞ்ஞானி பணிக்கு பி.இ., பி.டெக். (கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர் மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பட்டதாரிகளும், எம்.எஸ்சி. (இயற்பியல்) பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் பணிநியமனம் நடைபெறும்.

அடிப்படைத் தகுதி

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு பி.இ., பி.டெக். பட்டதாரிகளும், எம்.எஸ்சி. கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனி கேஷன், பயோ-இன்ஃபர்மேட்டிக்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் நெட்வொர்க்கிங் செக்யூரிட்டி, சாப்ட்வேர் சிஸ்டம் உள்ளிட்ட பட்டதாரிகளும், எம்.சி.ஏ. பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் நடைபெறும். நேர்காணல் கிடையாது.

மேற்கண்ட இரு பதவிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

அப்ஜெக்டிவ் முறையில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் மொத்தம் 120 கேள்விகள் கேட்கப்படும். கம்ப்யூட்டர் சயின்ஸில் இருந்தும், ரீசனிங், அடிப்படை கணிதம், பொது அறிவு, திறனறிவு ஆகிய பகுதிகளில் இருந்தும் தலா 60 வினாக்களும் இடம்பெறும்.

எழுத்துத் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். உரிய கல்வித் தகுதியும் வயதும் உடையவர்கள் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.ஸீவீமீறீவீt.ரீஷீஸ்.வீஸீ) ஆகஸ்டு 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வுக்கான பாடத் திட்டத்தை இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner