எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்களில் கணிசமானோரின் தேர்வாக இருப்பது வங்கி வேலை. முன்பு பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் எனப்படும் எழுத்தர்களும் அதிகாரிகளும் (Probationary Officers) பி.எஸ்.ஆர்.பி. என்ற வங்கிப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டுவந்தனர். தற்போது அய்.பி.பி.எஸ். (Institute of Banking Personnel Selection) என்ற அமைப்பு மூலமாக எழுத்தர்களும் வங்கி அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் ஊழியர்களையும் அலுவலர்களையும் தானே தேர்வு நடத்தித் தேர்வுசெய்துகொள்கிறது. மற்ற அனைத்து அரசு வங்கிகளிலும் எழுத்தர்களும் அதிகாரிகளும் சிறப்பு அதிகாரிகளும் (தொழில்நுட்பப் பிரிவு) அய்.பி. பி.எஸ். அமைப்பு மூலமாகவே தேர்வு செய்யப் பட்டுப் பணியமர்த்தப்படுகிறார்கள்.

வயது குறைந்தபட்சம் 20, அதிகபட்சம் 30. எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினருக்கு வயது வரம்பு 35, ஓ.பி.சி. பிரிவினருக்கு 33, மாற்றுத் திறனாளிகளுக்கு 40. வங்கி அதிகாரிகள் எழுத்துத்தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுகிறார்கள். எழுத் துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு வகைத் தேர்வுகள் இடம்பெறும்.

மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு முதல் நிலைத் தேர்வு நடத்தப்படும். ஆன்லைன் வழியிலான இத்தேர்வு அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். தேர்வுக்கு ஒரு மணி நேரம் கொடுக்கப்படும். முதல்நிலைத் தேர்வில் மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி பெற்றாக வேண்டும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக மெயின் தேர்வு நடைபெறும்.

மெயின் தேர்வில் மொத்தம் 200 மதிப்பெண் களுக்குக் கேள்விகள் கேட்கப்படும். இதுவும் ஆன்லைன் வழியில்தான் நடத்தப்படும். தேர்வு நேரம் 3 மணி நேரம். இதோடு கூடுதலாக ஆங்கி லத்தில் விரிவாக விடையளிக்கும் தேர்வும் இடம்பெற்றிருக்கும். கட்டுரை எழுதுதல், கடிதம் எழுதுதல் ஆகிய 2 கேள்விகளுக்கு 25 மதிப்பெண். இத்தேர்வுக்கு அரை மணி நேரம் கொடுக்கப்படும்.

முக்கிய நாட்கள்

வங்கித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் - செப்டம்பர் 5 முதல்நிலைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் - செப்டம்பர்

ஆன்லைனில் முதல்நிலைத் தேர்வு - அக்டோபர் 7, 8, 14, 15, முதல்நிலைத் தேர்வு முடிவுகள் - அக்டோபர்
மெயின் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவி றக்கம் - நவம்பர் ஆன்லைனில் மெயின் தேர்வு - நவம்பர் 26
மெயின் தேர்வு முடிவுகள் - டிசம்பர்

நேர்முகத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் - 2018 ஜனவரி நேர்முகத் தேர்வு - ஜனவரி, பிப்ரவரி
இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு, பணி ஒதுக்கீடு - ஏப்ரல்

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை

அய்தராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 30

பணி: உதவி மேலாளர்

தகுதி: கலை மற்றும் அறிவியல், சட்டம் போன்ற துறைகளில் பட்டம், அய்ஏஅய், சிஏ, அய்சிடபுள்யுஏ. ஏசிஎம்ஏ, ஏசிஎஸ்,

சிஎப்ஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.irdai.gov.in என்ற இணையதளத்தில் கொடுக் கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner